Friday, February 09, 2018

சந்தன வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி புதிய இயக்கம் துவக்கம்.

நீங்கள் ஒரு புரட்சித்தலைவர்; நீங்கள் இந்தியாவை புரட்சி செய்கிறீர்கள்...!
- பிரதமர் மோடியை பாராட்டிய இஸ்ரேல் பிரதமர் # புரட்சி எல்லாம் பிரமாதமா பண்றாரு,நெட் ரிசல்ட் என்னவோ வறட்சி தான்னு நெட்டிசன்கள் சொல்றாங்க

==============

2 பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை வழங்கும் புதிய சட்டத்திருத்தம் - மத்திய அரசு # ஜெயில் ஹவுஸ்புல் ஆகிடும்


===============


3 வலைத்தளத்தில் என்னை கிண்டல் செய்பவர்கள் யார் என்று தெரியும் - வளர்மதி. # ஓஹோ,தெரிஞ்சிடுச்சில்ல,என்ன பண்ணப்போறீங்க?
ஒண்ணும் பண்ணப்போறதில்ல,தெரியும்னு சொன்னேன்,அவ்ளோதான்

=============


4 டி.டி.வி கட்சியில் 10 பேர் மட்டுமே
கடைசியில் இருப்பார்கள்: ஓ.பி.எஸ் "அவங்க தான் அதிமுக"னு சொல்லிட்டு இருக்கற உங்களுக்கு ஆ"பத்து"


===============


5 அதிமுகவில் இருந்து யாரும் பிரிந்து செல்ல மாட்டார்கள்- OPS#ஆமா.வெளில போனா யாரும் மதிக்க மாட்டாங்கனு புரிந்து இங்கிருந்து பிரிந்து செல்ல மாட்டாங்க


==============


6 கோதாவரி நதி நீரை தமிழகத்துக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி- தமிழிசை# நதி பேர்லயே (கோதா"வரி") வரி இருக்கறதாலயா?


=============


7 திமுகவினர் பொட்டு வைக்க கூடாது- கனிமொழி # நீங்க கூடத்தான் பொட்டு வெச்சிருக்கீங்க,அப்போ"நீங்க இப்போ திமுக வில் இல்லையா?னு பொட்டுல அடிச்ச மாதிரி யாராவது கேட்டுடப்போறாங்க


================


8 மோடி பாதையில் அனைவரும் செல்ல வேண்டும் -இல.கணேசன்
# அதுக்கு பாஸ்போர்ட் ,விசா எல்லாம்"எடுக்கனும் முதல்ல


===============


9 ஆறு மாதத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார் - ரஜினி # சிலபஸ் எதுன்னே இன்னும் அறிவிக்கல அதுக்குள்ள எக்சாம்க்கு"ரெடி ன்னா எப்டீ தலைவா?

==============10 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்கவையே: ரிசர்வ் வங்கி # அது ஜனங்களுக்குத்தெரியுது,பேங்க்காரங்களுககு தெரியலையே?

=================


11 துணை முதல்வர் என்ற பதவி அரசியல் சாசனத்தில் கிடையாது -உச்சநீதிமன்றம்! # சொட்டு நீர்ப்பாசனத்துல நாங்களே உருவாக்கீட்டோம் −EPS & OPS
முதல்வருக்கு துணை ன்னா ஓக்கேவா?


================


1`2 இன்னோவா காரை அதிமுக அலுவலகத்தில் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்.
# இதுக்குதான் சைக்கிளா இருந்தாலும் உழைச்சு சம்பாதிச்ச காசுல வாங்கனும்


===================


1`3 கமல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கவில்லை - ரஜினி # 25 வருசமா ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்யறான் னு மேலே கை காண்பிச்சவரு நீங்க,ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர் அரசியலுக்கு வரப்போறதா"சொன்னதும் தொழில்"போட்டி"காரணமா"முந்திக்கிட்டீங்கனு ஜனங்க"பேசிக்கறாங்க


================


14 "ரஜினிக்கு ஆன்மிக அரசியல்; எனக்கு நாத்திக அரசியல்”- நடிகர் கமல்ஹாசன்
கைல காசு,வாய்ல"தோசை,அரசியல்

===============


15 ஓ.பி.எஸ் மாதிரி நான் இருக்கமாட்டேண்ணே!'- ஈ.பி.எஸ்.ஸின் ரகசியத்தை உடைத்த திவாகரன் ,அவரு மோடி வெச்சிருக்கற தாடி வெச்சிருக்கற நம்பிக்கையான ஆளு,இவருக்கு ஆதரவா மோடியும் இல்ல தாடியும் இல்ல


==================


16 சந்திரபாபு நாயுடு, பினராயி
விஜயன், சந்திரசேகர ராவ், சித்தராமையா ஆகியோர்களும் திராவிடர்கள்தான் - கமல் # அப்போ EPS ,Ops? திருடர்கள் னு சொல்ல வர்றீங்களா?

================


17 கமலஹாசன் மக்கள் செல்வாக்கை பெறுவது சந்தேகம் தான் - தமிழிசை
# நாங்கெல்லாம் ஸ்கூல்"படிக்கும்போது லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்டஸ் பர்ஸ்ட்"பெஞ்ச் ஸ்டூடண்ட்சை "குறை சொல்ல மாட்டோம்,இப்போ காலம்"மாறிடுச்சு

================


18 வருகின்ற சட்டமன்ற,உள்ளாட்சி,நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்திலேயே போட்டி - தினகரன்
# போற"போக்கைப்பார்த்தா தேசிய,அளவில்"குக்கர் சின்னம் பேமஸ் ஆகிடும் போலயே

==================

19 சந்தன வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி புதிய இயக்கம் துவக்கம்.
> "மண் காக்கும் வீரத் தமிழர் பேரமைப்பு" என்ற புதிய இயக்கம் துவங்கினார். # 2018 ல மினிமம் 18 பேர் புதுக்கட்சி தொடங்குவாங்க போலயே


===============20 சட்டை அழுக்காகிவிடும் என்பதால் இந்தியரில் பெரும்பாலானோர் சீட் பெல்ட் அணிவதில்லை: ஆய்வில் சேதி க்ளீன் னு பேர்"வாங்க ஆசைப்பட்டு க்ளீன்"போல்டு ஆகிடறான்


===============

0 comments: