Wednesday, February 21, 2018

மயில் வாகனன் போனிகபூர்

யுவர் ஆனர் பஸ் ஸ்ட்ரைக் நடந்தப்ப என்ன கருத்து சொன்னீங்க?

சம்பளம் பத்தலைன்னா வேற வேலைக்கு போங்க,சொந்தத்தொழில்"செய்ங்கன்னோம்;;
அப்போ என்ன இதுக்கோசரம் நீதிபதிகளுக்கு 200% சம்பள உயர்வு?வெய்யில்லயா"வேலை"செய்யறீங்க?

=============2 தலைவரே!நமக்கு,நேமாலஜில நம்பிக்கை உண்டா?

இல்ல
அம்மா அப்பா வெச்ச பேரு எதுக்கு இருக்கு?
கூப்பிடத்தான்
பேர் ராசி இல்லைனு யாரோ ஒரு ஜோசியர் சொன்னார்னு யாரும் இனிமே என்னை பேர் சொல்லி அழைக்கக்கூடாதுன்னா ஊர் உலகம் சிரிக்காதா?

==============3 தலைவரே!திடீர்னு மாடுகளுக்கு எதிரா ஏன் போராட்டம் பண்றீங்க?

மா னு கத்துது
அதனால என்ன?
மா குறும்படம் ஒரு கலாச்சார சீர்கேட்டை ஊக்குவிக்கும் படம் ஆச்சே?அதுக்கு விளம்பரம் பண்ணா விட்ருவோமா?

===============4 தலைவரே!உங்க எல்லா சந்தேகத்தையும் தீர்த்து வைக்கறோம்,ஆபீஸ் ரூம்க்கு வா னு கூப்பிடறாங்க,போகலையா?

யோவ்,கைப்புள்ளய கட்டதுர எதுக்கு கூப்பிடுவாரு?வெச்சு கும்மத்தான்


================


5 போனிகபூர் க்கு தமிழ் ல என்ன?

தமிழ் மிஸ் தன்யா = தெரியல
மயில் வாகனன் எப்டி ?
16 வயதினிலே படத்தில் அறிமுகமான ஸ்ரீதேவி க்கு கேரக்டர் நேம் என்ன?
மயிலு
அப்ப ஸ்ரீதேவியோட கணவர் போனிகபூர் மயில்வாகனன்தானே?

=================


6 குருவே!பெண்களைக்கவர்ற மாதிரி ஏன் படைப்பு இருக்கனும்.எனி ஹெல்ப் ?

ரொம்ப மெனக்கெடாதே சிஷ்யா!டிவி சீரியல் ,சமையல் ,கோலம் இந்த டாபிக்ல எழுது.


==============


7 டாக்டர்.சீரகத் தண்ணீர் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்னு"சொல்றாங்களே அது"உண்மையா?

நல்ல"தரமான ஏ ரக தண்ணீர் குடிக்கனும்.பி"ரக ,சி,ரக"லோ க்ளாஸ் தண்ணீர் குடிச்சா"கெடுதல்

==============


8 அவரு சிவ"பக்தர் னு எப்டி"சொல்றே?

பார்வதி நாயர் டீக்கடை னு கடை பேரு கூட சிவனுக்கு பிடிச்ச மாதிரி வெச்சிருக்காரே?


==============9 குருவே!வாழ்க்கையே பெரும்"போராட்டமா இருக்கு எப்போதும் சாந்தியுடன் இருக்க என்ன வழி?

சாந்தியோட புருசனை போட்டுத்தள்ளிடு


================10 தலைவரே!உங்க பையன் உங்க ் சொல் பேச்சு கேட்காதவரா?

கேட்பாரே?
உங்க நாலெட்ஜூக்கு தெரியாம ஏதாவது செய்வாரா?
இல்ல
உங்க பையன் அரசியல் பிரவேசம் பற்றி கேட்டா அதை அவர்ட்டயே கேளுங்கனு எஸ்கேப் ஆகறீங்களே அது ஏன்?


=================


11 தலைவரே!கேவலம் ஒரு சாமியார் கிட்டே போய் முதல்வர் ஆக என்ன வழி?னு கேட்டிருக்கீங்க,

என்ன தப்பு?பவர் உள்ள சாமியார்
அவ்ளோ பவர் இருக்கறவரு அவரே முதல்வர் ஆவாரா?உங்களுக்கு ஐடியா குடுப்பாரா?பகுத்தறிவு யோசிக்காதா?


===============


12 நான் சாப்பாடு சாப்டே ரெண்டு நாள் ஆகுது

விரதமா?
இல்ல 6 வேளையும் டிபன்தான்


=================


13 இன்ஸ்பெக்டர்.டான்ஸ் க்ளாஸ் ல ஒருத்தன் எனக்கு பாலியல் தொல்லை குடுக்கறான்

என்ன செஞ்சான்?
அவங்க வீட்ல கிரஹப்பிரவேசமாம்.என்னை வந்து பால் காய்ச்சச்சொல்றான்,எனக்கு"சமையல் சுட்டுப்போட்டாலும் வராது


================


14 ஜட்ஜ் − ஒரே இடத்துல 150 வீடுகள்ல திருடி இருக்கே,எப்டி?

ஊர் சனமே சந்திர கிரஹணம் பார்க்க மொட்டை மாடி போய்ட்டாங்க,நான் மொட்டை அடிச்ட்டேன்


=================


15 எடிட்டர் சார்,நடிகை அமலாபால் கோவா வை வாங்கிட்டார்னு நியூஸ் போட்டிருக்கீங்களே?கோவா அவ்ளோ சீப்பா?

சுத்தம்,நல்லா படிய்யா,ஸ்ரீ வில்லிப்புத்தூரில் நடிகை அமலா , பால்கோவா வாங்கினார் ,இதுதான் நியூஸ்


================


16 தமிழ்"தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

தெரியல டீச்சர்,தமிழ்த்தாய் யார் னு சொல்லுங்க
எதுக்கு?
ஊர்ல போய் விசாரிச்சு பதில் சொல்வேன்


==================17 தலைவரே! கர்நாடகா போகும்போது எதிர்க்கட்சித்தலைவரையும் அழைத்து செல்லனும்னு அறிக்கை விட்டீங்களே?எதுக்கு?

அரசு செலவுல பெங்களூர் டூர் போன மாதிரி ஆச்சில்ல?


===============18 மனைவிகள் கணவன் மேல் வரும் ஆத்திரத்தை பாத்திரத்திலே காட்டுகின்றனர்.

ஆம்பளைங்க ஏன் அப்டி"பண்றதில்ல?
ஏன்னா பாத்திர்த்தை"காசு கொடுத்து வாங்கறது அவன்.அவங்களுக்கு என்ன,எவன் காசோ போச்சுனு உடைப்பாங்க


===================19 டைரக்டர் சார் ,ஏமாளி க்கு இந்த ள தானே வரும்?நீங்க டைட்டில்ல சின்ன"ல போட்டிருக்கீங்க

ஹீரோ மெல்லினம் கிட்டே ஏமாந்துடறாரு.அதான் ஏமாலி


===============20 ரெம்ப Professionalஆவும் எளிமையாவும் ஈசியா சமையல் கத்துக்குடுக்குறதுல பெஸ்ட் மெம்ராஸ் சமையல் ஸ்டெஃபி யா? சன்"டிவி"யா?

2ம் இல்ல,அவங்கவங்க"அம்மா தான்


==============

0 comments: