Thursday, February 22, 2018

சரத்குமார் சீமான் புதிய கூட்டணி

மின்வாரிய ஊழியர்கள் வரும் பதினாறாம் தேதி வேலைநிறுத்தம் அறிவிப்பு

#"மார்ச் 1 முதல் கரண்ட் பில் அதிகமாகும்,அதானே உங்க பிளான்,நடத்துங்க,நல்லாருங்க

================2 டிரைவர் ராஜாவுக்கு மீண்டும் பதவி ஜெ.தீபா அதிரடி அறிவிப்பு
# டிரைவர் என்ன மாதவம் செய்தாரோ?

=============


3 விஜய் மக்கள் இயக்கத்தை விரிவு படுத்த உத்தரவு! # விஜய் அரசியலுக்கு வந்தா அட்லீ தான் கொள்கை பரப்பு செயலாளர்,எல்லா கட்சில இருந்தும் ஆளுங்களை இழுத்துடுவார்


===============


4 மோடிஎதிர்ப்பு எனும்கருப்புக்கண்ணாடியை இல்லைஇல்லை மோடிவெறுப்புக்கண்ணாடியை கழற்றி விட்டு பட்ஜெட்டை படித்தால்தமிழகத்துக்கான திட்டங்கள்தெரியும்-தமிழிசை # எங்க கண்களுக்கு எல்லா திட்டங்களும் மாடி வீட்டு மகராசன்களுக்கு சாதகமாவே தெரியுது


================


5 நன்மை தரும் பூமாலை பட்ஜெட்டை காமாலைக் கண்களோடு விமர்சிக்கிறார் ஸ்டாலின் - தமிழிசை # பூமாலையா?எங்க கண்ணுக்கு மலர் வளையம் மாதிரி தெரியுது


==============+6
தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்யாதீர்: தமிழிசை | # ஹிந்தி மொழியை திணிக்கும்போது வேடிக்கை பாத்துட்டு இருப்பாங்களா?


=============


7 ஐதராபாத் சினிமா தியேட்டரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்: பேஸ்புக் நண்பர் கைது # இப்ப எல்லாம் ஒரு குற்றம் நடந்தா பாதிக்கப்பட்டவரோட Fb பாலோயர்சை முதல்ல சந்தேகப்படறாங்க,ஏன்னா பாதிக்குற்றங்கள் பாலோயர்சால ,சொந்தக்காரங்களாலதான் நடக்குதாம்


================


8 More
70 ஆண்டுகளாக நாட்டிற்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை- தமிழிசை. சேர்த்துதான்"பாஜக வெச்சு செய்யுது போல,முடியல


=============9 மீனாட்சிஅம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு சிவன் பார்வதி கோபமும் ஞானிகளின் சாபமுமே காரணம் -மதுரை ஆதீனம்.# ஆமா,இசை ஞானி யின் சாபமாவும் இருக்கலாம் ,தேரை இழுத்து தெருவில விட்டாங்க இல்ல?


===============10 15 கோடியில் தயாரான படம் 1000 கோடியை வசூலித்தது! # செட்டப் சூப்பர் ஸ்டார்கள் கவனத்துக்கு,வசூல்னா இப்டி இருக்கனும்
70 மடங்கு லாபம்.


==============


11 சிம்பு அரசியலுக்கு வருவாரா?

டி.ராஜேந்தர்: சிம்பு ரசிகர்களை கூட்டப்போகிறோம்; என்ன முடிவு என்பதற்கு வெய்ட் அண்ட் சி # தமிழ்நாடு பூரா மொத்தமா ஒரு 50,000 பேர் இருப்பாங்களா?


=================


12 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து இயற்கையானது: கோயில் தீ விபத்தால் தமிழக அரசுக்கோ மத்திய அரசுக்கோ எந்த ஆபத்தும் நேராது: மதுரை ஆதீனம் # அடடா ,வடை போச்சே


================


13 யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும்; நாங்கள் செய்யப்போவதை பொறுத்திருந்து பாருங்கள்: டி.ராஜேந்தர் # மகன் மாதிரி இவரும் ஜிம் போய் எக்சசைஸ் பண்ணுவார் போல


=================


14 காதலர் தினம் அன்று ஜோடியாக சுற்றி திரியும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் - அர்ஜூன்சம்பத்..
பண்ணுங்க,வடிவேல் காமெடி ல வர்ற மாதிரி கள்ளக்காதல் ஜோடியா இருக்கப்போகுது


=============15 சரத்குமார் சீமான் புதிய கூட்டணி
இணைந்து செயல்பட போவதாக அறிவிப்பு .
நாடார் சங்கங்கள் இணைந்தது.
# எப்படியும் ஜனங்க ஜாதிக்கட்சிகளை நாடார் ,அது பாமக ,விடுதலைசிறுத்தை எல்லாருக்கும் பொருந்தும்


================16 வெற்றி என்ற கவச – குண்டலத்தோடு பிறந்த இயக்கம் அதிமுக: செல்லூர் ராஜூ # இரட்டை இலை சின்னம் மட்டும்தான் காப்பாத்தப்போகுதுனு சொல்றாரா?


==============17 மக்கள் வரிப்பணத்தில் ரூ.49,000 க்கு கண்ணாடி வாங்கிய கேரள சட்டப்பேரவை தலைவர்#இதெல்லாம் ஜூஜூபி மேட்டரு,சிலர் ஒரு கோட்சூட்க்கே லட்சக்கணக்குல செலவு பண்றாங்க


==============18 பழனிசாமி தலைமையிலான
ஓராண்டு ஆட்சியின் வெற்றிவிழா
பிப்.14-ல் கொண்டாடப்படும்:
கடம்பூர் ராஜூ.# ஒரிஜினல் ஓனர் சிறப்பு விருந்தினரா வருவாரா?


================


19 அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் தமிழக அரசின் திட்டங்களைப் பெற முடியும்: அமைச்சர் செல்லூர் ராஜு
அதை வாங்க வெச்ட்டா அவங்க உங்களுக்கே ஓட்டுப்போடுவாங்கனு எந்த அறிவாளி ஐடியா குடுத்தது?

=================20 உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அதிமுகவினர் அரசின் சலுகைகளை பெற முடியும்- அமைச்சர் செல்லூர் ராஜூ # தப்புக்கு மேல தப்பு பண்ணீட்டே இருக்கீங்க,அரசின் சலுகைகளை கட்சிக்காரங்களுக்கு ஒதுக்குவதே சட்டப்படி தப்பு,அதை கூச்சமே படாம பப்ளிக்கா வேற சொல்றீங்க


=================

0 comments: