Monday, February 26, 2018

செந்தாமரை

அபுதாபி லாட்டரியில் ரூ.17 கோடி ஜாக்பாட் அடித்த இந்தியர்: நண்பர்களுக்கு பிரித்துக் கொடுக்க முடிவு # கேரளா வுல லாட்டரி டிக்கெட் ரெகுலரா வாங்கற 4 பேரை நாமும் பிரண்ட் பிடிச்சு"வைக்கனும்

===========


2 பீகாரில் 3400 இளைஞர்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம்
// பீகார் ல குடி இருக்கறவங்களை மட்டும்தான் கடத்தறாங்களா?டூர் போறவங்களையுமா?எதுக்கு"கேட்கறேன்னா அடுத்த வாரம் போனா ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு வரலாம்னுதான்


=================


3 தமிழகம் முழுவதும் மார்ச் 1-ம் தேதி முதல் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாது- தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் # மார்ச் 2 ந்தேதி முதல் பிரச்னை சரி ஆகிடுச்சுனு அறிக்கை வரும்,அட போங்கப்பா


==============


4 ஜி.எஸ்.டி வரி வசூலில் தமிழகத்திற்கு 2-ம் இடம்
# நேர்மைக்கே உண்டான கோபத்துல வண்டை வண்டையா திட்னாலும் வரியை கரெக்டா கட்டீடுவான் தமிழன்


===============


5 ரஜினி பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாகும்" -இயக்குநர் ராம்கோபால்வர்மா.
அமெரிக்கா என்னவா ஆகும்?சும்மா எதுனா உளற வேண்டியது


==============


6 பாஜகவில் இருந்து என்னை பிரிக்க முடியாது - தமிழிசை
# உங்களை கட்சில இருந்து பிரிச்ட்டா எங்களால மனம் விட்டு டெய்லி சிரிக்க முடியாது,ஏன்னா தமிழகத்தில் தாமரை மலரும்னு வேற யாராலும் கயிறு திரிக்க முடியாது


=================


7 உத்தர்காண்ட் முதல்வரின்
9 மாத காபி,டீ,செலவு
ரூ.68 லட்சம்-செய்தி
# டெய்லி 24,727 ரூ க்கு டீ குடிச்சாரா?பயங்கரக்குடிகாரர் போல.கஷ்டப்பட்டு உழைச்சா இப்டி செலவு பண்ண மாட்டாப்டி ,ஊரான் ஊட்டுக்காசுதானே?அள்ளி இரைச்ட்டாரு


=============8 உத்தரபிரதேசத்தில்
சுகாதார பானமாக
பசு மாட்டு சிறுநீர்
பாஜக அரசு திட்டம்
# கோமியம் நல்ல ரேட்க்கு போகுதுனு அதுலயும் எதாவது கலப்படம் பண்ணப்போறாங்க
-செய்தி


===============


9 அம்மாவின் வாழ்க்கை வரலாறை புத்தகமாக எழுதி கொண்டிருக்கிறேன் - தீபா
எழுதி முடிக்கறதுக்குள்ள கமல்,ரஜினி,விஜயகாந்த், ஸ்டாலின் எல்லாரும் ஒரு ரவுண்ட் சிஎம் ஆகி ஆண்டு முடிச்சுடுவாங்க


======================


10 மு.க ஸ்டாலின் - வைகோவுடன் சேர்ந்தால் விஜயகாந்த் நிலை தான் - தமிழிசை கூட சேர்ந்தா முதல்வர் ஆவார்னு"குறி சொல்லீட்டீங்கன்னா பாலோ பண்ணுவாரு,பாவம் அவரும் படாத பாடு படறாரு


=============


11 நித்தியானந்தா ஆசிரமத்தில் மூளைச்சலவை செய்யப்பட்ட டாக்டர் & சிறுமி மீட்பு. # ஒரு ஆசிரமத்தை மூட துப்பில்ல ,மன்னிப்புக்கேளு ,மாங்கா கேளுனு கோஷம்"போடறது


==============12 காங்கிரஸ் கட்சியை தாக்கி மக்களவையில் மோடி பேச்சு
# ஆளுங்கட்சின்னா"செயல் திட்டங்களைப்பத்தி பேசனும் ,இன்னும்"எதிர்க்கட்சிகளையே நொட்டை சொல்லிட்டிருந்தா எப்டி


==============


13 சாராய வியாபாரி முதல் மனைவி கொலை முயற்சி வழக்கு: பெண் தாதா எழிலரசி விடுதலை # நம்மால ஒரு"சம்சாரத்தையே,சமாளிக்க முடியல,நாட்ல ஆளாளுக்கு 2 ,3 சம்சாரத்தை வெச்சு எப்டித்தான் செலவு பண்றாங்களோ?இது போக சின்ன வீடு ,போக்கியத்துக்கு வீடு னு வேற வெச்சுக்கறாங்க


===============14 18 எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக்குவேன் - டிடிவி.
// 18 பேரை தக்க வெச்சுக்க என்னவெல்லாம் பீலா விட வேண்டி இருக்கு?


==============15 மிகப்பெரிய அரசியல்வாதியாகவே கொள்ளை அடித்தேன் -கொள்ளையன் நாதுராம்.
- என்ன கொடுமை சார் இது?கொள்ளை அடிச்சவனும் அரசியலுக்குதான் வர்றான் ,அரசியலுக்கு வந்தவனும் கொள்ளை தான் அடிக்கறான் ,இலவச இணைப்பா அடுத்தவன் சம்சாரத்தையும் இழுத்துட்டுப்போய்டறான்


==============


16 எவ்வளவுக்கு எவ்வளவு சேற்றை வாரி எங்கள் மேல் அடிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு தாமரை மலரும் - மோடி # செந்தாமரைன்னா தேவல,யாருக்கும் உதவாத ஆகாயத்தாமரையா இருந்தா?


=============17 முடியாததை முடித்து வைப்பவர் தான் மோடி - தமிழிசை
நடக்கற"மதக்கலவரம் ,ஜாதீக்கலவரம் ,ஆண்டாள் பிரச்னை இதை எல்லாம் முடிச்சு வைக்கச்சொல்லுங்க


=============


18 More
விஜய் மல்லையா பெற்ற
கடன் குறித்த ஆவணங்கள்
எங்களிடம் இல்லை
-மத்திய நிதி அமைச்சகம்
# எப்படியும் தள்ளுபடிதான்"பண்ணப்போறோம் ,அதுக்கு ஆவணம் இருந்தா என்ன?இல்லாட்டி என்ன?===============19 மக்களின் நல்வாழ்விற்காக இன்னும் ஏராளமாக செய்ய வேண்டியுள்ளது-மோடி
# யப்பா ,சாமீ ,நீங்க வெச்சு செஞ்சவரைக்கும் போதும்,இதுக்கும்மேல எங்க பாடி தாங்காது


==============


20 மீனாட்சி அம்மன் கோவில் கற்கள் சூடாக இருப்பதால் அவற்றை குளிர்விக்கும் பணி நடைப்பெற்று வருகிறது- செல்லூர் ராஜூ # சில்லுனு ஒரு காதல் பட டிவிடி 10 அங்கே வெச்சா கூல் ஆகிடாது?


============

0 comments: