Monday, September 28, 2015

இளையதளபதி----சால்ட்&பெப்பர்லுக்லவந்தா?

1  
டாக்டர் தேள் கொட்டினா அதிர்ஷ்டம் அடிக்குமாமே? நிஜமா? ஆமா.ட்ரீட்மென்ட் பார்க்கற டாக்டர்க்கு லக்.லம்ப்பா ஒரு அமவுன்ட் கிடைக்கும்

===============


2 சார்.புலி யைப்பார்த்தா நீங்க பயப்படுவீங்களா?
நான் எதுக்குய்யா பயப்படனும்?நான் என்ன புலி பட டிஸ்ட்ரிப்யூட்டரா?

===========

3புலி வர்ற ஏரியான்னு தெரிஞ்சும் இந்தக்காட்டுக்குள்ள என்ன தைரியத்துல நைட் டைம் ல சுத்துறே?, அக் 1 தான் புலி வரும்னு சொன்னாங்களே?


==============

4 சிறுவாணித்தண்ணி குடிச்சு நான் பவானியில் குளிச்சுவளர்ந்தவ. ஏம்மா.குளிக்கறதுக்காக டெய்லி கோவை டூ பவானி வந்துட்டுப்போவியா?

==============

5 தாரா= இப்பொல்லாம் பெண்களைவிட ஆண்கள் அதிகமா சீன் போட ஆரம்பிச்சுட்டாங்க இருக்காதுங்க்ளே! ஸீன் பார்க்கறதோட எங்க கடமை முடியுது


================


610 பேர் சேர்ந்து ஒரு வேலையை 8 நாள் ல முடிச்சா 20 பேர் அதே வேலையை முடிக்க எத்தனை நாள் ஆகும்? தனியார் வேலையா? கவர்மென்ட் வேலையா?


============

7 டியர்.தப்பு பண்ணா சாமி கண்ண குத்தும்"னு சொல்றாங்களே ,அது உண்மையா? அப்டிப்பார்த்தா மேரேஜ் ஆன பயலுக யார்க்கும் கண்ணே தெரியாதே?


===============

8 நான் கை காட்ற பையனுக்குத்தான் என் பொண்ணு கழுத்தை நீட்டுவா. மாமா.உங்க பொண்ணு பால்காரன் கூட கம்பி நீட்டிட்டா.


============

9டியர்.என் அத்தனை மௌனங்களையும் மொழிப்பெயர்க்க தெரிந்தவன் நீ ! ஆனா ரொம்ப லேட் பண்றே.ஏன்? நான் தான் ட்ரான்ஸ்"லேட்"டர் ஆச்சே ?


====


10விஜய் ரசிகை = டியர்.புலி FDFS கூட்டிட்டுப்போவீங்களா? அஜித் ரசிகன்=,தியேட்டர் வரை கூட்டிட்டுப்போறேன்.டிக்கெட் நீ தான் எடுக்கனும்.்


=============

11புலி பட ரேட் சொல்லிட்டேன்.ஏன் வாங்க யோசிக்கறீங்க? வம்பை ஏன் விலை குடுத்து வாங்கனும்னுதான்


=============

121லட்சம் மதிப்புள்ள இந்த லேகியத்தை சாப்ட்டாஉங்க சம்சாரத்தைத்திருப்திப்படுத்தலாம்.
டாக்டர்.5000 ரூ க்கு பட்டுப்புடவை வாங்கிக்கொடுத்தாபோதுமே


==================

13வரலாறு மிஸ் வனஜா = ஆதி தமிழன் பற்றி சிறுகுறிப்பு வரை மாண்புமிகு மாணவன் = டீச்சர்.ஆதி அட்டர் பிளாப் ,தமிழன் மீடியம் பிளாப் டூ விஜய்

===========


14டாக்டர்.இரட்டை விநாயகரை வழிபட்டா இரட்டைக்குழந்தை பிறக்குமா? யோவ்.அப்போ ராவணனை வழிபட்டா 10 குழந்தை பிறக்குமா?

=============

15சார்.சோபா மேல நீங்க உட்கார்ந்திருப்பதுபோல் ஒரு ஸ்டில் எடுக்கனும். ம்.சரி..முதல்ல புதுமுகம் ஷோபாவை வரச்சொல்லுங்க # கபாலி


==============

16சிம்புதேவன் = தேர்த்திருவிழாவில் உங்க தலை மேல ஜனங்க உப்பும் ,மிளகும் தூவறாங்க விஜய்.=சூப்பரு.இதையே சால்ட் & பெப்பர் லுக் னு சமாளிப்போம்

=============

17என் பொண்ணு நல்லா டாட்டா காட்டுவா. ஏன்?பிர்லா வை அடையாளம் தெரியாதா?

=================


18மாயா படம் டெரரா இருக்கா?
அதெல்லாம் தெரியாது.நயன் தாரா இருக்கா(ங்க)

==================

19டாக்டர்.எனக்கு ஏன் எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது "?
உங்க கண்மணி பாப்பா ட்வின்சா இருக்குமோ?


=============

20மாமா! உங்க பொண்ணுக்கு பூண்டு, வெங்காயம் இல்லாம சமைக்கத் தெரியாதாமே?
அவ அம்மா பக்கத்துல இல்லைன்னா எதுவுமே சமைக்கத்தெரியாது


===============

0 comments: