Wednesday, February 14, 2018

பெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்

சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு கில்மா புக்ஸ் ,1 கோடி கோலம் போடுவது எப்டி?

==============
2 இந்து மக்கள் கட்சியிலிருந்து தொண்டர்கள் விலகி பாஜக வில் இணைந்தனர் - தமிழிசை # மேடம் ,இவங்களை எல்லாம் நம்பாதீங்க,ஒரு பாக்கெட் பிரியாணி /தயிர் சாதம் தந்தா கட்சி மாறிடும் கோஷ்டி


================


3 அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றிபெரும்-தமிழிசை.


# போன தடவை எத்தனை?
1 அடுத்ததுல?
2.அப்போ 1 ஐ விட அதிகம் தானே?=============4 பெண் ஏ.எஸ்.பி சுனிதா ரெட்டியுடன் கள்ளத்தொடர்பு.. கையும் களவுமாக சிக்கிய காவல் ஆய்வாளருக்கு சுனிதாவின் அம்மா செருப்படி! # முதல்ல ஆம்பளைக்கு தான் அடி விழுது,ஆனா லேடீஸ் பர்ஸ்ட்னு ஜம்பமா சொல்லிக்கறாங்க


===============5 “நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறும் தேசிய கட்சி என்பது, பாஜகவுக்கு பொருந்தாது” - தமிழிசை # ஏன்?பாஜக தேசிய கட்சி பட்டியல்ல இருந்து எடுத்துட்டாங்களா?கோபம் வர்ற மாதிரி காமெடி பணணக்கூடாதுனு எத்தன டைம் சொல்றது?


================


6 கூடுதல் விலைக்கு நிலக்கரி வாங்கியதில் தமிழக அரசுக்கு ரூ. 487 கோடி இழப்பு என புகார்!

தமிழக அரசு, பொது பணித்துறை மீது வழக்குப்பதிவு செய்தது சி.பி.ஐ. | # மக்கள் முகத்துல கரி பூசறதுக்கு அரசியல்வாதிங்க எப்பவும் ரெடியா இருக்காங்க

===============


7 யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம் ஆனால் அவர்கள் அனைவரும் எம்ஜிஆர் ஆக முடியாது” - தம்பிதுரை. # யார் வேணா அறிக்கை விடலாம்,பேட்டி தரலாம் ,ஆனா அவங்க எல்லாம் ரஜினி ,கமல் ஆக முடியாது,ரெஸ்பான்ஸ் பாத்துட்டு பேசுங்க


===================


8 தன் பேரவையில்

பதவி தருவதாக ஜெ.தீபா

பலரிடம் கோடிக்கணக்கில்
செய்ததாக புகார்கள் குவிகிறது
-செய்தி
# பெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்,இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு================

9 பிரதமர் மோடியின் ஆங்கில உச்சரிப்பை மிமிக்கிரியுடன் கேலி செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப்-செய்தி # இவரை ஹிந்தி ல 4 வரி பேசச்சொல்லி அவரு கிண்டல் பண்ணனும்,தானிக்கு தீனி


===============


10 தமிழகத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ஹெச்.ராஜா முதல் முறையா தமிழ்நாட்டுக்கு உபகாரம் பண்ணி இருக்காரு,மகிழ்ச்சி


==============


11 போஸ் மக்கள் பணியகம்” தொடங்கிய திவாகரனின் மகன் ஜெயானந்த்..!
# சுபாஷ் சந்திர போஸ் னு முழுசா பேர் வைக்கலாமில்ல?போஸ் குடுக்கற பணினு நினைச்சுடப்போறாங்க


===============


12 மவுன விரதம் இருப்பதால் விசாரணைக்கு வர முடியாது.. வருமான வரித்துறைக்கு சசிகலா கடிதம் # இந்த டகால்டி எல்லாம் வேணாம்.கேட்கற கேள்விக்கு பேப்பர்ல பதில் எழுதிக்காட்டுங்க?கை ஒண்ணும் விளங்காம போகலையே?


================


13 எம்பி தேர்தலில், தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும்" - தமிழிசை ஒரு தகவல் தென்கச்சி மாதிரி மேடமும்.டெய்லி இப்டி ஒரு ஜோக் சொல்லிட்டே இருப்பாங்க


================


14 திருப்பதி கோயில் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கனிமொழி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு # ஆந்திரா வரை நம்ம புகழ் பரவப்போகுது ,மகிழ்ச்சி


===============15 தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ்- திருநாவுக்கரசர்
,முதல் பெரிய கட்சி திமுக.ஊழல் பண்ணி சொத்து சேர்க்கறதுலதானே?அதிமுக 3 வது


=============


16 உள்ளாட்சி தேர்தலுக்காக பாஜக தயாராகி வருகிறது- தமிழிசை
# டெபாசீட் வாங்கனும்,நோட்டா வை முந்தனும் ,இந்த 2ம் தான் நம்ம லட்சியம்


===============


17 கமலையும் அவரின் கோட்பாடுகளையும் மக்கள் ஏற்க மாட்டார்கள்.- தமிழிசை # நம்மை மட்டும் பரிபூரணமா ஏத்துக்கிட்டாங்களா?நோட்டா வே நம்மை ஓவர்டேக் பண்ணி டாட்டா காட்டி போகுது


============


18 எத்தனை புயல்கள் வந்தாலும் அதிமுக கப்பல் கரை சேரும்-அமைச்சர் விஜயபாஸ்கர்#
"புரட்சி புயல்" வைகோ திமுக ஆதரவு நிலை எடுத்த தைரியத்துல சொல்றாரா?


===============


19 பட்ஜெட் பிரிண்டிங் செய்யும் பணியை அருண்ஜெட்லி அல்வா கிண்டி தொடங்கி வைத்தார்−செய்தி # நம்பி ஓட்டுப்போட்ட மக்களுக்கு அல்வா கொடுப்பது அரசியல்வாதிகளுக்கு பிடித்தமானது அல்(ல)வா?


===============20 தமிழர்கள், தமிழ் மொழியோடு பிற மொழிகளையும் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம்” - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் # ஆமா, அரசியல் தலைவர்களோட வாரிசுகளை ஹிந்தி,இங்க்லீஷ் படிக்க வெச்ட்டு வெளில ஹிந்தி எதிர்ப்புப்போராட்டம் பண்ற தகிடுதித்தம் பண்றதையும் தெரிஞ்சுக்கனும்


=============

0 comments: