Saturday, February 24, 2018

,ரசத்துக்காக பாயாசத்தை கோட்டை விட்டுட்டானே?

யாரையும் நம்பி பாஜக கட்சி இல்லை. விருப்பம் இல்லாதவர்கள் வெளியே போகலாம். # தமிழிசை ,பொன் ராதா இவங்க கிட்டே நேரடியா சொல்ல தயங்கிட்டு பூடகமா பஞ்ச் பேசறாரா?


=============


2 இந்து மதத்தை இழிவுப்படுத்துவதே திமுக கொள்கை; எம்மதமும் சம்மதம் என்பதே அதிமுகவின் கொள்கை- அமைச்சர் கடம்பூர் ராஜூ # அதிமுக வுக்கு கொள்கை எல்லாம் இருக்குங்கறதே இப்போ நீங்க சொல்லித்தாங்க தெரியும்,


===============


3 தமிழகத்தில் ராகுல் காந்தி விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்
- திருநாவுக்கரசர் # கமல் ,ரஜினி ,விஜயகாந்த் ஏல்லாம் ஒரு ரவுண்ட் முடிச்சிடுவாங்க


===============


4 பணம் வாங்காமல் தேர்தல் நடத்தினால் தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும்- சுப்பிரமணியன் சுவாமி# தேர்தல் கமிஷன் தேர்தல் நடத்த பணம் வாங்கிக்குது னு ஒரு அர்த்தம் வருதே?அவதூறு வழக்கு வருமோ?


===============


5 More
’’2021-ல் ரஜினிதான் தமிழக முதல்வர்!’’ - அர்ஜூன் சம்பத்
# 2026 ல் கமல் , 2031 ல் விஜயகாந்த் , 2036 ல் விஷால்
ஹலோ,முதல்ல ஜோக் சொன்னது யாரு?
என்ன சார் காமெடி பண்றீங்க?;;
==================


6 ‘தொண்டர்களுடன் நான் இருப்பேன்’ மு.க.ஸ்டாலின் # கடைசி வரை நமக்கு ப்ரமோஷனே கிடைக்காது போல


===============


7 கணவர் கொடுமைப்படுத்துவதாக வெளிநாடுவாழ் இந்தியப் பெண்கள் புகார்: வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் # உள்ளூர் மாப்ளைன்னா சொந்தக்காரங்க சப்போர்ட் இருக்கும்.பணத்துக்காகவும்,வசதிக்காகவும்,வீண் ஜம்பத்துக்காகவும் பாரீன் மாப்ளையை கட்னா இப்டித்தான் ஆகும்


==============


8 கணவர் கொடுமைப்படுத்துவதாக வெளிநாடுவாழ் இந்தியப் பெண்கள் புகார்: வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் # உள்ளூர் மாப்ளைன்னா சொந்தக்காரங்க சப்போர்ட் இருக்கும்.பணத்துக்காகவும்,வசதிக்காகவும்,வீண் ஜம்பத்துக்காகவும் பாரீன் மாப்ளையை கட்னா இப்டித்தான் ஆகும்


===============9 ரஜினிகாந்த் கர்நாடகாவிற்கு சென்று நான் பச்சைத்தமிழன் என்று சொல்லட்டும்; பார்க்கலாம் - சீமான் சவால் | இலங்கை போய் தனி ஈழம் வேணும்னு முழங்கிட்டு வந்துடுங்க பார்ப்போம்,அவரு தான் உங்களைக்கண்டுக்கவே இல்லையே?எதுக்கு அவரை வம்பிழுக்கனும்?


===============


10 சென்னையில் கஞ்சா செடியோடு ஃபேஸ்புக்கில் படம் போட்ட இளைஞர்கள் கைது புகழ் கஞ்சா கருப்பு கூட செல்பி எடுத்தாலும் பிடிப்பீங்களா ஆபீசர்?


==============


11 மாயூரநாதர் கோவிலில் அம்மனுக்கு சுடிதார் அலங்காரம்: 2 குருக்கள் நீக்கம் - செய்தி
# அம்மன் தான் கனவில் வந்து சொல்லுச்சுனு அடிச்சுவிட வேண்டியதுதானே?


==============


12 பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் ரூ 280 கோடி ஏமாற்றிய புகாரில் தொழிலதிபர் நிரவ் மோடிக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு...
கிட்ட மினிமம் பேலன்ஸ் இல்லைனு அபராதம் போடற வங்கிகள் மக்கள் வயித்தெரிச்சலைக்கொட்டிக்கிட்டா இப்டித்தான் பணக்காரன் ஏமாத்திட்டு போய்டுவான்


================


13 தாஜ் மஹால் விரைவில் தேஜ் மந்திராக மாற்றப்படும் பாரதீய ஜனதா எம்பி.யின் சர்ச்சை பேச்சு #"சமாதி யை கோயில்"ஆக்குனா தீட்டு ஆகாதா


===============


14 கர்நாடகாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தக்காளி, வெங்காயம் , உருளை கிழங்கு உற்பத்திக்கே முன்னுரிமை அளிப்போம் - மோடி
வர மாட்டீங்களே?அப்போ என்ன செய்வீங்க?ஆனியன் பக்கோடா ,உருளைக்கிழங்கு போண்டா சாப்டுவீங்களா


================


15 விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்...செய்தி... பய புள்ள ,ரசத்துக்காக பாயாசத்தை கோட்டை விட்டுட்டானே?


==============


16 ஏழைகளுக்கு எதிரான கட்சி காங்கிரஸ்" - அமித்ஷா
# ஏழைகளுக்கு பரம எதிரி ஆன கட்சி பாஜக,ஏன்னா பணக்காரனுக்கு சலுகை கொடுத்தாதானே தேர்தல் டைம்ல அவன் 2 பிஸ்கெட் தூக்கி போடுவான்?


==============


17 நீட் தேர்வில் காப்பியடிக்கவைப்போம்- கே.என் நேரு.(DMK)# திருட்டு ரயில் ,கமிஷன்,ஊழல் ,காப்பி இதுதான் தலைமை கத்துக்கொடுத்த பண்புகள் போல


============
18 திமுக ஆட்சி கட்டிலில் அமர்வது என்பது நடக்காது - அமைச்சர் ஜெயக்குமார் # கட்டிலா?அப்போ நித்யானந்தா தான் ஜெயிப்பாரு


============19 அமைச்சராக்குவதாக ஆசைக்காட்டி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஜெ.தீபா மீது முட்டை மொத்த வியாபாரி புகார்.. வேலை வேணா"காலியா இருக்காம்


=============


20 கணவன் மனைவி சண்டையில் மூன்றாவது நபர் தலையிடக்கூடாது- உச்சநீதிமன்றம் # யுவர் ஆனர்,நீங்க மட்டும் நாலாவது நபரா?


==============

0 comments: