Thursday, February 15, 2018

நாளை நமதே"

அரசு பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என அறிவிப்பு
ஏதுங்க கொள்கை?அது கொள்ளை முடிவுங்கோ==============


2 பஸ் கட்டண உயர்வால் மக்கள் கூட்டம்: ரெயில்வேக்கு 2 நாளில் ரூ.11 கோடி வருமானம் # புது ரயில்கள் 50% விடுங்க.அரசு பஸ் 100% லாஸ் ஆகட்டும்


============


3 பேருந்து கட்டண உயர்வுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த கட்சி பாஜக: தமிழிசை # எப்டியோ பாஜக தமிழகத்தில் இதுலயாவது முதலிடம் பிடிச்சுதே?


============4 தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர்,

மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்"
-தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தல்!# தரையில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்பதை விட்டுவிட்டீர்=============5 "தமிழ்த்தாய் வாழ்த்தின் போது சங்கராச்சாரியார்கள் எழுந்து நிற்கும் மரபு இல்லை" - காஞ்சி சங்கர மடம்
# அவரும் இந்தியர்தானே?ரிப்பன் பிரபு இல்லையே?


==============6 3-வது மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டு சிறை # பஞ்ச் டயலாக் எல்லாம் பேசுனாப்டி,பாஞ்ச் சால் தீட்டீட்டாங்க இல்ல


===============


7 தீய சக்திகள் பேருந்து கட்டண உயர்விற்கெதிராக மாணவர்களைத் தூண்டி விடுகின்றன -அமைச்சர் விஜயபாஸ்கர்! # எனக்குத்தெரிஞ்சு தமிழ்நாட்ல ஒரே தீய சக்திதான்,அதுவும் ஜெயில்ல இருக்கு

போராட்டத்துக்கு யாரும் "ஸ்கெட்ச்" போட்டு தரலை.எல்லாம் "தானா சேர்ந்த கூட்டம்"===============8 தேசிய கீதம் போன்று தமிழ்த்தாய் வாழ்த்தையும் மதிக்க வேண்டும்: வைரமுத்து # க்ரீஸ் டப்பாவை எப்டீ உதைச்சே?மொமெண்ட்.வாழ்க்கை ஒரு வட்டம்.ஒவ்வொருத்தருக்கும் திருப்பி அடிக்க சான்ஸ் தந்தே தீரும்


================


9 தமிழ்த்தாய் வாழ்த்தை கடவுள் வாழ்த்தாக எண்ணி தியானித்தார் விஜயேந்திரர் - சங்கரமடம் # கையைக்காலா நினைச்சாரா?அப்போ காலை எதா நினைப்பாரு பார்த்திபன் வடிவேலு காமெடி மொமெண்ட்


==================10 விஜயேந்திரர் - தமிழ்த்தாய் சர்ச்சை பற்றி எனக்கு தெரியாது- தமிழிசை # சில சமயம் மட்டும் சஞ்சய் ராமசாமி ஆகிடுவாரு.செலக்டிவ் அம்னீஷியா எல்லா அரசியல்வாதிகளுக்கும் கேடயமா பயன்படுது


================


11 தமிழகம் விரைவில் காவியாகும்
-தமிழிசை"# நாட்டு நிலவரம் தெரியாம பஞ்ச் டயலாக் பேசிட்டு இருக்கீங்க,இங்கே காவியை காலி பண்ணிட்டு இருக்காங்க


=============12 சசிகலா எத்தனை விரதம் இருந்தாலும் செய்த பாவத்தை போக்க முடியாது- தமிழிசை # இதுதான் உங்க டக்கா?அவங்க மவுன விரதம் இருக்கறதே செய்த பாவத்தோட டீட்டெய்ல்ஸ் வெளில யாருக்கும் தெரிஞ்சுடக்கூடாதுனுதான்


================13 விஜயேந்திரர் தியானம் செய்வதற்கான இடம் பொது மேடை இல்லை - ஜெ.தீபா # பேபிம்மா கூட எந்திரிச்ட்டாங்க,கருத்து சொல்லிட்டாங்க,இன்னும் முதல்வர் ,ரஜினி ,கமல் யாரும் வாயைத்திறக்கலை


================


`14 அதிமுகவுடன்
ஆட்சி ரீதியாகத்தான்
பாஜக இணக்கம்
-தமிழிசை
கட்சி ரீதியாக இல்லை
# அதாவது ஆட்சியை மட்டும் தான் தமிழ்நாட்ல பாஜக நடத்துது,கட்சியை நடத்தறது Eps?


==============


15 ஆர்கே நகரில் தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி தினகரன் ரூ.21 லட்சம் செலவு மேற்கொண்டுள்ளார் என தகவல் # ரூ 20 டோக்கன் × 1,05,000 பேர் = 21 லட்சம்.வெரிகுட் கால்குலேசன்.


==============16 வேலை இல்லாதவர்கள் சமூகவலைதளங்களில் சங்கரமடத்தை விமர்சிப்பார்கள் - ராமசுப்பிரமணியன் பெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜரு.டிவி விவாதங்கள்ல டெய்லி ஒரு கெட்டப்ல ஊரை ஏமாத்தற ஆளு


===============
17 நான் எல்லாக்காரிங்களையும் உட்கார்ந்து கொண்டே தான் செய்வேன் −சங்கரநாராயணன் (எ) விஜயேந்திரன் # அப்டியா?வாக்கிங் போகும்போகுது தவழ்ந்துட்டே போவீகளா?


===============


18 இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்படும் - அர்ஜுன் சம்பத்
# 2 ஜென்மம் எடுத்தாலும்"அந்த"2ம்"நடக்கப்போறதில்ல


===============
19 தனது அரசியல் சுற்றுப்பயணத்திற்கு "நாளை நமதே" என பெயரிட்டுள்ளார் நடிகர் கமல் # இப்பதான் ஜனங்களுக்கு புரியற மாதிரி பேசி இருக்கார்.MGR வாழ்க


=============20 தமிழ்த்தாய் வாழ்த்தின் போது சங்கராச்சாரியார்கள் எழுந்து நிற்கும் மரபு இல்லை -காஞ்சி சங்கர மடம் # இதுவரைக்கும் இல்லைன்னா இனி"கத்துக்கோங்க.எழுந்து நின்னாதான் சோறு


===========

0 comments: