Tuesday, September 22, 2015

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்கொலைவழக்கு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தின் பாதுகாப்பில் உள்ள 64 ஆவணங்களை அம்மாநில அரசு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.
இந்த ஆவணங்கள் அனைத்தும் கொல்கத்தா போலீஸ் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை அருங்காட்சியகத்தில் நடந்த ஆவண வெளியீடு நிகழ்ச்சியில் நேதாஜி குடும்பத்தினர், அவரது எள்ளுப் பேரன் சந்திரகுமார் போஸ், முன்னாள் எம்.பி.கிருஷ்ண போஸ்,செய்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கொல்கத்தா போலீஸ் கமிஷனர் சுராஜித் கர் கூறும்போது, "சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ஆவணங்களை வெளியிடும் பணி மிகச் சவாலானது. 12,744 பக்கங்கள் கொண்ட 64 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் முறையில் இவை வெளியிடப்பட்டுள்ளன.
அசல் ஆவணங்கள் அனைத்தும் கொல்கத்தா போலீஸ் அருங்காட்சியகத்தில் உள்ள கண்ணாடிப் பேழையில் பத்திரமாக பாதுகாக்கப்படும்" என்றார்.
திங்கள்கிழமை முதல் டிஜிட்டல்மயமாக்கி வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களை பொதுமக்களும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அருங்காட்சிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 11-ம் தேதியன்று நேதாஜி ஆவணங்களை வெளியிடுவதாக அறிவித்த மம்தா பானர்ஜி, "வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு காரணமாக நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட முடிவு செய்துள்ளோம்.
சுபாஷ் சந்திர போஸ் இங்கு வாழ்ந்துள்ளார். இங்கிருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கிறார், தனது போராட்டங்களை இங்கிருந்தே நடத்தினார். ஆனால் அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி நாம் அறிந்து கொள்ள முடியவில்லை. இது புதிரானது.
இந்த ஆவணங்கள் தற்போது தயார் செய்யப்பட்டு போலீஸ் ஆவணக் காப்பகத்தில் அனைவரும் படிக்க வசதியாக வைக்கப்படவுள்ளது. ஊடகங்கள்தான் உண்மையைக் கண்டறிய வேண்டும். மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் பல கோணத்தில் ஆராய்ந்த பிறகே ஆவணங்களை வெளியிடும் முடிவு எட்டப்பட்டுள்ளது" எனக் கூறியிருந்தார்.

நன்றி-தஹிந்து

 • THIRUMALAIKUMAR A  
  நேதாஜியின் வாழ்க்கை யை அறிய முதல்வர் மம்தா ஏற்பாடு செய்தது பாராட்டத் தக்கது. மத்திய அரசும் அம்மாவீரரின் வாழ்க்கையை மக்கள் அறிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
  about 11 hours ago
   (1) ·  (0)
   
  balan Up Voted
  • வைஷ்ணவ  
   அரசல் புரசலாக எல்லாம் அலசி பேசியாற்று. இனி அதுக்கு ஒரு அசல் தான் தேவைபடுகிறது. வெளியான பின் மக்கள் தெரிந்து கொண்டால் மட்டும் போதும்.. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாகவே வெளியிடலாமே - வைஷ்ணவ தேவி
   Points
   440
   about 12 hours ago
    (0) ·  (0)
    
   • SSridhar  
    ஒரு தேசபக்தனின் தியாகத்தை வெளிக்கொணர இந்தியாவிலே முடியும் ஆனால் முடியது. ஏன் என்றல் தவறு செய்தவர்கள் அன்றைய திய்கிகலே சுதநத்ரியம் என்ற பெயரில் மனித உரிமை மீறல் அப்போத நடைபெற்றுள்ளது என்றல் உண்மை கண் போன பிறகு சூர்யா நமஸ்காரம ???
    Points
    6150
    about 13 hours ago
     (0) ·  (0)
     
    • SSundarsvpr  
     தகவல்கள் வெளியிடுவதால் நாட்டிற்கு ஆபத்து என்றால் வெளியிடவேண்டாம் தனிப்பட்ட தலைவரின் அல்லது தலைவர்களின் குறைபாடுகள் என்பதால் மறைத்தால் அது பச்சை தேச துரோகம் பீகார் தேர்தலில் எதிரொலிக்கும்
     Points
     3770
     about 14 hours ago
      (0) ·  (0)
      
     • RAJAN Kittappa  
      காங்கிரசை காப்பாற்றுவது, நேருவின் பிம்பத்தை காப்பாற்றுவது, நட்பு நாட்டின் உறவை காப்பாற்றுவது என இல்லாமல் ஊடகங்கள் பொறுப்பாக ஒரு தேசபக்தனின் தியாகத்தை வெளிக்கொணர வேண்டும். செய்யுமா?
      Points
      5330
      about 14 hours ago
       (1) ·  (0)
       
      balan Up Voted
      • BBala  
       ஆவணங்களில் சொல்லப்பட்ட விசயங்களையும் இந்து எடுத்துரைக்க வேண்டும்
       about 14 hours ago
        (0) ·  (0)
        
       • RAJAN Kittappa  
        காங்கிரசை காப்பாற்றுவது, நேருவின் பிம்பத்தை காப்பாற்றுவது, நட்பு நாட்டின் உறவை காப்பாற்றுவது என இல்லாமல் ஊடகங்கள் பொறுப்பாக ஒரு தேசபக்தனின் தியாகத்தை வெளிக்கொணர வேண்டும். செய்யுமா?
        Points
        5330
        about 14 hours ago
         (1) ·  (0)
         
        • பாலா  
         பாரத்தின் வீரமனிதர் பற்றிய உண்மைகள் உலகறிய வேண்டும். அவருக்கு உரிய மதிப்பு வழங்கப்பட வேண்டும்.
         Points
         39580
         about 15 hours ago
          (2) ·  (0)
          
         Venket · suresh Up Voted
         • Ssridhar  
          பாரத்தின் வீரமனிதர் பற்றிய உண்மைகள் உலகறிய வேண்டும். அவருக்கு உரிய மதிப்பு வழங்கப்பட வேண்டும். இந்தியாவிலே ஒரு காலமும் நடக்காது மீண்டும் அங்கிலய்ரர் ஆட்சி வருமானால் பாரத்தின் வீரமனிதர் பற்றிய உண்மைகள் உலகறியும்
          about 13 hours ago
           (0) ·  (0)
           
         • PLPMK Legends  
          உண்மையை உலகுக்கு வெளிபடுத்துங்கள்...
          Points
          1710
          about 15 hours ago
           (0) ·  (0)
           
          • Ssridhar  
           இந்தியாவிலே உண்மையை வெளிபடுதுவத்து என்பது நடக்காத ஒன்று
           about 13 hours ago
            (0) ·  (0)
            
          • AAthiyaman  
           மாவீரர் நேதாஜியின் மறைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் வெளி கொணர வேண்டும். அப்போதுதான் நம்முடைய வரலாறு முழுமை அடையும். இதுவரையில் நம்ப படுகிற பரப்புரைகள் காங்கிரஸ் மற்றும் அதனை இயக்கும் ஆதிக்க சக்திகளினாலும் தேச, கலாச்சார பற்றில்லா சக்திகளினால் நெறைய வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாறு வெறும் அடிமை காலத்திய வரலாறாக, அன்னியர்கள் விட்டு சென்ற புழக்கடை வரலாறாக இல்லாமல், மக்களின் வரலாறாக முழுவதுமாக அறியப்பட வேண்டும். இதில் இன்னொன்று, நம் தலைவர்களின் குற்றங்களையும் ஆற்றாமைகளையும் சீர்தூக்கி பாக்கும் பக்குவம் உள்ளவர்களாக நாமும் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.
           Points
           275
           about 16 hours ago
            (2) ·  (0)
            
           • RR  
            நாட்டில் எவ்வளவோ பெரும் பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்குத் தீர்வு கண்டால் மக்களுக்கு நன்மை ஏற்படும். அதைவிட்டுவிட்டு நேதாஜி பிரச்சினையில் இத்தனை வருடம் செலவழித்தாகிவிட்டது. இந்த ஆவணங்களினால் இன்னும் எத்தனை வருடம் பேசுவார்களோ தெரியவில்லை. அப்படியே குற்றவாளியை நிரூபித்தாலும் தண்டனை எப்படிக் கொடுப்பது. சசி தரூர் சொல்வதுபோல் பொது மன்னிப்புக் கேட்கலாம். பிரச்சினையை முடித்துக் கொண்டால் நல்லது.
           நன்றி-தஹிந்து

           0 comments: