Friday, February 02, 2018

\லவ் சக்சஸ் மீட்

குருவே!ஆம்பள சொன்னா பொண்ணுங்க
கேட்க மாட்டாங்களாமே?பெண்ணியம் தலை தூக்குமாமே?நிஜமா?
சிஷ்யா!அவங்க அப்பா சொன்னா கேட்பாங்க.காலம் பூரா கூடவே இருந்து காப்பாத்தற புருசன் சொன்னா தான் கேட்கமாட்டாங்க,மத்தபடி நல்லவங்கதான்


==============


2 தலைவரே! உங்க சொந்தக்கார் ல இருக்கற ஸ்பேர் பார்ட்சை நீங்களே திருடறீங்களே?ஏன்?

கோஷ்டி மாறுனதால பரிசா தந்த காரை திருப்பி கேட்குது தலைமை,கிடைச்ச வரை சுருட்டுவோம்


=============


3 தலைவரே!பிப்ரவரி 21 கட்சி ஆரம்பிக்கப்போறீங்களாமே?ஏன் அவ்ளோ லேட்?

பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடிலாம்னு

=============


4 டாக்டர்,ரெடிமேட் foods ( ready made chappathi, parotta) நல்லதா?

ரெடிமேட் புட் ஆரோக்யத்துக்கு வெடி வைக்கும்

=============


5 எடிட்டர்"சார்,உங்க" பத்திரிக்கைல தமிழகத்தில் திமுக ஆட்சி
அமைக்கும்: னு
கருத்து கணிப்பு,போட்டிருக்கீங்க
ஆமா.
முடியும் எனவும் 53% கருத்து சொன்னதா போட்டிருக்கீங்க?
ரஜினிகாந்த் அரசியலில் வெல்ல
2 பேரும் ஒரே"பேமண்ட் தந்தா நாங்க"என்னதான் பண்றது?

===============


6 ரிப்பன் பிரபு சிறு குறிப்பு"வரைக;

டீச்சர்.சரியா தெரீல.பொன்"வைக்கற இடத்துல பூ வைக்கற மாதிரி ரிப்பன்"குஷ்பூ பத்தி"வேணா"சொல்லவா?

============7 அரியும் ,சிவனும் 1 ங்கறதை நான் ஒத்துக்க மாட்டேன்

ஏன்?
இயக்குநர் ஹரி?யோட டைரக்சன் ஸ்டைல் வேற.விக்னேஷ் சிவன்"டைரக்சன்"ஸ்டைல் வேற

=============


8 சார் ,சமூகத்தின் மீதான உங்க கோபத்தை எல்லாம் பதிவுகள்ல தான் வெளிப்படுத்தறீங்க,நிஜ வாழ்க்கைல அமைதியா இருக்கீங்க ,அது ஏன்?

சமூக கோபத்தை சம்சாரம்ட்ட வெளிப்படுத்துனா சோறு கிடைக்காது,திண்ணைதான் கிடைக்கும்

==============


9 குருவே!மீனை மூடிவைப்பது தான் பூனையை விரட்டுவதை விட நல்லது!!னு சொல்றாங்களே?நிஜமா?

அதெல்லாம் சும்மா,மீனம்மா டைம்லைன் வர்லைன்னா நம்மாளுங்க மிருதுளா கிட்டே கடலை போடறதில்லையா?

===============


10 வேலைக்கு போறப்ப மட்டும்தான் நாங்க வீட்டு வாசப்படியை"தாண்டுவோம்

ஓஹோ,சார் அப்போ மார்கழி மாசத்து,ல"வாசல்"ல"டெய்லி கோலம் போட்டது எப்டீ?வீட்ல இருந்துட்டே கோலப்பொடியை விசிறி விட்ருவாங்களா?


================


11 டியர் , என் சமையலில் என்னென்ன இம்ப்ரூவ்மெண்ட் செய்யனும்?

காய் அரியறது,வெங்காயம் வெட்ற வேலைகளையும் நீயே செஞ்சா நல்லாருக்கும்


================


12 டியர்,எந்த ட்ரெஸ் போட்டா எனக்கு
எடுப்பா இருக்கும்?
காட்டன் சேலை
அத கட்னா கடுப்பாதான் இருக்கும்
ஏன்?பட்டு சேலை? ஓஹோ,அது ஏன்?
ஏன்னா"காட்டன் சேலை 500 ரூ தான் பட்டு சேலை 5000 ரூபா

=================


13 ஓட்டுவது ஈயாக இருப்பினும் அதை நேர்மையாக செய் ங்கறதை நான் ஒத்துக்க மாட்டேன்

;ஏன்?
ஈ படத்துல ஓட்டற அளவுக்கு மைனஸ் அதிகம் இல்லையே?அப்போ ஈ படத்தை ஓட்னாலே,அது நேர்மைக்கு பங்கம் ஏற்படற"மாதிரிதானே?


=================


`14 சார்,பேஸ் புக் போராளிகளை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கறது?

அது ரொம்ப"ஈசி ஆச்சே?பொண்ணுங்களோட லூடோ"கேம்"விளையாடிட்டு பிசியா இருப்பாங்க


=================


15 மேடம்,துறவினு சொன்னீங்க ,ஆனா Lip gloss, eye liner, kajal, perfectly trimmed eyebrows..னு பியூட்டி பார்லர் லேடி கணக்கா இருக்கீங்களே?

அதாவது நான் பியூட்டி பார்லர் ஓனர்ங்க.அதைத்துறந்துட்டு இப்பதான் ஆசிரமக்கதவைத் தொறந்துட்டு உள்ள"வாரேன்


====================


16 தலைவரே!கமல் அரசியலுக்கு வந்ததும் அவருக்கு ஆப்பு வைக்க வகையா ஒரு மேட்டர் சிக்கி இருக்கு

நிஜமாவா?என்ன வயசு?
சுத்தம்,ஹே ராம் படத்துல ஆண்டாள்"கேரக்டரை கிண்டல் பண்ற மாதிரி"டயலாக்"வருது


=================


17 அதிமுக அமைச்சர்களுக்குப்பிடிக்காத ரஜினி படம் எது?

உழைப்பாளி யா?
இல்ல , நான் அடிமை இல்லை


================


18 தலைவரே!கமலுடன் கூட்டணி வைப்பீர்களா?

வைப்பேன்

நிஜமாவா?
ஆமா.கமல் ,கமலம் னா என்ன அர்த்தம்?
தாமரை
ஆங்.அது


=================


19 தாமரை யால் தமிழுக்கும் ,தமிழனுக்கும் பெருமையா?எப்டி தலைவரே?

மின்னலே படத்துல வசீகரா உன் நெஞ்சினிலே பாட்டு தான் தமிழ்"சினிமாவின் முதல் சூப்பர் ஹிட் ஆண் வர்ணனைப்பாட்டு.எழுதுனது கவிதாயினி தாமரை,இப்போ என்ன சொல்றே?


===============


20 டியர்,நேத்துத்தானே ஐ லவ் யூ சொன்னீங்க?இன்னைக்கே லவ் சக்சஸ் மீட் வைக்கனும்னு ஏன் அடம்"பிடிக்கறீங்க?

முதல்ல எல்லாம் 100 நாள் படம் ஓடுன பின்தான் வெற்றி விழா கொண்டாடுவாங்க,இப்போ 5 நாள்லயே கொண்டாடறதில்லையா?

==============

0 comments: