Thursday, September 03, 2015

ட்விட்டரில் அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டையும், சின்மயி ஃபேஸ்புக்கில் வழங்கிய பதிலடி பதிவும்

அஜித் - விஜய் ரசிகர்களிடையே நடைபெறும் சண்டையில் சிக்கிக் கொண்ட சின்மயி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
ஆவணி அவிட்டம் அன்று நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்பா, மகன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது மகனுக்கு 'தல ஆவணி அவிட்டம்' என்று தெரிவித்தார். அதற்கு ரசிகர் ஒருவர் "தல என்ற வார்த்தை எதற்கு எடுத்தாலும் பயன்படுத்தாதீர்கள். தல என்றால் எங்க அஜித் சார் மட்டுமே" என்று குறிப்பிட்டார்.
மாதவன் வெளியிட்ட ட்வீட்டையும், ரசிகரின் கருத்தையும் வைத்து பலர் கிண்டல் செய்து வந்தார்கள். இதனை சின்மயி தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு 'கடவுளே' என்று குறிப்பிட்டார். அவர் வெளியிட்ட உடனே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவருமே சின்மயியை கடுமையாக திட்டி தீர்க்க ஆரம்பித்தார்கள்.
தொடர்ச்சியான ரசிகர்களின் தொந்தரவைத் தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார் சின்மயி. அப்பதிவில் சின்மயி கூறியிருப்பது:
"சமூக வலைதளங்களை இன்று பிடித்திருக்கும் மிகப்பெரிய நோய் ரசிகர்களுக்குள் நடக்கும் சண்டை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட நடிகருக்கு ரசிகர் அல்லது அவரை பிடிக்காதவர் என்று புரிந்துகொள்ளப்பட்டால், கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் தாக்குதலை எதிர்பார்க்கலாம்.
ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில், தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களின் சார்பாக அவமதிப்பை எதிர்கொள்ள அவர்களது எண்ணற்ற ரசிகர்கள் இருப்பார்கள் (பெரும்பாலும் ஆண் ரசிகர்கள்). தொடர்ந்து ஆபாசமாக வசை பாடி அதற்கு பதிலடி கொடுப்பார்கள்.
எனக்குத் தெரிந்து இந்த நட்சத்திரங்கள் யாருக்கும் இணையத்தில் நடப்பது என்ன என்பது தெரியாது. இதில் வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் அப்படி மோசமாகப் பேசுபவர்கள் பெரும்பாலும் டாக்டர்கள், என்ஜினியர்கள் போல படித்தவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட இளைஞர்கள் கையில் தான் தேசத்தின் எதிர்காலம் இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.
நான் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், "ஒருவரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள். வழிபாடு செய்யாதீர்கள்" என ஒருவர் பேசினார். நாம் எல்லோருமே எதாவது ஒரு விளையாட்டு வீரருக்கோ, நடிகருக்கோ, இசைக் கலைஞருக்கோ, விஞ்ஞானிக்கோ ரசிகராக இருப்போம். ஆனால் அந்த ரசிப்புத் தன்மை எல்லை தாண்டி, வேறொருவரின் ரசிகரை மோசமாகப் பேசும்வரை சென்றால், நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு நாம் மோசமான எடுத்துக்காட்டாகவே இருப்போம்.
உதாரணத்துக்கு - வாட்ஸாப்பில் நகைச்சுவை மீம் ஒன்றை வேடிக்கையாகப் பகிர்ந்தேன். அது எந்த வரம்பையும் மீறாத நகைச்சுவையே. எனது நண்பர்களில் இருந்த அஜித் ரசிகர்கள் சிலர் அதைக் கண்டு சிரித்து, மறந்தும் விட்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் உடனே என்னை வசை பாட ஆரம்பித்தார்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு டாக்டர். திருமணமாகி, பெண் குழந்தை உள்ளவர். தனக்குப் பிடித்த நடிகரை கிண்டல் செய்வதை பொறுக்க முடியாமல், சமூக வலைதளத்தில், ஒரு பெண்ணை ஒழுக்கமற்றவள் என்று தகாத வார்த்தைகளில் ஏசும் அளவுக்கு அவர் எல்லை மீறுகிறார்.
இவர்கள் எதிர்பார்ப்பது என்ன? பிரபலமான ஒருவர், ஒரு நகைச்சுவையைப் பகிர வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட ரசிகர் உண்மையான ரசிகரா என்பதை, அவரது பக்கத்துக்குச் சென்று ஆராய்ந்து விட்டு பிறகு பகிர வேண்டும் என்பதா? நாங்கள் எதாவது சொன்னால் "நீ இதை விளம்பரத்துக்காக செய்கிறாய்" என்ற குற்றச்சாட்டு வேறு.
இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், நான் பாதிக்கப்பட்ட பெண்ணாக உணரவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னைப் போல ஒருவர், "எனக்கு கத்தி ட்ரெய்லர் பிடித்துள்ளது" என ட்வீட் செய்தால் அடுத்த நொடி ஆபாச பின்னூட்டங்களும், வசைகளும் தொடரும். இம்மாதிரியான சம்பவங்களில், பெண்களைப் போல ஆண்களும் ஏசப்படுகிறார்களா என்பது தெரியவில்லை. இதே போல கத்தி படம் பிடித்திருந்தது என்று ட்வீட் செய்த ஆலிஷா அப்துல்லா என்ற வீராங்கனையும் இப்படியான வசைகளை எதிர்கொண்டார். பல ரசிகர்கள் இப்படியான சம்பவங்களை எதிர்கொண்டிருக்கலாம்.
இணையம் சுதந்திரமான தளமாக இருக்க வேண்டும். ஒவ்வொருக்கும் அதில் தங்களது கருத்துகளை பகிர உரிமை இருக்க வேண்டும். அந்த கருத்து மற்றவர்களை காயப்படுத்தினாலும் அதற்கு பதிலாக ஏன் தவறாகப் பேச வேண்டும்?
நமது தலைமுறை தான் இணையத்தின் வீச்சை, பலன்களை அனுபவித்து வருகிறது. நமது எல்லைகளை நாமே வரையறைத்துக் கொண்டு தனிப்பட்ட அளவில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
நமது எதிர்கால சந்ததிக்கு எதை விட்டுச் செல்கிறோம்? நமது தலைமுறை எப்படிப்பட்டது என தெரிந்து கொள்வார்கள்? இதுதான் நாம் எதிர்காலத்தை உருவாக்கும் விதமா? நீங்களே முடிவு செய்யுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையேயான சமூக வலைத்தளப் போர் என்பது தொடர் கதையாகி வருகிறது.

நன்றி - த இந்து

 • MYS  
  ரசம் தேவை. விரசம் ஏனோ?
  Points
  580
  about 6 hours ago
   (0) ·  (0)
   
  • MMohamedfarook  
   தமிழன் என்று சொல்லி தரம் தாழ்ந்து போக வேண்டாம்.பக்கத்து மாநிலத்தில் இது போல் கேவலம் நடப்பதில்லை . .
   Points
   120
   about 6 hours ago
    (4) ·  (0)
    
   • Jafer Sadiq  
    வாழ்த்துக்கள் சின்மயீ, ஆண்களை குற பயப்படும் உலகிலில் சினிமா துறைளிருகிட்டு உண்மையை கூறியதில் வாழ்த்துக்கள். நான் நல்லவன் என்று குரலாம் நான் மட்டும் நல்லவன் என்பது போல்ல எல்லோரும் நினைப்பது தவறு. நமது மீடியா , பேப்பர் ,மதம் ,மொழ்லி எல்லாம் இதை தான் நமக்கு கற்பிக்கிறது. எபோது அடுத்தவர்களை மதம், மொழி , இனம் ,தேசம் கடந்து நாம் மதிக்க படிகிரோமோ அபோதுதான் இந்த நிலை மாறும். நாம் நமது பெருமை பேசியை காலத்தை ஓட்டுகிறோம்.இதனுடைய தாக்கம் தான் இந்த பிரச்சினை . பாவம் சின்மயீ எல்லோரும் வசை படுவார்கள். பெண்கள் என்றல் கற்பு வரை பேச்சு போகும் மனதை திட படுத்தி வைத்துகொள்ளுங்கள் .
    Points
    2660
    about 6 hours ago
     (1) ·  (0)
     
    • Nizar Ahamed Owner at Travel Update - Sam Exim - Vellinila 
     சின்மயி சொல்வது உண்மைதான்.....ரசிகன் எனபது எல்லை மீறி, தான் ரசிப்பவனை ஆராதிக்கும் அபாயத்தில் - இந்தியாவின் வருங்காலங்கள் என்றழைக்கப்படும் படித்தவர்கள் சிக்கிகொண்டிருப்பது பேராபத்துதான் .
     Points
     3550
     about 7 hours ago
      (3) ·  (0)
      
     • BBalu  
      இது மாதிரி கீழ்த்தரமாக எழுதுபவர்களின் போட்டோ மற்றும் குடும்ப பின்னணி விபரங்களையும் சேர்த்து வெளீடவேண்டும்.இவர்கள் psychopathic disorder பாதிக்கப்பட்டவர்கள்.
      about 8 hours ago
       (5) ·  (0)
       
      • கண்ணன்  
       தைரியமாக கருத்து வெளியிடும் சின்மயி போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள் .அவரே கமலஹாசனின் உறவினர் மற்றும் ரசிகர் என்றாலும் (பரமக்குடிக்காரர்தான) ஒரு நாளும் மற்ற சில ரசிகர்கள்போல ரஜினியையோ மற்ற நடிகர்களைப் பற்றியோ தவறாக எழுதியதில்லை நாம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியதிருக்கிறது
       Points
       8725
       about 8 hours ago
        (1) ·  (0)
        
       RBALAKRISHNAN Up Voted
       • RRahul  
        அறிவியலையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் நம்முடைய வளர்சிக்கு பயன்படுத்தாமல் இன்று தவறான வழியிலேயே பெரும்பாலும் பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம் என்பது வேதனையான ஒன்று.
        Points
        310
        about 8 hours ago
         (3) ·  (0)
         
        • Saravanan Arumugam  
         இதில் ஒருவரின் ரசிகர்கள் மிகவும் மோசம், youtube இல் புலி trailer வெளியான அன்று( இரவு 12 மணி) விழித்திருந்து 1 மணி நேரத்தில் 2000 dislike கொடுத்துள்ளனர். இதுவரை 20,000 dislike பெற்ற சாதனை படம் புலி மட்டுமே.
         Points
         285
         about 9 hours ago
          (2) ·  (2)
          
         anand Up Voted
         Vikram · padma Down Voted
         • Ppookkaran  
          விஜய் , அஜீத் என்ற இருவருமே திரை வாழ்வில் அல்லது பொது வாழ்வில் பெரிதாக ஒன்றும் சாதிக்காதவர்கர் அவர்களின் முன்னோடிகளோடு ஒப்பிடும் போது ! மேற்கண்ட இருவரையும் திரையில் பார்க்கும் போதே எரிச்சல் வரும் அளவிற்கு பில்டப் கட்சிகள் அவர்களின் படங்களில் வருகிறது . நாம் அறிவியல் ரீதியாக பெற்ற வசதிகளை , நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறோமா என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் .
          Points
          1235
          about 9 hours ago
           (5) ·  (0)
           
          mani · ganesan · balu · kathir · அந்நியன் Up Voted
          • AVAnbu victor  
           நாம் நம்பும், விரும்பும் ஒரு விஷயத்தை யாராவது எதிர்த்தோ அல்லது ஏற்றுகொள்ளமலோ இருந்தால் அதை இங்கே யாராலும் சகித்து கொள்ள முடியவில்லை. மூடநம்பிக்கைகளை எதிர்த்து பேசியதால் கல்புர்கி கொலை செய்யப்பட்டார். அது மதத்தின் மேல் வெறிகொண்டு இருபவர்களிடம் சகிப்பு தன்மை இல்லாததால் தான். இந்த சண்டை ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. இதை தடுக்காவிட்டால் நாளை இவர்களும் அந்த வழியை பின்பற்றலாம்.
           Points
           1155
           about 9 hours ago
            (1) ·  (0)
            
           • IAidal Antony  
            சின்மயி சகோதரிக்கு நன்றி.சரியான பதிலடி தந்துள்ளிர்கள்
            about 10 hours ago
             (3) ·  (0)
             
            • Sshankar  
             தமிழ் நாட்டை இந்த அதல பாதலதுக்கு கொண்டு சென்று நடிகர்களின் பைத்தியமாகி விட்டது இந்த திராவிட கட்சிகளே.இந்த trend இன்னும் பல தலை முறைகள் வந்தாலும் இப்படியேதான் இருக்கும்.
             about 10 hours ago
              (2) ·  (0)
              
             • PPoongunran  
              வேற வேலை இல்லேன்னா இப்படித்தான் . ரசிகர்களுக்கும் சரி , சின்மயி போன்ற பிரபலங்களுக்கும் சரி , வேறு வேலை இல்லாததினால் தான் இப்படிப்பட்ட அவலங்கள் நாள் தோறும் அரங்கேறுகின்றன .சம்பத்தப்பட்ட நடிகர்கள் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு பிசியாக இருக்கிறார்கள் .வேறு எதுவும் இல்லாதவர்கள் அசிங்கமாக மோதிக்கொள்கிறார்கள் . வேதனை ............ பூங்குன்றன் .
              Points
              340
              about 10 hours ago
               (1) ·  (0)
               
              • TTHIYAGARAJAN  
               கருத்துக்களோ கேலிகளோ, இணையம் மக்களை வெகுசீக்கிரம் சென்றடையும் ஒரு இணைப்பு.. ஆராயப்படமலும் சரியான கோணத்தில் புருநிந்துகொள்ளமலும் இடும் பின்னூட்டம் மூலம் எதிர்வினைகளை சந்திக்க வேண்டிய தர்மசங்கடமும் ஏற்படுகிறது... கண் கெட்ட பிறகுதானே சூரியனை தேடுவோம் நாம்!!(?)
               about 11 hours ago
                (0) ·  (0)
                
               • Mmanjoorrasa  
                தமிழ்நாட்டில் மட்டும் தான் நடிகர்களை கடவுள்களாக நினைக்கும் பைத்தியக்காரர்கள் அதிகம் இருக்கின்றனர்.
                about 11 hours ago
                 (1) ·  (0)
                 
                karthi Up Voted
                • Rraja  
                 விஜய் அஜித் நல்ல நண்பர்கள். தயவுசெய்து சண்டை போடதீங்க pls
                 about 11 hours ago
                  (1) ·  (0)
                  
                 karthi Up Voted
                 • RARajinikanth Arumugam  
                  நன்றாக சொன்னீர்கள் சஹோதரி இவர்கள் எல்லாம் திருந்துவது கடினம் ஏன், சம்பந்தப்பட்ட நடிஹர்களே வந்து சொன்னாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்.
                  about 11 hours ago
                   (1) ·  (0)
                   
                  karthi Up Voted
                  • Rravi  
                   ***** wonderful

                  0 comments: