Showing posts with label அமலாபால். Show all posts
Showing posts with label அமலாபால். Show all posts

Friday, August 09, 2013

தலைவா - சினிமா விமர்சனம் ( ஒரு பாசிட்டிவ் , ஒரு நெகடிவ் விமர்சனம் )

 
தலைவா திரைப்படத்திற்கு Brit Tamil ஆசிரியர் குழுவின் புள்ளிகள் - 65/100

விஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது 'தலைவா'.அரசியல் கதைகளம் கொண்ட படம்,படத்தில் விஜய் சி.எம் ஆகின்ற மாதிரியான காட்சிகள் இருக்கின்றன அதனால் தான் ஆளும் தரப்பிலிருந்து ஏகப்பட்ட குடைச்சல்கள் என்று அரசல் புரசலாக பேசப்பட்டன.தமிழகத்தில் இப்படி என்றால்,இலங்கையில் விஜய்,கமல்,ரஜனி படங்களை திரையிடவிடமாட்டோம் என்று கொழும்பில் சிங்கள அமைப்பொன்றின் எச்சரிக்கையால் வி.ஐ.பி ஷோக்கள் ரத்து செய்யப்பட்டன.
இறுதி தருணம் வரையில் படம் வெளியாகுமா என்கின்ற டென்ஷன் ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் பரவிப்போயிருந்தது.2.8மில்லியன் ஹிட்ஸ் அடித்திருந்த தலைவா ட்ரெய்லர்லேயே படம் எப்படிப்பட்டது என்பது ஓரளவுக்கு புரிந்திருந்தது.சரி இயக்குனர் விஜய் புதிதாக ஏதாவது செய்திருப்பார் என்கின்ற நம்பிக்கை ஒருபக்கம் இருந்தது.

ஆரம்பமே சரபரன்னு பாம்பாயில் 1988இல் கலவரம் ஒன்னு காட்டுறாங்க.ஏற்கனவே இருந்த டான் மாதிரியான தலைவர் ஒருவரை போட்டுத்தள்ளிவிட்டார்கள் என்று கதை ஆரம்பித்து மீண்டும் பாம்பாயில் வந்து முடிகிறது கதை.சத்யராஜ் மகனாக வரும் விஜய்யை சிறுவயது முதலே தன்னை விட்டு தள்ளி தூரத்தில் வளர்த்துவருகிறார் 'அண்ணா'என்றழைக்கப்படும் சத்தியராஜ்.
காரணம் தன்னுடைய பிரச்சனைக்குள் மனைவியை இழந்தது போல மகனையும் இழக்கக்கூடாது என்பதனால் தான் பிசினெஸ் செய்கிறேன் என்று கூறி வளர்த்துவருகிறார்.அப்படியாக அவுஸ்திரேலியாவில் டான்சராக இருந்துகொண்டு வாட்டர் சப்ளை பிசினெஸும் பார்த்து வரும் விஜய் பாம்பாய் வந்து சத்தியராஜின் இடத்தை எப்படி அடைகிறார் என்பது தான் கதை.அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த கதை தான்.ஆனால் அது சொல்லப்பட்ட விதத்தில் இயக்குனர் விஜய் தனித்து தெரிகிறார்.

பம்பாய் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு 'பாட்ஷா'வும் நாயகனும் கட்டாயம் ஞாபகம் வந்து தொலைக்கும்.ஆனால் துணிந்து அந்த கதைக்களத்தை தெரிவுசெய்து தன்னால் சுவாரசியமாக படத்தை கொடுக்க முடியும் என்பதை விஜய் நிரூபித்திருக்கிறார்.

முதல் பாதி தான் படத்தை தூக்கி நிறுத்தியது எனலாம்.காரணம் இடைவேளைக்கு பின்பு வரும் காட்சிகள் எவ்வளவு முயன்றாலும் வேறுபடுத்தி கொடுப்பது மிக கடினம் தான்.முதல் பாதி முழுவதும் அவுஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.மிக மிக அழகான காட்சிகள்.ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கண்ணுக்கு விருந்து படைத்திருக்கிறார்.பாடல் காட்சிகளில் அவுஸ்திரேலிய அழகை கண்முன் நிறுத்திவிடுகிறார்.சந்தானத்தின் காமெடி,அழகான பாடல்கள்,அபாரமான நடனம் என்று இடைவேளை வரை 'அடடா'போடவைத்தது படம்!நிச்சயமாக விஜய்யினதும் அமலாபாலினதும் வேறுபட்ட நடிப்பை தலைவாவில் காணக்கூடியதாக இருக்கும்.  

அங்காங்கே வைக்கப்பட்ட ட்விஸ்ட்டுகள் படத்தை சுவாரசியமாக்குகின்றன.திரைக்கதையை நம்பி இயக்குனர் விஜய் களமிறங்கியிருக்கிறார்.ஆரம்ப காட்சிகளில் வரும் சத்தியராஜ் செம அழகாக தெரிகிறார்.கிட்டத்தட்ட எண்பது தொண்ணூறுகளின் சத்தியராஜை காணமுடிந்தது.கருந்தாடி வைத்து கருப்பு தலைமுடியுடன் சண்டையிடுவார் பாருங்கள் அப்படி அபாரமாக இருக்கும்!

இது நம்ம அமலாபாலா என்று கேட்கின்ற மாதிரி அழகை மெருகேற்றி வந்திருக்கிறார்.இன்னொரு சுற்று ஆடுவதற்கு தயாராகிவிட்டது போல் தெரிகிறது.சந்தானம் விஜய்யை இமிட்டேட் செய்து கலாய்ப்பதையே தொழிலாக செய்திருக்கிறார் படத்தில்.பெரிய ஹீரோக்கள் காமெடியங்களால் கலாய்க்கப்படுவதை விரும்புவதில்லை.ஆனால் விஜய் இடம்கொடுத்திருக்கிறார் என்று சந்தானம் ஒருபேட்டியில் கூறியிருந்தார்.அது படத்தில் உண்மை என்று தெரிகிறது.அந்தளவு ஓட்டியிருக்கிறார்.சாம் அண்டர்சன் கூட இடையே வந்து கலகலப்பாக்கி செல்கிறார்.  

பாடல்களில் "வாங்கண்ணா வணக்கங்கண்ணா'பாடல் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தாலும்,'தலைவா'பாடலும்,'யார் இந்த சாலையோரம்','தமிழ் பசங்க'பாடல்களும் நன்றாக வந்திருக்கின்றன.தமிழ் ஹீரோக்களில் நடனத்தில் தான் தான் பெஸ்ட் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் விஜய்.முதல் பாதியில் நடனம் தூள் பறக்கிறது.தமிழ் பசங்க பாடலில் அது உச்சம்!ஜி வி பிரகாஷ்குமார் கூட ஒரு பாடலில் வந்து நடனமாடி செல்கிறார்.மானாட மயிலாட க்ரூப்பில் இருந்து பலரும் களமிறங்கியிருக்கின்றனர்.

படத்தின் குறைகள் என்றால்,படத்தின் நீளம்.மூன்று மணி நேர படத்தை என்னதான் விறுவிறுப்பாக வைத்திருக்க முயற்சித்தாலும் ஏதாவது சில சந்தர்ப்பங்களில் நீளத்தை உணரவைத்துவிடும்.கதையை விளக்குவதில் மெதுவான காட்சிகள் சற்றே போர்.

இரண்டாம் பாதியில் வரும் கதை நமக்கு தேவர்மகன்,நாயகனில் பழக்கப்பட்ட கதை என்பதால் அது படத்துக்கு ஒரு வீக்னெஸ். இரண்டாம் பாதியை ஹரியிடம் கொடுத்திருந்தால் படம் இன்னமும் நன்றாக வந்திருக்கும்.

இடைவேளை வரை எந்த ரசிகர்களும் ரசித்து பார்க்கக்கூடிய படம்.இடைவேளைக்கு பின்பதாக விஜய்யை விரும்பாதோர் விரும்பாமல் விடுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன.ஆனால் ஏ.எல்.விஜய் தன்னால் முடிந்ததை இரண்டாம்பாதியில் செய்திருக்கிறார்.தமிழக அரசுக்கு இந்த படத்தால் என்ன பிரச்சனை என்று இன்னமும் தான் புரியவில்லை.விஜய் ரசிகர்களுக்கு படம் விருந்து..!

மொத்தத்தில்,பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போல படம் தோல்வி கிடையாது.விஜய்க்கு இன்னொரு ஹிட்டு நிச்சயம்.அது எத்தகைய வெற்றி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.இதற்கு முதல் படமான துப்பாக்கி ப்ளக்பஸ்டர் ஹிட் என்பதால் அதனுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.
இவரது ட்வீட்ஸ்
1.  12h
'தலைவா'.அரசியல் படத்தில் விஜய் CMஆகின்ற மாதிரியான காட்சிகள் இருக்கின்றன



2. தலைவா: முதல் பாதி முழுவதும் அவுஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.



3. தலைவா: சந்தானத்தின் காமெடி,அழகான பாடல்கள்,அபாரமான நடனம் என்று இடைவேளை வரை 'அடடா'போடவைத்தது படம்!



4. பாடல்களில் "வாங்கண்ணா வணக்கங்கண்ணா'பாடல் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தாலும்,'தலைவா'பாடலும்,'யார் இந்த சாலையோரம்','தமிழ் பசங்க'பாடல்களும் நன்று



5. நடனத்தில் தான் பெஸ்ட் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் விஜய். முதல் பாதியில் நடனம் தூள் பறக்கிறது.தமிழ் பசங்க பாடலில் அது உச்சம்


6. தலைவா: ஜி வி பிரகாஷ்குமார் கூட ஒரு பாடலில் வந்து நடனமாடி செல்கிறார்.மானாட மயிலாட க்ரூப்பில் இருந்து பலரும் களமிறங்கியிருக்கின்றனர்.



7. தலைவா: குறைகள் என்றால், படத்தின் நீளம் 3மணி நேர படத்தை என்னதான் விறுவிறுப்பாக வைத்திருக்க முயற்சித்தாலும் சில சந்தர்ப்பங்களில் உணரமுடிகிறது



8. தலைவா: இரண்டாம் பாதியில் வரும் கதை நமக்கு தேவர்மகன்,நாயகனில் பழக்கப்பட்ட கதை என்பதால் அது படத்துக்கு ஒரு வீக்னெஸ்



9. தலைவா: முதல் பாதி ரசிகர்களும் ரசித்து பார்க்கக்கூடிய படம் பின் பாதி விஜய்யை விரும்பாதோர் விரும்பாமல் விடுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன



10. தலைவா: மொத்தத்தில், பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போல படம் தோல்வி கிடையாது. விஜய்க்கு இன்னொரு ஹிட்டு நிச்சயம்.


நன்றி - பிரிட் தமிழ் ,http://brit-tamil.co.uk/news.php?id=2059,


டிஸ்கி - ஈரோடு , திருப்பூர் , கோவை உட்பட கொங்கு மண்டலம் முழுக்க தலைவா படம்  ரிலீஸ் இன்னைக்கு இல்லை  



ஒரு நெகடிவ் விமர்சனம் 


தலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)


சிங்கையின் மிகப்பெரிய திரையரங்கம். 1500 பேருக்கு மேல் கொள்ளளவு கொண்டது. நான்கு நாட்களுக்கு ஹவுஸ் புல். நிறைய எதிர்பார்ப்புகளுடன் அரங்கமே நிரம்பி வழிந்தது. படம் ஆரம்பித்து 15 நிமிடங்களுக்கு ஒரே விசில்,ஆர்பாட்டம்,சப்தம் என வசனங்களே காதில் விழாத அளவுக்கு ரசிகர்களின் கொண்டாட்டம். பதினைந்தாவது நிமிடத்தில் வருகிறார் இளைய தளபதி விஜய். அடுத்த ஐந்து நிமிடங்களில் அரங்கத்தில் 'பின்ட்ராப்' சைலண்ட். பிறகு மெல்ல மெல்ல சப்தங்கள் கூடி ஒரு கட்டத்தில் 'டேய் படத்தை போடுங்கடா' என்கிற அளவுக்கு விஜய் ரசிகர்களின் பொறுமையை மொத்தமாக சோதித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

படத்திற்கு எந்த எதிர்ப்பும் கிளம்பாத நிலையில் வெடிகுண்டு மிரட்டல்,திரையிட மாட்டோம் என வாண்டேடாக வண்டியில் ஏறும்போதே தெரியும். படம் மொக்கை என்று..ஆனால் இப்படி ஒரு மரண மொக்கையை எதிர்பார்க்கவில்லை.இன்னும் ஒரு வார காலத்திற்கு இணையத்தில் அடித்துத் துவைத்துத் தொங்கவிடப் போகும் தலைவா-விற்கு முதலில் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

இயக்குனர் விஜயிடம் எஸ்.ஏ.சி இப்படி சொல்லியிருப்பார். நாயகனையும் பாட்சாவையும் கலந்து கட்டி விஜய்க்கு ஏற்றவாறு எடுங்கள் என்று. மனுஷன் சாதாரணமாவே அட்ட காப்பி அடிக்கிறவரு.இப்படி சொன்னா கேக்கவா வேணும். நாயகன்ல ஒரு சீன்,பாட்சாவில ஒரு சீன்,திரும்பவும் நாயகனில் ஒரு சீன்..பாட்சாவில ஒரு சீன்...என அப்படியே ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார். சரி எல்லோரும் கதையையும் காட்சியையும் தான் காப்பி அடிப்பாங்க.இந்த ஆளு லொகேசனையும் காப்பி அடிச்சிருக்கான்யா.. நாயகனில் வரும் அதே தாராவி, அதே ஆலமரம் ,மேடை என எல்லாம் அப்படியே....

வேலுநாயக்கர் கேரக்டர்தான் விஜயின் அப்பாவாக வரும் சத்யராஜுக்கு. பெயர் மட்டும் மாறியிருக்கிறது 'அண்ணா' என்று.

மும்பை தாராவியில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்பவராக சத்யராஜ். அதனால் பிரபல தாதாவால் கட்டம் கட்டப்பட்டு சுட்டுக்கொல்ல முயல்கையில் அவரின் மனைவி ரேகா துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு இறந்து போகிறார்( சரண்யா கேரக்டராம்). சினம் கொண்ட சத்தியராஜ் அந்த தாதாவை போட்டுத் தள்ளிவிட்டு தான் தாதாவாக மாறுகிறார்.தம் மகனான ஐந்து வயது விஸ்வா(விஜய்)வுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அவரை நாசரிடம் கொடுத்து,தான் யார் என்பதே தெரியக்கூடாது என்று சொல்லி ஆஸ்ட்ரேலியா அனுப்பி விடுகிறார்.

பிறகு வேலுநாயக்க....ச்சே.. 'அண்ணா'வான சத்யராஜ் தாராவி மக்களுக்கு தலைவனாக தொண்டு செய்கிறார். தலை மறைவு வாழ்க்கையும் நடத்துகிறார்.

ஆஸ்திரேலியாவில் விஜய் தண்ணி பிசினெஸ்(குடிக்கிற தண்ணிதான்) செய்கிறார். 'தமிழ் நாட்டுக்கு தண்ணி கொண்டுவர முடியவில்லை...ஆனால் நீ ஆஸ்திரேலியாவுக்கு தண்ணி கொண்டு வந்துட்டியே' என்கிற பன்ச் டயலாக் வேற இருக்கிறது. அங்கு அமலாபாலையும் அவர் தந்தை சுரேசையும் சந்திக்கிறார். விஜயுக்கும் அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து திருமணம் வரை செல்கிறது. திருமணத்திற்கு விஜயின் அப்பாவை சந்தித்தே ஆகவேண்டும் என சுரேஷ் பிடிவாதம் பிடிக்க,சொல்லாமல் கொள்ளாமல் எல்லோரும் மும்பை வருகின்றனர். அங்கே கல்யாண விசயமாக பேசவரும் சத்யராஜை நோக்கி அமலாபாலும் சுரேஷும் துப்பாக்கியை நீட்டுகிறார்கள். ஏன்னா இருவரும் சிபிஐயாம்.  

கைது செய்து கொண்டு செல்லும் வழியில் குண்டுவைத்து கொல்லப்படுகிறார் சத்யாஜ். அவரைக் கொன்றது யார் எனக் கேக்க தோணுமே...முன்பு சத்யராஜ் ஒரு தாதாவை போட்டுத்தள்ளினார் அல்லவா...அவரோட மகன்தான்.அப்புறமென்ன அப்பா விட்டுவிட்டுப் போன அந்த அற்புத பணியை மகன் விஜய் தொடர்ந்து செய்ய, கடைசியில் அப்பாவைக் கொன்ன அந்த வில்லனை கொல்கிறார்.

அம்புட்டுதேன் கதை. ரஜினியை பாட்சா பாய்..பாட்சா பாய் என்று அழைத்தது போல இதில் விஜயை விஸ்வா பாய் என்கிறார்கள். எங்கிருந்து பாய் வந்தது என்பதுதான் தெரியவில்லை.தலைவா என்று டைட்டில் இருப்பதால் ஏதோ விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாக இந்தப்படம் இருக்கும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஏன்னா இதில் தமிழ்நாட்டை துளி அளவு கூட காண்பிக்கவில்லை.முற்பகுதி ஆஸ்ட்ரேலியா ..பிற்பகுதி முழுவதும் மும்பை.

முதல் பாதி செம ஜவ்வு... சந்தானம் காமெடியும் செம போர். இப்படியே போனால் விவேக் மாதிரி ஓரங்கட்டப் படுவார். இண்டர்வலுக்கு முன்பு படம் லேசாக சூடுபிடித்தது போல் இருந்தாலும் பிறகு தலை குப்புற படுத்து விடுகிறது. அது என்னப்பா சீரியசான காட்சிகளில் எல்லாம் எல்லோரும் முகத்தைப் பார்த்து பேசாமல் மோட்டு வளையை பாத்து பேசுறாங்க.. ஒருவேளை ஓலகத்தரத்தில் முயற்சி பண்ணி இருக்காங்களோ..

விஜயின் அட்டர்பிளாப் படங்களில் கூட அவரின் அறிமுக காட்சி அற்புதமாக இருக்கும். படத்தின் முதல் சொதப்பலே இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. அறிமுகப் பாடலும் வெறுப்பேற்றுகிறது.துப்பாக்கி என்கிற முழு நீள ஆக்சன் படத்திற்கு அடுத்தாக வரும் இதில் இடைவேளை வரை ஒரு பைட் சீன் கூட இல்லை. ஜோடி நம்பர் ஒன்னில் ஆடிய சில்லரைப் பசங்களை வைத்துக்கொண்டு 'தமிழ் பசங்க' என்கிற டான்ஸ் குருப்பை நடத்துகிறார் விஜய். அடடே.. அப்போ டான்ஸில் பின்னி எடுத்திருப்பார் என கேக்க தோணுமே... அந்தக் கொடுமையை தியேட்டரில் பாருங்க..சுறா தோத்துடும். அதிலும் புன்னகை மன்னன் கமல் ரேவதி மாதிரி விஜய் அமலாபால் ஒரு BGM க்கு ஆடுவாங்க பாருங்க... கண்கொள்ளா காட்சி.

அமலாபாலிடம் முகத்தைத் தவிர காட்டுவதற்கு வேறொன்றும் இல்லையென நினைத்திருப்பார் போல இயக்குனர். நல்லவேளை இருக்கிற வெறுப்பில் அப்படி எந்த விபரீத முயற்சியும் இயக்குனர் எடுக்காதது பாராட்டுக்குரியது.

 

படத்தில் மற்றொரு மைனஸ் இசை.ஒரு பாட்டு கூட ரசிக்கும்படி இல்லை.மும்பையில் நடக்கும் கலவரத்தின் போது இந்தியன் படத்தில் வரும் பின்னணி இசை ஒலிக்கிறது.இதில் விஜய் பாடும் ஒரு பாடலில் G.V.பிரகாஷ் அவருடன் ஒரு சீன் ஆடுகிறார்(இது வேறயா..)

படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று தனியாக எதுவும் கிடையாது.ஏன்னா லாஜிக்கே இல்லாத படத்தில் எங்கே போயி லாஜிக் மிஸ்டேக்கை தேடுறது. படத்தில் வில்லன்கள் சம்மந்தப்பட்ட ஒரு முக்கியமான வீடியோ டேப் யார் கையிலும் கிடைக்காமல் ஒருவனால் பிக்பாக்கெட் அடிக்கப்படுகிறது.அது பிக்பாக்கெட்டுதான் அடிக்கப் பட்டிருக்கும் என்பதை வில்லனும் விஜயும் ஒரு சேர கணிப்பது எட்டாவது அதிசயம்.அந்த பிக்பாக்கெட் காரனைத் தேடி விஜயும் வில்லனும் ஒரே நேரத்தில் செல்கிறார்கள். ஒரே நேரத்தில் போன் பண்ணுகிறார்கள். மைக்ரோ செகன்ட் வித்தியாத்தில் விஜயின் போனை எடுத்துவிடுகிறார் அந்த பிக்பாக்கெட் ஆசாமி. அடுத்த முனையில் வில்லன் டயல் செய்து கொண்டே இருக்கிறான். அதைத் தெரிந்து கொண்ட விஜய் போனை கட் செய்தால் வில்லனின் போனை அட்டென்ட் பண்ணி விடுவானோ என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். நமக்கு டென்சன் ஏத்துராங்கலாமாம்.. டேய் பக்கிகளா அவன்கிட்ட,இந்த போனை கட் பண்ண உடனையே ஒருத்தன் போன் பண்ணுவான் அத எடுக்காதனு சொல்லிட்டா பிரச்சனை முடிந்தது.காதுல பூ வைக்கிறதுக்கு பதிலா புய்ப்பமே வைப்பீங்க போல..

படத்தில் ஒரே ஆறுதல் 'ரைசிங் ஸ்டார்' சாம் ஆண்டர்சன். மனுஷன் ஒரு நிமிஷம் வந்தாலும் தியேட்டரை அதிரவைக்கிறார். அதிலும் ராசாத்தி பாடலுக்கு ஷோல்டரை குலுக்கி ஒரு மூவ்மென்ட் போடுவார் பாருங்க... சோர்ந்து உட்காந்தவங்க எல்லாரையும் நிமிர்ந்து உட்கார வச்சிட்டாரய்யா..

இந்தப்படம் மூலம் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஏதாவது போட்டி வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும். விஜய் என்கிற ஒரு மாஸ் ஹீரோவுக்கு படம் பண்ணுகிறபோது அவர் ரசிகர்களை குஷிப்படுத்த எந்த மாதிரியான காட்சியமைப்பு வைக்க வேண்டும் என்பதில் மெகா கோட்டை விட்டிருருக்கிறார் இயக்குனர். 

கண்டிப்பாக இந்தப்படத்தை ஒரு தடவையாவது பாருங்கள். இவ்வளவு நாள் கழுவி ஊத்திய ஆதி, சுறா, வில்லு வேட்டைக்காரன் எல்லாம் காவியமாக தெரியும்..

தலைவா... மூணு மணிநேரம் கதறக் கதற.....முடியில.

நன்றி - http://manathiluruthivendumm.blogspot.com/2013/08/blog-post_9.html 




diski -

CHENNAI EXPRESS - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/08/chennai-express.html 


ஐந்து ஐந்து ஐந்து - 555 -சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/08/555.html 

 

தமிழ் நாட்டில் தலைவா இன்னைக்கு ரிலீஸா?

 

 

நடிகர் விஜய் நடித்த தலைவா படம் இன்று வெளியாகுமா? நேற்று இரவு வரை முடிவு ஏற்படவில்லை

Will Thalaivas film release today?
 சென்னை:நடிகர் விஜய் நடித்த, "தலைவா படத்தை வெளியிடுவதில், திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி, தியேட்டர்களில் இன்று, "ரிலீஸ் ஆகுமா என்ற நிலை உருவாகி உள்ளது.

நடிகர் விஜய் - அமலா பால் நடித்துள்ள, "தலைவா படம், இன்று (9ம் தேதி) வெளியாக இருந்தது. தமிழகத்தில், 500 தியேட்டர்; உலக அளவில், 2,000 தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும், 35 தியேட்டர்களிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், 35 தியேட்டர்களிலும் படம் வெளியிட திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை, மயிலாப்பூரில் உள்ள, "ஐநாக்ஸ் தியேட்டர் உட்பட, முக்கியமான, ஒன்பது தியேட்டர்களுக்கும், காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கும், "வெடிகுண்டு வைக்கப்படும் என, மிரட்டல் கடிதம் வந்தது; போன் மூலம் மிரட்டல்களும் வந்தன. இதனால், தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.இத்துடன், படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளது  எனவும் தகவல் வெளியானது.
 உடன் நடிகர் விஜய், "படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் ஏதும் இல்லை; முழுக்க, முழுக்க ஜனரஞ்சக காட்சிகள் மட்டுமே படத்தில் இடம் பெற்றுள்ளது என, விளக்கமளித்தார்."படத்தின் கதை, எங்கள் குடும்ப கதை எனக்கூறி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வரும், 14ம் தேதிக்குள் படத்தின் கதை குறித்து, படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், வெளியீட்டாளர் பதில் அளிக்க வேண்டும் என, கோர்ட்  உத்தரவிட்டது.படத்திற்கு பல பிரச்னைகள் ஏற்பட்டதால், தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வெளியிட தயங்கினர்; வினியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களின் அவசரக் கூட்டம் சென்னையில் நடந்தது.

அதில் வியாபார ரீதியான பிரச்னை குறித்து பேசப்பட்டது. பிரச்னைகளை தீர்க்க தயாரிப்பாளரும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரகேசரனும் முயன்றனர். ஆனால்,  உடன்பாடு ஏற்படவில்லை.படத்திற்கு, சென்சார் அமைப்பு, "யு சர்ட்டிபிகேட் கொடுக்கப்பட்டிருந்தாலும், "கேளிக்கை வரி விலக்கு இன்னும் அளிக்கவில்லை என, தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கினர். "வரி சலுகை கிடைக்காவிட்டால் படத்தை திரையிட மாட்டோம் என, சிலர் கூறினர்.இந்த சூழ்நிலையில், கேளிக்கை வரி விலக்கு வழங்கும் குழு, நேற்று மாலை, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, "ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில், படத்தை பார்த்தனர். எனினும், கேளிக்கை வரி விலக்கு உண்டா என்பது  இன்று தான் தெரியும்.

"தலைவா படத்திற்கு நேற்று முன்தினம் முதல், டிக்கெட் முன்பதிவு துவக்கம் என, விளம்பரம் செய்யப்பட்டிருந்ததால், சென்னை தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், டிக்கெட் வழங்கப்படவில்லை. "நாளை வாருங்கள் பார்க்கலாம் என, தியேட்டர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேவி தியேட்டர் வாசலில், "தலைவா படத்தின் முன்பதிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, விளம்பர பலகை  வைக்கப்பட்டிருந்தது. சத்யம் தியேட்டர் வாசலில் அறிவிப்பு பலகை இல்லை. மாலை வரை ரசிகர்கள் காத்திருந்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பினர்."தலைவா படம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள தியேட்டர்களில், இன்று வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
 ஆனால், நேற்று இரவு, 8:00 மணி வரை, வினியோகஸ்தர்கள் ஒப்புதல்  தெரிவிக்கவில்லை. அதேபோல், வெளிநாடுகளில் வெளியீடு உண்டா? என்பதிலும், தெளிவான விளக்கம் தரப்படவில்லை.படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய சிலர், "இன்று பிரச்னை சரியாகிவிடும். உடனே படம் வெளியிடப்படும். அல்லது வெளியிடும் தேதி மாறும் என்றனர்.

 ஜெயலலிதாவை சந்திக்க விஜய்க்கு அனுமதி மறுப்பு : முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, நடிகர் விஜய்க்கு கொடநாட்டில் அனுமதி மறுக்கப்பட்டதால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.கொடநாட்டில் தங்கி, அரசு மற்றும் அரசியல் பணிகளை கவனித்து வரும், முதல்வர் ஜெ.,வை சந்திக்க, நேற்று காலை, 9:00 மணியளவில், நடிகர் விஜய், "தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் சிலர் வந்தனர்.கெரடாமட்டம் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்தி, கொடநாடு செல்ல அனுமதிக்கவில்லை.
 15 நிமிடங்களுக்கு பிறகு, கொடநாடு ஊராட்சி அலுவலகம் அருகே இருந்த போலீசாரிடம், "நாங்கள் முதல்வரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என, விஜய், கோரிக்கை விடுத்தார்.இதன் பிறகு, முதல்வர் ஜெ.,யின் நேர்முக உதவியாளரை சந்திக்க, அனுமதி கொடுக்கப்பட்டது. கொடநாடு எஸ்டேட் அலுவலகம் சென்ற நடிகர் விஜய், முதல்வரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்து, ஏமாற்றத்துடன் திரும்பினார்.விஜய் கொடுத்த மனுவில், "தலைவா திரைப்படம் வெளியிடுவதற்காக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது."முதல்வர் ஜெ., வரும், 12ம் தேதி சென்னை வரும்போது, உங்கள் பிரச்னைகள் குறித்து தெரியப்படுத்துங்கள்; நீங்கள் கூறிய தகவல்களை நாங்கள் சொல்லி விடுகிறோம் என, விஜயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

"தலைவா படத்திற்கு அரசு தரப்பிலும் நெருக்கடி?"நடிகர் விஜய் நடித்த, "தலைவா படம், இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று சில மாவட்ட கலெக்டர்கள், நகரில் அரசியல் கட்சி பேனர்கள் தவிர, மற்ற பேனர்களை அகற்றும்படி, வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், "அரசியல் கட்சி பேனர் தவிர, பொது இடங்களில் உள்ள, மற்ற பேனர்களை அகற்ற வேண்டும். அகற்றுவதற்கு முன்பும், அகற்றிய பின்னரும், அந்த இடத்தை புகைப்படம் எடுக்க வேண்டும். கட்டட உரிமையாளர் அனுமதி பெற்று, கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ள, பேனர்களை அகற்ற வேண்டாம் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
."தலைவா படத்தில், அரசை விமர்சித்து, சில வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, படத்திற்கு நெருக்கடி கொடுப்பதற்காக, பேனர்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், "பொதுவாக பேனர்களை அகற்றும்படி, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். எதற்காக என்பது எங்களுக்கு தெரியாது என்றனர்.

thanx - dinamalar
 படம் பார்த்த ஃபாரீன் ட்விட்டர்ஸ்  போட்ட ட்வீட்ஸ்



  1. RT : சந்தானம் ஒன் லைனர் ஒகே! பட் சாம் ஆண்டர்சன்லாம் வர்றாப்ல....ம்ம்ம் காமெடி வறட்சி
  2. RT : Factory is our proffession. Dance is our passion. Vijay punch dialogue
  3. RT : Amala paul and suresh do not fit into police officers role at all. That's one wrong decision by director and vijay
  4. RT : Climax twist as ponvannan into villans friend is unwanted idea. Appreciate vijay just for his body fitness
  5. RT : At the age 39 or 40 vijay looks like 24 to 26 year old guy

Wednesday, June 05, 2013

iddarammayilatho - சினிமா விமர்சனம் ( தினமலர்)



தினமலர் விமர்சனம்


தெலுங்கில் போக்கிரி, பிஸினஸ்மேன் படங்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத், ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனும், தேசமுத்ரு படத்திற்குப் பிறகு இணைந்துள்ள படம் தான் "இத்தரம்மாயிலதோ". 

கனிம ஊழலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அபேஸ் செய்யப்பட்ட அடிநாதத்துடன் கதை துவங்குகிறது. சென்ட்ரல் மினிஸ்டரின் மகள் அகான்ஷாவான காத்ரின் தெரஸா சைக்காலஜியில் முதுகலை படிப்பதற்காக ஐரோப்பா செல்கிறார்.  ஐரோப்பாவில் தங்கச் செல்லும் வீட்டில் அமலாபாலின் டைரி இவர் கையில் கிடைக்கிறது. 
டைரியை படிக்கும் காத்ரின், அமலாபாலுக்கும் அல்லு அர்ஜுனுக்கும் இடையே இருக்கும் காதலை படித்து தெரிந்து கொள்கிறார்.  டைரியில் வைக்கப்பட்டுள்ள போட்டோவை வைத்து சன்ஜு ரெட்டியாகிய அல்லு அர்ஜுனை அடையாளம் காண்கிறார். அல்லு அர்ஜுனுக்கு அமலாபாலுடன் திருமணம் நிச்சயமான செய்தி வரை டைரியில் எழுதப்பட்டிருந்தது.. இதன் பிறகு இவ்விருவருக்கும் திருமணம் ஆனதா ?? ஆகவில்லையா ?? என்ற கேள்விக்கு விடையறிய அல்லு அர்ஜுனை நாடுகிறார். 


பறவைகளை தன் வீடியோ கேமராவில் அமலாபால் பதிவு செய்ய, வில்லன் செய்த ஒரு கொலையும் எதேச்சையாக அதில் பதிவாகிறது. இதனால் வில்லன்களால் அமலா பால் கொல்லப்படுகிறார். நிச்சயம் செய்யப்பட்டுள்ள காத்ரின், அல்லு அர்ஜுனின் சோகக் கதையை கேட்டு அனுதாபம் கொண்டு பின்பு காதலிலும் விழுகிறார். இறுதியில் இறந்ததாக எண்ணப்பட்ட அமலாபால் உயிருடன் வர க்ளைமாக்ஸில் ஏகப்பட்ட ட்விஸ்டுகள்.

கலர் கலராக காஸ்ட்யூம்கள், மாசு கிளப்பும் கார்கள், நீண்ட தாடியும் நீள முடியும் வைத்த வில்லன்கள் என்ற மாஸ் படத்திற்கு அமைத்திருந்த டெம்பிளேட்டிலிருந்து விலகி, மிக ஸ்டைலிஷாக அமைக்கப்பட்டிருந்த விதம் முதல் ஹைலைட். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணியும் பாடல்களும் இனிமையான பதிவு, குறிப்பாக வெஸ்டர்னும் கர்நாடக சங்கீதமும் சேர்ந்த சங்கராபரணம் பாடல்.
 ‘ஒன் ஒன் பாடலிலும், டாப் லேச்சு போயாலி பாடலிலும் அல்லு அர்ஜுனின் நடனம் டாப் டக்கர். இன்டர்வல் பிளாக்கிற்கு முன் வருகின்ற சண்டைக் காட்சி இந்தியன் சினிமாவில் படமாக்கப்பட்ட மிகச்சிறந்த சண்டைக்காட்சிகளில் ஒன்று எனக் கூறினால் அது மிகையல்ல. ‘ பிடில் பிரம்மாவாக ‘ பிரம்மானந்தம் காமெடியில் அசத்துகிறார். 

அல்லு அர்ஜுனின் அசத்தலான நடனமும் கண்ணாலேயே கொலை செய்ய கணக்குபோடும் வன்ம விழிகளும் இவரது கதாபாத்திரத்திற்கான தோரணையை சேர்க்கிறது. இவருடன் ஆடும் போது அமலா பால் சாதாரணமாகத் தான் தெரிகிறார். ஒன்றுக்கு இரண்டாக காத்ரின் அமலாபால் என இரு நாயகிகள். அமலாபாலை விட காத்ரின் தான் மனதில் பதிகிறார் நடிப்பிலல்ல கிளாமரில்.


மாடர்ன் உலகத்தில் ஸ்கைப் காலிலே நிச்சயதார்த்தம் செய்து கொள்வது, கிட்டாரை பெண்ணின் உடலாக வர்ணிக்கும் காட்சிகளில் பூரி ஜகன்நாத் ரசிக்க வைக்கிறார். இன்டர்வல் வரை காதல் காமெடி என அழகாக பயணம் செய்யும் படம், இடைவேளைக்குப் பிறகு வழக்கமான பழிவாங்கும் பாதையில் வியக்கத் தக்க அம்சங்கள் ஏதுமின்றி , நாம் எதிர்பார்த்தவாறே பயணிப்பது ஸ்வாரஸ்யத்தைக் குறைத்து, கடைசியில் இதுவும் வழக்கமானதெலுங்கு படம்தான் என்று தோன்ற வைத்துள்ளது.


மொத்தத்தில், "இத்தரம்மாயிலதோ" பழைய காலத்து பழிவாங்கும் கதை தான், வழக்கமான தெலுங்கு சினிமாதான். ஆனால் அதை ஸ்டைல் அம்சங்களுடன் வழங்கியுள்ள   விதம் தான் புதுமை.    
நன்றி - தினமலர்
 a





Saturday, December 08, 2012

நடிகைகள் சமூக வலைத்தளங்களில் இருந்தா..... - நடிகை அமலா பால் பர பரப்புப்பேட்டி

http://moviegalleri.net/wp-content/gallery/amala-paul-hot-in-red-saree/amala_paul_hot_in_transparent_red_saree_stills_-1625.jpg 


அமலாபால் பேட்டி

விஜய் பேசறதே அபூர்வம்!

ராகவ்குமார்

அமலாபால் பார்ப்பதற்கு முன்பைவிட அழகாகவும், இளமையுடனும் இருக்கிறார். சமீபத்திய போட்டோ ஷூட்களில் கிளாமராகவும், மாடர்னாகவும் இருக்கிறார். கொஞ்ச காலமாக மீடியாக்களில் பேசப்படாமல் இருந்தவர் மறுபடியும் கோடம்பாக்கத்தில் முகாமிட்டிருக்கிறார். பேச ஆரம்பித்தால் சின்னப் பொண்ணா இது என்று ஆச்சர்யப்படும் அளவுக்குப் பேசுகிறார்.
வாய்ப்பு குறைவதால் கிளாமர் பக்கம் திரும்பிட்டீங்களா?
கிளாமரா நடிக்கறதால மட்டும் எந்த ஒரு இயக்குனரும் வாய்ப்பு தரமாட்டார். இந்த நடிகையால் இந்த கேரக்டரை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தால் மட்டும் தான் வாய்ப்பு கிடைக்கும். மைனாவில் வில்லேஜ் கேரக்டரில் வந்ததால், அந்தப் பாதிப்பில் நிறையபேர்அமலா நீங்க கிளாமரா பண்ணுவீங்களான்னு ஆச்சர்யமா கேட்கறாங்க. நான் சினிமாவில் வர்றதுக்கு முன்னாடி மாடலிங்கில் இருந்தேன். எனது லைஃப் ஸ்டைல் மாடர்னாகத்தான் இருக்கும். அடிப்படையில் நான் மாடர்னான பொண்ணு. ஒரு நடிகையாக எல்லாவித கேரக்டரிலும் செய்யணும்ன்னு நினைக்கிறேன். இதில் கிளாமரும் ஒன்று. மத்தபடி வாய்ப்புக்காக கிளாமர் பக்கம் திரும்பலை."
அப்புறம் ஏன் இந்த இடைவெளி?

இந்த வருஷ ஆரம்பத்தில் நிறைய படங்கள் நடிச்சதால, ஏற்பட்ட ஸ்ட்ரெசில் உடம்பு சரியில்லாம போச்சு. ஸோ, நிறைய படங்களில் கமிட் பண்ண முடியலை. சினிமாவில் நடிச்சாலும் படிப்புமேல எனக்கு ஈடுபாடு அதிகம். நான் படிச்சுக்கிட்டிருந்த பி.. கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் கடைசி செமஸ்டர் எக்ஸாமை சமீபத்தில்தான் எழுதினேன். நடுவில் படிக்கப் போய்ட்டேன். தெலுங்கில் ராம்சரண், அல்லுஅர்ஜுன், மலையாளத்தில் மோகன்லால் இவங்களோட நடிச்சிட்டு, இப்போது ஜெயம் ரவியுடன்நிமிர்ந்து நில்’, விஜய்யுடன் பெயரிடப் படாத படங்களிலும் நடிக்கிறேன். என்னை நடிகையா உலகத்துக்குக் காட்டிய தமிழ் சினிமா எனக்கு தாய்வீடு மாதிரி."
ஏன் மீடியாவை விட்டு ஒதுங்கியே இருக்கீங்க?
சும்மா பப்ளிசிட்டிக்காக மீடியாவில் வந்து பேசறதில் எனக்கு உடன்பாடு இல்லை. என் படங்கள் வரும் போது கண்டிப்பாக மீடியாவில் வருவேன். இப்ப எனது படங்கள் வரப் போகுது. உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன். மீடியாவை விட்டு ஒதுங்கி இருக்க முடியாது. மீடியா இல்லாமல் நான் இல்லை."
விஜய்கூட என்ன பேசுனீங்க...

விஜய் பேசறதே அபூர்வம். பேசினாலும் கொஞ்சமாத்தான் பேசுவார். இளையதளபதின்னு நிறைய பேர் கொண்டாடற ஒரு ஸ்டார் இவ்வளவு அமைதியா, ஆர்ப்பாட்டம் இல்லாம இருக்கறதை பிரமிச்சுப் பார்த்தேன்."
சமீபத்தில் காலேஜ் முடிச்சிருக்கீங்க... காலேஜ் லைஃப் எப்படியிருந்தது?
நான் படிச்சது லேடிஸ் காலேஜ். அதனால கேம்பஸில் காதல் அனுபவங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் எனக்கு லவ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அதெல்லாம் குழந்தைத்தனமா சின்ன வயது லவ். இப்ப சினிமாவை மட்டும்தான் லவ் பண்றேன். இந்த வருஷ வாலண்டைன்ஸ் டே அன்னைக்கு என் வீட்டுக்கு நிறைய கிஃப்ட் அயிட்டங்கள் எனக்கு லவ்வைச் சொல்லி வந்தன. ஒரு நடிகையாக வந்த பின்பும், பிரமிப்பா பார்க்காம ஒரு சாதாரண பொண்ணுக்கு வர்ற மாதிரி இத்தனை லவ் லெட்டர் வந்தது சந்தோஷமாக இருந்தது."
ஒரு நடிகையாக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இருக்கறது சரியா?

நடிகையாகவும், சாதாரண பொண்ணாகவும் இது மாதிரி சோஷியல் நெட்வொர்க்கில் இருக்கறது தப்பு கிடையாது. பொண்ணுங்களுக்கு நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடியுது. என் நடிப்பைப் பத்தி சொல்லக்கூடிய கமெண்ட்ஸ் எனக்கு பயனுள்ளதாக இருக்கும். நான்காவது படிக்கிற பசங்ககூட சோஷியல் நெட்வொர்க்கில் இருக்காங்க. சின்னக் குழந்தைகள் இதை யூஸ் பண்றப்ப பேரண்ட்ஸோடு கன்ட்ரோல் கண்டிப்பாக இருக்கணும். சின்மயிக்கு நடந்தது மோசமான கசப்பான அனுபவம். சைபர்கிரைம் சட்டங்கள் இன்னும் கடுமையாக இருக்கணும். என்னிடம் ஆபாசமாகவோ, மோசமாகவோ யாரும் கமெண்ட் பண்ணியதில்லை."
உங்களுக்குப் பிடிச்ச பையன் எப்படி இருக்கணும்?
பெண்களை மதிக்கக்கூடியவனா இருக்கணும்."
சாப்பாட்டில் உங்களுக்குப் பிடிச்சது?
முப்பொழுதும் உன் கற்பனைகள்ஷூட்டிங்குக்காக வெளிநாடு போனப்ப நிறைய சாப்பிட்டு உடம்பு முடியாம போயிடுச்சு. சாப்பாட்டில் இது அதுன்னு பாரபட்சம் பார்க்கமாட்டேன். ஹைதராபாத் போனா பிரியாணி, சென்னை வந்தா பொங்கல்னு எல்லாத்தையும் ஒரு பிடி பிடிப்பேன்."
உங்களிடம் எது அழகு?
நீங்க எல்லோரும் சொல்ற மாதிரி என் கண்கள்!"
எப்ப கல்யாணம்?
இப்பதான் எனக்கு 21 வயசு. கல்யாணத்துக்கு மெதுவா பையனைப் பார்க்கலாம்."


நன்றி - கல்கி  



http://www.teluguwave.in/wp-content/gallery/amala-paul-latest-hot-stills/amala-paul-latest-hot-stills-10.jpg