Monday, January 30, 2012

கேரள நாட்டிளம் பெண்களுடனே -கேரள NAUGHTYஇளம் பெண்கள் (ஜோக்ஸ்)

1.கட்ஸ் ( GUTS) இருப்பவர்கள் கர்மா படத்தில் நடிக்க வரலாம் # அண்ணே, என் கிட்டே கொஞ்சம் விட்ஸ் இருக்கு ஒரு லட்சம் ஜோக்ஸ்தேறும், மே ஐ கம் இன்?


------------------------------

2. நடப்பது திமுக ஆட்சியே மாதிரியே உள்ளது-விஜயகாந்த் வேதனை # டாஸ்மாக்கில் மிதப்பது எல்லாமே கேப்டன் போலவே உள்ளது - ஜெ பதிலடி

--------------------------------

3.டேமேஜர் -வேலை செய்யும் இட‌ம் கோவில் புரியுதா?

  ஓ! தாங்க்ஸ் சார், அப்போ இனி லஞ்ச் கொண்டு வர வேணாமா சார்? 12 மணிக்கு அன்னதானம் உண்டுதானே?

---------------------------

4. சவுமி - உப்புமா செஞ்சா எங்க வீட்ல சண்டை வராது..

நவமி - நீங்க உங்க வீட்டை காலி செஞ்சா அதாவது ஆஃபீஸ் கிளம்பிட்டாக்கூட சண்டை வராதாமே?

--------------------------------

5. எங்க வீட்ல யாருக்காவது கோபம்னா உப்புமா செய்வேன்.. ஏன்னா என் மேல இருந்த கோபம் உப்புமா மேல திரும்பிடும் , மீ எஸ்

-------------------------------

6. கார்க்கி - டேய் நாயே, நீ எழுதறதெல்லாம் ஒரு ஜோக்கா?ஜோக்னு அதைவெளீல சொல்லிக்காதே?

அப்டி ஓப்பனா சொல்லலைன்னாயார்க்கும் அது ஜோக்னு தெரியாதே?

-------------------------------

7. ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும் தண்டனை # பொது அறிவை வளர்த்துக்கறதுக்காக கேட்கறேன், அது எந்த ஊர்ல? ஹி ஹி

----------------------------
8. உங்க கவிதையை படிச்சேன், சகிக்கலை..

ஒழுங்கு மரியாதையா என்னை லவ் பண்ணிடு,இல்லைன்னா டெயிலி கவிதை எழுதியே உன்னை கொன்னுடுவேன்

----------------------------

9. ஜட்ஜ் - எதுக்காக ஒரு நடிகரை கேவலமா பேசுனீங்க?

கைதி - போங்க யுவர் ஆனர், நடிகையையும் கேவலமா பேசக்கூடாது,நடிகரையும் கேவலமா பேசக்கூடாதுன்னா எங்கள்க்கு எப்படித்தான்  பொழுது போகும்?

--------------------------------------

10.பெற்றோரும், உற்றாரும் படித்து மனம் களிக்கும்படி நம் படைப்புகள் இருக்கனும், முகம் சுளிக்கும்படி அல்ல # சுவாமி அட்வைஸானந்தா

-------------------------------

11.பொதுவா பொண்ணுங்க தன்னை விட உயரமான ஆணைத்தான் விரும்பறாங்க, ஏன்?

ஏன்னா அவங்க கண்ணுக்கு நேர் ஆணின் சர்ட் பாக்கெட் தெரியும் கோணத்தில் இருந்தா வசதி

----------------------------

12.டியர், உன்னை உப்பு மூட்டை தூக்கவா?

வேணாம், காதல்ல எதுக்கு கசப்பு? சர்க்கரை மூட்டை தூக்குங்க

-------------------------

13.டியர், எதுக்காக என் கழுத்தையே பார்க்கறீங்க? அவ்ளவ் அழகா?

அதில்லை, நீ போட்டிருக்கற செயினை அடகு வெச்சா ஒரு லட்சம் தேறும் போல :)

-----------------------------------

14. அத்தான், நான் காலேஜ் படிக்கறப்ப  என்னை ஏகப்பட்ட பேர் ஃபாலோ பண்ணுவாங்க..

ஓஹோ, உன் பிளாக்ல எப்படி இத்தனை ஃபாலோயர்ஸ் சேர்ந்தாங்கனு இப்போ தெரிஞ்சிடுச்சு

----------------------------------------

12. டியர், நொறுக்குத்தீனி சாப்பிடறதை நிறுத்து.

ஓக்கே, என் மேல தான் எவ்ளவ் அக்கறை? என் பாதி சம்பளம் நீயே தின்னு தீர்த்துடறே.

----------------------------------

13. டியர், நீ எதுக்கு யூ நெக் (U NECK) ஜாக்கெட் போட்டிருக்கே?

சினிமா சென்சார் சர்ட்டிஃபிகேட் போல UNIVERSAL, அனைவரும் பார்க்கலாம்னு அர்த்தம்

----------------------------------

14. ஆபரேஷன் சக்சஸ், இன்று முதல் நீ புது பிறவி எடுத்திருக்கே.

தாங்க்ஸ் டாக்டர், அப்போ எனக்கு ஒரு புது சம்சாரம் கிடைக்குமா?


--------------------------------------

15. டியர்,நோ சினிமா, நோ பீச் ,ஒன்லி கோயில்னு சொல்றியே, நீ அவ்ளவ் நல்லவனா?

ஹி ஹி கோயில் போனாத்தான் செலவு இல்ல, அங்கேயே பிரசாதம் தருவாங்க

--------------------------------

16. கமிஷனர் - நீங்க அந்த கொலைகாரனை அவனுக்கே தெரியாம ஃபாலோ பண்ணுங்க

பேக்கு S.I - லூசா சார் நீங்க, நான் ஃபாலோ பண்ணுனதும் மெசேஜ்ல தெரிஞ்சுடுமே

-------------------------------

17. S.S குமரனின் கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்துக்கு எதிராக போராட்டம் # ஒரு வேளை கேரள NAUGHTYஇளம் பெண்கள் பற்றி எதும்  சொல்லி இருப்பாரோ?

------------------------

18. ஜட்ஜ் - நாட்ல ஜாதிப்பிரச்சனையை தூண்டி விட்டதுக்காக உங்களுக்கு 2 வருஷம் ஜெயில் தண்டனை.

ராம்தாஸ் - யுவர் ஆனர், எனக்குப்பதில் என் கட்சி தொண்டர்கள் அந்த தண்டனையை அனுபவிப்பார்கள்

--------------------------------------

19. கடற்கரையோரங்களில் மட்டும் ஏன் இத்தனை சர்ச்சுகள் புதிதாக கட்டப்படுகின்றன?

ஏன்னா பாவம் செஞ்சுட்டு கையோட மன்னிப்பு கேட்க வசதியா இருக்குமே?

---------------------------------------

20.புதுசா ட்விட்டர்க்கு வந்த ஃபிரண்ட் கேட்கறான்” யாரோ சவுமியாமே, அவங்க எப்போ டைம் லைன்  வர மாட்டாங்கன்னு சொல்லு, அப்போ ட்வீட் போடறேன்”கறான்

12 comments:

கும்மாச்சி said...

சி.பி. மீ த பஸ்ட்

லட்சம் ஜோக்ஸா, யூ கேன் கம் இன்.

Admin said...

நகைச்சுவை-நகை+சுவை

sutha said...

: )

ஹாலிவுட்ரசிகன் said...

நாட்டிளம் என்ற ஒரு தமிழ் வார்த்தையை பிரித்து மேய்ந்து புதிய அர்த்தத்தை உண்டாக்கிய உங்களுக்கு அடுத்த வருட தமிழ்பாண்டித்திய விருது நிச்சயம். ஹி ஹி

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!அந்த ஆறாவது ஜோக் யாருக்கு உள்குத்து?ஹி!ஹி!ஹி!!!!

Anonymous said...

ட்வீட்ஸ்...ஸ்வீட்....

ராஜி said...

தூங்குறதுக்கு முன் சிரிச்சாச்சு

உணவு உலகம் said...

சூப்பர் டுவிட்ஸ்.

rajamelaiyur said...

Kalakkal twitts

துரைடேனியல் said...

ஜோக்ஸ் அனைத்தும் அருமை. எங்கெருந்துதான் இவ்வளவு ஜோக்ஸ் உங்களுக்கு கிடைக்குதோ தெரியவில்லை. உண்மையிலேயே இது ஒரு சாதனைதான். வாழ்த்துக்கள் சகோ!

தமஓ 6.

Yaathoramani.blogspot.com said...

அனைத்து நகச்சுவைத் துணுக்குகளும் மிக மிக அருமை
ரசித்துச் சிரித்தேன்
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

5 என் இனமடா நீ!