Monday, September 21, 2015

ஷகீராவைக்கொலைசெய்தசாமியார்வழக்கில்மாட்டியதுஎப்படி?-பட்டுக்கோட்டை பிரபாகர்


1992-ல் நடந்த அந்த வழக்கை அபூர்வத் திலும் அபூர்வமான தாக வழக்கறிஞர்கள் குறிப்பிடு கிறார்கள். அந்த வழக்கில் இந்தியா வில் முதல்முறையாக தடயவியல் நிபுணர்கள் பயன்படுத்தப்பட்டார் கள். முடி, ரத்தம், மரபணுச் சோதனை களுடன் மண்டை ஓட்டின் நகலின் மீது புகைப்படத்தை கம்ப்யூட்டர் மூலம் மேல்பதிவு செய்து அடை யாளம் காண்கிற முறை இப்படி பல விஷயங்கள் முதல் முறையாக அந்த வழக்கில் உபயோகப்படுத்தப் பட்டன. என்ன வழக்கு அது?
பெங்களூரில் வாழ்ந்த அழகான பெண் ஷகிரா. வயது 40. மைசூர் திவான் மிர்ஸா இஸ்மாயிலின் பேத்தி. கணவர் அக்பர் ஐ.எஃப்.எஸ் படித்து ஆஸ்திரேலியாவில் தூத ராக இருந்தவர். 4 பெண் குழந்தைகள். எக்கச்சக்கமான சொத்துக்கள். ஆண் வாரிசு இல் லையே என்கிற ஏக்கம் ஷகிராவுக்கு.
அப்போது கணவர் ஈரானில் இருந்தார். குழந்தைகள் வெளிநாடு களிலும் ஷகிரா பெங்களூரிலுமாக வாழ்ந்தார்கள். ஒரு விழாவில் சுவாமி ஸ்ரத்தானந்தாவின் அறி முகம் ஷகிராவுக்குக் கிடைத்தது. நிலங்களில் உள்ள பத்திரச் சிக்கல்களை சரிசெய்வதில் சுவாமி நிபுணர் என்று சொன்னதால் தன் நிலங்களில் இருந்த சிக்கல்களைத் தீர்த்துத் தரச் சொன்னார்.
தன்னிடம் அதிசய சக்திகள் இருப்பதாக ஷகிராவை நம்ப வைத்தார் சுவாமி. தன் கணவரை விவாகரத்து செய்யும் அளவுக்கு சுவாமியைப் பிடித்துப் போனது ஷகி ராவுக்கு. தன் பெற்றோர், மகள்களை எதிர்த்துக்கொண்டு சுவாமியை திருமணம் செய்துகொண்டார். வங்கிக் கணக்குகள் இருவர் பெயரிலும் தொடங்கப்பட்டதுடன், கட்டிடத் தொழில் நிறுவனமும் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால், நாளடையில் சுவாமி யின் சில நடவடிக்கைகள் சுவாமி மேல் ஷகிரவுக்கு வெறுப்பு வர வைத்தது. சின்னச் சின்ன சண்டைகளும் வரத் தொடங்கின. இந்தச் சூழ்நிலையில் திடீரென்று ஷகிராவைக் காணவில்லை.
ஷகிரா தன் மகள்களுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தார். அவரின் மகள்களில் ஒருவரான சபா போன் செய்தபோது ஷகிரா ஹைதராபாத் சென்றிருப்பதாக சொன்னார் சுவாமி. இன்னும் சில நாட்கள் கழித்து கேட்டபோது, வருமான வரி பிரச்சினையால் தலை மறைவாக இருப்பதாக சொன்னார். சபாவுக்கு லேசாக சந்தேகம் அதிகரிக்கவே வெளிநாட்டில் இருந்து புறப்பட்டு வந்துவிட்டாள். சபாவிடம் ஷகிராவைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று நடித்தார் சுவாமி.
சபா போலீஸ் ஸ்டஷன் சென்று தன் தாயைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார். அது 1992-ல். போலீஸ் சுவாமியை விசாரித்தது. தனக்கும் ஷகிராவுக்கும் சில பிரச் சினைகள் இருந்ததாகவும், தான் வெளியூர் சென்று திரும்பியபோது வீட்டில் ஷகிரா இல்லையென்றும் சொன்னார்.
அடுத்த 2 வருடங்கள் ஷகிரா வைத் தேடும் முயற்சியில் போலீஸ் மிகவும் மெதுவாகவே செயல்பட் டது. இதற்கிடையில் சுவாமி தன் னிடம் உள்ள பவர் அதிகாரத்தை வைத்து ஷகிராவின் சொத்துக்களை விற்று பணமாக்கினார். வங்கிக் கணக்குகளில் இருந்து எல்லா பணத்தையும் எடுத்தார். கட்டிட நிறுவன போர்டு மீட்டிங்குகளில் கலந்துகொண்டு தான் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுத்தார்.
ஷகிராவின் மகள் சபா பொறுத் துப் பொறுத்துப் பார்த்து கோர்ட்டில் ஹேபியஸ் கார்ப்பஸ் என்கிற ஆட்கொணர்வு மனு போட்டார். இப்போது புகாரை சிறப்பு கிரைம் பிராஞ்ச் விசாரிக்கத் தொடங்கியது. சுவாமியை மடக்க எந்த ஆதாரமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
சுவாமி வீட்டு வேலைக்காரனுடன் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிநேகமானார். அவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து பல உண்மை களை அவனிடம் இருந்து பெற்றார்.
அடுத்த நாள் சுவாமி கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரிக்கப் பட்டபோது, “ஷகிராவை நான் கொலை செய்துவிட்டேன்’’ என்று ஒப்புக்கொண்டார் சுவாமி. எப்படி கொலை செய்தேன் என்பதை சுவாமி விவரித்தபோது காவல் துறை அதிர்ந்துபோனது.
ஒரு சவப்பெட்டி ஆர்டர் செய்து, அதை கெஸ்ட் ஹவுசில் மறைத்து வைத்துக் கொண்டார். ஷகிரா ஊரில் இல்லாதபோது, பங்களாவின் பின் பகுதியில் ஆட்களைவிட்டு கழிவு நீருக்காக என்று சொல்லி ஒரு குழி வெட்டச் சொன்னார். ஷகிரா ஊரில் இருந்து வந்த இரவில் அவருக்குத் தெரியாமல் நிறைய தூக்க மாத்திரைகளை விழுங்க வைத்தார். ஷகிரா ஆழ்ந்த உறக்கத் தில் இருக்கும்போது சவப்பெட் டியை எடுத்து வந்து, அதில் பெட்ஷீட்டைச் சுற்றி ஷகிராவை உயிருடன் படுக்க வைத்தார். பெட்டியை மூடினார். குழிக்குள் தள்ளினார். மணலைத் தள்ளினார். மேலே கடப்பா ஸ்லாபுகளைப் பதித்து, சிமெண்ட் வைத்து அதன் இடைவெளிகளைப் பூசினார். இதையெல்லாம் வேலைக்காரனின் உதவியுடன் செய்திருக்கிறார்.
கோர்ட் உத்தரவின்படி விடியோ பதிவுடன் ஸ்லாபுகள் பெயர்க் கப்பட்டு சவப்பெட்டி வெளியே எடுக்கப்பட்டது. உள்ளே போர்வை சுற்றிய, நைட்டி அணிந்த எலும்புக் கூடாக இருந்தாள் ஷிகிரா. தடயவியல் நிபுணர்களின் துணையுடன் அது ஷகிராவின் எலும்புக் கூடு தான் என்று நிரூபிக்கப்பட்டது. கொஞ்சம்கூட மனிதாபிமானமே இல்லாமல் நடந்த கொலை என்பதால் சுவாமிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வந்தது. சுவாமி அப்பீல் செய்தார். ஹைகோர்ட்டிலும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். 69 வயதாவதாலும், இதய நோய் இருப்பதாலும், கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கச் சொல்லி கோரினார். மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாறியது. ஆனால், தண்டனையில் குறைப்பு என்பதே கூடாது, சுவாமி தன் கடைசி மூச்சு வரைக்கும் உண்மையான ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண் டும் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.
- வழக்குகள் தொடரும்… 
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

a


நன்றி-தஹிந்து

0 comments: