Sunday, February 18, 2018

வீரா - சினிமா விமர்சனம்

Image result for veera tamil film 2017ஒரு ஏரியாவில் 2 டம்மி பீஸ் ரவுடிங்க பெரிய ரவுடிங்க மாதிரி ஃபார்ம் ஆகனும்னு நினைக்கறாங்க , ஸ்கெட்ச் போட்டுக்குடுக்கறது தான் அவங்க பார்ட் டைம் ஜாப் , மெயின் ஜாப் எல்லாமே. அப்பேர்ப்பட்ட வெட்டாஃபீசுங்க கிட்ட ஒரு பொண்ணை தூக்கச்சொல்லி பிராஜெக்ட் வருது , யாருன்னு பார்த்தா ஹீரோ ஒன் சைடா லவ்விட்டு இருக்கும் ஹீரோயின் , அதுக்குப்பின் என்ன ஆகுது? என்பதுதான் கதை 

 ஹீரோவா கிருஷ்ணா , சமீபகாலமா இவர் கதைத்தேர்வு நல்லா அமைஞ்சாலும் படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்ல, இதிலும் டிட்டோ 
இவரது டயலாக் டெலிவரி , பாடி லேங்குவேஜ் எல்லாமே   ஓக்கே ரகம், காதல் காட்சிகளில் மட்டும் நடிப்பு வர்லை


 காமெடியன் கம் ஃபிரண்டா கருணாகரன்,அவருக்கு அதிக வேலை இல்லை ,. கொஞ்ச சீனே வந்தாலும் மொட்டை ராஜெந்திரன் , யோகி பாபு 2 பேரும் ஏதோ சிரிக்க வெச்சுடறாங்க

 நாயகி சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை , திரைக்கதைல நாயகிக்கு , காதலுக்கு அதிக முக்கியத்துவம் தராம ரவுடியிசம் , ஸ்கெட்ச் போடுவது பற்றிய டீட்டெயிலிங் அதிகமா இருப்பதால்  மெயின் கதை அடிபடுது


ராதா ரவி அனுபவம் மிக்க நடிப்பு , அவருக்கு ஹார்ட் அட்டாக் வரும் காட்சியில் நடிப்பு கன கச்சிதம்


 பாடல் இசை சராசரி , ஒளிப்பதிவும் எடிட்டிங்கும்  ஓக்கே , படம் பூரா யாராவது எதையாவது தொன தொணனு பேசிட்டே இருப்பது அலுப்பு , கொஞ்சம் அமைதியா , மவுனமா கேப் விட்டு அடிச்சா என்ன? 

Image result for veera tamil film 2017

நச் டயலாக்ஸ்


பிடிச்ச பொண்ணை பத்து செகண்ட் பாத்தாலும் பச்சக் னு மனசுல ஒட்டிக்குவா


எந்த வேலையா இருந்தாலும் பெண்டிங் வைக்கலாம் ,ஆனா ஸ்கெட்ச் போடற வேலை ல மட்டும் பெண்டிங்கே வைக்கக்கூடாது,நமக்கே ஸ்கெட்ச் போட்ருவாங்க


ஊருக்கே ஸ்கெட்ச் போடறவனை நாம ஸ்கெட்ச் போடப்போறோம்


எதுவுமே தெரியாதுனு ஒத்துக்குங்க முதல்ல,அப்பதான் தொழில் கத்துக்க முடியும்


நீதான் கடை ஓனரா?


ஆமா,
மாமூல் எடு
நம்ம கடைல அதெல்லாம் விக்கறதில்லைங்களே?


அரசியல்ல எவனாவது உன்னை எதிர்த்தா முதல்ல அவன் தோள்ல கை போடு ,அசந்த நேரத்துல ஆளையே,போட்ரு


பிரச்னை பண்ணக்கூடாதுனு நான் சொல்லலை.நாமதான் பிரச்னை பண்றம்னு மத்தவங்களுக்குத்தெரியாம பண்ணனும்,அதான் அரசியல்அந்தப்பொண்ணு உன்னைத்தான் லவ் பண்ணுதுனு எதை வெச்சு சொல்றே?
நான் கேட்டப்ப எல்லாம் கரெக்டா டைம் சொல்லுச்சு ,அப்போ அது லவ் தானே?
சுத்தம் # veera9 எங்கப்பா பேரு பாக்சர் ராஜேந்திரன்
எதுக்கு ஒரு ஆளுக்கு 2 பேரு வெச்சிருக்காங்க?
ஹய்யோ ,ஒரு பேருதான்


10 இவனுங்க எல்லாம் ரவுடின்னா அப்ப நாம யாரு?


11 மொட்டை ராஜேந்திரன் − நான் அப்பப்ப அடுத்த வீட்டு சுவரேறி குதிப்பேன்
யோகிபாபு − பெரிய ரவுடியோ?
அதெல்லாமில்ல,ஆண்ட்டீங்களை கரெக்ட் பண்ண


12 லவ் பண்றவன் உயிருக்கு பயப்படக்கூடாது,உயிருக்கு பயப்படறவன் லவ் பண்ணக்கூடாது

Related image

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்ஹீரோயினோட அப்பாவுக்கு 3 சம்சாரம் ,கழக ரெப்ரென்ஸ்


பேய்ப்படம் கிடையாது,ஆனாலும்
பயமா இருக்கு ,நான்,தியேட்டர் ஓனர் ,ஆபரேட்டர் ,டிக்கெட் கிழிப்பவர் ,கேண்ட்டீன் மேனேஜர் 5 பேர்தான்

சபாஷ் டைரக்டர்


1 ஸ்கெட்ச் போடும் அந்த டீட்டெய்லிங் ரொம்ப கனகச்சிதம்

2   ராதாரவி  , தம்பி ராமய்யா கேரக்டர்கள் 

லாஜிக் மிஸ்டேக்ஸ்திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  ஹீரோ ஹீரோயின் காதல் அழுத்தமா சொல்லப்படலை 

2  நாயகியின் அப்பாவுக்கு 3 சம்சாரம் என்பது கதைக்கு எந்த விதத்தில் லிங்க் ஆகுதுன்னு தெரில 

3  பல துரோகங்களை சந்திச்ச தாதா ராதா ரவி ஹீரோ தன்னை கொல்ல வரும்போது அதை எதிர்பார்க்காமல் ஹார்ட் அட்டாக்கில் இறப்பது நம்ப முடியல . அதுவரை எந்தக்கொலையுமே செய்யாத ஹீரோ செத்துப்போன டெட் பாடில கத்தியால ரத்தம் வர குத்திக்கதகளீ ஆக்குவதும் நம்பும்படி இல்லைசி.பி கமெண்ட்-வீரா (first Blood) - லோக்கல் ரவுடி கோஷ்டிகள் ஸ்கெட்ச் போட்டு ஆளைத்தூக்கும் கதை,சுவராஸ்யம்தான்,ஆனா இழுவை,பெண்களுக்கு பிடிக்காது,சி செண்ட்ர் பிலிம் ,விகடன் 40 ,ரேட்டிங் 2.5 / 5
யோகிபாபு,மொட்டை ராஜேந்திரன் ,கருணாகரன் இருந்தும் காமெடி மிஸ்ஸிங்


Related image

டுடே ரிலீஸ் ரிசல்ட்
1 நாச்சியார் − பாலாவுக்கு எதிர்பாராத வெற்றி,பெண்களும் பார்க்கும் தரத்தில் ,விகடன் 41 ,ரேட்டிங் 2.75 / 5
2 நாகேஷ் திரையரங்கம் − கோஸ்ட் த்ரில்லர். பி & சி ல மீடியமா ஓடிடும் விகடன் 40 ,ரேட்டிங் 2.5 / 5
3 வீரா − ரவுடியிச ஸ்கெட்ச் கதை ,விகடன் 40 , 2.5/5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு)


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)வீரா @ ஈரோடு"சூரம்பட்டி சங்கீதா ( சங்கூதற வயசுல சங்கீதா)
=========0 comments: