Thursday, September 17, 2015

சென்சார் சிக்கல்கள்: மிஷ்கின் முன்வைக்கும் 8 அம்சங்கள்-தற்காப்பு' படத்தின் இசை வெளியீட்டு விழா

  • 'தற்காப்பு' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின். | படம்: எல்.சீனிவாசன்
    'தற்காப்பு' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின். | படம்: எல்.சீனிவாசன்
    'தற்காப்பு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், திரைப்படத் தணிக்கையில் பல சிக்கல்கள் நிறைந்திருப்பதாக அனுபவ ரீதியில் முன்வைத்த 8 அம்சங்கள் இதோ...
    * "ஒரு படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்திருக்கிறது, மறுதணிக்கைக்கு போகிறோம் என்றார்கள். U/A, A போன்ற சான்றிதழ்கள் எல்லாம் இயக்குநர்களுக்கு வித்தியாசம் தெரியாது. ஒரு படம் தோற்றுவிட்டால், 50 குடும்பங்கள் ரோட்டுக்கு வந்துவிடுகிறது.
    * படத்தில் கெட்டவார்த்தைகள், வன்முறைக் காட்சிகள் இருக்கிறது. அவை இல்லாமல் வாழ்க்கையே கிடையாது. ஒருத்தனைத் திட்ட வேண்டும் என்றால், போடா, செல்லமே என்றெல்லாம் திட்ட முடியாது. அப்படி திட்டி படம் எடுத்தால் அப்படம் உங்களை ஏமாற்றுகிறது என்று அர்த்தம். ஒரு காட்சியில் நாயகனோ, நாயகியோ திட்ட வேண்டும் என்றால் திட்டணும். தடவிக் கொடுத்து எல்லாம் பேச முடியாது. இதைத் தான் நாம் பண்ணிக் கொண்டிருக்கிறோம். அனைத்து தரப்பு மக்களும் திரையரங்கிற்கு வருகிறார்கள். சாதாரண ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி, ஒரு பைலட் , ஒரு டாக்டர் என்று எல்லாரும் அமர்ந்து பார்க்கிறார்கள். அங்கு மட்டும் தான் ஜாதி என்பதே கிடையாது. திரையரங்கில் தான் ஜாதி, மதங்கள் உடைக்கப்படுகிறது.
    * ஒரு கலைஞனுக்கு கடுமையான சுதந்திரம் தேவைப்படுகிறது. வார்த்தைகள் எல்லாம் உபயோகப்படுத்தக் கூடாது என்பதால் அதை வேறு மாதிரி உபயோகப்படுத்துகிறார்கள். நிறைய படங்களில் வழுக்கைத்தலை என்று கூறுவது, எட்டி உதைப்பது போன்ற காட்சிகள் இருக்கின்றன. அதை யாரும் தூக்க முடியாது. தணிக்கையிலும் தூக்க முடியாது.
    * 'பிசாசு' படத்தைப் பார்த்துவிட்டு சென்சார் அதிகாரிகள் படம் சூப்பர் சார், ஆனால் படத்தில் பிசாசு இருக்கிறது என்றார்கள். நான் சினிமாவில் நிறைய பிசாசுக்களை பார்த்துவிட்டேன். 'பிசாசு'வை எல்லாரும் பயமுறுத்தும் போது தான் நான் ஒரு கதை எழுதினேன். பிசாசு தெய்வம். தெய்வத்துக்கு ஒரு படி மேல. மேன்மையானது. பிசாசு பார்த்து பயப்படாதீங்க. தெரியாத இருட்டைப் பார்த்து தேவையில்லாத புரொஜக்‌ஷன் கொடுக்காதீங்கன்னு ஒரு படம் பண்ணேன். சார் பிசாசு வந்துடுச்சு. அதனால் A சார்னு சொல்றாங்க. அதற்கு பாலாவிடம் திட்டு தான் வாங்கினேன்.
    * தணிக்கை ரொம்ப முக்கியமானது. பெரிய விழிப்புணர்வு. சும்மா ஒரு படம் பண்ணி முடிச்சிட்டு ஒரு பேனல்ல உட்கார்ந்து 15 நிமிஷம் பேசிட்டு வெளியே வர்றது இல்லை. சமூகத்தின் மிக முக்கியமான விஷயம். இதற்காக போராட்டம் நடத்த சொல்லலை. ஒரு கலைஞனா படைப்பாளிக்கு சுதந்திரம் வேண்டும். அது ரொம்ப முக்கியமானது. இதைப் புரிஞ்சுக்கணும்.
    * ஒரு படத்துக்கான கதை எழுதும் போதே எனக்கு பயமாக இருக்கிறது. திட்டுகிற காட்சி எல்லாம் வரும் போது அடித்து எழுதுகிறேன். நான் எழுதும்போதே என் சினிமா கொல்லப்படுகிறது. படமாக்கும் போதே ஒளிப்பதிவாளர் இக்காட்சியை நீக்கி விடுவார்கள் என சொல்கிறார். வேலை செய்யும்போதே சுதந்திரம் இல்லை என்றால் என்ன கலை? உலகத்திலேயே சுதந்திரத்தைக் கொடுப்பது கலை மட்டும்தான்.
    * ஒரு தவறான எண்ணம் தமிழ்நாட்ல, இந்தியாவுல இருக்கு. குழந்தைங்களோட பார்க்க முடியலை சார்னு சொல்றாங்க. தயவுசெய்து குழந்தைங்களோட பார்க்க முடியுற மீடியம் இல்லை சார் சினிமா. குழந்தைகளோடு கார்ட்டூன் படங்களைத் தான் பார்க்க வேண்டும். சினிமா அடல்ட் மீடியம். மைடியர் குட்டிச்சாத்தான் பார்க்க குழந்தைங்களோட தியேட்டருக்கு வாங்க. டைட்டானிக் பார்த்தால் கூட முத்தக்காட்சி இருக்கும். சென்சார்ல குழந்தைங்களோட இந்தப் படத்தை பார்க்க முடியாதுன்னு சொல்றாங்க. தயவுசெய்து குழந்தைங்களோட படத்துக்கு வராதீங்க. என் படத்தை குழந்தைங்களோட பார்க்க முடியாது.
    * நான் இப்படி பேசுவதால் அடுத்த படத்துக்கு A கொடுத்தாலும் பரவாயில்லை. நான் A படம்தான் எடுக்கப்போறேன். க்ரைம் த்ரில்லர் படம்.''
    இவ்வாறு மிஷ்கின் பேசினார்.பாலா  
    மிஸ்கின் 8 திக்குக்களில் தடுமாறுவது தெளிவாக தெரிகிறது.
    Points
    39535
    about 17 hours ago
     (1) ·  (0)
     
    PRABHURAMKUMAR Up Voted
    • VP
      முதல்ல இவர சொந்தமா யோசிச்சு படம் எடுக்க சொல்லுங்க. plagiarism
      Points
      535
      about 18 hours ago
       (0) ·  (0)
       
      • SK
        உங்களின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் சூப்பர்.அது போன்ற படங்களை எதிர்பார்கிறோம்.
        about 19 hours ago
         (0) ·  (0)
         
        • S
          Sreee  
          யார் பாக்க போகிறது
          a day ago
           (0) ·  (0)
           
          • R
            சுத்த பிதற்றல் . . . பேச்சு வெளியில் வன்முறையும் , கெட்ட வார்த்தைகளையும் கேட்டு நொந்து போய்தான் அமைதி தேடி ஒரு மனிதன் திரை அரங்கிற்கு வருகிறான் . . . அங்கும் அதே கொடுமையா . . . முதலில் இவர்கள் திரை அரங்கில் நியாயமான கட்டணம் வசூலிக்கட்டும் . . . அதன் பின் 30% , வரி விலக்கு ,சென்சார் சர்டிபிகேட் குறித்து பேசலாம் .
            a day ago
             (0) ·  (1)
             
            sathish Down Voted
            • M
              Mani  
              நீங்க இன்னும் சினிமாவ விட்டு போகலைய ????.... FaceBook -ல சினிமா விட்டு போகுறதா நியூஸ் வந்ததே 
            நன்றி- த  இந்து

            0 comments: