Tuesday, February 20, 2018

தைப்பூச திருவிழாக்கு சிறப்பு விருந்தினரா யார் யார கூப்ட்டீங்க?

நான் ரயில்ல போறப்ப "தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி" பாட்டை செல்போன்ல பாடவிட்டேன்.எதிர் சீட் பொண்ணு கழுத்து சங்கிலியை வெட்கத்தோட கடிச்சா,அவங்கப்பா சைக்கிள் செயின் எடுத்து என்னை அடிக்க வந்துட்டாரு

ஓஹோ,செயின் ரீ ஆக்சன் னு சொல்வாங்களே?இதானா அது?

=============


2 டீச்சர் ,நிக்கி கல் ராணி க்கு 2 சுழி னி வருமா?3 சுழி ணி வருமா?

அவங்க தலையைப்பாரு,2 சுழி இருந்தா னி ,3 சுழி இருந்தா ணி


===============


3 முதல் இரவுக்கு நாள்"குறிப்பது எப்படி?னு ஒரு இன்பர்மேஷன் சென்ட்டர் ஓப்பன் பண்ணி இருக்காங்க

அடப்பாவிகளா?
ஏன் ?திருமண தகவல் மையம் இருக்கும்போது முதலிரவு தகவல் மையம் இருக்கக்கூடாதா?


=============


4 என்னுது நிச்சயம் இல்லாத வாழ்க்கை

பொய்
எப்டி?
மேரேஜ்க்கு முன் நிச்சயதார்த்தம் நிச்சயம் வெச்சிருப்பாங்களே?


================


5 டெய்லி நாலு மணி நேரம் ஜிம் போய் டைம் ஸ்பெண்ட்"பண்ணுவேன்

அடேங்கப்பா,ஆனா"பாடியை,பாத்தா,எக்சசைஸ் பாடி மாதிரியே"தெரியலையே?
ஜிம்க்கு போவேன்னு தானே சொன்னேன் ?எக்சசைஸ் பண்ணுவேன்னா சொன்னேன்!? சும்மா வேடிக்கை பார்ப்பேன்


=============


6 உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன 😍😍😄

ஓஹோ,சத்தமா சொல்லுங்க,தாமரை மலருதானு பார்ப்போம்,தமிழிசை மேடம் சந்தோசப்படுவாங்க

=============


7 தலைவரே!சிறை நிரப்பும் போராட்டம் வெற்றி னு ஏன் பொய் சொல்றீங்க?

எப்டீ அது பொய்?
உங்களை கைது பண்ணி எங்கே அடைச்சாங்க?
ஏதோ ஒரு கல்யாண மண்டபத்துல
அப்போ எப்டி சிறை"நிரப்பும் போராட்டம் வெற்றி னு சொல்ல முடியும்?


================


8 குருவே!வர்ணாசிரமம்னா என்ன?

கலர் கலரா பொண்ணுங்களை இறக்கி இருக்கமே,அதான்


===============


9 மேடம்,இந்திய அளவில் சாதனை பண்ணுனதுக்கு வாழ்த்து
நன்றி அப்டி என்ன சாதனை பண்ணுனீங்க?
நடக்காத ,நடக்க வாய்ப்பில்லாத ஒரு விஷயத்தை நடக்கும்னு நம்ப வெச்சேனே?


================


10 மாப்ள,தப்பா நினைக்காதீங்க,என் பொண்ணு யார் எது சொன்னாலும் காதுலயே போட்டுக்க மாட்டா
மாமா,ஆனா ஜிமிக்கி கம்மல் மட்டும் போட்டிருக்கா?


==================


11 தலைவரே!கட்சி ஆளுங்களை எல்்லாம் வரச்சொல்லி இது தான் அனுஷ்கா,இது தான் தீபீகா படுகோனே னு பாடம் நடத்தீட்டு இருக்கீங்க?
பத்மாவத் பட தியேட்டர்ல போராடச்சொன்னா பாகமதி தியேட்டருக்கு போய்டறாங்க


=================


12 இன்னைக்கு ஏதோ விசேஷமாமே? வானில் ப்ளூ மூன் தெரியுமாமே?
தெரியல.ஆனாலும்"பாத்துட்டேன் புரியல
Blue Moon Junction படம் வேணா பாத்தேன்

================13 சார்,வீட்டோட மாப்ளையா 2 வருசமா இருக்கீங்க,மாமனாரை எதிர்த்ததுண்டா?
என் தன்மானத்துக்கு இழுக்கு வந்தா எதிர்ப்பேன்
சரி,தன்மானம் இருக்கறவன் வீட்டோட மாப்ளையா இருப்பானா?


=================14 ரஜினி,கமல்,விஜய் ரசிகர்களுக்கு வீடு வாடகைக்கு விடமாட்டீங்களா?ஏன்?
ரஜினி ரசிகர் வாடகை சரியா தர மாட்டாப்டி
விஜய் ரசிகரை எப்போ வந்து போலீஸ் விசாரணைக்கு கூப்பிடும்னே சொல்ல முடியாது
கமல் ரசிகர்னா பயம்,வீட்ல வயசுப்பொண்ணும்,ஆண்ட்டியும் இருக்கு

===============15 காலணா பொறாத விஷயத்துக்காக FB அக்கவுண்ட்டை க்ளோஸ் பண்ணீட்டு போனீங்க,இப்போ திரும்ப வந்துட்டீங்களே?
இப்போ வந்தது அஞ்சனாவுக்காக

===============


16 நேயர் விருப்பத்திற்கிணங்கவா சோடா பேக்டரி ஓப்பன் பண்றீங்க?
இல்ல,ஜீயர் விருப்பத்திற்கிணங்க


==============17 குருவே!ஆண்களை முட்டாளாய் ஆக்குவதில்
அற்ப இன்பம்,கிடைக்குதுனு சில பொண்ணுங்க சொல்றாங்களே!
பாவம்,அந்த ஒரு இன்பமாவது நம்மால அவங்களுக்கு கிடைக்கட்டும்னு முட்டாள் ஆன மாதிரி நடிப்போம்


=================18 தைப்பூச திருவிழாக்கு சிறப்பு விருந்தினரா யார் யார கூப்ட்டீங்க?
ரம்பா ,ஆண்ட்ரீயா, என்ன சம்பந்தம்?
Thigh ஸ்பெஷலிஸ்ட்ஸ்

=================19 குருவே!திருப்பதிக்கு வர்ற"கூட்டம் நாளுக்கு நாள் ஜாஸ்தி ஆகிட்டே"வருது.அதை கண்ட்ரோல் பண்ண என்ன வழி?
யோக்கியமா/ஒழுக்கமா இருக்கறவங்கதான் உள்ளே வரனும்னு சொல்லிட்டா ஈ காக்கா கூட வராது.கோயிலுக்கு வருமானமும் வராது.பாவிகள் இருக்கும் வரை தான் கோயிலுக்கு புண்ணியம்

================


20 நோய் நாடி நோய் முதல் நாடி திருக்குறளை ஏன் மேடைல பாடறீங்க?
உடம்பு சரி இல்லாதவரை கிளாSICKகல் சாங் பாடச்சொன்னா?


==============


0 comments: