Tuesday, February 27, 2018

கமல்ஹாசனுடன் இணைந்துரஜினி?

வைரமுத்துவை கண்டித்து நாளை முதல் உண்ணாவிரதம்- ராமானுஜ ஜீயர்.. (செய்தி)# அஜீரணக்கோளாறுனு டாக்டர்ட்ட போனப்ப 2 நாள் பட்டினியா இருக்கனும்னாராம், யோவ் டகால்ட்டி...

===========


2 காங்கிரஸ் சரியாக பணியாற்றி இருந்தால் எங்களுக்கு இந்தளவு சுமை இருந்திருக்காது-மோடி தப்பு,
காங்கிரஸ் சரியா பணியாற்றி இருந்தால் ஜனங்க காங் க்கு தானே மறுபடி ஓட்டு போட்டிருப்பாங்க?

==========3 பக்கோடா விற்பது கேவலமா?
பிச்சை எடுப்பது கேவலமா? - தமிழிசை
கேவலம் இல்லை,மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கற அரசியல் தான்"கேவலம்

============

4 குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆவதை நான் விரும்ப மாட்டேன் - ஆர்.கே.நகரில் தினகரன் # OPS ,EPS னு 2 பேரை குறுக்கு வழில முதல்வர் ஆக்கினதே நீங்களும் SINனம்மாவும்தானே?

==============


5More
: “இன்னும் 5 ஆண்டுகள் தமிழக ஆளுநராக நான் நீடிக்க உள்ளேன்” -பன்வாரிலால்
# அதுக்குள்ள எத்தனை முதல்வர் மாறப்போறாங்களோ?=============6 தர்மயுத்தம் தொடங்கியதன் நோக்கம் நிறைவேறிவிட்டது - ஓ.பன்னீர்செல்வம் # கேட்ட பதவியும் ,சூட்கேசும் வந்தாச்சு,இதுக்குப்பேரு யுத்தம் இல்ல ,பேரம்,இப்டி கேவலமா சம்பாதிச்சு"குடும்பம் சாப்பிடனுமா?


===============


7 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் செய்வதில் தவறில்லை – தமிழிசை# ஆனா பேங்க்காரங்க விஜய்மல்லய்யா க்களுக்கு அள்ளிக்குடுக்கறாங்க,நேர்மையான நடுத்தர வர்க்கத்தை கிள்ளுக்கீரையா நினைக்கறாங்க


==============


8 மோடி எழுதிய புத்தகத்தை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும்.. செங்கோட்டையனிடம் தமிழிசை நேரில் வலியுறுத்தல்
# விட்டா டெய்லி ஸ்கூல்ல "1000 தாமரை"மொட்டுகளே"வந்து ஆனந்த கும்மி கொட்டுங்களேன் பாடச்சொல்வாங்க போல


===============


9 More
தொழிலில் தோல்வியடைந்தவர்கள் அரசியலுக்கு வந்து விடுகிறார்கள் - மு.க ஸ்டாலின்# தொழில்ல ஜெயிச்சவங்க இ வா பேங்க்ல லோன் வாங்கி நாட்டை விட்டே ஓடீடறாங்க


=============10 அரிவாளை வைத்து கேக் வெட்டும் நிலையில் தமிழகம்.. தமிழிசை # நல்ல ஐடியா குடுத்தீங்க,அடுத்த ஹரி"படத்துல வில்லனுக்கு ஓப்பனிங்க் சீனா வெச்சிடுவாரு


=============11 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவுக்கு காரணம் மக்கள் தொகை குறைந்து வருவதே - செங்கோட்டையன்
# பிரைவேட் ஸ்கூல்ல அட்மிஷன் ஜாஸ்தியா இருக்கே?ஏன்?
பணக்காரங்க அதிகம் ஆகீட்டாங்களா?


===============


12 பாஜக என்றாலே தமிழுக்கு எதிரான கட்சி என்பது போல் பரப்புகிறார்கள் - தமிழிசை # பாஜக"தமிழுக்கு ஆதரவு என்பதால்தான் "தமிழிசை"யை தலைவராக்கி இருக்காங்கனு"சொல்லிடுங்க


===============


13 முன்னாள் ஊராட்சி தலைவியுடன் மாஜி கவுன்சிலர் உல்லாசம் : # கள்ளக்காதல்ல கூட லாஜிக் பாக்கறாங்க.2 பேரும் "முன்னாள்"தலைவர்கள்,அடடா!


============14 கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம் தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் ரஜினி # நீங்க 2 பேரும் சேர்ந்தாலும் ரசிகர்கள் சேரனுமே?Eps யாரு?Ops யாரு?னு அடுத்த சண்டை வரும்


===============15 குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனல்களில் நொறுக்குத்தீனி, குளிர்பான விளம்பரங்களுக்கு தடை- மத்திய அரசு # அதே மாதிரி"சிகரெட்,சரக்கு,விளம்பரங்களுக்கும் தடை பண்ணினா புண்ணியமாப்போகும்


================16 'ராகுல் எனக்கும் தலைவர் தான்' -சோனியா # போச்சுடா,அடுத்ததா "ஸ்டாலின் எனக்கும் தலைவர்தான்னு கலைஞர் அறிக்கை விடுவாரோ?


===============17 புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பக்கோடா போடுகிறேன் என்றுக்கூறி கொண்டு பஜ்ஜி சுடுகிறார்- தமிழிசை # விடுங்க,தட்டிப்போட்டா வடை,உருட்டிப்போட்டா போண்டா,மாவு 1 தான்,ஷேப் தான் வேற


============


18 தமிழக அரசியலில் விரைவில் அதிரடி மாற்றம் - ஸ்டாலின் உறுதி# ரஜினி,கமல் என்ட்ரி பத்தி சொல்றார்"போல


==============


19 என் உண்ணாவிரதத்தால் உலக மக்களுக்கு கேடு விளைந்துவிடும் - ஜீயர் # அவ்ளோ நல்ல எண்ணம் உள்ளவரா இருக்கவரு எதுக்கு"உண்ணாவிரதம் இருக்கறதா"ஸ்டண்ட் அடிக்கனும்?மீடியா ல பேர் வர்றதுக்கா?


=============20 புதியவர்களுக்கு வாய்ப்பளித்து கட்சி மறுசீரமைக்கப்படும் – ஸ்டாலின்
உதய நிதி ஸ்டாலின் க்கு ஆரத்தி எடுக்கறார் போல


=============

0 comments: