Thursday, February 08, 2018

ஆரோக்யா பால் ஊத்தி மூடி மறைச்ட்டமே?

பிளவுபட்ட அதிமுகவுக்கு பிறகு தமிழகத்தில் காங். இரண்டாவது இடத்தில் உள்ளது -
திருநாவுக்கரசர் மேட்டர் உங்க கூட்டாளி தளபதிக்குத்தெரியுமா?தெரிஞ்சுட்டா கூட்டணி தொடருமா?


================


2 நாங்க நாத்தீகம் பேசபோறத நிறுத்த முடியாது. என்ன வேணா பண்ணு− கனிமொழி # தேர்தல் டைம்ல நாத்திகவாதிகள்ட்ட மட்டும்தான் ஓட்டு கேட்பீங்களா?இதே"கெத்தோட?


============


3 நல்ல வாய்ப்புகள் வந்தால் சினிமாவில் நடிப்பேன் - சரவணா ஸ்டோர் அண்ணாச்சி #
தமிழன் ஜூலியையே நடிகையா ஏத்துக்கப்போறான்,உங்களை ஏத்துக்க மாட்டானா?


=============


4n ரஜினியுடன் பாஜக கூட்டணி வைத்தாலும், அதிமுக தான் வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயக்குமார் # இன்னும் கல்யாணமே ஆகலை,அதுக்குள்ள"குழந்தைக்கு என்ன பேரு வைக்கலாம்னு சண்டை எதுக்கு?


=============


5 ஜூன் மாதத்தில் சசிகலாவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்... நடராஜன் "போகவே 2 கோடி சார்ஜ் ,டூர்க்கு எவ்வளவோ?


================


6 வளர்மதியின் இலக்கிய பேச்சுக்களை மெய் மறந்து கேட்டதுண்டு - ஈபிஎஸ்
இல்லாத பேச்சு தான் இலக்கிய பேச்சோ என்னவோ?


=============


7 தமிழ்நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது- குருமூர்த்தி
# ஆமா,சரவணாஸ்டோர் ஓனர் "ஆணழகன் 2 " ஹீரோவாம்,ஜூலி "உத்தமி"ல ஹீரோயினாம்


=============


8 திடீர் மூச்சுத்திணறல் காரணமாக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி
சரி இல்லைன்னா கோயிலுக்கு,உடம்பு சரி இல்லைன்னா ஹாஸ்பிடலுக்கு,இந்த நியதி பெரும்பாலானோர்க்குப்பொருந்தும்


=============


9 “எனது தாத்தாவை மக்கள் தெய்வமாகக் கருதி வழிபடுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் கொள்ளுப்பேத்தி டயானா நெகிழ்ச்சி!# அப்டியே"லிங்கா "படத்தையும் ஒரு காட்டு காட்டிடுங்க,பாத்துட்டு கருத்து சொல்லட்டும்


================


10 ரஜினிகாந்தின் கொள்கை பாஜகவுடன் ஒத்துப் போகிறது : தமிழிசை # ஆன்மீக அரசியல் னு சொன்னப்பவே நாங்க"பூனைக்குட்டியை கண்டுபிடிச்ட்டோம்


===============


11 2018 ஜனவரி 26-ந் தேதி முதல் தீவிர அரசியலில் குதிப்பேன் - கமல்
//யார் பிக் பாஸ் ? யார் பிக் லூஸ்?யார் யாருக்கெல்லாம் பிக் லாஸ் னு ஜனங்க தெரிஞ்சுக்குவாங்க


===============


12 நான் எட்டு வயதில் இருந்து பொங்கல் நல்லா வைப்பேன் - தமிழிசை
வருசம் ரஜினிக்கு பொங்கல் வெச்சுடலாம்னு பிளான் போல

==============


13 “கலைஞரின் மௌனம் கூட நாத்திகம் பேசும்!” : கனிமொழி#ஆனா கலைஞரின் குடும்பம் துர்கா ஸ்டாலின்,ராஜாத்திஅம்மாள் மாரியம்மன் கோவிலில் பிராத்தனை ஆத்திகம் பேசும்


==============

14 ராகுல் காந்தி கோவிலுக்கு சென்றேன் என படம் காட்டுகிறார்: பாரதீய ஜனதா குற்றச்சாட்டு

# பத்தலைன்னா சொல்லுங்க ,வீடியோ வும் காட்றாராம்.
ஏன்?உங்களைத்தவிர வேற யாரும் கோயிலுக்கே போகக்கூடாதா?================


15 குடும்ப அரசியலை பார்த்து கொண்டு துக்ளக் சும்மா இருக்காது - குருமூர்த்தி # சோ கூட இப்டி பஞ்ச் டயலாக் எல்லாம் பேசுனதில்லயே?


==============


16 இந்து கலாச்சாரத்தை பின்பற்றும் முஸ்லீம்கள் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும்" - உ.பி பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் பாகிஸ்தான் ல இருக்கற சானியா மிர்சா எந்த கலாச்சாரத்தை பின்பற்றனும்கறதை,நீங்களே முடிவு பண்ணி சொல்லிடுங்க


================17c கலைஞன் என்கிற சொல் கெட்ட வார்த்தையாக தெரிகிறது..எஸ் வி சேகர். # அப்டி தெரிஞ்சிருந்தா"கமல் தன்"பட"டைட்டிலா இந்திரஜித்"னே வெச்சிருப்பாரே?

ஏன்?யாராவது உங்களை நாடக"கலைஞர்" னு சொல்லீட்டாங்களா?


==================


18 கடன் சுமையில் தவிக்கும் ஏர்இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம் - செய்தி # அதிமுக வை டேக்"ஓவர் பண்ணின மாதிரி"அமித்ஷா அம்பானி"மாதிரி"பெரிய கை,மூலம் எடுத்து நடத்தலாமே?


==================


19 சுகாதாரத்துறையில் தமிழகம் எப்போதும் முத்திரை பதித்து வருகிறது : அமைச்சர் விஜயபாஸ்கர் பால் ஊத்தி"நாம தான் டெங்கு டீட்டெயில்சை மூடி மறைச்ட்டமே?


================


20 ஹஜ் புனித யாத்திரைக்கான மானியத்தை ரத்து செய்தது மத்திய பிஜேபி அரசு
# மத நல்லிணக்க அரசுனு இனி வெளில சொல்லிடாதீங்க


=============

0 comments: