Tuesday, September 15, 2015

தீபா சன்னிதியில் தீயா வேலை செய்யனும் குமாரு

விஜயகாந்துடன் சுப்பிரமணியசாமி சந்திப்பு # பிரேமலதா மேடம் ஜாக்கிரதை.கேப்டன் கழுத்துல சுவாமி தாலி கட்டிடப்போறாரு


=============2 உலக முதலீட்டாளர் மாநாட்டால் எந்த பயனும் கிடைக்காது: ராமதாஸ்

# அது என்ன பாமக மாநாடா?வேஸ்ட்டா போக?


===========
3 நயனுக்கு எதிராக நாங்க எந்தப் புகாரும் கொடுக்கலை- சிம்பு # ஏதோ கார் பரிசா கொடுத்தீங்களாம்


====================


4 DMKஆட்சிக்குவந்தால்காவல்துறைல் அரசியல் தலையீடு இருக்காது-ஸ்டாலின்
# வந்தாத்தானே?அதான் வராதே.ராதே என் ராதே வாராதே.மீண்டும் ஆட்சிக்கு வாராதே


============


5அரவிந்த்சுவாமியை எனக்கு ரொம்ப பிடிக்கும்! - நயன்தாரா # சாதா லெவல்ல பிடிக்குமா? சிம்பு,பிரபுதேவா,ஆர்யா மாதிரி வேற லெவல்லயா?

============

6ஆட்சியை பிடிக்கும் முறையை ரகசியமாக வைத்துள்ளோம் - சீமான் # அண்ணே! ராணா ஹெக்சாடாக்டைலா.அதை சொல்லாம ரகசியமா வைக்க முடியல?

===============

7 பொன்மகன் வைப்புநிதி திட்டம் அறிமுகம் # நல்ல வேளை.தங்க மகன் னு வைக்கலை.வெச்சா ரஜினி கேஸ் போட்டிருப்பாரு


================

8பிரச்சனைகளுக்கு தீர்வுகாண கடிதம் எழுதினா மட்டும் போதுமா?- கலைஞர் #,நாம தினமும் அதானே பண்றோம்? முரசொலில


===========

9 விஜய் சிவாஜியின்ரசிகர் அதனால் சிவாஜி பிறந்த நாளன oct 1 புலியை ரிலிஸ் செய்கிறார்.# நல்ல வேளை ,சிவாஜிக்கு இந்த விஷயம் தெரியாமயே போய்ட்டாரு


============

10ம-எனும் மகிழ்ச்சியில் துவங்கி து-எனும் துன்பத்தில் முடிவதால் அதற்கு மது என்று பெயர் - பிரேமலதா. # இதை நாட்டுக்கு சொல்றாரா?தன் வீட்டுக்கா?

=================

11 ரஜினி முருகனுக்கு "U"
பிள்ளையார் பர்த்டேவுக்கு படம் தியேட்டரில் ரிலீஸ் # விநாயகருக்கும் முருகருக்கும் ஆகாதே?

============

12 முதலீட்டாளர் மாநாடுகுறித்து வெள்ளை அறிக்கைவிட வேண்டும் - ஸ்டாலின்
# திமுக வின் சிஎம் வேட்பாளர் யார்? என வெள்ளை அறிக்கை விடவேண்டும்


===============

13அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம்: முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜெ, உறுதி # மதுபானத்துறை ல நாம தான் நெ 1


============

14மகளிர் போலீஸ் நிலையம் முன்பு ‘பேஸ்புக்’ காதலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் ரகளை..# பம்பரமா வேலை செஞ்சிருக்கான் தாம்பரம் நெட் தமிழன்

===============


15 பெண் சாமியார் ராதேமா ‘விபசார விடுதி நடத்துகிறார்’ பரபரப்பு புகார்...# நித்யானந்தாவைவிட பெரிய கேடி போல இந்த லேடி


=============

16ரூ.1 லட்சம் கோடியை தாண்டி முதலீடுகள் வந்துள்ளன மாநாட்டில் ஜெயலலிதா அறிவிப்பு# அடேங்கப்பா.100 விஜய் பட வசூல்!!

==============

17 சுற்றுலா சென்ற இடத்தில் மாணவிகளிடம் சில்மிஷம்: கல்லூரி முதல்வருக்கு தர்ம அடி # ஓப்பன் யுனிவர்சிட்டிங்கறதால ஓப்பன் ப்ளேஸ் லயே?


================

18சினிமாவில் சான்ஸ் தேடியபோது பிளாட்பாரத்தில் தூங்கினேன்: கங்கனா ரனாவத் # இப்ப பல ரசிகர்களை தூங்க விடாம பண்றீங்க்


===============

19இலவச மடிக்கணிணி பெற மாணவர்கள் ஆதார் எண்ணை பள்ளியில் தரவேண்டும்-ஜெ
#.ஸ்கூல் ஹெச் எம் அப்ரூவல் இருந்தாலே போதுமே?ரேசன் கார்டா தர்றீங்க?

=============

20தமிழ் மொழி எனக்குப் பிடிக்கும் - தீபா சன்னிதி # எங்களுக்குக்கூடத்தான் தேன்மொழி,கனிமொழி,தமிழ்மொழி பிடிக்கும்,ஆனா வெளில சொல்லிட்டிருக்கறதில்லை


==============

0 comments: