Thursday, February 15, 2018

,வேலண்டைன்ஸ் டே

தலைவரே!நம்ம கட்சி ஒன்றும் சங்கர மடம் இல்லைனு மேடைல பேசுனீங்க?


ஆமா
உங்க பேரன் ,பேத்தி எல்லாரும் அரசியலுக்கு வரப்போறாங்களாமே?


=============


2 மாப்ளை கல்யாண ஊர்வலத்துக்கு ஆடி கார் சொல்லிட்டேன்


கவர்மெண்ட் பஸ் சொல்லிடுங்க மாமா,அதான் கெத்தா இருக்கும்==============3 ஒரு குடிகாரன் தன் வாழ்க்கையைப்பத்தி ஒன் லைன் கமெண்ட் எப்டி அடிப்பான்?


Life is beauti"FULL"=============4 டாக்டர்,டெய்லி காலைல எழுந்ததும் சுடுதண்ணி குடிச்சா சீக்கிரம் பசி வந்துடும் னு சிலர் சொல்றாங்களே?நிஜமா?


சீக்கிரம் குடல் வெந்துடும்===============5 குருவே!மேடைல உங்களுக்கு தனி மேடை எதுக்கு?


இன்னைக்கு நான் குளிக்கல,மத்தவங்களுக்கு தெரிஞ்சிடக்கூடாதில்ல?
தனித்திரு தள்ளிஇரு
தப்பிரு=============6 குருவே!தமிழ்த்தாய் வாழ்த்தின்போது ஏன் எந்திரிச்சு நிக்கல?


அப்போ தியானத்துல இருந்தேன்
சிம்ரனை நினைச்ட்டு இருந்தீங்களா?க்ரைம் ரேட் கூடிட்டே போகுதே?
புரியல
சிம்ரன் னா தியானம்னு அர்த்தம்===============7 தலைவரே! கட்சில சஞ்ஜனா ,அஞ்சனா,நிரஞ்சனா னு எல்லாரையும் சேர்த்துட்டீங்களே?ஏன்?


கஜானா மீது என் கவனம் இல்லைனு மக்களுக்கு பூடகமா உணர்த்தத்தான்===============


8 குருவே!மடத்துல இருக்கறவங்க எல்லாம் மடத்தனமாதான் நடந்துக்குவாங்களா?

ஏன் ?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தாம உட்கார்ந்து இருந்ததே தப்பு,தியானம் பண்ணீட்டு இருந்ததா சால்ஜாப் வேற


================


9 தலைவரே!தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காம அவமானப்படுத்தி இருக்காரு,பொறுப்பான பதவி ல இருந்தும் நீங்க ஏன் கண்டிக்கலை?அட்லீஸ்ட் கண்டன அறிக்கை கூட வரலை?

தமிழ்த்தாய் வாழ்த்தா?அது யார் எழுதுனது?


================


10 சுவாமி!பர்த் சர்ட்டிபிகேட்படி உங்க பேரு என்ன?

விஜயேந்திரன்
ஆதார்கார்டுல?
அதேதான்
ஆனா ,விஜயேந்திரர்னு மீடியால போட்டுக்கறாங்களே?அது சட்டப்படி தப்பில்லையா?ஆள் மாறாட்டம் இல்லையா?


================


11 டியர்,வேலண்டைன்ஸ் டே போன வருசம் கொண்டாடிட்டோம்,இந்த வருசம் என்ன செய்யலாம்?

வேலண்டைன்ஸ் நைட் கொண்டாடலாம்


================12 டாக்டர் கற்றாழைச்சாறும் தேங்காய் எண்ணெயும் சம அளவுல கலந்து தலைமுடிக்குத் தேய்த்து ஊறவிட்டுக் கழுவினால் தலைமுடி நல்லா வளருமாமே?நிஜமா?

ஏம்ப்பா,காம்ப்ளான் ,பூஸ்ட் குடிச்சா வளருவே"னு டிவி ல விளம்பரம் போட்டா நம்பறே,இதை நம்ப மாட்டியா


==================


13 மிஸ்டர் சங்கர நாராயணன்...

ஆங்,சொல்லுங்க
அம்மா அப்பா வெச்ச பேரு சங்கரநாராயணன்.விஜயேந்திர சரஸ்வதி ங்கறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா?


===============


14 நகைச்சீட்டோட முத தவணையை ஒரு பேமிலி மெம்பரா நானே கட்றேன்

யோவ் டகால்ட்டி,10 நிமிஷத்துக்கு ஒருக்கா இந்த விளம்பரம் வருதே?இதுக்கான பணத்தை கட்டியாச்சா?


===============15 குருவே!மேடை ல தனி மேடை போட்டு உட்கார்ந்தது ஏன்?

கிறிஸ்டியன் அருகில் எப்டீ நான் அமர?
காலைல பொங்கல் சாப்ட்டீங்களே?அது கிறிஸ்டியன் விவசாயி வயல்ல விளைஞ்ச அரிசிதான்.இப்போ எப்டி?வாமிட் எடுத்துடுவீங்களா?


=================16 குல்புஷன் விவகாரத்தைப்பத்தி உனக்கு என்ன தெரியும்?

அன்பே சிவம் படத்தை டைரக்ட் பண்ணது அவரா?கமலா?னு ஜனங்களுக்கு ஒரு டவுட்
யோவ் என்ன உளர்றே?
குஷ்பூ புருசன் சுந்தர் சி பத்தி தானே கேட்டீங்க?


=================17 டியர்,நம்ம காதல் தோத்துடுச்சு,இனி உங்க வழியைப்பாத்து போங்க

அது முடியாது,நீ இன்னொரு வீட்டுக்கு விளக்கேத்தப்போகும்போது காதல்ல ஜெயிச்சவங்கற பட்டத்தோடதான் போகனும்


================18 மேடம் ,வாழைப்பூவை எதுக்கு"கூந்தல் சூடி இருக்கீங்க?;

;டாக்டர்,சுகரை,கண்ட்ரோல்ல,வைக்கனும்னா டெய்லி"வாழைப்பூ சேர்த்துக்கனும்னு"சொன்னீங்களே?
விளங்கிடும் ,சமையல்ல சேத்துக்கனும்னேன்.மையலுக்கு"மல்லிகைதான்


==============19 தொடர்ந்து வைத்தியம் பாக்குறதுங்கிறது எவ்வளவு எரிச்சலான விஷயம்... கடுப்படிக்கிற விஷயம்

ஓ,நீங்க டாக்டரா இருக்கீங்களா!?
10 வருசமா பேஷண்ட்டா இருக்கேன்


===============20 பேசாம ஒரு லாயர் பொண்ணா பாத்து லவ் பண்ணலாம்னு இருக்கன் 😍😍😍😍

நீங்க பேசாம இருந்தாலும் அவங்க"பேசாம இருக்க,மாட்டாங்க,லாயர் ஆச்சே?


=============

0 comments: