Tuesday, September 08, 2015

என் ஆட்சியில் என் ஆணைப்படி இன்று தமிழகமெங்கும் பரவலாக மழை

நெட் தமிழன் கடலை போட்டுட்டு இருக்கும் பொண்ணு யார்?னு கேட்டா ஜாக்கிரதையா என் செல்ல தோழி இவ"னு தப்பிச்சுக்குவான்============
2 கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடியும் அழகிய நிகழ்வு தான் ஒரு பிகரைப்பார்த்து நாம் கண் அடிப்பது
============3 தொலைதூரப்பயணம் ,பணி நெருக்கடி , காரணமாக பல நெருங்கிய நட்புக்களின் சுக துக்க நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத சூழல் அமைவது வாழ்வின் சாபம்
============4 படுத்ததில் பிடித்தது கிராமத்துக்கயிற்றுக்கட்டில்
============
5 கோடிட்ட இடத்தை நிரப்புக


சினிமா ஆர்வலர்க்கு பரப்புக
பாயும் புலியே சுமார் ரகம் தானாம்....அப்போ...============


6 பொண்ணுங்க கேட்கும் கேள்விக்கு பதில் தெரியலைன்னா முழிச்சுட்டு இருக்காதீங்க,இப்டி;-) ஒரு ஸ்மைலி போட்டு தப்பிச்சுக்குங்க

==============

7 நல்ல வேளை நெட் தமிழன் ஆடியோ மட்டும் ரிலீஸ் பண்றான், வீடியோ ரிலீஸ் பண்ணி இருந்தா உள்ளே போய் இருப்பான்


===============
8 ஆசிரியர் தினத்தன்னைக்குக்கூட டீச்சர், ஐ லவ் யூன்னு லவ் ப்ரப்போஸ் பண்றவன் தான் தமிழன்

=================

9 சாதாத்தமிழன் போக்குவரத்துக்கு சைக்கிள் யூஸ் பண்ணி சேமிக்கிறான், ஹை க்ளாஸ் தமிழன் கார்ல ஜிம் போய் நிக்க வெச்ச சைக்கிளை ஓட்டறான்

==============


10 அன்று காதலிவருகைக்கு வழி மேல் விழி வைத்துக்காத்திருந்தவர்கள் இன்று காதலியின் அலைபேசி அழைப்புக்கு செல் மேல் செவி வைத்துக்காத்திருக்கிறார்கள்

=============


11 கிருஷ்ண ஜெயந்தியை சாக்கா வெச்சு பெருமாள் கோவிலுக்கு ஜெயந்தியை வரச்சொல்லி சர்க்கரைப்பொங்கல் சாப்பிட பிளான் போடும் அனைவருக்கும் வாழ்த்து


===============


12 அவங்கவங்க தோக்கிறது அவங்க புத்திக்கு தெரியாது. அவங்கவங்க நெத்தில தெரியும்.நாமம்


==============

13 உங்களுக்கு வாக்கப்பட்ட வனிதை வாயாடியா இருந்தா வருத்தப்படாதீர்.FMரேடியோ ஜாக்கி பணி கிடைக்க வாய்ப்புண்டு அவருக்கு


=============


14 அன்பே! உன் இதயக்கதவை டொக் டொக் என பல முறை தட்டியும் டொக்கு பிகர் நீ கண்டுக்கவே மாட்டேன்றியே ஏன்?

===============

15 ஷீனா கொலை வழக்கு இந்திராணி முதல் கணவரிடம் போலீசார் விசாரணை # 3 கணவர் மட்டும்தானா?என்பதுதான் முதல் கேள்வியாம்


================16 நெட் தமிழன் ஸ்கூலுக்கு,காலேஜ்க்கு,ஆபீஸ்க்கு அடிக்கடி லீவ் போட்டாலும் டி எம் சேட்டிங்க்கு மட்டும் லீவே போடமாட்டான்


=================

17 யார் யாருக்கு எந்தத்தேதில ஐ லவ் யூ சொன்னோம்?என்ன வாக்குறுதி யாருக்கு கொடுத்தோம்னு ஒரு டைரி போட்டு மெயின்ட்டெய்ன் பண்றான் நெட் தமிழன்


============
18 எதிரி உன்னை விட செல்வாக்கானவன் எனில் அவன் செல்லாக்காசு ஆகும் தருணம் தானாகவே அமையும் நாள் வரும்.அது வரை காத்திரு

==============


19 என் ஆட்சியில் என் ஆணைப்படி இன்று தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்கிறது னு இன்னும் எந்த அறிக்கையும் வர்லையா?


=================

20 கார் சீட் பெல்ட் அணிவீர்.
பைக் பயணத்தில் ஹெல்மெட் அணிவீர்
விபத்தில் சிக்கினாலும் எமனிடம் சிக்காமல் தப்பிப்பீர்!

=================

0 comments: