Friday, February 16, 2018

குருவே!கஸ்தூரி மானை வீட்ல வளர்த்தா என் மனைவிக்கு ரெட்டைக்குழந்தை பிறக்குமா?

டாக்டர் அண்ட் லாயர் மேக்ஸ் பெர்பெக்ட் PAIR் 😘😘❤️❤️னு சொல்றாங்களே அது நிஜமா?

ஆமா,டாக்டர் ட்டயும் ,லாயர்ட்டயும் எதையும் மறைக்கக்கூடாது கான்செப்ட்படி...


============


2 சார்,நீங்க பிடிவாதக்காரர். திறமைசாலி. ஆனால் வணிகம் அறியாதவர்னு சிலர் சொல்றாங்களே?

வணிகம் தெரியாதவர் எப்படி வணிக ரீதியிலான வெற்றிப்படங்களைத்தர முடியும்?சகலாகலாவல்லவன் வசூல் தமிழ்"சினிமாவையே புரட்டிப்போடலையா?


===========

3 தலைவரே!பஸ் கட்டண உயர்வுப்பிரச்சனையை"எப்டி சமாளிக்கப்போறீங்க?

அதான் அவங்களை டைவர்ட்"பண்ணி விட்டாச்சே?பாதிப்பேர் வைரமுத்துவையும் ,மீதிப்பேர் விஜயேந்திரரையும் திட்டிட்டு இருக்காங்க


=============4 எடிட்டர் சார் ,நீங்க அங்கே போய் மன்னிப்பு கேட்டது தப்பு
இப்போ என்ன செய்யனும்.அங்கே போய் மன்னிப்பு கேட்டது தப்புனு இங்கே வந்து மன்னிப்பு கேட்கனுமா?அட போங்கப்பா


============5 டாக்டர்,நன்றாக சாப்பிட்டால், தொப்பை வருது. நன்றாக சாப்பிடாவிட்டால், அல்சர் வருது.என்ன பண்ண?
பனை மரம் ஏறுபவன்,விறகுவெட்டி,விவசாயி,இவங்க யாருக்காவது தொப்பை வந்திருக்கா?உடல் உழைப்போ உடல் பயிற்சியோ இல்லைன்னா எல்லாருக்கும் தொப்பை வரும்

=============


6 சி.கா − என்னண்ணே",க்ளாஸ்மேட்ஸ் கூட கெட்்டுகெதரா?எல்லாம்"60+ ஆக இருக்கு?
புரோட்டா சூரி − என் அப்பாவோட க்ளாஸ்மேட்ஸ்
ஓஹோ,அப்போ உங்க க்ளாஸ்மேட்ஸ் போட்டோ பார்க்கனும்னா"உங்க அப்பா Fb போய் பார்க்கனுமா?


===========7 padmavat(hindi) படத்துக்கு ஒரு டிக்்கெட்
குடுங்க
U படமா? A படமா?
3டி வெர்சன் 145 ரூபா.சாதா ரூ 120 ரூ
அப்ப 3 டி வேணாம்.சாதா ஓகே
யு தான்=============தம்பி,தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும்போது நீ ஏன் எழுந்து நிக்கல?
தியானம் பண்ணீட்டு இருந்தேன் மன்னிப்புக்கேள்
தம்பி ,உன் வயசு என்ன?
அதோ,அந்த 95 வயசுப்பெரியவர் கூடத்தான் எந்திரிக்கல 35
நீ எந்திரிக்காதது ஏன்?னு கேட்டா அதுக்கு மட்டும் பதில் சொல்லு


============


9 குருவே!எனக்கு வாழ்வில் செல்வம் கிடைக்குமா?
ஸ்வர்ணம் உனக்கு,ஸ்வர்ணமால்யா எனக்கு,எப்டீ நம்ம டீலிங்?


=============
10 குருவே!ஒரு பொண்ணு ஒரு பையனை எவ்ளோ அடிக்குறாளோ
அடி எவ்ளோ பலமா இருக்கோ அவ்ளோ லவ் இருக்குனு அர்த்தம்னு சொல்றாங்களே,அது நிஜமா?
சிஷ்யா!நான் சாமியார் ஆனதுக்கு காரணமே சம்சாரம் தந்த மரண அடிதான்,என்னை மாதிரி ஊர்ல எத்தனை பேரோ?


==============11 டாக்டர்,சாப்ட்டு 24 மணி நேரம் ஆகுது
ஓஹோ,இது ஹாஸ்பிடல்,ஹோட்டல் எதிர்ல இருக்கு,பை த பை இதை எதுக்கு FBல ஸ்டேட்டசா போடறீங்க?
அதைப்படிச்சுட்டு 2 பொண்ணுங்க பரிதாபப்பட்டு விசாரிக்கும் .அந்த அனுதாபத்துல 2 ல 1 ஐ கரெக்ட் பண்ணலாம்னுதான்


================


12 தலைவரே!சுதந்திர தினம் ,குடியரசு தினம் என்ன வித்யாசம்?
விஜய் டிவிலே துப்பாக்கி போட்டா சுதந்திர தினம். கத்தி போட்டா குடியரசு தினம்.
ஓஹோ,அப்போ காதலுக்கு மரியாதை போட்டா காதலர் தினமா?


=============13 டைரக்டர் சார்,டீசர் எப்போ விடுவீங்க?
சிஜி ஒர்க் இருக்கு
புரியல,டீசர் னா ஆல்ரெடி எடுத்து எடிட் பண்ண படத்துல இருந்து காட்சிகளை தொகுத்து போடறதுதானே?அதுக்கு தனியா சிஜி ஒர்க் எந்த ஊர்ல?


=============14 தலைவரே!நாம"அடிக்கடி ப்ளூபிலிம் பார்க்கறது ஊருக்கே எப்டி தெரிஞ்சுது?
தெரியலையே?இன்னா மேட்டரு?
ட்விட்டர்ல நம்ம கட்சி ஆளுங்க எல்லாருக்கும் ப்ளூ டிக் வந்திருக்கு


==============15 ஜட்ஜ் = வருசம் 25 லட்சம்"ரூபா டர்ன் ஓவர் பண்ணியும் ஏன் GST கட்டலை?
யுவர் ஆனர் ,குடும்பத்தில் ஒருவர் வரி செலுத்தினாலும் ரேஷன் கிடையாது-னு அரசு சொல்லுச்சு


==============


16 சார்,நமக்கு நாமே திட்டப்படி உங்களுக்கு நீங்களே கிப்ட்"பார்சல் அனுப்பி அதை FB ல அப்டேட் பண்றீங்களே,எதுக்கு?
அதைப்பார்த்து பொறாமைப்பட்டு பொண்ணுங்க எதுனா மடியுமா?னு பார்க்கத்தான்


=================


17 பாசுமதி அரிசி கிலோ 55 ரூபாதானே?100 ரூபா சொல்றீங்க?
இது பாகமதி அரிசிங்க,அனுஷ்கா சாப்பிடற அரிசின்னா சும்மாவா?


==============


18 மேடம்,உங்க வீட்ல சுடற முத தோசையை"காக்கைக்கு வைப்பீங்களா?நாய்க்கு வைப்பீங்களா?ஏன்னா முத தோசை கல்லுல சரியா வராதில்ல?
ஆங்,என் புருசனுக்கு வெச்சிடுவேன்


===============


19 குருவே!கஸ்தூரி மானை வீட்ல வளர்த்தா என் மனைவிக்கு ரெட்டைக்குழந்தை பிறக்குமா?
சிஷ்யா! கஸ்தூரி மேடம் அவங்க வீட்ல மான் வளர்க்கறதுக்கும் ,உங்க வீட்ல குழந்தை பிறக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?


==============


20 யாருக்கும் சொல்லாம எங்கையாவது போய் வாழனும்
அது நடக்காது மேடம் ஏன்?
இப்பவெல்லாம் பொண்ணுங்க தும்மல் வந்தாக்கூட FB ல ஸ்டேட்டஸ் போட்டுட்டு லைக்ஸ் எண்ணிப்பார்த்த பின் தான் ஹச் ங்கறாங்க


=================


0 comments: