Saturday, February 17, 2018

நீலச்சாயம் வெளுத்துப்போச்சு டும்டும்டும் ராசா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும்டும்னு

டிவிட்டரில் ‘ப்ளூ டிக்’ பெற்றார் எடப்பாடி-செய்தி
# கமல் வந்து "நீலச்சாயம் வெளுத்துப்போச்சு டும்டும்டும் ராசா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும்டும்னு சொல்லப்போறார்


=============2 விஜயேந்திரர் - தமிழ்த்தாய் சர்ச்சை பற்றி எனக்கு தெரியாது- தமிழிசை இருக்கும் ஜெ.தீபா க்குக்கூட தெரிஞ்சிருக்கு,24 மணி நேரமும் ட்விட்டர்"டைம்லைனை வாட்ச் பண்ற"உங்களுக்குத்தெரியலையா?


===========


3 சோடா பாட்டில் வீசத்தெரிந்தால்தான் ஜீயராக முடியும் - கனிமொழி
# தன் சட்டையை தானே கிழிச்சுக்கிட்டா மேயராகலாம் ,தலைவராகலாம்


=============


4 தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உரிய மரியாதை தருவது தனிமனிதன் ஒருவருடைய கடமை- ஓபிஎஸ் ,FDFS பாத்துட்டு விமர்சனம்"பண்ணுங்கன்னா இன்றே கடைசி போஸ்டர் ஒட்டுனபின் விமர்சிச்சா எப்படி?


==============5 இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன்: தமன்னா # ஓஹோ,எப்டி நல்ல படம்?னு கண்டுபிடிப்பீங்க?கதை கேட்டா?

நோ நோ,புக் பண்ண வர்ற புரொடியூசர்கிட்டேயே கேப்பேன்,இது நல்ல படமா?ன்னு


=============6 ரஜினி அரசியல் செய்ய​
பிஜேபி தான்
பணம் கொடுக்கிறது
- அப்பாவு குற்றச்சாட்டு
# ரஜினியை வெச்சு செய்யனும்னு முடிவு பண்ணீட்டீங்க?


=============7 கேட்காமலேயே மக்களுக்கு தேவையானவற்றை அதிமுக அரசு வழங்குகிறது- செங்கோட்டையன்
பஸ் சார்ஜ் டபுள் ஆக்குனது கூட அப்டித்தானே?


==============


8 பாஜக ஆட்சி அமைத்தால் தமிழகம் உடனே வளர்ச்சி பெறும்-தமிழிசை
# பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கனும்னா"கட்சி வளர்ச்சி பெறனுமே மேடம்,இந்த யுகத்துல அது நடக்காது போலயே?


==============


9 குடியரசு தின விழாவில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய அதிமுக எம்.எல்.ஏ!
# மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கவே கங்கணம் கட்டிட்டு இருக்காங்க போல


===============


10 எனக்கு கதை படிக்கிறதும் புடிக்காது...
கதை விடுறதும் புடிக்காது
- தமிழிசை
# நல்ல கதையா இருக்கே?டெய்லி ஒரு வாட்டி மீடியா கிட்டே "தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது ,ஆட்சியைப்பிடிக்கும் ,கால் ஊன்றும் ,கை ஊன்றும் ,குட்டிக்கர்ணம் போடும்னு கதை விடறது யாரு?நீங்களா?நாங்களா?

==============


11 என்னை இனி பொது மேடைகளில் அதிகமாக பார்க்கலாம்': உதயநிதி
# மேடைக்கு முன்னால பொது ஜனங்களைப்பார்க்க முடியுமா தெரில


=============12 அத்துமீறி பேசினால் ஆர் கே நகரைப்போல 234 தொகுதிகளிலும் திமுக டெபாசிட் இழக்கும் - எச் ராஜா
தான் நமக்கும்,அத்துமீறி வாய் விட்டா பாஜக 234 தொகுதிகளிலும் நோட்டா விடம் தோற்கும்


================


13 திமுக செயல் தலைவர் தேசிய கீதத்தை நாட்டுப் புற பாடலென்கிறார்.ஆண்டவரே திமுக விடமிருந்து தமிழைக் காப்பாற்றுங்கள் - எச்.ராஜா # ஆண்டவரே! திமுக வை நாங்கள் பார்த்துக்கறோம்,இந்த பாஜக விடமிருந்து எங்களைக்காப்பாற்று,ஓவரா சவுண்ட் விடறாங்க


===============


14 பொது மேடையில் தமிழ் தாய் வாழ்த்தினை தவறாக பாடிய திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன் : வைரல் வீடியோ படிக்கும்போது நாமளும் இப்டித்தான்,கோரசா பாடச்சொன்னா சமாளிப்போம்,தனியாப்பாடச்சொன்னா தடுமாறுவோம்


================

15 குடியரசு தின விழாவில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய அதிமுக எம்.எல்.ஏ - செய்தி # சிரசாசனம் செஞ்சுக்கிட்டே ஏத்தி இருப்பாரோ?


==============16 More
``கொலை மிரட்டல் வருகிறது!’’ - காவல்நிலையத்தில் புகார் அளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்
விதிகளை மீறீட்டீங்க,ஆண்டவனிடம்தானே முறையிடனும்?===============17 குடும்பத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வரச்சொல்லவில்லை - தொண்டர்களுக்கு ரஜினிகாந்த் வலியுறுத்தல் # லதா ரஜினி ,தனுஷ்,சவுந்தர்யா,ஐஸ்வர்யா நால்வரும் ஐக்கியம் ஆவார்கள் என அறிக


===============18 ஜீயர் கோபமாக பேசும் வகையில் இந்து கடவுளை விமர்சித்து பேசியது தவறு - ராஜேந்திர பாலாஜி # சாதா /சராசரி மனுசனே கோபத்தை அடக்கி வாழனும்னு வள்ளுவர் சொல்றாரு,எல்லா மதங்களும் சொல்லுது.ஒரு ஜீயராலோ,ஒரு சாமியாராலோ கோபத்தை அடக்க முடியலைன்னா அவர் சராசரி மனுசனை விட கீழானவரா?


==============19 ஆன்மிகவாதிக்கும் அரசியல்வாதிக்கும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும் - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் # ரஜினி−மோடி உறவு பற்றி சொல்றார் போல


==============20 இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவின் சிறந்த பிரதமர்கள் பட்டியலில் மோடி முதலிடம் # ஜனங்க"கிட்டே அதிகமா திட்டு வாங்கிய பிரதமர்னு வேணா"சொல்லலாம்


==============

0 comments: