Friday, February 23, 2018

ஜெ.தீபா சொந்தப்படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பார்?

தலைவரே!பட்ஜெட்டை ஏன் ஹிந்தி ல வாசிக்கறீங்க?

பொதுவா தமிழன்தான் எதுக்கெடுத்தாலும்"போராட்டம்"செய்வான் ,ஹிந்தி ல வாசிச்சா உடனடியா எதிர்க்க முடியாதில்ல?


================


2 குருவே!இவன்தான் வாழ்க்கைன்னு மனசுல நெனச்சிடாளே பொண்ணுங்க மனசுல வேற பசங்கள நெனச்சு கூட பாக்க மாட்டாங்களாமே?அது உண்மையா?

அதெல்லாம் சும்மா,உன்னை நினைத்து"லைலா கேரக்டர்"தான்"பாதி பொண்ணுங்க,வசதியானவன் சிக்குனா காதலனை கண்டுக்கவே"மாட்டாங்க,ஆனா அவன் கிட்ட உதவி மட்டும் எதிர்பார்ப்பாங்க

==============


3 தலைவரே!வறுமையை ஒழிப்பதே நம்ம லட்சியம்னீங்களே?புரியல

இப்போ வறுமையின் நிறம் என்ன?
தெரில.கமல் படம் 1 வந்தது,வறுமையின் நிறம் சிவப்பு னு
சரி,சிவப்பு நிறத்தை அடையாளமா கொண்ட கட்சி எது?
ஆங்,அதை வேணா ஒழிக்க ட்ரை பண்ணலாம்
கம்யூனிஸ்ட்

===============


3 தலைவரே!ரயில் டிக்கெட் எடுக்கக்கூட காசில்லாம வறுமைல இருந்த நீங்க இத்தனை சொத்து சேர்த்தது எப்டி?

அரசியலுக்கு வந்ததும் வறுமையை ஒழிப்பேன்னு முழங்கினேனே?முதல் கட்டமா என் வறுமையை ஒழிச்ட்டேன்


================


4 இண்ட்டர்வ்யூவில்

25 லட்சம் ரூபா தந்தா இந்த வேலை உங்களுக்குதான்.
ஓஹோ,என்ன சம்பளம் கிடைக்கும்?
25 லட்சத்தை பேங்கக்ல / மியூச்சுவல் பண்ட் ல போட்டா மினிமம் மாசம் 50,000 டூ 75,000 கிடைக்கும்.
மாசம் 30,000 ரூபா
ஆமா,அப்டித்தான் தருவோம்

================


5 தலைவரே!எம்எல்ஏ ,எம் பி ங்க யாராவது சம்பளம் பத்தலைனு போராடுனாங்களா?

இல்லை
சாப்பாட்டுக்கே வழி இல்லாம போராடறவங்களுக்கு உதவாம பொது மக்கள் பணத்தை திருடறவங்களுக்கு ,பொது சொத்தை கபளீகரம் செய்யறவங்களுக்கு எதுக்கு தண்டமா சம்பள உயர்வு?


=================


6 ஷேர் மார்க்கெட்டும் பொண்டாட்டியோட கோபமும் 1 ,how?


அப்போ ஏன் ஏறுது?இறங்குது?னு யாருக்கும் தெரியாது


================7 தலைவரே!நோகாம நோம்பி கும்பிடற பணக்காரங்களுக்கு வரி கம்மியாவும் ,நடுத்தர மக்களுக்கு அதிக வரியும் தீட்றீங்களே,அது ஏன்?

ஏன்னா பணக்காரன் வரி ஏய்ப்பான் ,மிடில் க்ளாசை நம்பி தான்"அரசாங்கம் இருக்கு,புலம்புனாலும் நேர்மையா கட்டீடுவான்


=================


8 சினிமா விமர்சகர்கள் பணத்தையும் வாங்கிட்டு படம் மொக்கைனு நெகடிவ் ரிவ்யூ தர்றாங்க

இப்போ நீங்க பணம் தந்தது தப்புங்கறீங்களா?
படம் மொக்கைனு உண்மையை"சொன்னது தப்புங்கறீங்களா?


================


9 மேனேஜர் சார்,சம்பளமே பத்தலை.10% ஆவது உயரத்தனும்

2 வருசம் பொறுங்க,சம்பளத்தை டபுள்,ஆக்கறோம்
மடத்தனமா பேசாதீங்க,இப்ப உங்களால 10% கூட உயர்த்த முடில.2020 ல எப்டி 100% ஏத்த முடியும்?


==============


10 சார் ,சிகரெட் ,சரக்கு அடிக்கும்"பழக்கம் இல்லாதவங்க கடுப்பா இருக்கும்போது என்ன செய்வாங்க?எப்டீ ரிலாக்ஸ் பண்ணிக்குவாங்க?

இந்த ரெண்டையும் அடிச்சா டென்ஷன்"குறைஞ்சிடும்கற மூட நம்பிக்கை கொண்டவர்களை நினைச்சு சிரிச்சுக்குவாங்க


=================


11 மேடம்,உங்க பேரை பூஜா செமீ னு ஏன் மாத்தீட்டீங்க?

பேலியோ டயட் ல இருந்ததால ஓவரா இளைச்சு பூஜா ஹெக்டே'(ர்) இப்போ பூஜா செமீ ஆகீட்டேன்


===================12 எனது blood group B positive
நானும் always Be positive தான் 😁
அப்டீயா?மேடம் அதுக்கு தமிழ்ல என்ன அர்த்தம்?
யார் என் கிட்டே என்ன கேள்வி கேட்டாலும் நெகடிவ்வா பதில் சொல்ல மாட்டேன்
ஓஹோ,10,000 ரூபா கடன் குடுங்க பார்ப்போம்


=================


13 கண்ணு மங்கலா தெரியுது டாக்டர்க்கிட்ட போனா கண்ணாடி போட வச்சிருவாங்களோ... 🤔🤔?

பார்வை சுபமங்களம் பாடறதுக்குள்ள கண் டாக்டரைப்பாத்துடுங்க,ஊருக்குள்ள பாதிப்பேரு இப்டீ தயங்கீட்டேதான் வீக் ஆகிடறாங்க


==================14 ஜெ.தீபா சொந்தப்படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பார்?

ஒரு நல்ல டிரைவர் பார்த்து சொல்றேன்


==============


15 குருவே!Valentine's day அன்னிக்கு நிஜமாவே காதலர்கள் காதலர் தினம் கொண்டாடுறாங்களா?

அன்னைக்கு கொண்டாடுனா வீட்ல மாட்டிக்குவாங்க,வீட்ல யாரும் இல்லாதப்ப வீட்ல வேணா வேற ஒரு நாள் கொண்டாடுவாங்க


================


16 சார்,இனிமே ஜிம் முக்குப்போய் எக்சசைஸ் மட்டும் பண்ணுங்க,அப்டேட் போட்டாஸ் வேணாம்

ஏன்?
நெட்டிசன்கள் "ஜிம்"ப்பலக்கடி பம்பா னு கிண்டல் பண்றாங்க


=================


17 குருவே!ஜாதி முல்லைப்பூக்கள் அலங்காரப்படுத்துதே உங்களை?இது அபச்சாரம் ஆகாதா?

சிஷ்யா!எல்லாமே உயர் ஜாதி முல்லைதான்


===============18 சார்,ஒரு பொண்ணு பைக்ல போற உங்களை ஸ்கூட்டில ஓவர்டேக் பண்ணா கோபப்படுவீங்களா?என்ன செய்வீங்க?

பொண்ணுங்க கிட்டே நாம என்னைக்கு கோபப்பட்டோம்?
பாலோ பண்ணுவேன்


=============


19 சிம்பு ஒரு வேளை சிஎம் ஆகிட்டா பதவி ஏற்றதும் என்ன செய்வார்?

விக்னேஷ்சிவன் வீட்ல ரெய்டு நடத்துவார்
எதுக்கு?
எப்டியும் நயன் தாரா அங்கே இருக்கும்,இட்டாந்துடுவாரு


================


20 ஜோசியரே!மதுரை கோயில் விபத்தால இந்த அரசுக்கு ஆபத்து னு எப்டி சொல்றீங்க?

நாளை நடப்பதை இன்றே கணித்து சொல்வது தான் ஜோசியம்
ஓஹோ,அப்போ விபத்து நடக்கப்போகும் முன்பே தெரிஞ்சும் ஏன் தகவல் சொல்லலை?சட்டப்படி இது தப்பாச்சே?


==============

0 comments: