Sunday, February 25, 2018

ட்விட்டர் ல சீட்டு சேத்தறேன் ,பணம் போடறீங்களா?

சென்னிமலை தைப்பூசம் சத்தாவரம் விழா க்கு முருகரை அலங்காரம் பண்ண 3 லட்சம் ரூபா பூ செலவாம்.நைட் பூ வாடினதும்"மீண்டும் ஒரு 3 லட்ச"செலவுல அலங்காரம்.இந்த 6 லட்சம் /50 = 12,000 ஏழைகளுக்கு ஒரு வேளை சாப்பாடு போட்டிருக்கலாம்

===============


2 உங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால்
,மற்றவர் புகழ் மூலம் தன்னை வெளிச்சப்படுத்திக்கொள்ளும் குணம் இல்லாமல் இருந்தால்
விஐபி உடன் எடுத்த செல்பியை பெருமையாக சமூக வலைத்தளத்தில் பகிர மாட்டீர்கள்!


================


3 ரயில்களில் ,ரயில்வே ஸ்டேஷன்களில் "டீ "காபி மட்டுமே விற்கறாங்களே? பால் ,ஹார்லிக்ஸ்,பூஸ்ட் யாருமே விற்கறதில்லையே? % கம்மியோ?


=============


4 ஒரு பொண்ணு பயோ ல ஐ ஆம் டென்டிஸ்ட் ,நோ டிஎம் னு போட்டிருந்தது.நான் டி எம் ல போய் "ஐ ஆம் நாட் டென்டிஸ்ட் ,எஸ் டிஎம் னு போட்டுட்டு வந்துட்டேன் ,எப்பூடி?


=============


5 ஆன் ட்யூட்டியில் இருக்கும் பஸ் டிரைவர்கள் கிராமத்தில் தன் வீட்டின் முன் பஸ்சை நிறுத்தி மனைவியிடம் டிபன் கேரியர் பெற்றுக்கொண்டு ,குழந்தையிடம் டாட்டா சொல்லிச்செல்வது அழகோ அழகு


===============


6 கடைசி பஸ்ல போய்க்கலாம் என ப்ரோக்ராம் வெச்சுக்காதீங்க.பஸ் ரிப்பேர் ஆகிட்டா மாட்டிக்குவோம் − இப்படிக்கு அத்துவானக்காட்டில் மாட்டிக்கொண்டவன்


==============7 தேர்க்கடைல ஒரு பொண்ணு தனியாப்போனா 2 மணி நேரத்துல ஒரு பாசி யோ க்ளிப்போ வாங்கிடும்.3 பொண்ணுங்க சேர்ந்துபோனா 3 மணி நேரம் ஆனாலும் ஒரு குண்டூசி கூட வாங்க மாட்டாங்க


==============


8 மகாலட்சுமி மாதிரி மங்களகரமா இருக்கற பொண்ணு FB ல னு செல்பி"போட்டு பின் குறிப்பா சாவுங்க னு அதுவே கமெண்ட் போட்டு இலவச இணைப்பா ஸ்மைலி"வேற 😂😂😂 "உலகம்


============


9 நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்கதான் FB ல சோக அப்டேட்சா போடுவாங்க,இப்போ பசங்களும் அந்த டெக்னிக்க பாலோ பண்றாங்க
வாழப்பிடிக்கல
என்ன வாழ்க்கைடா இது
மனசு சரி இல்ல
பக்கோடா சுட்டுத்தரக்கூட ஒரு தோழி இல்ல


==============10 ஆம்பளைங்களுக்கு 1008,பிரச்னை,கவலை,அவன்"பாட்டுக்கு சிவனேன்னு இருக்கான்,இந்தப்பொண்ணுங்க சும்மா இருக்கறதில்ல,நம்ம டிபி நல்லா இருக்குனு
சொல்ல ஒரு தோழன் இல்லையே,
னு சும்மா கிடக்கற சங்கர,நாராயணனை ஊதி கெடுத்துடறாங்க


=============11 தமிழன் பக்கத்து மாநிலத்து ஆளுங்களோட சண்டை போட்டா நாம அவனுக்கு சப்போர்ட் பண்ணலாம்,ஆனா பாருங்க அவன்"பெரும்பாலும் பக் வீட்டுக்காரன்ட்ட ,தன் வீட்டு சொந்தம் கூட தான் சண்டை போடறான்


===============


12 கேரளாவில் குலுக்கி னு ஒரு பானம்
10 ரூபா தான் ,கிட்டத்தட்ட லெமன் ஜூஸ் மாதிரி ,நாரங்கி வெள்ளம் னும் விக்கறாங்க.ஜூஸ் மேல பாயாச ஜவ்வரிசி மாதிரி ஏதோ மிதக்குது,ஜில்ஜில் டேஸ்ட்


============13 ட்விட்டர் ல சீட்டு சேத்தறேன் ,பணம் போடறீங்களா?னு யாரும் கிளம்பலயா?


=============14 சந்தில் உங்களுக்கு பிடித்த பெண் ஐடி க்வோட் செய்யவும் பேக் ஐடி என சந்தேகம் இருந்தால் தவிர்ப்பது நலம் னு நெட் தமிழன் கேட்டா ஏமாந்துடாதீங்க.மயக்கம் என்ன? பட கதை தெரியுமில்ல?


=============15 காதலனை எல்லார் முன்னாலயும் செருப்பால அடிச்சு தாலி கட்ட வெச்ச பெண்ணை எல்லாரும் பாராட்றாங்க.எனக்கென்னமோ அவன் ஒழுக்கமா குடும்பம் நடத்துவான்னு தோணலை,பழி வாங்க சந்தர்ப்பம் பாத்துட்டு இருப்பான்


==============


16 ஆண்கள் வாழ்க்கைல முன்னேற ஒண்ணே ஒண்ணு சொல்றேன்.அம்மா",அக்கா ,தங்கை தவிர எந்தப்பெண்ணையும்" முழுசா நம்பிடாதீங்க.பலரது அடிபட்ட சுயசரிதைகளை கேட்ட அனுபவத்தில் சொல்றேன்


===========


17 நான் ஆணாதிக்கவாதி இல்ல.ஆனா பொண்ணுங்க யாராவது பொது இடத்துல கால் மேல் கால் போட்டு உக்காந்திருந்தா செம காண்டாகுது.குறிப்பா லெக்கிங்ஸ் கேர்ள்ஸ்==============18 குருவே!திருநங்கை ,திருநம்பி என்ன வித்யாசம்?

பெண்ணாக இருந்து ஆணா மாறினவங்களுக்கான சொல் திருநம்பி, ஆணா இருந்து பெண்ணா மாறினா திருநங்கை


=============19 உப்புமா செய்(தாரத்தை) தாரை ஒறுத்தல் அவர் நாண அவர் தங்கையைக்கூட்டிக்கொண்டு ஹோட்டலுக்குப்போய்விடல்


=============20 பாட்டனி மிஸ் பாரிஜாதம் − செந்தாமரை பற்றி பலரும் அறியாத அரிய தகவல் எதுனா சொல் பார்ப்போம்

டீச்சர் ,கனிமொழியோட அம்மாவும் ,கலைஞரோட 3 வது சம்சாரமும் ஆன ராசாத்தி அம்மாளோட முத புருசன் தான் வில்லன்"நடிகர் செந்தாமரை

================

0 comments: