Wednesday, February 28, 2018

ஏண்டா தலைல எண்ணெய் வைக்கல?"

தலைவரே!நீங்க ஆட்சிக்கு வந்ததும் சிஸ்டத்தையே மாத்தி அமைக்கப்போறீங்களாமே?


ஆமா
என்ன பண்ணுவீங்க?
முதல்ல இந்த வாடகைகுடுக்கற சிஸ்டத்தை மாத்தி 10 வருசம் குடி இருந்தா அந்த வீடு அவங்களுக்கே சொந்தம்னு சட்டம் கொண்டாரப்போறேன்


=============


2 தலைவரே!இந்த ஜீயர் உங்களை விட,பெரிய டகால்டியா இருப்பார்"போலயே?


உடன்"பிறப்பே! வல்லவனுக்கு வல்லவன்"வையகத்தில்"உண்டு,சிம்புவை விட பிரபு தேவா,பிரபுதேவாவைவிட விகனேஷ் சிவன்"டைரக்சன் ல"டாப்னு நிரூபிக்கலையா?============3 சார்,வாட்சப் க்ரூப்,1 ஆரம்பிச்சு பொண்ணுங்களை,மட்டும்"மெம்பரா சேர்த்து கண்ணியமா நடத்துனீங்களே?அதை,ஏன் கலைச்ட்டீங்க?


ரெண்டு ,மூணு பேரு கலைக்க மாட்டேன்னு அடம் பிடிச்சாங்க,நாம மாட்டிக்கக்கூடாதுனு கலைச்ட்டேன்==============4 என் உண்ணாவிரதத்தால் உலக மக்களுக்கு கேடு விளைந்துவிடும் அதனால அதை கேன்சல்"பண்ணீட்டேன்


ஓஹோ,எந்த மாதிரி கெடுதல் வரும்?
அதான் கேன்சல் பண்ணியாச்சே,விடுங்கப்பா==============5 குருவே!மொத்தத்தையும் தெரிஞ்சுகிட்டு ஒருநாள் சாகத்தான் போறோம் அதுக்கு பேசாம தண்டசோறாவே இருப்போம்னு சிலர் சோம்பேறியா இருக்காங்களே?


அவங்க தேவலை,தான் ஒரு தண்டச்சோறுன்னே தெரியாம பலர் இருக்காங்க,அவங்களை என்ன பண்றது?கட்டாய உண்ணாவிரதம் இருக்க வெச்சுடலாமா?================6 மணிரத்னத்தோட புதுப்படம் இந்து முஸ்லீம் கலவரம் பற்றிய படமா இருக்கும்னு எப்டி யூகிக்கற?


தமிழ் போஸ்டர்ல ரத்தம் கலர் ,தெலுங்கு டைட்டில் ல நவாப் ,கூட்டிக்கழிச்சுப்பாரு
=============7 டியர், நான் வர எப்டியும் இன்னும் 2 மணி நேரம் ஆகும்,பொறுத்துக்குங்க,வந்து தோசை சுட்டுத்தர்றேன்


பொறுமையா வா,2 மணி நேரம் கூட பசியை பொறுத்துக்காம இருக்க நான் என்ன கலைஞரா?ஜீயரா?சாமான்யன் தானே?பசி நமக்கு பழகுனதுதானே?
================8 மேடம் ,உங்க வீட்டுக்காரர் உங்களை விரும்பறாரா?


ஆமா,ஏன்?
இல்ல,லைக்கறவிங்களைலாம் ப்ளாக்கலாம்னு இருக்கேன்னீங்களே,அப்போ அவரையும் பிளாக் பண்ணீடுவீங்களா?===============9 சார்,நகைச்சுவைங்கறது இரு பக்கமும் கூரான கத்தி மாதிரி னு சொல்றாங்களே ,அது நிஜமா?


தெரில,ஆனா நான்"ஜோக் சொன்னா மாத்திரம் பிளேடுங்கறாங்க=================


10 சார் ,நீலகிரித்தைலம் வேணுமா?


இது டூப்ளிகேட்னு நினைக்கறேன்்
எப்டீ?
லைட் பச்சை கலர்ல இருக்கே?நீல கிரி ன்னா நீலக்கலர்ல தானே இருக்கும்?===============11 ஜட்ஜ் = ஜெ இட்லி சாப்பிட்டார்னு ஆளாளுக்கு சொன்னாங்க,ஆனா யாருமே அதை பாத்ததில்லையாமே?


சசிகலா = இட்லி யைத்தான் அக்கா சாப்ட்டுட்டாங்களே?எப்டி பார்க்க முடியும்?============12 டாக்டர், பகல் தூக்கம்

உடலுக்கு கேடு
மனசுக்கு ரொம்ப நல்லது .
னு சிலர் சொல்றாங்களே?அது நிஜமா?
இந்த மாதிரி தப்புத்தப்பா மனசு நினைக்கறது உடம்புக்கும் கேடு,மனசுக்கும் கேடு==============


13 பாக்ஸ்க்கு டிக்கெட் 1 குடுங்க.


சாரி சார். சிங்கிளா வந்தா கிடையாது.கப்பிளா வந்தாதான் தருவோம்
நீங்க 1 குடுங்க,உள்ளே போய் ஜோடி தேடிக்கறேன்==============14 நீங்க விளையாண்ட"பல கபடி மேட்ச் பாரத்துட்டன்,ஆனா ஒரு மேட்ச்ல கூட நீங்க ரைடு போகவே இல்லையே?


நான் ஒரு பை பாஸ் ரைடர்"பஸ் டிரைவர் பையன்ங்க.பை பாஸ்"ரோட்ல தான் ரைடு போவேன்===============15 குருவே!தினமும் யோகா செய்தால் மருத்துவரே அவசியமில்லைனு"சொன்னீங்க,இப்போ ஹாஸ்பிடல் வந்திருக்கீங்க?

தெரியாத்தனமா என்"பதஞ்சலி"ப்ராடக்ட்ஸை நானே சாப்ட்டுட்டேன்


====================16 TNPSC க்ரூப் 4 எக்சாம் எழுதி இருக்கேன்.செலக்ட் ஆகிட்டா அக்கடா னு இருப்பேன்

செலக்ட் ஆகலைன்னா?
பக்கோடா கடை போட்ர வேண்டியதுதான்,மோடியே சொல்லிட்டாரு


==================17 பட்டாணி சுண்டல் சாப்ட வந்து பஞ்சத்துக்கு ரவுடியா இருக்கறது வேற
பொறக்கறப்வே ரவுடியா பொறக்கறது வேற,
நான் பொறக்கறப்பவே டான்
ஓஹோ,அப்போ எந்தக்கேள்வி"கேட்டாலும் டான் டான் னு பதில் சொல்வீங்க?


================18 தமிழ்ல எனக்குப்பிடிக்காத,ஒரே"வார்த்தை மன்னிப்பு

முதல்ல "மன்னிப்பு" தமிழ் வார்த்தையே இல்லையாமே? TNPSC எக்சாம் எழுதுனவங்க சொன்னாங்க


================


19 சார்,உங்க அடுத்த பட டைட்டில் என்ன?

ஏண்டா தலைல எண்ணெய் வைக்கல?"
இன்னைக்கு தலைக்கு குளிச்சேன் சார்,அதான்,சார் ,நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல?
யோவ்,இப்ப தானே சொன்னேன்?


===================


20 குருவே!பொண்ணுங்க கண் அடிக்கறதால பசங்களுக்கு எதுனா பாதிப்பு வருமா?

இப்ப வராது,எதிர்காலத்துல வரும்
எப்டி?
பர்சை அடிச்ட்டு போறப்ப


=================

0 comments: