Wednesday, February 21, 2018

ஆன்லைன் பரிதாபங்கள்!

பாஜக காலூன்ற முடியாது என கூறியதால் பாஜகவுடன் விரிசல் என அர்த்தமில்லை - ஓபிஎஸ்.
வீட்டுக்குப்போகமாட்டேன்னா மனைவியோட சண்டைனு அர்த்தம் இல்ல,மச்சினிக்கு கல்யாணம் ஆகிக்கூட இருக்கலாம்


===============


2 மகப்பேறு விடுமுறை 12 வாரத்திலிருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது: அருண் ஜெட்லி
தயாரிப்பை ஆரம்பிச்சிடப்போறாங்க,ஏற்கனவே சீனா கிட்டே வந்துட்டோம்


===============3 அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்
-அருண் ஜெட்லி # 10 rs க்கு பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்துட்டு டெய்லி 10 மணி நேரம் ஸ்டேஷனுக்குள்ளேயே டேரா போட்ரப்போறாங்க


========4 4000க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவர்; ்- அருண் ஜெட்லி # சபாஷ் ,இத்தனை நாளா அநாமத்தாதான் கிடந்திருக்கா?


===============


5 காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதம் 500 வழங்கப்படும் - ் அருண் ஜெட்லி # நல்ல சிகிச்சை போதும் ,பழ வகை எதுனா தரலாம்,பணமா தந்தா அதை சரக்கு அடிச்சு செலவு பண்ணி கல்லீரலை டேமேஜ் பண்ணிடுவான்


================


6 எம்.பி.க்களுக்கு 5 வருடத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வு! # நல்ல வேளை ,மாசாமாசம் சம்பள உயர்வுனு அறிவிக்கலை,ஏழை மக்கள் வயிறெரிஞ்சு சாபம் விட்டிருப்பாங்க


==================


7 ஜனாதிபதிக்கு 5 லட்சம்,துணை ஜனாதிபதிக்கு 4 லட்சம் சம்பள உயர்வு - அருன் ஜெட்லி # அடேங்கப்பா,இதை சரிக்கட்ட பெட்ரோல் டீசல் விலை ஏத்துங்க,ஜனங்க வயிறெரிஞ்சு தர்ற காசுல சாப்ட்டு ஆரோக்யமா தீர்க்காயுசா இருங்க


================


8 இது ஆரோக்கியமான பட்ஜெட்
தமிழிசை # பட்ஜெட் ஆரோக்யமாதான்,இருக்கு,ஜனங்களுக்குத்தான் வயித்தைக்கலக்குது


=================


9 நான் இந்து விரோதி அல்ல. என் வீட்டிலேயே சந்திரஹாசன், ஸ்ருதி என தீவிர பக்தர்களை வைத்துக்கொண்டு அவர்களை நான் எப்படி வெறுக்க முடியும். ?: கமல் # எங்க வீட்ல"கூடத்தான் மாமனார் ,மனைவி ,அவங்க சொந்த பந்தம் எல்லாரும் இருக்காங்க,விரும்பியா வெச்சிருக்கோம்?வேற வழி இல்லாமதான்

================10 பாஜக காலூன்ற முடியாது என கூறியதால் பாஜகவுடன் விரிசல் என அர்த்தமில்லை - ஓபிஎஸ்.
# மக்கள்ட்ட மாவீரன் னும் காண்பிச்சாச்சு,ஓனரையும் சமாதானப்படுத்தியாச்


================11 ’மனைவியுடன் வாக்குவாதம்!’ - துப்பாக்கியால் சுட்டு தற்கொலைசெய்துகொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் # பொண்ணுங்க கிட்டே வாதம் பண்றதே அபாயம்,பொண்டாட்டிகிட்டே வாக்குவாதம் பண்றது பேரபாயம்


==================


12 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்
நின்றதால் நானும் ஒரு
அரசியல்வாதி தான் - விஷால்
# எல்லாரும் கேட்டுக்குங்க,நானும்"ரவுடிதான்"மொமெண்ட்


===============13 மத்திய அரசின் பட்ஜெட் நடுநிலையானது: முதலமைச்சர் பழனிசாமி. # எந்த கடைலயாவது ஓனரை குறை சொல்லிட்டு அதே கடைல தொடர்ந்து வேலைல இருந்திட முடியுமா?


================14 More
தன்னை ஏமாற்றிய காதலன்"தன்னை திருமணம் செய்ய சம்மதிக்கும் வரை"பப்ளிக்ல அவனை செருப்பால் அடித்த பெண் # சபாஷ் ,போடா தம்பி ,உனக்கு இருக்குடி இன்னும்


===============


15 10.ரூ நாணயத்தில் ரூபாய் குறியீடு (₹) இருந்தாலும், இல்லாவிட்டாலும் செல்லும்.. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்”-ரிசர்வ் வங்கி

# பொது ஜனம் புழங்கீட்டுதான் இருக்கு,பேங்க் ஆபீசர்ஸ் தான் ரொம்ப படிச்சவங்களாச்சே,வாங்கறதில்லை,சர்க்குலரை முதல்ல பேங்கர்ஸ்க்கு அனுப்புங்க


================


16 ஐசியூவில் இருந்த பொருளாதாரம் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளது- தமிழிசை # அடுத்ததா போஸ்ட்மார்ட்டம் ரூம் தானே?


================17 குடியரசு தலைவரின் சம்பளம் 1.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு
# நாட்டோட வளர்ச்சி 3 மடங்குக்கு மேல முன்னேறிடுச்சுனு வெளிநாட்டுக்காரன் நினச்சிக்குவான்

===============


18 நாடாளுமன்றத்தில் அதிக கேள்வி எழுப்பிய எம்.பி. களில் அன்புமணி 3வது இடம்!!!,ஆனா"பாருங்க,கேள்வி கேட்கறது ஈசி,அதுக்கு பதில் பெறுவதுதான் கஷ்டம்,அவர் கேட்ட"கேள்விக்கெல்லாம்"பதில் வந்ததா?


===============19 ஆன்லைன் பரிதாபங்கள்!
55,000 ரூபாய் ஐ-போனுக்கு பதில் அதே சைசில் சோப்பு அனுப்பிவைத்த பிளிப்கார்ட்! # திமுக ,அதிமுக ,காங் கட்சிகளுக்கே டப் பைட் கொடுப்பானுங்க போலயே?


=======================


20 சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெ.தீபா புகார் # யாரும் பேபிம்மா வை கிண்டல்"பண்ணாதீங்கப்பா,பாவம் தூக்கம் கலைஞ்சிடுச்சில்ல0 comments: