Monday, February 19, 2018

யுவர் ஆனர் ,நித்யானந்தாவை,அரெஸ்ட் பண்ண எதுக்காக ஆர்டர் போட்டீங்க?;

தலைவரே!பஸ்் கண்ணாடி ல சாதாரணக்கட்டணம் னு எழுதி இருக்காங்க

ஆமா;
அதுல சாதா வை அழிச்சிடுங்க
மேட்சிங்கா இருக்கும்.


==============


2 ஆன்மீக பகுத்தறிவு நம்ம ஜனங்களுக்கு அவசியம்.

அப்டீன்னா என்ன?
சாமி கும்பிடறதும் கும்பிடாததும் அவங்கவங்க இஷ்டம்.ஆனா இடைல இந்த மீடியேட்டர்களான சாமியார்களை நம்பாதே


=============


3 பொண்ணு பாக்க தங்கம் மாதிரி இருக்கா,
அவ அப்பன பார்த்தா தகர டப்பா மாதிரி இருக்கான் ,அது ஏன் குருவே!
அது தெரில,அதுக்காக தகரத்துல இருந்து தான் தங்கம் தயாரிக்கப்படுதுனு நினைச்சுக்காதே


================


4 சார்,இதுவரை நீங்க"யார்"யார் கிட்டே ஆட்டோகிராப் வாங்கி இருக்கீங்க?

நான் தியேட்டர்ல தாங்க படம் பார்ப்பேன்
புரில
ஆட்டோகிராப் ,தவமாய்தவமிருந்து னு எந்தப்படமா இருந்தாலும் யார் கிட்டயும் டிவிடி வாங்க மாட்டேன்


===============5 யுவர் ஆனர் ,நித்யானந்தாவை,அரெஸ்ட் பண்ண எதுக்காக ஆர்டர் போட்டீங்க?;

அவனவன் சொந்த சம்சாரம் கூடவே சந்தோஷமா இருக்க முடியாம திண்ணைல படுத்துக்கிடக்கான்.அந்தாளு ரகம் ரகமா அனுபவிச்சா விட்ருவோமா?


============6 டாக்டர்,நீரிழிவை வரவழைக்கும் புரோட்டா னு ஒரு கட்டுரை எழுதுனதை படிச்சேன்,ஆனா எனக்கு ஆபத்து இல்லை

எப்டி மேடம்?
நான் குருமா தொட்டுதானே சாப்பிடறேன்?சுகர் தொட்டா சாப்பிடறேன்?


============7 சார்,இவ்ளோ மொக்கையா ட்வீட்டறமேனு எப்பவாவது வருத்தப்பட்டதுண்டா?

இல்லைங்க.நான் போடற ட்வீட்சை படிக்கறவங்க வேணா வருத்தப்படுவாங்க,எனக்கென்ன போச்சு?


===============8 ஊசி போட்டா வலிக்கும்ங்கறது இயற்கை விதி!
அதென்ன வலிக்காம ஊசி போடுங்க ?
டாக்டர் ,நாங்க க்ளினிக் வந்தா சும்மா ஈ ஓட்டீட்டு இருந்தாக்கூட டாக்டர் ரவுண்ட்ஸ் போய் இருக்கார் வெய்ட் பண்ணுங்கனு பில்டப் கொடுக்கறமே அது மாதிரி தான் இதுவும்


=============


9 வழக்கமா கோபால் பல்பொடி இனிப்பு டேஸ்ட் தானே?,இது காரசாரமா இருக்கே?

ஒரு வேளை நக்கீரன் கோபால் பல்பொடியா இருக்குமோ?


=================


10 சார்,டைரக்டர் ஷங்கரைப்பார்க்கனும்

யோவ்,இது சங்கரமடம்.அவரெல்லாம் இங்க இருக்க மாட்டாரு


=================


11 மேடம் ,கவிதாயினி னு எல்லாரும் உங்களை கூப்பிடறாங்களே?நீங்க எழுதுன கவிதை 1 சொல்லுங்க

குழந்தை பிறந்தது,கவி னு பேரு வெச்சோம்,அப்போ கவி தாய் இனி தானே?


============


12 ஆன்மீகம் எனக்கு வலது கண் என்றால், பாரதியார் கவிதைகள் என்னுடைய இடது கண்.

ஓஹோ,மிஸ்,அப்போ உங்க லவ்வரைப்பார்த்து கண் அடிக்கனும்னா எந்தக்கண்ணை மூடுவீங்க?


=================13 மேடம்,எந்த மாதிரி கதாபாத்திரத்துல நடிக்க ஆசை?

எதா இருந்தாலும் ஓகே?ஆனா நெட்டிசன்கள் அதைப்பார்த்து கழுவி ஊத்தாத அளவில் இருந்தா சரி


=================


14 கீபோர்ட் கத்துக்கலாம்னு நினைக்கிறேன்.

மிஸ்,அதுக்குப்பதிலா பாட்டு கிளாஸ் போலாமே?
அதுக்கு குரல் வளம் வேணும்,அது அமையலை.இதுக்கு விரல் வளம் போதுமில்ல?16 படத்தோட ஹீரோயின் கதைப்படி முதுகுல ஆபரேஷன் பண்ணிக்கறா,அழகுக்காக

ஓஹோ,பின் நவீனத்துவ கதையா இருக்கும் போல ,மேல சொல்லுங்க

===========17 குருவே!வீட்டில் சிசிடிவி இருந்தால் தொல்லையா?நன்மையா?
மச்சினி இருந்தால் நன்மை,மனைவி கண்காணித்தால் தொல்லை

==============18 தலைவரே!ஊர்வலம் போறப்ப யாரோ ஷூ வை உங்க மேல வீசிட்டாங்கனு சடன் பிரேக் போட்ட மாதிரி நின்னுட்டீங்களே ஏன்?
அவன் வீசுனது பிரேக் ஷூ ஆச்சே.அதான் ஓடலை


==============19 மிஸ் ,பீட்ரூட் அல்வா 100 கிராம் வாங்குனேன்,இந்தாங்க பாதி எடுத்துக்குங்க .
அய்யோ ,நான் மாட்டேன், ஏன்?
ஆணும், பெண்ணும் ஒரே பீட்ரூட்டை பகிர்ந்து உண்டால், அவர்கள் இருவரும் நிச்சயமாக காதல் வயப்படுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை உண்டு.

===========


20 எனக்கெல்லாம் பொண்ணுங்கள்ட்ட பேசவே தெரியாது ; இதுல எங்கிட்டு லவ் பண்றது😩😩
நேத்து ஒரு பொண்ணு கிட்டே DM ல சேட் பண்ணீங்களாமே?
ஆமா,சேட்டிங்னா டைப்பிங்க் தானே?பேசத்தெரியாதுனுதானே சொன்னேன்?


==============0 comments: