Showing posts with label AMALAPAUL. Show all posts
Showing posts with label AMALAPAUL. Show all posts

Saturday, July 20, 2019

ஆடை - சினிமா விமர்சனம்

aadai movie માટે છબી પરિણામஆடை படத்தோட டீசர், ட்ரெய்லர் , ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதெல்லாம் பார்த்துட்டு பெரிய லார்டு லபக் தாஸ் மாதிரி நான் ஒரு கதை கற்பனை பண்ணி வெச்சிருந்தேன் .


 அதன் படி ஹீரோயினும் , தோழியும் ஏதோ ஒரு ஐ டி கம் பெனில ஒர்க் பண்றாங்க ., வீக் எண்ட் பார்ட்டில 4 மொள்ளப்பாரி பசங்க மப்புல  இருக்கற மாந்தோப்புக்கிளிகள் 2 பேரையும்  கில்மா பண்ணிடறாங்க . வெகுண்டெழுந்த அந்த 2 பேரும் 4 பேரையும் எப்படி பழி வாங்கறாங்க அப்டிங்கறதுதான் கதைனு யூகிச்சு வெச்சிருந்தேன்


 அது எவ்ளோ கேவலமான கற்பனைனு இயக்குநர்  புரிய வெச்சுட்டார் . கதை வேற


இடைவேளை  வரை மீடியால ஒர்க் பண்ற ஆண்கள் , பெண்கள் , ஜாலி , கலாட்டா , ஷோ ரெடி பண்றது இபடி பொழுது போக்கு அம்சமா போகுது


 இடைவேளைக்குப்பிறகு தான் மெயின் மேட்டர்,. மேட்டர்னதும்   நிமிர்ந்து உக்காராதீங்க , இது ஒரு சமூக விழிப்புணர்வுக்கதை, டீசண்ட்டாதான் காட்சிகள் , நகருது , ஒரு நல்ல  ஓப்பனிங் கிடைக்கனும்கறதுக்காக அமலா பால் கிளாமரை யூஸ் பண்ணிக்கிட்டாங்க , பெரிய தப்பில்லைனு தோணுது ., இதே போல் அனைத்து பிரபல நடிகைகளையும் எல்லா இயக்குநர்களும்   யூஸ் பண்ணா நல்லது  


 ( இப்பவே நம்ம ஆளு க்க அமலா பால்க்கு மென்ஷன் போட்டு போல்டு அட்டெம்ப்ட் மேடம், நட்டு அட்டெம்ப்ட் மேடம், பின்னீட்டீங்க அப்டினு போட்டுத்தாக்கிட்டு இருக்காங்க) 


 இந்தப்படத்துக்குக்கிடைக்கப்போகும்  வரவேற்பைப்பார்த்து எல்லா நாயகிகளும் இதே [போல் ஒரு முற்றும் துறந்த முனியம்மா கதை நடிக்க ஆவலாவாங்க என நம்பறேன்


 ஹீரோயினா அமலா பால் அருமையான் நடிப்பு , ஓப்பனிங் காட்சிகளில்  நண்பர்களுடன் கொட்டம் அடிப்பது போன்ற சீன்களில் ஓவர் ஆக்டிங் எட்டிப்பார்க்கிற்து , வழக்கமா அமலா பால் அப்படி நடிப்பவர் அல்ல ( முன்னாள் கணவர்  இயக்குநர் விஜயை வெறுப்பேற்றவே அப்டி நடிச்சிருக்கலாம்)

 பின் பாதி படம் முழுக்க் அமலா பால்  ராஜ்ஜியம் தான்,  கேமரா மேன் , லைட் பாய்ஸ்களுக்கு கொண்டாட்டமான  படம்


கில்மா சீன்கள் , பிட்டு இன்ன பிற அஜால் குஜால் காட்சிகளை எதிர்பார்த்துப்போனவர்கள் ஏமாற்றம் அடைவார்கள் ( நான் அடையலை )


ஃபிளாஸ்பேக்கில் வரும் அந்த திருப்புமுனை கேரகடர் பொண்ணு அற்புதமான நடிப்பு , வாய்ப்புகள் வரும் 


 ஒளிப்பதிவு அருமை, ஹிந்தில டப் பண்ணா மல்லிகா ஷெராவத் ரெடியா இருப்பார் 


aadai movie માટે છબી પરિણામ

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் ல"PNR ஸ்டேட்டஸ் பாத்து டிக்கெட் கன்பர்ம் ஆகிடுச்சா? னு செக் பண்ற மாதிரி தமிழ் சினிமா உலகத்துல வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட படம் பொட்டி வந்துடுச்சா?லைசென்ஸ் க்ளியர் ஆகிடுச்சா?அப்டி னு பாக்க ஒரு ஆப் வந்தா தேவலை



2 ஓப்பனிங்க் சீன்ல சிந்து சமவெளி புகழ் அமலாபால் 8 கெஜ பட்டுப்புடவை ல வர்றதைப்பாத்துட்டு நெட் தமிழன் மிரண்டுட்டான்,அது"கனவு"சீனாம்,நினைவு சீன்ல ஒரே ஒரு டிராயர் ,ஒரு திருப்பூர் பனியனோட வந்ததும் சமாதானம் ஆகிட்டான்


3  இயக்குநர் ஒரு பெண்ணியவாதியாகவோ ,பெண்கள் முன்னேற்றத்துல அக்கறை உள்ளவாராகவோ இருப்பவர் போல,இதை எப்படி கண்டுபிடிச்சேன்னா நாயகி கேரக்டர் வடிவமைப்பு.பந்தயம் கட்டி பைக்ல 125 கிமீ வேகத்துல போகுது,தம் அடிக்குது,தண்ணி அடிக்குது,அரை குறையா டிரஸ் பண்ணுது,வெரிகுட்


நடுராத்திரி 12 மணிக்கு தனியா சுடுகாட்டுக்குப்போறேன்னு பந்தயம் கட்டுவாங்க.அந்த மாதிரி நாயகி ஒரு பில்டிங்க்ல ஒரு நைட் பூரா ஆடை இல்லாம இருந்து காட்றேன் ஜம்பமா,திமிரா மப்பு ல பந்தயம் கட்டி படற பாடுதான் கதை


5  திமுக தலைவர் க்கு நெருங்கிய நண்பரான வைரமுத்து#metoo பாலியல் பலாத்காரவழக்கில் சிக்கியது குறித்து நேரடியா தாக்கப்பட்டிருக்கிறார்.உடன்பிறப்புகள் பொங்கலையா அவர்"சார்பா?

aadai amala paul  hot માટે છબી પરિણામ
நச் டயலாக்ஸ்


1   டீக்கடை வெச்சிருக்கறவன்தானே னு என்னை இளக்காரமாப்பாக்காதீங்க,நான்"நாளையே சிஎம்மாவோ ,பிஎம்மாவோ ஆக வாய்ப்பிருக்கு !



எந்த டிரஸ்ல நீ அழகா இருப்பே?

டிரஸே போடாம இருந்தாதான் அழகா இருப்பேன்


எஸ் வி சேகர் டிராமா காமெடி டயலாக்கை சுட்டுட்டாங்க

அய்யா இருக்காரா?
மேல படுத்திருக்காரு
நான் அப்றம் போன் பண்றேன் (இது ஒரிஜினல்)
அய்யா எங்கே? மேலே படுத்திருக்காரு
நீ என்ன பண்றே?
அம்மா எங்கே ? கீழே படுத்திருக்காங்க
பணிப்பெண் = விளக்கு பிடிச்ட்டு இருக்கேன்



4  கிடைச்ச சுதந்திரத்தை மிஸ்யூஸ் பண்ணாதீங்க #aadai


5  ஹிஸ்டாரிக்கல்  படமா பார்த்தே?

 நாம பார்க்கறதெல்லாம் சன்னிலியோன் நடிச்ச படங்கள் தான் , ஹிஸ்டரில போய் அழிக்க வேண்டிய வேலை இருக்கும்
\

6   நாம் நியூஸ் படிக்கறது பெரிய விஷயம் இல்லை , நம்மை நியூஸ்ல வர வைக்கனும் #Aadai 


7  டை கட்டி  வாழற வாழ்க்கை வாழாட்டி பரவால்ல , மத்தவங்க  முன் கை கட்டி வாழ்ற வாழ்க்கை ஆகாது எனக்கு  #Aadai 



8      சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு?


 ம்  குடும்பக்கட்டுப்பாடு


9  மயங்கி விழற  மாதிரி நடிச்சு   நக்கல் பண்ணா நாளை நிஜமா மயங்கி விழறவங்களைக்காப்பாத்த யாரும் முன் வர மாட்டாங்க   #Aadai 



10  தப்பு , சரினு நாகரீகம் பார்த்தா வேலைக்கு ஆகாது

aadai amala paul  hot માટે છબી પરિણામ








நெட் வந்த பின்பு பிட் படங்களின் ஆதிக்கமும் ,அதற்கான மவுசும் குறைந்தது.கேரளா கோட்டயம் அபிலாஷ் தியேட்டர் 37 பேர் /540 சீட்ஸ்
ஆடை FDFS


a
சபாஷ் இயக்குநர்


1  இடைவேளைக்குப்பின் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நாயகி முதல் பாவம் அபிலாஷா ரேஞ்சில் இருந்தாலும் ம்காட்சிகள் கண்ணியம்


2   பலரது யூகங்களுக்கு மாறாக திரைக்கதை அமைத்தது


 3  சினி ஃபீல்டில் இருந்தாலும் தைரியமாக திமுக பிரமுகர் வைரமுத்து வின்  வண்டவாளங்களை அம்பலப்படுத்தியது


4    போஸ்டர்  டிசைன்   மார்க்கெட்டிங் , விளம்பரங்கள் என படத்துக்கு நல்ல ஓப்பனிங் கொண்டு வந்தது

  லாஜிக் சொதப்பல்கள்


1  லாஜிக் மிஸ்டேக் 1− பிரபலமான ஒரு சேனல்ல ரெகுலரா நியூஸ் வாசிக்கற பொண்ணு திடீர்னு லீவ் போட்டுட்டா ஆல்ட்டர்நேட்டிவா வேற அரேஞ்ச்மெண்ட்பண்ணி வெச்சுக்க மாட்டாங்களா? அப்டியே பதர்றாரு? எல்லா சேனல்கள்லயும் 3 ் பேரு இருப்பாங்களே?


2    கம்பெனியை காலி பண்றவங்க ஒரே நைட்ல அப்டி துடைச்சு எடுத்துட்டுப்போவாங்களா? கொஞ்சம் கொஞ்சமாதானே காலி பண்ணூவாங்க , அதுவும் அவ்ளோ பெரிய பில்டிங்கை காலி பண்ண ஒரு மாசம் ஆகும்


3  நாயகி நிர்வாணமா இருக்கு , ஃபோன் அவுட் கோயிங் போகலை ஒரு ஹோட்டல்ல  இருந்து வர்ற விளம்பர மார்க்கெட்டிங் கால் ல 5 சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணீ  வாட்டசாட்டமான ஆள் வேணாம், சின்னப்பையுனா  அனுப்புங்க அப்டிங்குதே அதுக்குப்பதிலா   அவரது ஹைட்டுக்கு தகுந்த யாரோ ஆள் ப்வந்தா அவன் டி சர்ட்டை யூஸ் பண்ணீக்கலாமே?


4  தொடர்ந்து 36 மணி நேரமா சாப்பிடலை , தண்ணீர் குடிக்கலை அதுக்கான சோர்வோ அறிகுறியோ நாயகி கிட்டே காணலையே? செழுமையாத்தானே இருக்கு ?


5   நாயகியோட அ ம்மா தொடர்ந்து 18 தடவை கால் பண்ணியும் நாயகி எடுக்கலை, அதுக்குப்பின் 20 மணி நேரம் அம் மா  ஃபோனே பண்ணாதது ஏன்? ஃபோன் லொக்கேஷனைஒ வெச்சு இன்ன இடத்துல இருக்கார்னு போலீஸ் கண்டு பிடிக்க ட்ரை பண்ணலையே? அது ஏன்? 


6   டெலிவரி பாய் டெட் பாடினு நினைச்சு எடுத்துட்டுபோபோகும் போலீஸ் கூட போலீஸ் நாய் கூட்டிட்டு வர்லையே அது ஏன்? 



ஆடை− டி.வி .பிராங்க் ஷோக்கள்,மக்களை மடையர்கள்"ஆக்கும் ஷோக்களை"நையாண்டி செய்திருக்கும்"கதை.நல்ல கரு.ஆனா"திரைக்கதைல தேவையற்ற கிளாமர்,மார்க்கெட்டிங்க்காக,ஆபாசம் எதுவும் இல்லை என்றாலும்.. விகடன் 41 , ரேட்டிங்க் 2.5 / 5

Sunday, March 09, 2014

நிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்

 
ஹீரோ நேர்மையான ,நாணயமான ஒரு சராசரி ஆள்.வேலை எதும் இல்லை.படிச்ச பட்டதாரி.அவர் எவ்ளவ் தூரத்துக்கு அப்பாவின்னா வீட்ல பார்த்த பொண்ணு கிட்டேக்கூட ரொமான்ட்டிக்காப்பேசாம நாட்டில் நடக்கும் அநியாயம் பற்றி பொங்கற அளவு அக்மார்க் யோக்கியன். 

அந்நியன் படத்தில் வர்ற மாதிரி டிராபிக்போலீஸ் கூட ஏற்பட்ட ஒரு தகராறு ல கோர்ட் வரை போக வேண்டியது ஆகிடுது.எல்லா பேப்பர்சும் சரியா வெச்சிருந்தும் அவரை FINE கட்டச்சொல்றாங்கஜட்ஜ்க்கே லஞ்சம் தரச்சொல்றாங்க.நம்மாளு அசரலையே?

டெல்லி X CM. அர் கேஜ் மாதிரி கோர்ட் ல பொங்கி பட்டாஸைக்கிளப்பறார். இதனால பாதிக்கப்பட்டஅரசு அதிகாரிகள் அவரை நாயடி பேயடி அடிச்சு ரோட்டோரமாப்போட்றாங்க.அதுக்கும் நம்மாள் அசரலை.ஊழல் அதிகாரிகளை மாட்டிவிட ஒரு திட்டம் போடறார்

தெஹல்கா மாதிரி அவர் பிளான் பண்ணி வீடியோ ஆதாரத்தோட 147 பேரை மாட்டி விடறாரு.லைவ் டெலிகாஸ்ட் ல இது டிவி ல ஓடி மக்கள் ஆதரவுஅலையுடன்ஹீரோ பின்னிப்பெடல் எடுக்கறார்.இடைவேளை.இதுவரை காட்சிக்கு காட்சி வசனத்துக்காகவே கை தட்டல் வாங்கிவந்த திரைக்கதை இப்போ தடுமாறுது

 

ஆனானப்பட்ட ஷங்கரே முதல்வன் திரைக்கதைல பின் பாதில தடுமாறும்பொது சமுத்திரக்கனி எம்மாத்திரம் ? எப்படி கதையைக்கொண்டு போகனு யோசிச்சு மசாலா சேர்த்து  டூயல் ரோல் கொண்டாந்து  அட்டகாசமான திரைக்கதையை சாதாக்கதை ஆக்கி ஒரு வழியா முடிக்கறார். படத்தில்  முதல்  ஹீரோ வசனகர்த்தா சமுத்திரக்க்கனிதான் . ஆரவாரமான வரவேற்பு . படத்தில் சாட்டையடி வசனங்கள் முதல் பாதியில்  64 . பின் பாதியில் 12 .அவரது ஆதங்கங்கள் , கோபங்கள் எல்லாம் அனுபவிச்சு எழுதியவை . ஒண்ணு கூட சினிவுக்காக எழு துனது  இல்லை. அவரது சமூக  சாடல் , கோபம் அதை வெளிப்படுத்திய விதம் அனைத்துக்கும் ஒரு ராயல் சல்யூட் . இந்த ஆண்டின் சிறந்த வசனகர்த்தா  இவர் தான்

ஹீரோவா ஜெயம் ரவி . இது இவரது கேரியரில்  மிக முக்கியமான படம் . சந்தோஷ் சுப்ரமணியத்துல செண்ட்டிமெண்ட்டா மனசை அள்ளினவர் இதுல அந்நியன் டைப்ல  கோபம் உள்ள இளைஞனா கலக்கி இருக்கார் . இடை வேளை வரை இவர் ராஜ்ஜியம்  தான் . பின் பாதியில்  வரும் இன்னொரு ரவி சொதப்பல் கேரக்டரைசேஷன். ம் ம் .மசாலாப்படம் தெலுங்கு டப்பிங்க் படம் பார்த்தது போல். படத்தில் இவர் முன் பாதியில் அணிந்து வரும் உடைகள் ஒரு மார்க்ட்டிங் எக்சிக்யூட்டிவ் போல் அபாரம்

ஹீரோயின் அமலா பால் . சூடு ஆறிய பால் மேல் படர்ந்திருக்கும் ஆடை நிறம் போல , வெங்காய சருகின் மென்மை போல  அசாதாரண சோக முகம் . துறுதுறுப்பில் செயற்கைத்தன்மை . காதல் வசப்படும் காட்சியில் யதார்த்தம் இல்லை .  டூயட் காட்சியில் தமிழன் எதிர்பார்க்கும் கிளாமர் இல்லை. என்னமோ போடா மாதவா 

சூரி இதில்  மொக்கையைக்குறைத்து கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகி அப்ளாஸ் அள்ளறார் . குட்

நீயா நானா கோபினாத்

கோபிநாத் சைக்கிள் கேப்பில் கெடா வெட்றார். அசால்ட்டான நடிப்பு, கேரக்டர் அப்படி .

சரத் குமார் கெஸ்ட்  ரோல்  . குட் 1 . படத்தில் காமெடி வில்லனாக வரும் கு ஞான சம்பந்தம் பின்னிப்பெடல் எடுக்கிறார். இவரது டைமிங்க் சென்ஸ் பிரமாதமாகப்பேசப்படும் 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. பர பர என செல்லும்  முன் பாதி திரைக்கதை ஒரு முழுப்படம் பார்த்த திருப்தி தருவது.அந்நியன் , ரமணா ,  சிட்டிசன் என பல படங்களை நினைவு படுத்தினாலும் இது ஒரு முக்கியமான படம் தான் 

2. வசனகர்த்தா வின் அட்டகாசமான வசனங்கள் கலக்கல் . ஆடியன்ஸ் கை தட்டலில் பாதி வசனங்கள் புரியவே இல்லை. 

3 ஹீரோயினை அளவாகப்பயன் படுத்தியது . காமெடி டிராக் எதுவும் வைத்து மொக்கை போடாதது 


இயக்குநரிடம்  சில  கேள்விகள்  

1. ஹீரோவை  ஓப்பனிங்க்கில் அப்படி அடித்துப்போட்டு குற்றுயிரும் குலை உயிருமாக இருப்பவர் அடுத்த காட்சியிலேயே நெத்தில ஒரே ஒரு பத்து மட்டும் போட்டுட்டு சாதாவா இருப்பது. குருதிப்புனல் க்ளைமாக்ஸ் கமல் மாதிரி  இருப்பவர் அடுத்த சீனிலேயே மகாநதி கமல் ஆனது எப்படி ?

2 சரத் குமார் -ன் பாத்திரப்படைப்பு  குழப்பமானது . அவர்  ஹீரோவுக்கு  ஓப்பனிங்கிலிருந்தே உதவுவது போல் காட்சி அமைத்திருந்தால் அப்ளாஸ்  அள்ளி இருக்கும் 
3  பின் பாதியில்  வில்லன்கள் போடும் திட்டங்கள் எல்லாம் மகா சொதப்பல்கள்.அவரது  முகச்சாயலில் ஒருவரைக்கொண்டு வந்து கோர்ட்டில் நிறுத்தி குழப்பலாம் என்பது எல்லாம் எம் ஜி ஆர் கால ஐடியா . மரபணு சோதனை எல்லாம் இருக்கே?

4 இன்னொரு ஜெயம் ரவி  க்லைமாக்சில் திடீர் என பல்டி அடிப்பது மகா செயற்கை . அவர் வில்லன்களிடம் கத்திக்குத்து வாங்குவது நாடகத்தனம் 

5  ஆந்திரா ரவி வந்த பின் அவருடனான காம்பினேஷன் காட்சியில்  இந்த தமிழ்  ரவி திரையில் அவரைப்பார்த்த்

  பார்த்த்து பிரமித்துக்கொண்டே இருப்பது  வசூல் ராஜா எம் பி பிஎஸ்  படத்தில் சினேகா கமலைப்பார்த்து பிரமிப்பது போல் கதையை பாதிக்கிறது 


a

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்

        5 போலீசை ,கோர்ட்டை ,சட்டத்தை டார் டார் ஆக்க்கிழிக்கும் சமுத்திரக்கனியின் சாட்டை அடி வசனங்கள்.#,நி நில்

மனம் கவர்ந்த வசனங்கள்

  • நம்ம நாட்ல உண்மையை உண்மை னு நிரூபிக்க  20 வருசம் ஆகும்
  •  
  •  
  • மனம் குரங்கு மாதிரி.ஈசியா மாறிடும்.ஆனா நான் மாறமாட்டேன் 
  •  
  •  
  • பெண்ணை விட ஆணை பலமாகப்படைச்சதே அவளை அவன் பாதுகாப்பா பாத்துக்கத்தான்.பலவந்தப்படுத்த இல்ல 
  •  
  •  
  • இலங்கைல கொத்து கொத்தா செத்தாங்க.இங்கே நாம ஐபிஎல் மேட்ச் பாத்துட்டு இருந்தோம்.அங்கே நடந்தது இங்கே நடக்க எத்தனை நாள் ஆகும்
  •  
  •  
  • எல்லாரும் கோபத்தை உள்ளுக்குள்ளே வெச்சுக்கிட்டிருக்காங்க.வெளில காட்டனும்
  •  
  •  
  • பரபரரப்பான நியூசை இன்னொரு பர பரப்பால கவர் பண்ணுவாங்க.நம்மை மட்டும் எப்பவுமே ஷாக்கிங்காவே வெச்சிருப்பாங்க
  •  
  •  
  • ஆட்சில இருக்கறவனுக்கு அப்போதைக்கு அவன் தப்பிக்கனும்.அதுக்காக எது வேணாலும் செய்வான்
  •  
  •  
  • எதுக்காக நேர்மையா இருக்கனும்?.எல்லாரும் தப்பாதான் இருக்காங்க.அப்போ நாம ரொம்ப தப்பா இருக்கனு
  •  
  •  
  • ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் நேர்மையான ,கோபமான ஒரு நல்லவன் இருப்பான்.தன் நாணயம் மதிக்கப்படலைனு ஆதங்கம் இருக்கும்
  •  
  •  
  • இந்த நாட்டை ஆள்வது அரசியல்வாதிங்க இல்லை.அரசு அதிகாரிகள் தான்
  •  
  •  
  • ஆபத்து வரும்போது மட்டும் தான்.விலங்குகள் பயப்படும்.மனுசன் மட்டும் தான் எதுக்கெடுத்தாலும் பயப்படறான்
  •  
  •  
  • போலிக்கு மட்டும் தான் இந்த நாட்ல போலி இன்னும் வர்லை
  •  
  •  
  • நீ இந்த சமூகத்துக்கு தகுதி இல்லாதவன். ஏன் ?  நல்லவனுக்கு இங்கே வேலை இல்லை
  •  
  •  
  • உன்னை மாதிரி வாழ்றது ரொம்ப கஷ்டம்.அட்லீஸ்ட் உன் கூடவாவது வாழலாம்னு முடிவு பண்ணிட்டேன்
  •  
  •  
  • இந்தக்காலத்துப்பொண்ணுங்களுக்கு நல்லவன் தேவை இல்லை.வல்லவன் தான் வேணும்
  •  
  •  
  •  
ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்: 42
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று
ரேட்டிங் : 2.75 / 5
சி பி கமெண்ட் - நிமிர்ந்து நில் = நச் வசனம் முன் பாதி திரைக்கதை அருமை.பின் பாதி சொதப்பல் மாமூல் மசாலா.அனைவரும் பார்க்கவேண்டிய நல்ல  படம்.

சென்னிமலை அண்ணமார் -ல் நேத்து நைட் செகண்ட் ஷோ பார்த்தேன்

Wednesday, February 22, 2012

காதல் ரசம் சொட்டும், காதல் சாம்பார் கொட்டும் வசனங்கள் இன் காதலில் சொதப்புவது எப்படி?

1.  நான் உன்னை சின்ன வயசுல பார்த்தேன், நீ அப்போ ஷப்பினெஸா இருந்தே.

இப்போ?

 ஹி ஹி . ஷப்பினெஸ் தான் அழகு... 


-------------------------------------

2. பாசத்துல,அன்புல பெண்கள் மாதிரி தீவிரம் காட்றது யாருமே இல்லை.. 

---------------------------------

3.  ஃபுல் வீடும் எங்கம்மா கண்ட்ரோல்ல தான்.. எங்கப்பா உட்பட.. 

----------------------

4.  என் லைஃப்ல சேலஞ்சிங்க்கா எதுவுமே இல்லை. அதனால தான் ஃபிகர் மேட்டர்லயாவது சேலஞ்சிங்கா ஏதாவது செய்யலாம்னு முடிவெடுத்தேன்..

------------------------------

5. மாப்ளே, உனக்கும், உன் ஆளுக்கும் ஃபைட்னு கேள்விப்பட்டேனே..?

ஆமா, அதுக்கென்ன இப்போ?

அவ நெம்பர் வேணும் ஹி ஹி 


-----------------------------------

6.  திரும்ப திரும்ப மனசை ஹர்ட் பண்ணி அப்புறம் சாரி கேட்கறே.. சும்மா சாரி கேட்டா மட்டும் மனசை புண் படுத்துனது சரி ஆகிடுமா?

--------------------------------------

7.  ஏன் என்னை விட்டு விலகறே?

நீ என்னை சந்தோஷமா வெச்சுக்குவேங்கற நம்பிகை எனக்கு போயிடுச்சு.. சாரி.

---------------------------------------------

8.  பொண்ணுங்க பெயிண்ட்டிங்க் மாதிரி.. மோனலிஸா ஓவியத்தை  ரூம்ல எங்கே நின்னு பார்த்தாலும் நம்மளையே பார்க்கற மாதிரி தெரியும். அது மாதிரிதான் பொண்ணுங்க யாரை பார்த்தாலும் நம்மளை பார்க்கறதா நாமளே நினைச்சுக்கறோம்.. 

--------------------------------------------------

9.  ஏன் பொண்ணுங்களை பற்றி நெகடிவ்வாவே பேசறே.?

 பாசிட்டிவ்வா பேசற அளவு எதுவுமே அவங்க சொல்லலை, நடந்துக்கலை.. 

-------------------------------

10.  இப்போவெல்லாம் பொண்ணுங்களுக்கு நல்ல பசங்களை பிடிக்கவே மாட்டேங்குது..அவங்க மனசை கவர்றவனுங்க எல்லாம் பொறுக்கிங்க, ரவுடிங்க, திருடனுங்க,மொள்ளமாரிங்க தான்

--------------------------------


http://www.tamilyouthcafe.com/wp-content/uploads/2012/02/Amala-Paul-hot-Bezawada-movie.jpg

11.  காதல்ல முதல் முயற்சி பெரும்பாலான ஆட்களுக்கு சொதப்பல்லதான் முடியுது.. 

-----------------------------------


12. ‘இந்தக்காலத்தில எவன் உண்மையா லவ் பண்ணுறான். அப்பிடி எவனாச்சும் பண்ணினா அவன் பைத்தியமா தான் இருக்கணும்’

--------------------------------------

 13.  ஏதோ கேக்கனும்னு சொல்லிட்டு இருந்தே.. என் நெம்பர் சொன்ன பிறகு அந்த மேட்டரை மறந்துட்டியா?

 ஹி ஹி நான் பிட்டை போட்டதே உன் கிட்டே நெம்பர் வாங்கத்தான் ஹி ஹி

 அடப்பாவி

---------------------------------------------

14.  டாடி.. - டேய்.. உன் ஃபேஸ் புக் குக்கு ரெக்குவஸ்ட் அனுப்பி இருக்கேன், அக்செப்ட் பண்ணு.. 

 அய்யோ டாடி.. அங்கே யார் உங்களை போகச்சொன்னது?


-------------------------------------------------

15.  இந்த வீட்ல யார் ஆம்பளை? நீயா? நானா? 

பொண்டாட்டியை யார் சந்தோஷமா வெச்சிருக்காங்களோ அவன் தான் ஆம்பள.. 

-----------------------------------------------------

16. சாரி.. டியர்.. ஐ லவ் யூ சோ மச். 

 இதை சொல்றதுக்கு இவ்வளவு லேட்டாடா?

----------------------------

17. இங்கே என்னடா பண்ணிட்டு இருக்கே? 

 ஹி ஹி சிறுத்தை மான் வேட்டைக்கு போறதுக்கு முன்னால பதுங்குமே அது மாதிரி லவ்வை சொல்றதுக்கு முன்னே பம்பிட்டு இருக்கேன் ஹி ஹி 

----------------------------------

18.  அவ எங்கெடா போறா.?

 நம்ம காலேஜ் லைபரரிக்கு.. அதான் ஃபாலோ பண்ணிட்டு போறேன்.. 

 அட!!! நம்ம காலேஜ்ல லைப்ரரி எல்லாம் இருக்கா?

-----------------------------

19.  நான் ஆல்ரெடி எல்லா புக்ஸும் எடுத்து படிச்சுட்டேன் மேடம்.. இந்தாங்க நீங்க படிங்க, எடுத்துட்டு போங்க.. உங்க லைப்ரரி கார்டு கொண்டு வர்லைன்னா என்ன? என்னுதுல இருந்து எடுத்துட்டு போங்க.. 

 இதுல ஒரு சைன் பண்ணுங்க.. 

 எதுக்கு?

 லைப்ரரில முதல் முதலா புக் எடுக்கறப்ப சைன் பண்னனும்.. 

--------------------------------------

20.  அவ என்னை அண்ணான்னு கூப்பிட்டாடா..

அடப்பாவி. தங்கச்சியையா லவ் பண்றே? ராஸ்கல்..

--------------------------------



21.  பாசத்தையும் சரி, வெறுப்பையும் சரி, பொண்ணுங்க காட்ற அளவு பசங்களால காட்டமுடியாது.. 

-----------------------

22.  அம்மா, அப்பாவையும் இந்த ஃபங்க்‌ஷனுக்கு கூப்பிடலாம்மா..

எதுக்கு?

ஃபேமிலி ஃபங்கஷனுக்கு ஃபேமிலி மெம்பரை கூப்பிடறது தப்பில்லையே? அவரும் நம்ம ஃபேமில ஒருத்தர் தானே?

-----------------------------------------


23. என்னண்ணே. கிளம்பறீங்களா? உன் ஆள் வந்ததாலா?

ச்சே ச்சே. கிளம்பல,.. சேர்ல நல்லா உக்காந்தேன் ஹி ஹி 

-----------------------------

24. நீ மட்டும் எபப்டி கரெக்ட் பண்ணுனே அவளை?

 லவ்ங்கறது மின்னல் மாதிரிடா மாப்ளை. டகார்னு மின்னும்போதே அதை பார்த்துடனும். 

----------------------------------

.25.  கேர்ள் - எனக்கு 5 பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க.. 

 என்னமோ நாய்க்குட்டி வெச்சிருக்கற மாதிரி சொல்றீங்க? 

-----------------------------------

26.  அவன் ஏன் சிரிக்கறான்? நம்மளை பார்த்தா?

 ச்சே ச்சே அவன் காமெடி டிராமா ஒண்ணு இங்கிலீஷ்ல பார்த்தான், அதுல வந்த ஜோக்ஸ் இப்போதான் புரிஞ்சுதாம் ஹி ஹி 

--------------------------------------

27.  வெரிகுட். எப்பவும் இதே மாதிரி ஃபிரண்ட்ஸாவே இருக்கனும்

 ஓக்கே அங்கிள்

 பை த வே , நானும், ஆண்ட்டியும் கூட காலேஜ் படிக்கறப்ப ஃபிரண்ட்ஸா தான் முதல்ல இருந்தோம் ஹி ஹி 

----------------------------------------

28.  அவ போனா போறா விடறா மச்சான், அடுத்த ஃபிகரை கரெக்ட் பண்ணு.. 

 டேய்.. முதல் காதல்ல எப்படி சொதப்புனேன்னே தெரியல. கண்டு பிடிக்க முடியல.. அதுக்குள்ள அடுத்த காதலா?

--------------------------------------------

29/.  YOU CANT CONTINUE YOUR LIFE WITH OUT ME... 

 YOU HAVE NO LIFE

-------------------------------------

30.  இவ லைஃப்ல எனக்குத்தெரியாம இன்னும் எத்தனை பசங்க இருக்காங்களோ?

-----------------------------


http://2.bp.blogspot.com/-U0QmM7dvTCY/TykoBPjyM0I/AAAAAAAAg6w/VnjJInXHYtU/s1600/gnanamuthu+com.png

31.  உங்க பாட்டி ஃபேஸ்புக்ல இருக்காங்களா? அதுவும் தமனா ஃபோட்டோவை டி பி யா வெச்சுட்டு.? என்னால நம்பவே முடியல/... 

 என்னது? தமனவா? போன வாரம் த்ரிஷா ஃபோட்டோவை வெச்சிருந்தாங்க? 

---------------------------------

32.  வயசான பாட்டிக்கு எதுக்கு தமனா ஃபோட்டோ டி பி?

 இந்தக்காலத்து பொண்ணுங்க மட்டும் யோக்கியமா? மொக்கை ஃபிகருங்க எல்லாம் அழகழகான நடிகைங்க ஃபோட்டோவை டி பில வெச்சு ஏமாத்துதுங்க


-------------------------------

. 33.  பொண்ணுங்க எதையும் மனசுல வெச்சுக்க மாட்டாங்க, பசங்க யோசிச்சு கேட்கலாமா? வேணாமா?ன்னு நினைச்சுட்டு இருக்கறப்பவே பொண்ணுங்க கேட்டு முடிச்சுடுவாங்க.


----------------------------------------------

34.  அம்மா, விஷயம் சின்ன பிரச்சனையா இருக்கறப்பவே அவர் கிட்டே நீ பேசித்தீர்த்திருக்கலாம்.. 

 ஆனா அவர் பேசவே மாட்டாரே?

--------------------------------------

35.  டியர்.. என் கிட்டே எதையும் இனிமே மறைக்க மாட்டேன், ஓப்பனா உண்மையை சொல்லிடுவேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணுங்க/..

ஓக்கே பிராமிஸ்..

 நான் போட்டிருக்கற இந்த புது டிரஸ் எப்படி இருக்கு?

 கேவலமா.. 

 பளார்.. 

--------------------------------

36.  நாங்க மனசுல என்ன நினைக்கறோம்னு உங்களுக்கு எப்படி தெரியும்?


 அது தெரியாம தாண்டி பசங்க எல்லாம் அலைஞ்சுட்டு இருக்கோம்.. ?

------------------------------------

37.  உங்களுக்குள்ளே எப்படி பிரிவு வந்தது>?

 சிம்ப்பிள், நான் பையன் மாதிரி நடந்துக்கிட்டேன், அவ பொண்ணு மாதிரி நடந்துக்கிட்டா.. 

------------------------------------

38.  இவ எல்லார் கிட்டேயும் ஈசியா, ஃபிரண்ட்லியா பழகுவா மச்சி. வேணூம்னா இவளோட முன்னாள் ஆள் இவன் கிட்டே கேட்டுப்பாரேன் ஹி ஹி 

---------------------------------

39.  நீ அவலை பார்க்க ட்ரை பண்னலையா? 

ச்சே ச்சே அவ எனக்கு அக்கா மாதிரி.. 

 அப்போ  அவ அழகா இல்லையா? ஹி ஹி 

---------------------------

40. அவளைப்[பற்றி பேசுனாலே இவனுக்கு கோபம் வருதே ஏன்?

மோசம் பண்ணிட்டேன்.. பிரேக் அப்.... 

-------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirkvv4cVqCb8EF-CvNRWI7XpIuc-KrP9PtCeRC9-OjTxMuDP1B6uqCvItSwFvtzY2LnMUgRd08Xb2naiCDsY-sKjQ5Q_mElUheZ1IQVbHNhdlqGZMKNfhrIimBIPzapAlghyphenhyphen2vjl0kIYw/s1600/imagesccvcv.jpg

41.  பீச் எல்லாம் எப்படி இருந்தது?

 ம். பீச் மதிரி.. நானே கடுப்புல இருக்கேன் ., 

----------------------------------

42.  நாம தேடிப்பிடிச்சு லவ் பண்றதே பெருசு.. மறுபடியும் ரிஜக்ட் பண்னா எப்படி?


-----------------------------------

43. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியாது


---------------------------------------

44. மறக்கனும்னு முடிவு செஞ்சாத்தானே உன்னை மறக்க , நான் அப்படி மறக்கனும்னு நினைக்கவே இல்லையே?

----------------------------------------

45. லவ் பண்றது ஏன் இவ்ளவ் கஷ்டமா இருக்கு?

தெரில, காதல்ல சொதப்பறதுதான் ட்ரெயினிங்க் போல. :(

---------------------------

46. ஒரு பொண்ணு கேள்வி கேட்கும்போது உண்மையை தான் சொல்லணும்ன்னு அவசியம் இல்லை. அவங்க என்ன பதில் எதிர்பார்க்குறாங்களோ அதை சொன்னாலே போதும்

------------------------------------------

47. ஆம்பளைங்களால அரை மணி நேரம் எதைப்பற்றியும் யோசிக்காம சும்மா இருக்க முடியும், ஆனா பொண்ணுங்களால எதைப்பற்றியும் யோசிக்காம  ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க முடியாது 


----------------------------------------

Tuesday, January 17, 2012

பட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்

 http://www.hindu.com/cp/2010/04/02/images/2010040250030102.jpgவசனகர்த்தா பிருந்தா சாரதியின் கவனம் ஈர்த்த இடங்கள்


1. அப்பா அடிச்சா திருப்பி அடிக்க முடியுமா? அதான் வாங்கிட்டேனே? அடி குடுக்கறதுக்கும், வாங்கறதுக்கும் பயப்படக்கூடாது..

2.  வெளில ஒருத்தனை தட்டிட்டேன்..

தட்டிட்டியா? என்ன? என்னை மாதிரியே பேசறே?

3.  உங்கப்பா இறந்துட்டாரு.. 

ட்ரான்ஸ்ஃபர் கேட்டிருந்தேன், சீக்கிரம் கிடைச்சிடும்னு சொன்னாரு.. இந்த டிரான்ஸ்ஃபர் தானா?

4.  அப்பா போலீஸ், தாத்தா போலீஸ் குடும்ப பாரம்பரியம் விட்டுப்போயிடக்கூடாதுன்னு நினைக்கறாங்க போல.. ( கலைஞர் அட்டாக்கிங்க்?)

5.  நீ ஒரு பயந்த ஆள்.. நீ போலீஸ். எல்லாரும் உன்னை பார்த்துத்தான் பயப்படனும்.. 

6. ஹலோ..  என்ன பண்றே?

படம் பார்த்துட்டு இருக்கேன்.. நீ?

சிலருக்கு படம் காட்டிட்டு இருக்கேன்..

7. ஆர்யா-  ஒண்ணும் பயப்படாத.. நான் இருக்கேன்..

மாதவன் - நீ இருப்பே.. நான் இருப்பேனா? 

( ஆனந்த விகடன் ஜோக் ரிட்டர்ன் பை வி சாரதி டேச்சு டாக்டர் ஜோக்)

8.  பெரிய பெரிய தப்பு செய்யறவங்களை எல்லாம் விட்டுட்டு தப்பு (மேளம்) அடிக்கற எங்களை விரட்றீங்களே? எங்களை தப்பு சொல்றீங்களே?

9.  போட்டுட்டுப்போன காக்கிச்சட்டை கசங்காமலேயே காரியத்தை சாதிச்சுட்டான்யா.. 

10.  அண்ணே, பேசாம நாம 2 பேரும் நாடோடி மன்னன் எம் ஜி ஆர்  மாதிரி ஒரே சாயல்ல பிறந்திருக்கலாம்..



http://g.ahan.in/tamil/Vettai%20Movie%20Still/Vettai%20Movie%20(27).jpg
11.  தப்பு செய்யறவனை திரு தண்டிச்சா என்ன? குரு தண்டிச்சா என்ன?

12.. ஆள் மாறாட்டம் செஞ்ச மேட்டர் வெளில தெரிஞ்சா  நானே உன்னை அரெஸ்ட் பண்ண வேண்டி வரும்..

அப்படி சொல்லாதே, நாம 2 பேருமே ஒரே ஜெயில்ல ஒரே செல்லுல.. ஹி ஹி

13.  எனக்கும் அதே ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பர் தான் வேணும்..

மிஸ்.. விட்டுக்குடுங்களேன்

முடியாது

சரி.. நெம்பர் 1516 கூட்டுத்தொகை 13.. பேய் நெம்பர்.. அதனால நானே அதை ரிஜக்ட் பண்றேன்..

14.  சார்... ஏன் பொண்ணு வேணாம்னு சொல்றீங்க? கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இல்லையா? ஸ்டேஷன்ல ஏதாவது பொம்பளை போலீஸை கரெக்ட் பண்ணிட்டீங்களா?

15.  மாதவன் - பொண்ணு பார்க்க நான் போகனுமா? எனக்கு வெட்கமா இருக்கு,.. எனக்குப்பதிலா  நீ போயேன்..

அடப்பாவி.. இந்த வேலையும் நான் தான் செய்யனுமா?

16.  ஹீரோயின் - அவனவன் பொண்ணு பார்த்துட்டு போனாலே 1008 சால்ஜாப்பு சொல்வானுங்க.. இந்த லட்சணத்துல சப்ஸ்டிடியூட்டா மாப்ளையோட தம்பி பொண்ணு பார்க்க வந்திருக்கானா? விளங்கிடும்..

17.  வெளில ஆள் தோற்றத்தை வெச்சுப்பார்த்தப்ப வேற மாதிரி இருக்காங்க.. உள்ளே ஆள் வேற மாதிரி குணம்..

18.  எங்கக்காவை உங்கண்ணன் சார்பா பொண்ணு பார்த்துட்டு போய் ஓக்கே சொன்னதுக்கு தாங்க்ஸ்..

ஆர்யா - நானும் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லிக்கறேன்

எதுக்கு?

ஹி ஹி அதுக்கெல்லாம் காரணம் சொல்ல முடியாது ( அதானே கண்ணாடி இருக்கறது தெரியாம அமலாபால் ட்ர்க்கி டவலை கழட்னதை ஆர்யா ஓ சி ல சீன் பார்த்துட்டாரே.. )

19.  மாதவன் - டேய்.. நீ எனக்கு மட்டும் பொண்ணு பார்த்த மாதிரி தெரியலையே?.. நீயும் ஒண்ணை கரெக்ட் பண்ணிட்டே போல?

20.  லட்டு மாதிரி இருக்கு

அமலா பால் - கடிச்சுக்கோ



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEje3lsHBtppmtC1dCiW0AvZ0s-Kdyq_LmRPcnNeHre43K5OnqfDfb9xz4er-ddgC3NE7aldhYx3-175ajEMBi3rGbLN7RR683VJnxzSbsgC5SeJttyJe5_hNIdNcfppqfHtFWaB0xsOmEag/s320/sameera-amala-in-vettai-movie-stills-1.jpg
21.  உள்ளே முதல் இரவில் மாதவன் - சமீரா , வெளியே ஆர்யா அமலா பால் ஏதோ ஒரு பாத்திரத்தை தட்டி விட அந்த சத்தம் கேட்டு ஒரு பாட்டி

மாப்ள முதல் இரவை தட புடலா நடத்தறார் போல..

22. ஆர்யா - நாம இவ்ளோ க்ளோஸா இருந்ததுக்கு அந்த பாட்டிக்கு தான் தாங்க்ஸ் சொல்லனும்..

23.  ஃபோனில் அம்மா - அங்கே என்ன பண்ணிட்டு இருக்கே?

ஹீரோ - சும்மா தான் இருக்கேன்

ரோட்டில் நாய் - வள் வள் வள் லொள் லொள்

ஹீரோ - ஒரே டைம்ல 2 பேரு சத்தம் போட்டா நான் எப்படி ஃபாலோ பண்ண?

24.  காலங்காத்தாலயே கொட்டிக்கறியே, நீ என்ன செண்ட்ரல் கவர்மெண்ட் ஆஃபீசரா?

 பாட்டி. நீ என்ன ஸ்டேட் கவர்மெண்ட் பேங்க் மாதிரியே பேசறியே?

25.  ஆர்யா - ஒரு மனுஷன் 2 கோழியை எப்படி ஒரே சமயத்துல சாப்பிடுவான்? ( டபுள் மீனிங்க்?)

26.  மாதவன் - நீ எப்படா வந்தே?

ஆர்யா - நீ 2 வது கோழியை சாப்பிட்டுட்டு இருந்தியே, அப்பவே வந்துட்டேன்..

சமீரா - சாப்பிடறப்ப பேசக்கூடாது..

ஆர்யா - அது சாப்பிடறவங்களூக்கு..

மாதவன் - இன்னொரு கால் கிடைக்குமா?

ஆர்யா - அடியேய்.. அக்கா தங்கை 2 பேரும் அவனையே மாத்தி மாத்தி கவனிக்கறீங்களே..?


27.  தம்பியை கடத்தி வெச்சிருக்கார்னு தெரிஞ்சும் கல்லுளி மங்கன் மாதிரி இருக்காரே..

நான் இப்போ பரிதாபப்பட வேண்டியது கடத்தி வெச்சிருக்கற வில்லன்களோட கதையை நினைச்சுதான்..

28.  எஸ் பி ஆஃபீஸ்க்கு ஃபோன் போட்டு எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ் வேணூம்னு கேட்கலாமா?

அவரே ஒரு எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ் தானே? அவருக்கு எதுக்கு இன்னும் எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ்?

29.  அடிச்சா ஒரு அடி கூட மிஸ் ஆகக்கூடாது , அப்படி அடிக்கனும்.. இப்போ உங்க ஆளுங்களை நான் அடிக்கற மாதிரி.. 

30. அடியாள் - அய்யோ வேணாம்னே.. அங்கே அடிக்காதீங்க..

ஆர்யா - சரியா சொல்லு வேணுமா? வேணாமா?

அடியாள் - அடி வேணாம்..  என் உயிர்நாடி வேணும்.. அங்கே உதைக்காதீங்க..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR8HbcdCEY6A8OAJbwPTC2TSpZjJdqSis6XCK-DRjGvpw9XLUY6mkY7jCFQD14ZJDFHLUC8zpshAh8EN78Kt-xyhosh4NNxxepVhx4z58YouK2TXrDV6zsWjNduVAae-WwVKW5EJ9lzLs/s1600/vettai_movie_stills_152.jpg

31.   அடியாள் உடம்பு பூரா பஞ்சு ஃபேக்டரில இருக்கற பஞ்சு ஒட்டி இருக்கு.

ஆர்யா - செம பஞ்சு இல்ல?



32.  ஃபைட் சீனில் ஆர்யாவுக்கு வரும் ஃபோன்ல் ஒரு ஜிகிடி - சார்.. பேங்க்ல ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்றது சம்பந்தமா கொஞ்சம் பேச வேண்டி இருக்கு.. இப்போ நீங்க ஃபிரீயா?

நான் ஒரு அக்கவுண்ட்டை க்ளோஸ் பண்றதுல பிஸி.. அப்புறம் கால் பண்றேன்/...

33.  உன் கண்ல பயமே தெரியலையே.. ஃபயர் தான் தெரியுது.. ( நேத்து நைட் தான் மீரா நாயரோட ஃபயர் படம் பார்த்தாராம்)

34.  பேக்கு வில்லன் - நான் தான் அமெரிக்க மாப்ளைன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?

ஆர்யா - எத்தனை படத்துல அமெரிக்க மாப்ளையை  பார்த்திருப்போம்?

35.  பாட்டி - டேய்.. நீ தான் அந்த அமெரிக்க மாப்ளையா? சின்ன வயசுல டவுசர் போட்டுட்டு சுத்திட்டு இருந்தியே?

ஆர்யா - இப்போவும் டவுசர் தான் போட்டிருக்கான்..

36. பேக்கு வில்லன் - இப்பவே வீட்ல போய் உங்களை பற்றி போட்டுக்குடுக்கறேன்..

ஆர்யா -அப்பாடா, நானே எப்படி வீட்ல சொல்றதுன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன்.. இந்த மாதிரி விஷயத்துல 3 வது மனுஷங்க யாராவது ஹெல்ப் செஞ்சாதான் நல்லாருக்கும்..

37.  கோக்ல ஏதாவது கோக்கு மாக்கு வேலை பண்ணிட்டியா? என்னமோ பண்ணுதே?

38. நான் ரொம்ப லைட் வெயிட்,,

அதான் நான் ஆரம்பத்துலயே கெஸ் பண்ணி சொல்லிட்டேனே?

39.  அமலா பால் - நீ நல்லா மாட்டப்போறே..

ஆர்யா - மாட்டிட்டு தானே இருக்கேன் ஷூவை .....

40.  இது நான் கட்டிக்கப்போற பொண்ணு.. நீ ஏன் தூக்கிட்டு போறே..?

 ஹி ஹி ஹி வேடிக்கை மட்டும் நீ பாரு. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjt6wKQuCHrSc_WjUvESrMNWNTqja8P1NzuPPlq92GNUnTtv-HKVUL3BZryj6yAOZtyVK82gDmUJyFOdwYlFIS7If3jgg4zbx5OwygYtufqjg6IDYyURyFedvRw6wszB5DCMDMyWUw8fUhd/s1600/3.jpg

41.  வில்லன்கள் - எல்லா ஷட்டரையும் இழுத்து மூடுங்கடா..

மாதவன் - ரன்ல கலக்குன எனக்கே ஷட்டரா?

42.  வில்லன் ஆஃப் கேனை - நான் இங்கே மாடில இருக்கேன்.. வண்டி கீழே இருக்கு.. நான் எப்படி போக. ?

ஹீரோ - இதோ இப்படித்தான்.. தள்ளி விட்டுட்டேன்.. போய்க்கோ..

43.  டேய்.. தள்றா.. நீயா மாப்ளை?

தள்ளிட்டுதான் வந்திருக்கேன் பொண்ணை..

44.  யார் யாரையோ அடிக்கறே./. டீ அடிக்க இவ்ளவ் யோசிக்கறே..

45.  ஒரு மனுஷன் சும்மா இருக்கான்னா 24 மணி நேரமும் கூடவே யாரோ இருக்காங்கன்னு அர்த்தம்

46. நீங்க பாட்டுக்கு இங்கே நின்னுட்டு குலோப்ஜாமூனா சாப்பிடறீங்க?

மேரேஜ் வீட்ல ஸ்வீட் சாப்பிடக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா?

போய்யா லூஸு.. ஸ்வீட் ஸ்டால் நான் இருக்கேன், என்னை கண்டுக்காம....

47. என்னை பாழுங்கிணறுல தள்ளி விடப்பார்க்கறீங்களே.. இந்த பால் வடியும் முகத்தை பாருங்க.. ( அதாவது அமலா பால் வடியும் முகத்தை.. )

டிஸ்கி  1 -

வேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

 

டிஸ்கி 3-

நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 4 -

கொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்

Saturday, January 14, 2012

வேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம்

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/01/vettai-arya-300x294.png 

அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி ஆபத்பாந்தவனாய் கை கொடுப்பது நம்ம எம் ஜி ஆர் ஃபார்முலாதான்.. அதை கையில்  எடுத்து சக்சஸ் அடைஞ்சவங்களும் உண்டு, கையை சுட்டுக்கிட்டவங்களும் உண்டு./.. இந்த முறை கயில் எடுத்திருப்பது என் லிங்குசாமி... சாஃப்ட் ஹீரோ மாதவனையே ரன்னில் ஆக்‌ஷன் ஹீரோ ஆக்கியவர்.. கேட்கவா வேணும்.. மசாலா பொங்கல் படைச்சிருக்கார்.. 

எங்க வீட்டுப்பிள்ளை பயந்தாங்கொள்ளி எம் ஜி ஆர் கேரக்டர் மாதவனுக்கு.. போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் இருந்த அப்பா இறந்ததும் ஆட்டோமேடிக்காக இவருக்கு எஸ் ஐ போஸ்ட் வருகிறது.. கலைஞருக்குப்பிறகு ஸ்டாலின் சி எம் ஆக முயற்சிப்பது போல். ஆர்யா அழகிரி மாதிரி ஒரு அதிரடி பேர்வழி.. வேலை ஏதும் இல்லா வெட்டாஃபீஸ்.. ஆனா இவங்க 2 பேரும் கலைஞர் பசங்க மாதிரி அடிச்சுக்கலை,.. ஒத்துமையா இருக்காங்க.. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்தாலும் எல்லா கேஸ், சண்டை எல்லாத்தையும் டீல் பண்றது ஆர்யா. அதுக்கான பலனை அனுபவிப்பது மாதவன்.. லோக்கல் பாஷைல சொல்லனும்னா  கெடா வெட்றது ஆர்யா, பொங்கல் சாப்பிடறது  மாதவன்...

ஹீரோக்கள் 2 பேரு.. அண்ணன் , தம்பின்னா ஹீரோயின் எப்படி இருக்கனும்? கரெக்ட்.. அவங்களும் அக்கா தங்கை தான்.. ஆர்யாவுக்கு அமலா பால், மாதவனுக்கு சமீரா ரெட்டி.. மாதவன் சார்பா பொண்ணு பார்க்க போன ஆர்யா அண்ணியை ஓக்கே சொல்ல தங்கை அமலா பால் ஆர்யாவுக்கு த்ரட் விடறார்.. அதாவது நூல் விடறாரு.. 





http://images.news.pluzmedia.com/slide/big_Vettai__The_season_of_celebration_begins-f50d7d5ae3ea639eb139216bc3dd496e.jpg

படம் ஃபேமிலி, லவ் , ஜாலியா போனா அதுல என்ன இண்ட்ரஸ்ட் இருக்கு? அந்த ஏரியாவுல 2 தாதாங்க.. ( ஆனா 2 பேரும் பக்கா சோதாங்க.. )அந்த தாதாவோட சரக்கு லாரியை ஆர்யா மடக்கி மாதவன்கிட்டே ஒப்படைக்க மாதவன் நல்ல பேர் வாங்கறார்.. நாளா வட்டத்துல மாதவன் டம்மி, ஆர்யா தான் மம்மி அப்டிங்கற மேட்டர் வில்லன் குரூப்க்கு தெரிஞ்சுடுது.. சசிகலாவை ஜெ  கூப்பிட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கற மாதிரி மாதவனை அடிச்சு துவைச்சு காயப்போட்டுடுது வில்லன் குரூப்..

 நாட்டுக்கு ஒரு நல்லவன்ல ரஜினி குஷ்பூ கிட்டே சொல்வாரே அந்த மாதிரி ஆர்யா சொல்றாரு , எத்தனை நாளைக்கு  நானே உன்னை காப்பாத்திட்டு இருப்பேன், நீயும் வீரன் ஆகு  படத்தை சீக்கிரம் முடிக்கனும்கறாரு.. 

வைஜயந்தி ஐ பி எஸ் படத்துல வர்ற மாதிரி 4 கி மீ ரன்னிங்க், 18 பஸ்கி எடுத்து  உடனடி சேமியா, திடீர் இட்லி மாதிரி மாதவன் வீரன் ஆகிடறார்.. இப்போ எண்ணி பாருங்க, மொத்தம் 2 வீரன்க, வில்லன்களும்  2 , ஹீரோயின்களும் 2 .. ஹி ஹி  ( எனக்கு என்ன குறைன்னா 2 வில்லிகளையும் காட்டி இருந்தா  இன்னும் செமயா இருந்திருக்கும்.. )



http://www.boxoffice9.com/gallery/var/albums/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Vettai-Stills,Photos,Pictures/Vettai%20Movie%20Stills00.jpg?m=1307983153

இடைவேளை வரை ஜாலியா ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம்னு போகுது, அதுக்குப்பிறகு ஆக்‌ஷன் அதிரடி தான்.. பக்கா கமர்ஷியல் மசாலா.. இந்தப்படத்தை ஹிந்தில வேற பண்ணப்போறாராம் அவ்வ்வ்வ் , ஆனா அங்கேயும் ஹிட் ஆக்கிடுவார்னு தோணுது.. 

இப்போ இருக்கற ஹீரோக்கள்ல ஆர்யா மாதிரி ஒரு அசால்ட் கேரக்டரை நான் பார்த்ததே இல்ல.. எதுக்குமே அலட்டிக்காம சர்வ சாதாரணமா பாடி லேங்குவேஜ்ல தெனா வெட்டு, முகத்தில் எப்போதும் ஒரு அலட்சியம் , நல்லா கேரக்டர்ல மேட்ச் ஆகறார்.. அமலா பால் குளிச்சுட்டு டர்க்கி டவல் மட்டும் கட்டிட்டு வந்து அவரை கிராஸ் பண்ணி போன பின் தாங்க்ஸ் சொல்றாரே செம.. ஒரே அப்ளாஸ்தான் தியேட்டர்ல.. 

மாதவன்.. இயல்பாவே சாஃப்ட் கேரக்டர் என்பதால் அவர் போலீஸ் யூனிஃபார்மில் பயந்துநடுங்குவது செம காமெடியாக இருக்கு.. ஆர்யா செய்யும் வீரசாகசங்கள் எல்லாம் இவர் செஞ்சதா மக்கள் நினைக்கறது இவருக்கு  தெம்பையும், பயத்தையும் ஒரு சேரத்தர்றதை அவர் நல்லாவே காட்டி நடிச்சிருக்கார்.. 

vettai tamil movie stills00-5


அமலா பால் தான் ஹீரோயின், ஏன்னா அவருக்குத்தான் 2 டூயட்.. அதுவும் இல்லாம கார்ல சரச சலாபம் , லிப் டூ லிப் கிஸ் அடிக்கறதுன்னு பாப்பாவுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை, பாவம் நாம தான் பயந்து பயந்து பார்க்க வேண்டி இருக்கு..  நடன காட்சிகளில் அவருக்கு நளினம் சரியாக வரவில்லை.. ( ஒரு வேளை இயற்கையாவே அவருக்கு நளினம் வர்லையோ என்னவோ?)

சமீரா ரெட்டி கொஞ்சம் முற்றல் முகம் தான் ( முகம் மட்டுமா? நடிப்பும் தான்னு சொல்ல வந்தேன் ஹி ஹி ) அவர் பல காட்சிகளில் ஓவர் ஆக்டிங்க்.. நடன காட்சிகளில் இவர் ஸ்கோர் பண்ணிடறார்.

2 ஹீரோயின்களுக்கும், இயக்குநருக்கும் பொதுவான ஒரு அட்வைஸ்,, கிராமத்துப்பெண் கேரக்டர்னா  இயல்பான மேக்கப்பில் கொஞ்சம் வெட்கம், நாசூக்கு எல்லாம் முகத்துல, பாடி லேங்குவேஜ்ல காட்டனும்..  அரை கிலோ பவுடர், கால் கிலோ ரோஸ் பவுடர், கால் லிட்டர் ஃபேரன் லவ்லி எல்லாம் போட்டுக்கிட்டு தாவணி போட்டா அது வில்லேஜ் கேர்ள் ஆகிடுமா? ( வாகை சூடவா இனியாவை ஒரு முறை பார்க்கவும்)

தூத்துக்குடி தான் கதைக்களன் என்பதால் வழக்கம் போல் அரிவாள், அடிதடி. வெட்டு எல்லாம் உண்டு என்றாலும் இயக்குநர் சாமார்த்தியமாக லவ் , ஃபேமிலி மேட்டர் கொஞ்சம் சேர்த்து போர் அடிக்காமல் க்தையை நகர்த்துகிறார்.. 




Vettai Movie Stills00-15

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  ஓப்பனிங்க் ஷாட்ல ஆர்யா சினிமா தியேட்டர்ல் பண்ற ஆக்‌ஷனை திரைல ஓடற ரவுத்திரம் பட ஹீரோ ஜீவா ஆச்சரியமா பார்க்கறதை காட்ன விதம்.. 

2.  முதல் பாடல் காட்சியில் ஏகப்பட்ட பனை மரங்களை ஒரே ஷாட்டில் அழகாக ஏரியல் வியூவில் காட்டியது , ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு ( நீரவ் ஷா)

3.  மாதவன் எஸ் ஐ ஆக  ஜாயின் பண்ணும்போது உயர் அதிகாரியாடு சல்யூட் அடிக்கும் 3 முறையும் அவர் ஸ்டிக் தவறி கீழே வழிவதும் அவர் வழிவதும் செம காமெடி..

4.  மாதவனை நாசர் பாராட்டி அடுத்த பிராஜக்ட்க்கு தயார் செய்து அனுப்ப முயற்சிக்கையில் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பலி ஆட்டை சிம்பாலிக்காக காட்டுவது கல கல காமெடி.. 

5.  கட்டிப்புடி பாடல் காட்சியில் அமலா பாலின் அழகை  எல்லாம் அள்ளிகொள்ளும் விதமாய் ஆடை வடிவமைப்பு செம..  க்ளை மாக்ஸ் குத்துப்பாட்டான பப்பாறப்பா பாட்டில் நடன அமைப்பு அள்ளிக்கொள்கிறது.. லொக்கேஷன் செலக்‌ஷனும் செம.. 

6. யுவன் சங்கர் ராஜா இசையில் தைய தக்கா தக்க, டம டம  பாடல்கள் ஒன்ஸ்மோர் சொல்ல வைக்கிறது.

7 . தாதா கதை என சலித்துக்கொள்ளாதபடி புத்திசாலித்தனமாய் திரைகதையில் ஆர்யா - அமலா பால் காதலை நுழைத்த விதம்.. 


Vettai Movie Stills00-5

.
இயக்குநர் கோட்டை விட்ட  சில இடங்கள்

1.  தனக்குப்பிடிக்காத அமெரிக்க மாப்ளையுடன் காரின் பின் சீட்டில் வரும் அமலா பால் ஜன்னல் ஓரம் உக்கார வேண்டியதுதானே, ஏன் அப்படி ஒட்டி உக்காந்துட்டு வரனும்? இந்த லட்சணத்துல காதலன் ஆர்யா டிரைவிங்க் த கார்.. 


2. அமெரிக்க மாப்ளையை போலீசில் மாட்டி விட ஆர்யா கோக் என சொல்லி சரக்கை கொடுக்கறா... என்ன தான் அவன் கேனை மாப்ளையா இருந்தாலும் சரக்கு வாசத்துக்கும், கோக் வாசத்துக்கும் வித்தியாசம் தெரியாம இருக்குமா?

3. ஒரு சீன்ல வில்லன்கள் புடை சூழ நிற்கும்  ஆர்யா தன் அண்ணன்மாதவன்க்கு ஃபோன் போட செல் ஃபொன்ல நெம்பரை டைப் பண்றார்.. அது அவர் ஃபோன், மாதவன் அவர் சொந்த தம்பி. ஆல்ரெடி ஸ்டோர் ஆகி இருக்காதா நெம்பர்? வழக்கமா பிரதர்னோ, அவர் பேரோ வரனும்.. ஆனா ஏன் அவர் ஒவ்வொரு நெம்பரா டைப் பண்றார்?

4.  மாதவனுக்கு ஆக்சிடெண்ட் ஆகி 3 நாள்  வீட்டுக்கே வர்லை.. சமீரா ரெட்டி அப்போ எல்லாம் கண்டுக்காம ஆர்யா மாதவனை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றப்போ  பதர்றாரே அது எப்படி? அதே போல் விபத்து நடக்கும்போது நெற்றியில், காது அருகில் பயங்கர காயங்களோட இருந்த மாதவன் 3 நாள்ல வீட்டுக்கு வர்றப்ப முகம் டென்னிஸ் கோர்ட் மாதிரி நீட்டா இருக்கே அது எப்படி?

5.  க்ளைமாக்ஸ்ல  வில்லன் ஆட்கள்  சமீரா வீட்டுக்குள்ள நுழைஞ்சிடராங்க..  உடனே சமீரா மாதவனுக்கு தகவல் தெரிவிக்க , அவர் வீட்டை தாழ் போட்டுட்டுஅங்கேயே இரு, நான் வந்துடறேன்கறார்.. கொஞ்ச நேரத்தில் சமீராவின் தங்கை அமலா பால் பர்ச்சேஸ் முடிச்சு வீட்டுக்கு வந்து வில்லன் கிட்டே மாட்றார்.. மாதவனுக்கு ஃபோன் செஞ்ச சமீரா தன் தங்கைக்கு ஃபோன் செஞ்சு இப்போ வராதே என ஏன் சொல்லலை?

Vettai Movie Stills00-2


பம் பம்  பாடல் காட்சியில் ரன் பட தேரடி வீதியில் தேவதை வந்தா பாட்டின், நடன அமைப்பின் பாதிப்பு தெரியுது.. 

ஏ செண்ட்டர்களில் 60 நாட்கள், பி செண்டர்களில்  40 நாட்கள், சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று 

சி,பி கமெண்ட் - ஆக்‌ஷன், ஜாலி டைம் பாஸ் பிரியர்கள் பார்க்கலாம்

ஈரோடு ஆனூர் தியேட்டரில் படம் பார்த்தோம் ( வித் நல்ல நேரம் சித்தோடு சதீஷ் )


Vettai Movie Stills00-23


டிஸ்கி -1

நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

 

டிஸ்கி 3

கொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்

Friday, March 04, 2011

பதிவை படிச்சிட்டு சிரிக்காம இருந்தா ரூ 10,000 பரிசு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinv5qTd8sZl9I1dbWTJWRjk0HO7rDlWYmDa99qj7gnk-FZnt_z8wJXeNX2QSMoWDA5nyz1K_t-XxXLQF-Jmwbnn2IMZAsA0JvyzjsI2sbjfAtnzJwOgTqVk_wLoAYC-enNHhNJJ_JkGO6u/s1600/mynaa-heroine-amala-paul-hot+%25282%2529.jpg 
1. ஆஸ்திரேலியா கண்டத்துல தனது சுற்றுப்பயணத்தை முடிச்சுட்டு தலைவர் இன்று தாய் நாடு திரும்பறாராம்.

அப்போ தமிழ்நாட்டுக்கு கண்டம் ஸ்டார்ட் ஆகிடுச்சு...அப்படின்னு சொல்லு.

------------------------------------------------

2. அத்தான்.. சாம்பார்ல ஏகப்பட்ட ஸ்பூன் இருக்கே?ஏன்?

சமையல் குறிப்புல  உப்பு ஒரு ஸ்பூன், கடலை எண்ணய் 3 ஸ்பூன்,மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் போடவும்  அப்படின்னு போட்டிருந்தது.. மொத்தம் 5 ஸ்பூன் தானே இருக்கும்..நீ எப்படி ஏகப்பட்ட ஸ்பூன் என சொல்லலாம்..?

(ஆஹா .. இவன் தாண்டா உண்மையான புருஷன்)

-------------------------------------------------------

3.  அம்மா... தாயே...

யாரய்யா.. அது காலங்காத்தால பிச்சை எடுக்க வந்திருக்கறது... அடடே.. நீங்களா? வாங்க வாங்க .. உங்களுக்கு கண்டிப்பா 2 சீட் உண்டு.

---------------------------------------

4. அபிலாஷா நடிச்ச முதல் பாவம்  சீன் படம் ரிலீஸ் ஆகி பல வருஷங்கள் ஆச்சு.

ஆமா.. அதுக்கென்ன இப்போ..?

அவரோட ரெண்டாவது பாவம், மூணாவது பாவம் எல்லாம் எப்போ ரிலீஸ் ஆகும்?

( பய புள்ளே.. ராம்சாமிட்ட கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் என் கிட்டே கேட்டுட்டு..)

------------------------------------

5. பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் பண்றப்ப மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக பாலை ரோட்டில் கொட்டியது தவறு-ன்னு தலைவர் சொல்றாரே..?

சரி... அதுக்காக அமலா பால்-ஐ ரோட்ல தள்ளி விட்டு  போராட்டம் பண்ண முடியுமா?

(#அப்பாடா .. நடிகை ஸ்டில் போட்டுடலாம். ஹி ஹி )

------------------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpOS-NEUi9ilZjXSC5aNkMXEtfUTbLpl_Z5VDo_4cSeMoUpbjYOM9yPCfz8VFn0sBzYfRDPH2IilbCtwC7hOUVA8o31t44eg5a-uGhnwS2EeskUYUOZIQDWnFep75rc0ysMI6K666A1xY/s640/actress_amala_paul+_hot_photos_gallery_01.jpg
6. தலைவருக்கு தேர்தல் பயம் வந்துடுச்சுன்னு எப்படி சொல்றே..?

நெஞ்சுக்கு பீதின்னு நாவல் எழுதறாராம் . ( நெஞ்சுக்கு நீதி பார்ட் 8 )

-----------------------------------------------------------

7. தலைவரே.. லேடீஸ் மேட்டர்ல நீங்க வீக்னு எல்லாரும் பேசிக்கறாங்களே..?

யாருய்யா.. அப்படி ஒரு புரளியை கிளப்புனது..? நான் அந்த மேட்டர்ல ஸ்ட்ராங்க் தான். டவுட்னா 17 வருஷமா நான் வெச்சுட்டு இருக்கற மகளிர் அணித்தலைவி  மல்லிகாவைக்கேட்டுப்பாரு...


(பெரிய அபூர்வமான குறிஞ்சி மலரு....)

---------------------------------------

8.உன் மனைவியை நீ அடிச்சதே இல்லையா?

ஆமா.. அவ ஒரு அடி தாங்கா  பத்தினிங்க...( படி தாண்டா பத்தினிக்கு தங்கை)

-----------------------------------------------------

9. உங்க சம்சாரம் உங்களை பளார்னு கன்னத்துல அறையறா..பார்த்துட்டுசும்மா இருக்கீங்களே..?

சும்மா இல்லாம..? எதுக்கு அடிச்சே?ன்னு எதிர்த்துப்பேசி இன்னொரு கன்னத்துலயும் அடி வாங்க சொல்றீங்களா?

----------------------------------

10.டாக்டர் பட்டம் வழங்குனதுக்கான நன்றி உரை விழாவுல தலைவர் சொதப்பீட்டாராமே..?

ஆமா.. எனக்கு டாக்டர் பட்டம் வழங்கிய யுனிவர்சிட்டிக்கு நன்றி.. கூடவே என் கூட உதவிக்கு நர்ஸ் அனுப்பி வைத்த க்ளினிக்கிற்கு நன்றி அப்படின்னு பேசி மானத்தை வாங்கிட்டாரே..

-------------------------------------

டிஸ்கி 1 - .அமலாபால் ,அபிலாஷா இருவர் பற்றிய ஜோக்ஸ்-ம் போட்டு அபிலாஷா ஸ்டில் மட்டும் ஏன் போடலை?ன்னு கண்டனம் தெரிவிப்பவர்களுக்கு நான் என்ன வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்.. கிடைக்கலை.. அபிலாஷா ஸ்டில்லை வெச்சிருக்கறவங்க( @அண்டர்லைன் ஸ்டில்லை) என் மெயில்க்கு அனுப்பினா உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

டிஸ்கி 2 - இன்னைக்கு வெள்ளிக்கிழமை.. உங்களுக்கே தெரியும்.. லேடீஸ்க்கு கோயில்.. என்னை மாதிரி சின்னப்பசங்களுக்கு தியேட்டர்... மீண்டும் மதியம் 3 மணிக்கு சந்திப்போம்...சிங்கம்புலி,பவானி,தப்பு (அஜால் குஜால் படம்),ஒரு இங்கிலீஷ் (INFESATION)படம் மொத்தம் 4 படம் ரிலீஸ் ஆகுது

டிஸ்கி 3  - டைட்டிலில் ஏதோ பரிசு போட்டிருக்கே.. நான் வேணும்னே சிரிக்கலைன்னு பிரதாப் போத்தன் மாதிரி இன்னும் முகத்தை உம்முன்னு வெச்சிருக்கறவங்களுக்கு...ஊழல் அற்ற ஆட்சி தருவோம்னு ஒவ்வொரு முறையும் வாக்கு குடுத்துட்டு இன்னும் ஊழலைத்தவிர வேற எதுவும் பண்ணாம இருக்காங்களே... அவங்க கிட்டே கேட்டுட்டு அப்புறமா என் கிட்டே வாங்க.. ( ஈரோடு பஸ் ஏறி ரொம்ப கிட்டே வந்து பய முறுத்தக்கூடாது)