Tuesday, January 24, 2012

என் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை

Illusion picture 
                                                         
ரத்னா புடவை கடையே செல்வாவுக்காக காத்திருந்தது. செல்வா வந்தபின்தான் கடையை திறக்கனும்னு முதலாளி சொல்லிட்டார். செல்வா அந்த கடையின் சேல்ஸ்மேன்.


ஒரு சேல்ஸ்மேனுக்காகவா கடை திறப்பதில் தாமதம் பண்றார் முதலாளி. . ஆனாலும்,  முதலாளி செல்வாவுக்கு ரொம்பதான் இடம் குடுக்குறார். ன்னு மற்ற சேல்ஸ்மேன்கள் முணுமுணுக்க தொடங்கிய சமயத்தில் அவசர அவசரமாக கடைக்குள் நுழைந்தான் செல்வா.


வழிகின்ற வியர்வையை துடைத்தபடியே முதலாளி அறைக்குள் சென்ற செல்வா, சார் இன்னிக்கு என் மனைவிக்கு பிறந்த நாள். அதனால கோவிலுக்கு போயிட்டு வர கொஞ்சம் லேட்டாகிடுச்சு. மன்னிச்சுக்கோங்க சார் என்றான்.

 சரி சரி போய், வேலையை பாரு. குடோனுக்கு போய் நல்ல சேலையா பார்த்து செலக்ட் பண்ணி, அதை பொம்மைகளுக்கு கட்டின பிறகுதான் கடையை திறக்கனும். ம் ம் சீக்கிரம் போய் வேலைகளை பாரு. சாய்ந்தரம் வீட்டுக்கு போகும்போது என்னை பார்த்துட்டு போ.


சரி சார் என்று சொல்லி அறையை விட்டு வந்து குடோனுக்கு போய் இருப்பதிலேயே நல்ல புடவையாய் தேர்ந்தெடுத்து வேகவேகமாக பொம்மைகளுக்கு கட்ட ஆரம்பித்தான்.

மத்த கவுண்டர்களைவிட இவன் கவுண்டர்லேயே பெண்கள் சேலையை எடுக்க போட்டியிட்டனர். அண்ணா இந்த சேலையை எப்படி கட்டுறதுன்னு கொஞ்சம் கட்டி காட்டுகங்கண்ணா, தம்பி இந்த முந்தானையை எப்படி சொருகனும்ன்னு கொஞ்சம் செஞ்சு காட்டேன்.  சார், இந்த சேலை சாயம் போகுமான்னு ஆளாளுக்கு கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லி அவர்கள் கேட்கும் புடவையை எடுத்து தந்து வியாபாரத்தை கவனித்தான்.

மணி எட்டடித்ததும் எல்லாரும் துணிகளை ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, வீட்டிற்கு செல்ல துவங்கினார்கள். ரவியும், செல்வாவும் பேசிக்கொண்டெ முதலாளி அறை நோக்கி செல்ல துவங்கினர்.

டேய் ரவி! எதுக்குடா என்னை முதலாளி வீட்டுக்கு போகும்போது பார்த்துட்டு போக சொன்னார்.

ம்ம்ம் துரை சொல்லாம கொள்ளாம லேட்டா வந்தீங்களே, அதுக்கு பாராட்டு பத்திரம் வசிக்கத்தான் வர சொல்லியிருக்க போறாரு. உன் சீட்டை டர்ருன்னு கிழிக்கத்தான்

அப்பிடியா ரவி! எனக்கு பயமாயிருக்குடா. நீயும் கூட வாடா,

டேய் செல்வா உன்கூட வந்தா என் சீட்டும் கிழியும். நீ போ. முதலாளி ரொம்ப திட்டினால் நீ பட்டுன்னு கால்ல விழுந்துடு என்ன? நான் வரட்டா நாளைக்கு பார்க்கலாம்.

சரிடா என்று உதடு உச்சரித்தாலும் ஊரில் இருக்கும் கடவுளையெல்லாம் வேண்டிக்கொண்டு முதலாளி அறைக்குள் நுழைந்தான் செல்வா.

சார், வீட்டுக்கு போகும்போது பார்த்துட்டு போக சொன்னீங்க. இன்னிக்கு மனைவிக்கு பொறந்த நாள் என்பதால்தான் லேட்டாகிட்டுது. இனி இதுமாதிரி லேட்டா வர மாட்டேன் சார், மன்னிச்சுடுங்க சார்.

அட மன்னிப்புலாம் எதுக்கு செல்வா. பத்து நிமிஷம் லேட்டா கடை திறந்ததுனால ஒண்ணும் குடி முழுகிடாது. நீ பொம்மைகளுக்கு சேலை கட்டிவிடும் அழகை பார்க்குறதுக்காகவே பொண்ணுங்கள்லாம் நம்ம கடைக்கு வராங்க.   சாயம் போன புடவைக்கூட நீ பொம்மைகளுக்கு கட்டினால் அந்த புடவைக்கு அழகு கூடி அது போல புடவைதான் வேணும்ன்னு அடம்புடிச்சு பொண்ணுங்க வாங்கிக்கிட்டு போறாங்க.

உண்மையை சொல்லப்போனால், நீ வந்தப்பின்  புடவை விக்குறது அதிகம்தான். அதனால, இன்னிக்கு உன் பொண்டாட்டிக்கு பொறந்த நாள்ன்னு சொன்னியே இந்தா இந்த புடவை கொண்டு போய் உன் பொண்டாட்டிக்கு கட்டிவிடு அதுக்காகத்தான் உன்னை வர சொன்னேன் போய் பொண்டாட்டி கூட ஜாலியா இரு.

அட வெட்கப்படாதே செல்வா, வெறுங்கையோட போகாதே இந்தா இந்த ரூபாயில கொஞ்சம் ஸ்வீட்டும், நிறைய பூவும் வாங்கிக்கிட்டு போ பொண்டாட்டி சந்தோஷப்படுவா. கூச்சப்படாதேடா  நீ என் மகன் போல எனக்கூறி ஐநூறு ரூபாய் தாளை திணித்தார்.

சரிங்க சார் என்று கூச்சப்பட்டவாறே வாங்கிகொண்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். ஸ்வீட் ஸ்டாலை கண்டதும் முதலாளி சொன்னது நினைவுக்கு வர, அவளுக்கு ரசகுல்லான்னா ரொம்ப பிடிக்கும் என்பது நினைவுக்கு வர, ஒரு கிலோ ரசகுல்லா வாங்கி கொண்டான். 

நடைப்பாதை கடையில் வழக்கமாக பூ விக்கும் பாட்டியிடம் அவளுக்கு முல்லைன்னா ரொம்ப பிடிக்கும் என்பது நினைவுக்கு வர பத்து முழம் மல்லி குடு பாட்டின்னு கேட்கும்போது என்ன  வழக்கத்தைவிட அதிகமா பூ வாங்குறே,  இன்னிக்கு என்னடா விசேஷம்ன்னு கேட்ட பாட்டிக்கு,  இன்னிக்கு என் பொண்டாட்டிக்கு பொறந்த நாள் பாட்டி. 

பார்த்துடா பத்து முழம் மல்லிப்பூ வாங்கிட்டு போறே, நாளைக்கு நீ வேலைக்கு போகனும் பொங்கல் நெருங்குறதால உடம்பு டயர்டாகி லீவு போட்டே முதலாளி வேலையை விட்டே தூக்கிடுவார். ச்சீ போ பாட்டின்னு சொல்லி ”மல்லிகை இந்த மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா”ன்னு ஹம்மிங்க் செய்தவாறே, கதவை திறந்து வீட்டுக்குள் சென்றான்.

நிர்மலா, இன்னிக்கு நான் உன் பொறந்த நாள்ன்னு கோயிலுக்கு போயிட்டு வேலைக்கு போக லேட்டாகிட்டுது. கடை திறக்காமல்ன்னு ஆரம்பிச்சு மூச்சு விடாமல் காலையில் ஆரம்பித்து பூக்கார பாட்டியின் கிண்டல் வரை எல்லாவற்றையும் சொல்லி முடித்தவாறே.. முதலாளி தந்த சேலை நீ ரொம்ப நாள் ஆசையா கேட்டியே அந்த கலர் அந்த டிசைன். கடையில இருக்குற பொம்மைக்குலாம் நான் புடவை கட்றேன் என் ஆசை பொண்டாட்டி உனக்கு நானே இன்னிக்கு புடவை கட்டிவிடப்போறேன் என்றவாறே..,மளமளவென புடவைக்கு மடிப்பு எடுத்து அமரர் ஆன  மனைவியின் சிலைக்கு சேலை கட்ட ஆரம்பித்தான் செல்வா...,

34 comments:

முத்தரசு said...

வணக்கம் சி பி

கோவை நேரம் said...

காலை வணக்கம்

கோவை நேரம் said...

ரொம்ப உருக்கமான கதை

சேகர் said...

super

ஹாலிவுட்ரசிகன் said...

காலை வணக்கம் சி.பி.

நல்ல கதை.

ஹாலிவுட்ரசிகன் said...

Inception முடிவுல மாதிரி இவரு லூசா ... இல்லயான்னு யோசிக்க வச்சுட்டீங்களே.

Chitra said...

நீங்கள் எழுதி , நான் வாசிக்கும் முதல் சிறுகதை இது என்று நினைக்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

@ஹாலிவுட்ரசிகன்

1st i write as he submit that saree in front of wife foto, then i change to bring the logic of the tittle

சி.பி.செந்தில்குமார் said...

>>Chitra said...

நீங்கள் எழுதி , நான் வாசிக்கும் முதல் சிறுகதை இது என்று நினைக்கிறேன்.

hi hi ,i had written a lot, but blog submitted is less due to trafic source hi hi

Anonymous said...

nice story,

உணவு உலகம் said...

முடிவில் சோகம்.:(

Unknown said...

முதல் சிறுகதை மாதிரி தெரியலையே...!ஒரு பக்க சிறுகதை நச்! முடிவு சோகம்....

தமிழ்வாசி பிரகாஷ் said...

ட்விஸ்ட் இருக்கும்னு நெனச்சேன்.... ஆனா இந்த ட்விஸ்ட்டை எதிர்பாக்கல...

Marc said...

arumai naala muyarse!!

arul said...

sogamana mudivu

ராஜி said...

யாராவது இறந்துட்டால் போட்டோக்கு மாலை, சந்தனம், குங்குமம் வச்சு சாமியா கும்புடுவது நம்ம ஊர் வழக்கம். ஆனால், சிலை? ஒருவேளை,
ஈரோடுல அப்படிதான் வழக்கமோ?!

ராஜி said...

யாராவது இறந்துட்டால் போட்டோக்கு மாலை, சந்தனம், குங்குமம் வச்சு சாமியா கும்புடுவது நம்ம ஊர் வழக்கம். ஆனால், சிலை? ஒருவேளை,
ஈரோடுல அப்படிதான் வழக்கமோ?!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கொஞ்ச நாள் வர்ல..
அதுக்குள்ள இவ்வளவு மாற்றமா..

பிளாக் அழகாகிவிட்டது..

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!உண்மையைச் சொல்வதென்றால்,இந்த முடிவை நான் எதிர்பார்த்தேன்!முதல் கதையோ?சஸ்பென்சாக நகர்த்தத் தெரியவில்லையே??????

Thoduvanam said...

சேலையும் சிலையும்.சின்னக் கதை.நீங்க சொன்ன விதம் சூப்பர்..வாழ்த்துக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லதொரு சிறுகதை..

வாழ்த்துக்கள்...

hotkarthik said...

கதை செம சூப்பர். கதைய எழுதியவர்க்கு எனது வாழ்த்துக்கள்

Admin said...

நல்ல கதை வாழ்த்துகள் தோழர்.
தொடர்ந்து சிறுகதை எழுதலாமே..

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

எழுத்து நடை, கதை நகர்த்திய விதம் அருமை,
அப்புறம் வேண்டிய இடங்களில் உரையாடல் பாணியில் வசனங்கள் அமையும் போது பிரித்துக் காட்டுவதற்கு மேற்கோட் குறி சேர்த்திருக்கலாம். இன்னும் சிறப்பாக இருக்கும்!

முடிவில் அமரரான மனைவிக்கு சேலை கட்டியது...சினிமாப் பாணி முடிவினைக் காட்டுகின்றது. இதே பாணியில் ஓர் குறும்படமும் எனக்கு பார்த்த ஞாபகம் இருக்கிறது.

நிரூபன் said...

பாஸ்..அந்த படம் என்னவென்று மெயிலுக்கு அனுப்புறேன்.

சென்னை பித்தன் said...

தொடர்ந்து சிறுகதைகள் எழுதலாமே!

Mohamed Faaique said...

என்னடா கதை ஒரு டுவிஸ்ட்டே இல்லாம போய் கிட்டு இருக்கே’னு யோசிச்சேன். கடசில வச்சீங்க பாருங்க ஒரு உலக மகா டுவிஸ்ட்டு....
செம...

aman said...

பையனுக்கு இம்புட்டு அறிவா னு உங்க மேல பொறாமை

RAMA RAVI (RAMVI) said...

அடப்பாவமே!!ரொம்ப வருத்தமாக போய்விட்டது முடிவை படித்த போது.

ad said...

வணக்கம்.
இப்புடியெல்லாம் எழுதுறீங்கள்ல.
அப்புறம் எதுக்கு சார் கில்மா,விஜய்,பவர்ஸ்டார்,கும்மி... என்று டைம் வேஸ்ட் பண்றீங்க.?

திறமைய வேஸ்ட் பண்ணாதீங்க.இந்தமாதிரி பதிவ எழுதிக்கிட்டு, வாரத்துல ஒரு பதிவோ ரெண்டு பதிவோ வேணும்னா உங்களோட ஆசைக்கு டைம்வேஸ்ட் பதிவுகளை எழுதுங்க.

தமிழ் பையன் said...

இப்படி எல்லாம் கதை எழுதினா, உங்களுக்கு சிலை வச்சிரப் போறாங்க பாஸ்.. :-)

ஹேமா said...

கதை பிடிச்சிருக்கு.இன்னும் உங்களால் அழகாக்க முடியும் !

தீபிகா(Theepika) said...

அழகாய் நகர்ந்த போன கவிதை முடிவில் வீதி விபத்தை போல எதிர்பாராத வலியை தந்து திடுக்கிட்டு நிற்க வைத்து விட்டது. நன்று. பாராட்டுக்கள். நிஜமாக நடக்கக்கூடாத கற்பனைக் கதையாக இது என்றும் இருக்கட்டும்.

கடம்பவன குயில் said...

முதலில் எழுதியது போலவே தெரியவில்லை. தேர்ந்த சிறுகதை எழுத்தர்போன்று கதையை நகர்த்தினீர்கள். நீங்கள் எழுதிய பழைய கதையை பதிவிட்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். இதற்குப்பின் இன்னம் மெருகூட்டி நிறைய எழுதியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றாய் பதிவிடுங்கள். படிக்க நாங்க ரெடி.