Monday, February 05, 2018

பழக பழக (அமலா)பாலும் புளிக்கும்?

குருவே!அழகில் வரும் திமிரைவிட..
நேர்மையில் வரும் திமிர் அழகுதான்.னு சொல்றாங்களே,நிஜமா?
திமிர் யாரிடம்"எதனால்"வந்து சேர்ந்தாலும் அது அழகுக்கு அழகு சேர்க்காது

===============

2 நெட் தமிழன் பெரிய ,டேலண்ட்டான கன்சல்டன்டா மாறிட்டு,வரான்.பொண்ணுங்க கிட்ட என்ன பயோ,எப்டி டிபி வைக்கலாம்னு ஆலோசனை"எல்லாம் சொல்றான்

=============

3 ஆன்லைனில்"லூடோ கேம்"விளையாட வர மறுத்ததால் ஆத்திரத்தில் பெண் கொலை னு எதிர் காலத்துல நியூஸ் வருமோ?


================


4 பஸ் கண்டக்டரா இருந்தவரு அரசியலுக்கு வரலாமா?ன்னு ஒரு கூட்டம் இந்நேரம் கிளம்பி இருக்குமே?


===============


5 தானா சேர்ந்த கூட்டம்"பட பாடல்"சொடக்கு மேல " ல அதிமுக"வை தாக்கி சில வரிகள் வர்றதால தடை"கேட்டிருக்காங்களாம்.சூர்யா வும் கட்சி ஆரம்பிச்சுடுவாரோ?


==============


6 பொண்ணுங்க அவங்க குழந்தையை"ஸ்கூலுக்கு
ரெடி
பண்றதை
வரிசையா
கீழே
எழுதி
கீழே 5
தேத்தீடறாங்க
கவிதை


================


7 ஒரு உண்மையை சொல்லுங்க.. உங்களுக்கு மென்ஷன் பண்ணா நீங்க சந்தோஷப்படுற ஐடி எது?

நான் மட்டுமில்ல,ஊர் உலகத்துல இருக்கற ஆம்பளைங்க பூரா (ஏதோ) ஒரு பொண்ணு மென்ஷன் பண்ணா சந்தோஷப்படுவாங்க


================


8 அன்பிற்கு அடக்கி ஆளும் குணம் இல்லை..ஆளுமைத்திறனை அன்பானவரிடம்"வெளிப்படுத்த யாரும் நினைப்பதில்லை.அப்படி நினைத்தால் அது அன்பு இல்லை


================


9 பாட்ஷா வுக்குப்பின் ரிலீஸ் ஆனதால ஏகப்பட்ட எதிர்பார்ப்பால குமுதம்"+பாபா பஞ்ச் டயலாக் போட்டி வெச்சு ஒரு பஞ்ச் டயலாக்குக்கு ரூ 10,000 வீதம் 34 பேருக்கு ஜாக்பாட் அடிச்சுது.காலா விலும் வெச்சா சம்பாதிக்கலாம்


===============


10 ராஜா பாடல்களில் கேட்ட உடனே ஒரு வேகத்தை தரும் பாடல்.. உங்கள் சாய்ஸ் எது ?

வேகம்"வேகம் போவோம் போவோம் மேஜிக் ஜர்னி (அஞ்சலி) (பாட்லயே"வேகம் வருதில்ல)


=================


11 யட்சி னா என்ன?னு ஒரு பொண்ணு கேக்குது,அழகான தேவதைனு பதில் சொன்னதோட நிறுத்தாம இலவச இணைப்பா உங்களை மாதிரி னு ஒரு பிட்டை போட்டு சிக்சர் அடிக்கறான் நெட்"தமிழன்


================


12 2 நடிகைங்க போட்டோவைப்போட்டு 2 ல யார்"அழகு?னு ஒரு பொண்ணு போல் நடத்துனா 2 பேரும் இல்ல ,நீங்க தான் னு யாராவது அடிச்சு விடலையா இன்னும்?


===============1`3 அன்பே மானசா!
அழகில்"நீ"வீனசா?
உன் சிரிப்பே பொங்கல்"போனசா?.

============


14 இந்த மதிய வேளையை கூட குளிராக்க ஓருவரால் மட்டுமே முடியும்..

ஓஹோ,என்ன செஞ்சாரு?
கிணத்துக்குள்ள தள்ளி விட்டாரு


===============


15 சுற்றுப்புறத்தை தூய்மையாய் வைத்துக்கொள்வதும் ஆன்மீகம்தான்.ஐயப்ப பக்தர்கள் 90% பேர் ரயில்களை ,ஸ்டேஷன்களை"நாஸ்தி"ஆக்கிட்டு இருக்காங்க.வருடாவருடம்"நவம்பர்"டூ,ஜனவரி மாதங்களில்==============


16 நீங்கள் விரும்பிய பெண்ணாக உருமாறி வரும் பெண் தன்"சுயத்தை இழந்தவர் ஆவார்.சுயம் தொலைத்தவரை"சிலாகித்து என்ன பயன்?


==============


17 நான் இன்னார்க்கு இன்ன உதவி செய்தேன் என்று விளம்பரப்படுத்தாமல் இருப்பதே உதவி பெற்றவருக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி


================


18 நீங்க வைத்த இடத்திலே உங்க"செல்போனை /மணிபர்சை எடுக்க முடியுமென்றால் உங்க வீட்டில் உங்க"சம்சாரம் இல்லை என அர்த்தம்


================


19 எம்ஜிஆர் படகோட்டி, ரிக் ஷாகாரன் னு படம் நடிச்சார், ரஜினி பணக்காரன், எஜமான் அப்படின்னு இல்ல நடிச்சிருக்கார்?

கோடீஸ்வரனா நடிச்சாலும் தன் எல்லா சொத்தையும்( ஒவ்வொரு படத்துலயும் ) யாருக்காவது தானம்"பண்ணினது அவரு தான்


================


20 பழக பழக (அமலா)பாலும் புளிக்கும்− டைவர்சின்போது இயக்குநர் விஜய்


=============

0 comments: