Saturday, February 24, 2018

ஒரு பக்கோடா விக்கறவனுக்குப்பொண்ணு தந்தாலும் தருவேனே தவிர

வாழும் பென்னி குயிக்னு பேனர்"வெச்சிருக்கீங்களே? புரியல.என்ன செஞ்சாரு?

லிங்கா படம் பாரு புரியும்.தன் ஒவ்வொரு படத்துலயும் மக்களுக்காக தன் சொத்தை எழுதி வைக்கற ஒரே ஹீரோ


===============


2 கண்ணகி ,மாதவி 2 பேருக்கும் என்ன வித்யாசம்?

டீச்சர் ,அது தெரியல. வேணா மாதவிக்கும் ,பிந்து மாதவிக்கும் என்ன வித்யாசம்?னு வேணா"சொல்றேன்


===============


3 ஒவ்வொரு தொகுதிலயும் கமலை விட ரஜினி 5000 ஓட்டு அதிகம்"வாங்குவார் பாரு

ஓஹோ,அப்போ கமல்?
அவரு நோட்டாவை விட 500 ஓட்டு அதிகம் வாங்குவாரு
ஓஹோ,அப்போ நோட்டா?
அதுதான் ஊருக்கே தெரியுமே?பாஜக வை விட 2000 ஓட்டு அதிகம் வாங்கிடும்


=================


4 More
தலைவரே!கோயில்ல நடந்த தீ விபத்து நம்ம ஆட்சி ஆபத்துக்குள்ளாவதற்கான அறிகுறியாமே?
யோவ்,கோயில்ல நாம திருடுனது வெளில தெரியக்கூடாதுனு தீ வெச்சதே நாமதான்.=============5 Laptop, ,,mobile service க்கு தரும்போது நம்ம Delete பண்ணுண History அவங்க Recovery பண்ணாம இருக்க எதாவது Solution சொல்லுங்க

ஒரே வழி,நீங்க லேப்டாப் சர்வீஸ் பண்ண கத்துக்கறதுதான்,ஒரு பயலையும் நம்பாதீங்க


=================6 தலைவரே!இந்த ஆட்சிக்கு ஆபத்துனு ஜனங்க பேசிக்கறாங்களே!

விபரம் தெரியாம உளறாதய்யா,இந்த ஆட்சியால ஜனங்களுக்குத்தான் ஆபத்து,பஸ் சார்ஜ் டபுள்,அடுத்து கரண்ட் பில் ஏறப்போகுது


===============


7 TTR - டிக்கெட்?

பயணி − சாரி சார் ,எடுக்கலை
என்ன இவ்ளவ் கூலா சொல்றீங்க?
எத்தனையோ டைம் ரயில் 1 மணி நேரம் லேட்டா வர்றப்ப "பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகர்யத்துக்கு மிகவும் வருந்துகிறோம்"னு நீங்க சொல்றதில்லை?உங்க டிபார்ட்மெண்ட்க்கு ஒரு நியாயம்,எங்களுக்கு ஒரு நியாயமா?


=================


8 அந்த நடிகை முருக பக்தைனு எப்டி"கண்டு பிடிச்சே?

பேரை வெச்சுத்தான் ,"மலை"க்கா அரோ(க)ரா னு இருக்கே?


==============9 டீச்சர் ,ஒரு மண்டலம் னா எவ்ளோ நாட்கள்?

இது தெரியாதா?ஒரு மண்டலம் னா 48 நாட்கள்
ஓஹோ ,அப்போ ஊட்டியை உதகமண்டலம்னு சொல்ற மாதிரி உதக48 னு சொல்லலாமா?


================


10 நான்..
என் Personal Life"ல நடக்குரத Online " டைம் லைன்க்கு கொண்டு வர மாட்டன்,,,
Online"ல நடக்குரத Personal Life"க்கு கொண்டு போக மாட்டேன்
இது என்ன கேள்வி?பொண்ணுங்களோட சேட்டிங்க் தான்
ஓஹோ,பர்சனல் லைப் ல என்ன,நடக்கும்?


=================


11 தலைவரே!உங்க கூட செல்பி எடுக்க முயன்ற ஆளோட செல்போனை தட்டி விட்டீங்களாமே?

ஆம்பளைங்க வந்தா அப்டித்தான்யா?இதே பொண்ணா இருந்திருந்தா கையைப்பிடிச்சு இழுத்து பக்கத்துல வெச்சு எடுத்திருப்போம்


===============12 தப்பு பண்ணினா உம்மாச்சி கண்ணைக்குத்தும்கறது உண்மைதானோ?

ஏன்?
தலைவர் கண் ஆபரேசன்"பண்ணியும் சரியா ஊழல் பண்ண முடியலையாமே?


===============


13 குருவே!கல்யாணமான"முத ராத்திரில மாப்ளைக்கு பாலும் பழமும்"பலகாரமும்"தர்றாங்களே எதுக்கு?

எப்படியும்,பொண்டாட்டி டெய்லி"அடிக்கப்போறா?உடம்புல,தெம்பு வேணுமில்ல?


===============


14 சார்,லட்சுமி",மா பட இயக்குநர் டைரக்சன் ல நயன் தாரா ஒரு படத்துல நடிக்கறாங்களாமே?டைட்டில் என்னவா இருக்கும்?

உனக்கும் எனக்கும்"தான்"பொருத்தம்


===============


15 டைரக்டர் சார் ,உங்க
புதுப்படத்துல நயன் தாரா தான் ஹீரோயினியாமே?
இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு?லேடி சூப்பர்ஸ்டார் வேற யார் கூட இணைவாங்க?


==============16 அஜித்தோட தற்கால ஒர்க்கிங் பார்ட்னர் யாரு?

டைரக்டர் சிவா
டைரக்டர் (விக்னேஷ்)சிவன் உடைய எதிர்கால லைப் பார்ட்னர் யாரு?
நயன் தாரா
சிவா +சிவன் காம்போ=============17 தலைவரே!இப்போ இருக்கற சூழல் ல மம்முட்டி யோட இந்தப்படத்தை ரீ மேக் பண்ணா மாட்டிப்போம்

அப்டி என்ன படம்?
அய்யர் தி கிரேட்


===============18 நீயெல்லாம் சாம்பார்ல உப்பு போட்டு சாப்பிடுறியானு கேளுங்க
ஒரு லாஜிக்காவது இருக்கும்
சோத்துல எப்பிடி உப்பு?
தயிர் சாதம்,லெமன்"சாதம்,புளி"சாதம் ,தக்காளி சாதம் இப்டி


==============


19 குருவே!முருகருக்கு மீசை இருக்கா?இல்லையா?ஒவ்வொரு ஓவியத்துலயும் ஒவ்வொரு மாதிரி இருக்கு?

வள்ளியோட இருக்கும்போது மீசை இருக்கும்,தெய்வானையோட இருக்கும்போது மீசை இருக்காது


================


20 ஒரு பக்கோடா விக்கறவனுக்குப்பொண்ணு தந்தாலும் தருவேனே தவிர உனக்கு என் பொண்ணைத்தர மாட்டேன்னு எங்கப்பா என் ஆள் கிட்ட சொல்லீட்டார்

ஓஹோ,உன் ஆள் என்ன பண்றார்?
பஜ்ஜி விக்கறார்


==============

1 comments:

Unknown said...

முதலும் முடிவும் அமைந்த சிரிப்பு 'சிறப்பு'!��