Monday, February 05, 2018

இனி எந்த"வண்டியை"ஓட்டப்போறாரோ"?

ரஜினியும் கமலும் என் இரு கண்கள் கலைஞர் இதயம்.- வைரமுத்து # மீதி இருக்கறது தினகரன்தான்,அங்கேயும் ஒரு துண்டை போட்டு வெச்சிடுங்க


===============


2 புகையிலை பொருட்கள் மீதான புகையிலை எச்சரிக்கை படத்தை 85% ல் இருந்து 40% ஆக குறைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.# அப்போ கேன்சர் பேஷண்ட்ஸ் எண்ணிக்கை 40% ல இருந்து 85% ஆக உயரும்,பரவால்லியா?


==================


3 ரஜினி மட்டுமல்ல, நாங்களும் ஆன்மிக அரசியல் தான் செய்கிறோம்: சசிகலா தம்பி திவாகரன் சிலை கடத்தறாங்க போல


=============


4 ட்ரைவர் ராஜாவை ஜெ. தீபா பேரவையில் இருந்து நீக்கினார் தீபா - செய்தி# டிரைவர் இனி எந்த"வண்டியை"ஓட்டப்போறாரோ"தெரீல,ஆனா"நெட்டிசன்கள்"தீபாவையும் மாதவனையும் ஓட்டப்போறாங்க


===============


5 திமுகவுக்கு, மதிமுக என்றுமே பக்கபலமாக இருக்கும் - வைகோ
# பக்கவாதம் வந்தமாதிரி இருக்கு − ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ்


==============


6 தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் ஜெ வின் சிலை அமைக்கப்படும் - CM EPS # இதுக்கு மட்டும் பணம் இருக்கா?னு கடுப்பாகி போக்குவரத்து ஊழியர்கள் அடுத்த தேர்தல்ல ஆட்சிக்கு உலை வெச்சிடப்போறாங்க

==============


7 அதிமுக ,
திமுக எதிர்ப்பு வாக்குகளும் ரஜினிக்குத்தான் போகும். இளம் வாக்காளர்களும் ரஜினியையே ஆதரிப்பார்கள்− குருமூர்த்தி # படிக்கறதுக்கும் ,கேட்கறதுக்கும் நல்லாதான் இருக்கு,காசேதான் கடவுளடானு ஜனங்க தினகரனை ஜெயிக்க வைக்காம இருந்தா சரி

===============


8 பகவத் கீதை தனி மனித ஒழுக்கத்திற்கு எதிரானது
−கனிமொழி # திமுக இந்துக்கள் வாக்கை பெற்று இந்துக்களுக்கு ,இந்து மதத்துக்கு எதிராவே இருப்பது ஏன்?என்பது"புரியாத புதிரானது

===============


9 ஜாதி மதம் தாண்டிய ஆன்மீக அரசியல் தான் நான் பண்ணுகிறேன் , என்கிட்ட வந்து ரஜினி சேர்ந்துக்கலாமே”-சரத்குமார் # மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் இல்லாதாரை "நாடார்"


=====================


10 கடவுளுக்கு சக்தி இருந்தால் கோவில் உண்டியலுக்கு எதுக்கு பாதுகாப்பு. − கனிமொழி.# திமுக வுக்கு தன் பலத்தில் நம்பிக்கை இருந்தால் எதுக்கு கூட்டணி?குறிப்பா வைகோ கூட


=================


11 தினகரன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி - கோர்ட் # 20 ரூபா நோட்டு டோக்கன் எல்லா மட்டத்துலயும் ஊடுருவிடுச்சு போல


==============


12 மோடியின் புகைப்படத்துடன் வெளியான தமிழக அரசு காலண்டர் -செய்தி # மத்திய"அரசுடன்"இணக்கமா"இருக்கனும்பாங்க"காரணம்"கேட்டா?கால்லயே"விழுந்துடுவாங்க"போல


================


13 கடவுளை தவறாக பேசியதால்தான் கடவுள் கலைஞரின் பேச்சைப் அகற்றி விட்டான் - Hராஜா # மனிதாபிமானம்"அற்ற பேச்சு,திருப்பதி,கும்பகோணம் ,திருச்செந்தூர் பக்தர்கள் விபத்தில் இறந்ததற்கு என்ன காரணம் சொல்லப்போகிறார்?


===============


14 மின் வாரிய ஊழியர்கள்
ஜனவரி 23 முதல்
வேலை நிறுத்தம்-செய்தி
# ஷாக்கிங் நியூஸ்தான்,முன்"கூட்டியே"அறிவிச்ட்டு பண்றதும் நல்லதுதான்,ஜனங்க தயார் ஆகிக்குவாங்க

================


15 ஜெ வுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் # பதவியில் இருக்கும்போதே"ஊழல் குற்றச்சாட்டில் ,சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை பெற்ற இந்திய அளவில் முதல் முதல்வர் என்ற அடிப்படையிலா?


=================


16 RK நகர் தேர்தல் தோல்விக்கு காரணமான அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுசூதனன் போர்க்கொடி- செய்தி
மெடிக்கல் மிராக்கிள்தான்.காவடி எடுக்கறவங்க எல்லாம் போர்க்கொடி எடுக்கறாங்க.


=================


17 ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் நடிகைகள் படம் இருந்தால் அதற்கு அரசு பொறுப்பு இல்லை: அமைச்சர் காமராஜ்- # அரசு க்கு பொறுப்பில்லை,அரசு அதிகாரிகளுக்கு பொறுப்பில்லை,இதை எல்லாம் வேடிக்கை பார்க்க பொதுஜனம் ஒண்ணும் பருப்பில்லை


================


18 எம்.ஏல்.ஏக்கள் தொலைபேசி படி ₹5000த்திலிருந்து ₹7500 ஆக உயர்வு - செய்தி # இதுக்கு மட்டும் கஜானா காலி ஆகலையா? ஜியோ சிம் தந்தா 3 மாசத்துக்கே 500 ரூபா போதுமே?.மீதி 7000 * 234 = 16,38,000 மாசாமாசம் மிச்சம் ஆகும்


=================


19 குட்கா விவகாரத்தில் பேச ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு- திமுக வெளிநடப்பு # தளபதி லிம்கா ,கின்னஸ் ரெக்கார்டு எதுனா ட்ரை பண்றாரா?


=============


20 பாரத ஸ்டேட் வங்கியிடம் ரூ.750 கோடி கடன் வாங்க முடிவு செய்திருப்பதாக அரசுத்தரப்பில் தகவல் # விஜய்"மல்லய்யாக்கு லோன்"தந்த பேங்க்ல வாங்கலாமில்ல?எப்டியும் நாம திருப்பிக்கட்டப்போறதில்ல


=============

0 comments: