Sunday, February 04, 2018

தனியா இருக்கும் பிரம்மச்சாரிகளுக்கு.....

தமிழக காங். தலைவர் பதவியில் மாற்றம் இல்லை- திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் # இனி விளக்கை,அணைச்சா"என்ன?அணைக்காட்டி என்ன?கவுண்டமணி"மொமெண்ட்

===============


2 முகநூலில் அரசையோ அரசு அதிகாரிகளின் தவறையோ சுட்டிக்காட்டுவது குற்றமல்ல...
உச்ச நீதிமன்றம் # சும்மாவே"ஆடுவாங்க,கால்ல சலங்கையை வேற"கட்டி விட்டா கேட்கனுமா?


=================


3 கட்சியின் பெயர், கொடி, கொள்கையை ரஜினி அறிவித்த பிறகு மற்ற அரசியல்வாதிகளுக்கு தலைசுற்றும் - ராகவா லாரன்ஸ் # கொள்கை என்ன?னு கேட்டதுக்குதான் ரஜினிக்கே"தலை சுத்திடுச்சாம்ல?

===============


4 கட்சியின் பெயர், கொடி, கொள்கையை ரஜினி அறிவித்த பிறகு மற்ற அரசியல்வாதிகளுக்கு தலைசுற்றும் - ராகவா லாரன்ஸ் # கொள்கை என்ன?னு கேட்டதுக்குதான் ரஜினிக்கே"தலை சுத்திடுச்சாம்ல?


================


5 மனைவியிடம் சென்றால் கூட அவள் கேட்கிறாள் ஆதார் - நாஞ்சில் சம்பத்.# மோடியை"கிண்டல் பண்றதா நினைச்சிட்டு சம்சாரத்தை"கிண்டல் பண்ணிட்டு"இருக்கோரு

================


6 மக்களை பாதிக்கும் வகையில் போராடுவது சரியா - தமிழிசை
ஓட்டுநரும்,நடத்துனரும்,அவங்க குடும்பமும் மக்களோட ஒரு அங்கம்தான்கற"மறப்பது சரியா?


================


7 மாடியிலிருந்து பார்ப்பவர்களால் மக்கள் கஷ்டத்தைப் புரிந்து கொள்ள இயலாது - அமைச்சர் ஜெயக்குமார் # நாம குடி இருக்கறதே அடுக்கு மாடி,இப்டி சேம் சைடு கோல் போடறது அடுக்குமாடி?


================

8 போக்குவரத்து ஊழியர்கள்
'கேட்கும் சம்பளத்தை கொடுக்க
மனம் இருக்கு, ஆனால் பணம்
இல்லை!’ - செங்கோட்டையன் # பின்"தேதியிட்ட காசோலையா குடுங்க.அடுத்த தேர்தல் ல ஜெயிக்கறவங்க பாடு அவங்க பாடு

==================

9 எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட
பார்க்க முடியாது - மு.க.ஸ்டாலின்
# உங்க கண் முன்னாலயே ரஜினி கலைஞரை தொட்டு ஆசிர்வாதம்"வாங்கிட்டாரே?


================


10 தமிழ்நாட்டில் நடிகர் அஜித்தை தவிர வேறு யாரும் முறையாக வருமான வரி செலுத்தவில்லை-அன்புமணி # அரசியல் ஆசை இல்லாத ஒரே"முன்னணி ஹீரோங்கறதால பாராட்றீங்களா?


==============

11 ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்- கி.வீரமணி# எல்லா அரசியல் தலைவருக்கும்"உள்ளூர,கிலி இருக்குது போல


==============12 சட்டமன்றத்தில் இருந்து கவர்னர் உரையைப் புறக்கணித்து திமுக வெளி நடப்பு#வெளிநடப்பு செஞ்சா 1 மாச சம்பளம்"கட்,அபராதம் 10 நாள் சம்பளம்னு சொல்லிப்பாருங்க,ஒரு பய வெளில"போகமாட்டாப்டி


==============


13 ஆளுநரின் உரை மஸ்கோத் அல்வா போல் இருக்கு... ஸ்டாலின் நக்கல் வந்தவங்க எல்லாம் முதல்வர் ஆகியாச்,நாம இன்னும் அல்வா ஞாபகம்,கஸ்தூரி ஞாபகம்னு வாய் பேசிட்டு இருக்கோம்


===============]


14 இன்னும் ஒரு மாதத்தில் அரசியலுக்கு வருகிறேன்-பாக்யராஜ் # பொறுத்துக்க"வேண்டிய"நாள் பதினஞ்சு,நானும்"அரசியல்ல தீவிரமா"வரப்போறேன்"பாய்ஞ்சு"ஏ"டன்டணக்கா"டணக்கு"நக்கா


===============


15 திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பேன்: டிடிவி தினகரன் எதிரி நமக்கு"நண்பன்"பார்முலா


================


16 ஒருமாதத்தில் அரசியலுக்கு வருகிறேன்'- பாக்யராஜ் அறிவிப்பு - செய்தி" மட்டுமில்ல, "முருங்கக்காய் முற்றினாலும் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆகனும்


===============


17 முதல்வர் எனக்கு முன்னாள் நண்பர் தான்... அவரை சந்திப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை −தினகரன் # முதுகுல குத்துனது நண்பனா இருந்தா .... மொமெண்ட்


=============


18 ஆளுனர் உரை மஸ்கோத் அல்வா போல உள்ளது - முக.ஸ்டாலின் #"அப்போ சுகர் பேஷண்ட்ஸ் எல்லாரும் ஜாக்கிரதையா ஆளுநர் உரையை அவாய்ட்"பண்ணத்தான் வெளிநடப்பா?


================


19 தமிழக மக்கள் அடுத்த 6 நாட்களுக்கு ஸ்வெட்டரோடுதான் சுத்தனும்.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம் # தனியா இருக்கும் பிரம்மச்சாரிகளுக்குத்தான் பிரச்ன


===============


20 டிரைவரும் நண்பருமான ராஜாவிற்கு 'டாட்டா'... பேரவையில் இருந்து நீக்கிய ஜெ. தீபா! # தனியார் டிரைவர்களுக்கும்"டைம்"சரி இல்ல போல


==============

0 comments: