Monday, February 19, 2018

அய்யாதுரை

திராவிடம் இல்லையென்றால் பொன் ராதா போன்றோா் பனைமரம் ஏறி தான் பிழைத்து இருக்க முடியும்-
ஸ்டாலின்.# தொழிலை மட்டம் தட்டுவது முதல் தப்பு.அதன் மூலம் மறைமுகமா ஜாதியை வெளிப்படுத்துவது 2 வது தப்பு. எல்லாருக்கும் உங்களை மாதிரியே பண மரம் ஏறி சம்பாதிக்கமுடியாதுங்கறத உணராதது 3 வது தப்பு

===============


2 'எம்.பி.,க்கள் சம்பளம் கேட்க கூடாது!' பா.ஜ., - எம்.பி., வருண்
# கிம்பளம் கோடிக்கணக்கில் வருகையில் சம்பளம் எதுக்குங்கறாரா?


===============3More
நெல்லையில், போராட்டம் நடத்த, பத்மாவதி படத்திற்கு பதிலாக பாகமதி படம் ஓடும் தியேட்டருக்கு சென்ற இந்து முன்னனியினர்..# தீபிகா படுகோனே வுக்கும் அனுஷ்கா வுக்கும் கூடவா வித்யாசம் தெரில?


===============4 ஜெயேந்திரர கைது பண்ண பாவத்துக்குதான் ஜெயாவுக்கு இப்படி துர்மரணம்− எஸ்வி சேகர் # ஆள் இருக்கும்போது ஒரு பேச்சு ,இல்லாதப்ப ஒரு பேச்சு.எதிர்க்கட்சிக்காரங்க கூட இப்டி கண்ணியம் இல்லாம பேசலை ்


==============5
பஸ் கட்டண உயர்வுக்கு தி.மு.க.வே காரணம்: CM EPS # எப்டீ?புரியல
அவங்க ஆல்ரெடி அவங்க ஆட்சில ஏற்றி இருந்தா நாங்க இப்போ ஏற்ற மாட்டோமில்ல?===============


6 ஸ்டாலின் முதல்வராக வேண்டி கோவில் கோவிலாக ஏறி இறங்கும் மனைவி துர்கா பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் பகுத்தறிவு பகலவர் வாரிசு அரியாசனம் அமரும் யோகம் இல்லையாம்.


=============7 நித்யானந்தா ஆசிரமத்துக்கு எதிராக புகார்கள் தொடர்கின்றன. ஆன்மிகத்தை கொச்சைப்படுத்துவதால் நித்யானந்தா ஆசிரமங்களை ஒழித்துக்கட்ட உத்தரவிட நேரிடும் -சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி
# வார்னிங் குடுத்தா மட்டும் அவர் பயக்கற ஆளா?================


8 தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பாஜக நுழையும் - எச்.ராசா
# பிரியாணி சமைப்பவர்கள் பாதுகாப்பாக கிச்சனை பூட்டி வைக்கவும்


=============


9 குழந்தையாக இருந்தபோது என் தாத்தாவை பார்க்க சிறைக்கு சென்றுள்ளேன். எனவே, நான் அரசியலுக்கு புதியவன் அல்ல - உதயநிதி # ஜெயிலுக்கும் புதியவன் இல்லை?அப்போ அக்மார்க் பாஸ்மார்க் அரசியல்வாதி ஆகிட்டாங்க


==============


10 வைரமுத்து உள்ளே வந்து மன்னிப்பு கேட்க விருப்பம் இல்லையெனில் வெளியில் நின்றாவது மன்னிப்பு கேட்கலாம்- ஜீயர் # வெளியில்"நின்று மன்னிப்புக்கேட்க விருப்பம் இல்லை எனில் வீதியில் நின்றவாறே"அட்லீஸ்ட்"ஒரு"சாரி யாவது சொல்லவும்


=============


11 ரஷ்ய அதிபர் ஸ்டாலினுக்கு கருணாநிதி அஞ்சலி செலுத்தும் போது பிறந்ததால்..
எனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தார்! -மு.க.ஸ்டாலின். # பாஸ்,அதெல்லாம் இருக்கட்டும் ,தாத்தா பேருல ,பேரன் பேருல "நிதி" இருக்கு,நம்ம பேர்ல மட்டும் ஏன் இல்ல?


=============

12 மின் மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது!' -CM EPS # அடுத்த"ஸ்ட்ரைக் அவங்கதானாம்.கரண்ட் பில்"லையும் ஏத்திடுங்க


==============


13 சங்கரமடம் தமிழுக்கு பெருந்தொண்டாற்றி வருகிறது.
-தமிழிசை # சோடாபாட்டில் வீசத்தெரியும்னு சவால் விடறதும்,தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கனும்கற சபை நாகரீகம் தெரியாம இருக்கறது எப்டீங்க தமிழ்த்தொண்டு ஆகும்?


==========


14 பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் இடுங்கள் - ஸ்டாலின்.. # அய்யாதுரை னு பேரு வெச்சாக்கூட இந்தக்காலத்து பசங்க பேரை கெஜட்ல மாத்திக்கறாங்க தலைவரே


===========


15 "ஒரு மகள், 10 மகன்களுக்குச் சமமானவர்" - மகளிரைப் பாராட்டிய மோடி! # ஆமா ,மேரேஜூக்குப்பின் தாய்வீட்ல இருந்து கிளப்பீட்டு போறதுலதானே?


===============16 அரசு பேருந்தில் விஜயகாந்த் பயணம்... டிக்கெட் கட்டணம் குறித்து பயணிகளிடம் கருத்து கேட்பு
# சபாஷ்,கலைஞர் மகன் தளபதி செய்ய வேண்டிய பணி,புரட்சிக்கலைஞர் முந்திக்கிட்டாரே?


================


17 கார்ப்பரேட்டுகள் வழங்கிய
மொத்த தேர்தல் நிதியில் 89%
பெற்று முதலிடம் பிடித்த - பாஜக
# இப்போ யாருக்கு விசுவாசமா இருப்பாரு மோடி?ஓட்டுப்போட்ட ஜனங்களுக்கா?துட்டு தந்த கார்ப்பரேட்க்கா?

==============


18 என் மனைவி கோயிலுக்கு போகலாம் அவங்களுக்கு சுய கௌரவமிருக்கு அதை விமர்சிக்க எனக்கு உரிமையில்லை - ஸ்டாலின்
குடும்பத்துல பசங்க,பேரனுக ஹிந்தி படிப்பாங்க,அத கண்டிக்க எனக்கு உரிமை இல்லை இதை விட்டுட்டீங்க


===============


19 தமிழகத்தில் லஞ்சம் இல்லாத இடமே இல்லை - ஈ.வி.கே.எஸ் #
# அல்லா அல்லா ,நீ"இல்லாத இடமே இல்லை,நீதானே உலகின் எல்லை


============20 மாநிலத்தின் உரிமையை பறிக்கும் வகையில் வரி கொண்டுவந்தால் எதிர்ப்போம் −DCM OPS # நம்ம டெம்ப்ரவரி முகவரி யே டெல்லிதானே?நாம எப்டி எதிர்ப்போம்?


===========

0 comments: