Monday, January 16, 2012

கொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்

http://www.rajtamil.com/wp-content/uploads/2012/01/Kollaikaran-Movie-Online.jpg 

டைட்டிலை பார்த்ததும் எனக்கும், என் நண்பன்க்கும் ( விஜய் அல்ல) ஒரு வாதம்.. நான் சொன்னேன் ஏதோ பேங்க் கொள்ளையை அடிப்படையா வெச்சு எடுக்கப்பட்ட வித்தியாசமான கிராமக்கதையா இருக்கும்னேன்.. அவன் சொன்னான், ஹீரோயின் மனசை கொள்ளை அடிச்ச ஹீரோவோட லவ் ஸ்டோரின்னான்..  கடைசில  2 பேரும் தோத்துட்டோம்... 

விமர்சனத்துக்குள்ளே போறதுக்கு முன்னே நான் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கறேன்.. தமிழ் அகராதில திருட்டுக்கும், கொள்ளைக்கும் வித்தியாசம் தெளீவா சொல்லப்பட்டு இருக்கு.. சின்னதா திருடுனா , அதாவது எம் எல் ஏ திருடுறது எல்லாம் திருட்டு.. அவன் திருடன்..  ஆ ராசா மாதிரி பல்க்கா கொள்ளை அடிச்சா அது கொள்ளை, கொள்ளைக்காரன்.. அது தெரியாம சின்ன சின்ன திருட்டு பண்ற ஹீரோவோட கதைக்கு எதுக்கு கொள்ளைக்காரன் டைட்டில்?

பருத்தி வீரன் ஹிட் ஆன பிறகு நம்ம கோடம்பாக்கம் இயக்குநர்கள் கத்துக்கிட்ட மேட்டர் இன்னான்னா ஹீரோ தலையே சீவக்கூடாது, ஹேர் கட் பண்ணக்கூடாது, தலைக்கு ஆயிலே தடவக்கூடாது.. ( ஹீரோயினை தடவவே நேரம் சரியா இருக்கு ) கேவலமான தாடி வெச்சிருக்கனும் ( டி ஆர் மன்னிக்க )

இந்த ஃபார்முலாவுக்கு பங்கம் வந்துடாத படி மைனா விதார்த்  இந்த படத்துல ஹீரோவா வர்றார்.. அண்ணனோட தொழில் இன்னான்னா  ஆடு திருடறது ( நன்றி - தென் மேற்குப்பருவக்காற்று), மோட்டார் , கைக்கு கிடைச்ச எந்தப்பொருளையும் திருடி வித்து காசு பார்க்கறது..ரொம்ப கஷ்டப்பட்டு இந்த தொழிலை செய்யறார்.. .

ஹீரோயின் புதுசு , இளசு.. நந்தியாவட்டைப்பூ மாதிரி அழகிய முகம்.. ( தமிழனோட பண்பாடு என்னான்னா பெண்களை அவன் என்னைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டான்.. ) பாப்பா டுட்டோரியல் காலேஜ் போய் இம்ப்ரூவ்மெண்ட் எக்ஸாம்க்கு படிக்குது. பாவம் பாப்பா அதனோட லைஃப்ல ஆம்பளைங்களையே பார்த்தது இல்ல போல..  பல் துலக்காத, தலை சீவாத, தாடி வெச்ச பக்கிரி மாதிரி இருக்கற ஹீரோவை பார்த்த உடனே காதல் வந்துடுது.. 

http://reviews.in.88db.com/images/Kollaikaran-movie-press-meet/Kollaikaran-movie-press-meet-Sanchita-Shetty-pics.jpg

நான் தெரியாம தான் கேக்கறேன்.. நாங்க எல்லாம் தலைகீழா நின்னு பார்த்தும், பல சாகசங்கள் பண்ணிப்பார்த்தும் கண்டுக்காத பொண்ணுங்க இந்த சினிமால மட்டும் பார்த்த அடுத்த செகண்டே லவ் பண்ற ரகசியம் என்ன? 

பஸ்ல ஹீரோயின் போகுது. அப்போ ஹீரோ ஒரு திருட்டு மோட்டார் எடுத்துட்டு பஸ்ல ஏறுகிறார்.. ஒரு கை பிடிங்க அப்டின்னு ஹீரோ சொல்றார், அப்போதான் முத டைமா ஹீரோயின் அந்த கேவலமான ஹீரோவை பார்க்கறார்.. உடனே லவ்  வந்துடுது.. இதை படிச்சு பார்க்கறவங்க உடனே நாமும் அதே போல் ட்ரை பண்ணலாம்னு ஏதாவது  மோட்டார் திருட போயிடாதீங்க.. உதை தான் கிடைக்கும்.. 


இப்போ ஆடியன்சில் ஒருத்தன் பெட் கட்றான். நீங்க வேணா பாருங்க. ஹீரோயின்க்கு ஹீரோ திருடன்கற மேட்டர் தெரிய வரும்போது இடைவேளை விடுவாங்கன்னு. அதே மாதிரி தான் நடந்தது அடங்கோ.. 


வில்லனை பற்றி சொல்லனுமே.. வில்லன் பயங்கரமான ஆள்.. ( அப்படி இருந்தாத்தாம் அவன் வில்லன்) ஏகப்பட்ட காசு இருக்கு, செல்வாக்கு இருக்கு , கோயில் குருக்களோட 40 வயசு சம்சாரம் இன்னைக்கோ நாளைக்கோ செத்துடும்போல , பார்க்கவே பரிதாபமா இருக்கற ஒரு ஆண்ட்டிஅதாவது மாமி மேல ஒரு  கண் வைக்கறாரு.. வெக்கறதே வெக்கறோம் 2 கண்ணையும் ஏன் வைக்கலைன்னு அவர் மனசாட்சி கேட்கல போல.. அவரு மாமியை ரேப்பிடறார்

கோயில் நகைகளை வில்லன் கொள்ளை அடிச்சு அவர் வீட்டு பீரோவுக்குள்ள  வைக்கறார். ( எந்த லூசாவது கொள்ளை அடிச்ச நகையை அவன் வீட்டுக்குள்ள வைப்பானா? )

ஹீரோயின் கோவிச்சுக்கிட்டதால ஹீரோ டகார்னு திருந்தி நல்லவன் ஆகிடறார்.. இனிமே திருடமாட்டேன்னு சொல்லிடறார்.. ஆனா வில்லன் பழியை ஹீரோ மேல போட்டு அடிக்கறார்.. இப்போதான் டைரக்டர் யோசனை பண்றார்.. சிம்பதி பத்தலை இன்னும் என்ன பண்ணலாம்னு அவரோட அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் 15 பேர்ட்டயும் ஐடியா கேட்டு ஹீரோவோட மன வளர்ச்சி குன்றிய தங்கயை சம்பந்தமே இல்லாம வில்லன் கொலை பண்றார்.. 

பொங்கி எழுந்த ஹீரோ ( பொங்கல்-பொங்கி )  பொங்கி அண்ணன்  வில்லனை கொலை செஞ்சுடறார்.. 10 வருட தண்டனை முடிஞ்சு அவர் ரிலீஸ் ஆகி வரும்போது படத்தோட ஒப்பனிங்க்ல ஹீரோயின் எப்படி இருந்தாரோ அதே மாதிரி ஃபிரெஸ்ஸா , தலைல ஒரு முடி நரை கூட இல்லாம ஹீரோயின் கல்யாணம் கட்டி சந்தோஷமா வாழ்றார்.. சுபம். அவ்வ்வ்வ்வ்

ஹீரோ விதார்த்க்கு நடிப்பு வருதோ இல்லையோ காமெடி கொஞ்சம் வருதோ தப்பிச்சார்.. ஊர்ல ஒரு பய பாக்கி விடாம நான் எப்படி இருக்கேன்? என கூலிங்க் கிளாஸ் போட்டு காமெடி பண்றது ஓக்கே.. சோக நடிப்பில் பாஸ் மார்க்.. அக்காவிடம் வாதம் செய்வது, தங்கையிடம் பாசம் பொழிவது, அக்கா கணவரிடம் சண்டை போடுவது எல்லாம் குட்

ஹீரோயின் புதுமுகம்  சஞ்சிதா ( நல்லா கவனமா படிங்க, நாட் ரஞ்சிதா) கண்கள், கன்னம் பிளஸ்..  ரொம்ப சாதாரண ஃபேமிலி பொண்ணு மாதிரி இயல்பான தோற்றம்..

ஹீரோவின் அக்கா கணவராக வருபவர் சீமானின் சாயல்.. பொறுமையான நடிப்பு.. வில்லன் நடிப்பு சுமார்.. ஹீரோவின் தங்கை, அக்கா இருவரின் நடிப்பும் கன கச்சிதம்.. 

http://cdn1.supergoodmovies.com/FilesOne/kollaikaran-0c0442a0.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. கொடுத்த கொய்யாப்பழம் கிராமத்து டப்பாங்குத்து பாட்டு படமாக்கிய விதம்.  சாமிக்குத்தம் ஆகிப்போச்சு பாட்டை 2 முறை சரியான விகிதத்தில் சேர்த்தது.. 

2. கதைக்களம்  சேலம் மாவட்டம் ஆத்தூர், திருமங்கலம், கிருஷ்ணாபுரம், அந்தியூர் என்பதால் படத்தில் வரும் பெண் கேரக்டர்கள் அந்த ஏரியா மக்கள் போலவே உடை உடுத்தி வருவது, குறிப்பாக ஹீரோயின் உட்பட அனைத்து பெண் கேரக்டர்களும் கனகாம்பரப்பூ அணிவது அழகு.

3. ஹீரோயின் புதுமுகம் என்றாலும் கண்ணியம் குறையாத கவுரவமான நடிப்பு.. மிக யதார்த்தம்.. 

4. கிராமத்துப்பழக்க வழக்கங்கள், எள்ளல்கள் என படம் முழுக்க கிராம வாசனை.. 


http://www.melisai.com/gallery/data/media/177/TamilBeat.Com%20-%20Kollaikaran%20034.jpg

இயக்குநரின் லாஜிக் மிஸ்டேக்ஸ்

1.  அறநிலைத்துறை அமைச்சகத்திடம் இருந்து வரும் கடிதம் இப்படியா லோக்கல் டைப்ரைட்டரில் அச்சடித்து வரும்? அதில் க்ளோசப் வேறு.. 

2.  பெட்டிக்கடை பெருசு கிட்டே ஹீரோ பெருசு சில்லுன்னு குடிக்க ஏதாவது குடு என்பார்.. அது மட்டும் நல்லா காது கேட்கும் அவருக்கு, அதை தொடர்ந்து வரும் அடுத்த ஷாட்டில் என்ன சொல்றே? என பல டைம் கேட்டு  தான் காது கேளாதவர் என்பதை உணர வைக்கிறார்.
3. அந்தியூர் ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் மொத்தமே 4 கான்ஸ்டபிள்ஸ் தான், ஆனால் படத்தில் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் 2 பேர் காவலுக்கு நிக்கறது மாதிரி அடிக்கடி சீன் வருது.. இப்போ எல்லாம் எந்த ஊர் ஸ்டேஷன்ல அப்படி போலீஸ் வாசல்ல நிக்கறாங்க?

4.  பத்திரத்தில் வில்லன் கையெழுத்து போடறப்ப  வெற்று பதிவுத்தாளீல் சைன் பண்றார். அரை பக்கத்துக்கு சைன் இருக்கு.. அப்புறம் மேட்டரை எங்கே எழுதுவாங்க? தாளின் கடைசி இடத்தில் கொஞ்சமாதானே சைன் பண்ணனும்? எவ்லவ் பெரிய வில்லனாத்தான் இருக்கட்டுமே..

5. கோயில் காளை, வைதேகி காத்திருந்தாள் வரிசைல கோயிலுக்குள் ஃபைட் போடும்  ஹீரோ எதுக்கு அப்டி பண்றார்னு படம் முடிஞ்ச பிறகும் தெரியவே இல்லை.. 


http://tamil.oneindia.in/img/2011/09/21-kollaikaran300.jpg
டி வில போட்டாக்கூட பார்த்துடாதீங்க.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - வேணாம்.. அழுதுடுவீங்க.. என்னோட போகட்டும் .. 

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்.. 

டிஸ்கி -1 படம் டப்பா ஆனதைக்கூட நான் தாங்கிட்டேன்,.. ஆனா வ்ழக்கமா ஆங்கிலப்படங்களை மட்டுமே திரை இடும் வி எஸ் பி தியேட்டர் இந்த படத்தை ரிலீஸ் பண்ணி எதிர்பார்ப்பை ஏற்படுத்துனதை தாங்கவே முடியல. ஃபிரண்ட் சொன்னான்,. இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கும் போல.. அதான் வி எஸ் பில ரிலீஸ் ஆகுதுன்னு.. அவ்வ்வ்வ்

டிஸ்கி 2 - முத ஃபோட்டோல இருக்கற மாபெரும் வெற்றி பார்த்ததும் மனசுக்குள்ள மாபெரும் வெறி எழுது.. வாய் கூசாம பொய் சொல்றாங்கப்பா..

15 comments:

Unknown said...

பதிவுலக விமர்சனத்தில் கொள்ளைக்காரனய்யா நீ.............

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

நீங்கள் போய் இந்த படம் பர்ர்த்து உடன் விமர்சனம்
எழுதி உள்ளீர்கள் .அப்ப படம் மாபெரும் வெற்றிதான்
நண்பா.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

இதுக்கு நீங்கள் மேதை பார்த்து விமர்சனம் எழுதி இருக்கலாம் .
சுவாரசியமாய் இருந்து இருக்கும் .

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

இதுக்கு நீங்கள் மேதை பார்த்து விமர்சனம் எழுதி இருக்கலாம் .
சுவாரசியமாய் இருந்து இருக்கும் .

tamilbooks said...

இந்த மாதிரி படம் பார்த்துட்டு அசராமா அதை பத்தியும் விமர்சம் எழுதுறீங்க பாருங்க. உங்க மன தைரியத்தை பாராட்டி என் கையலா செஞ்ச பொங்கலை பார்சல் அனுப்பறேன்.அதையும் சாப்பிடுங்க சார்...

Unknown said...

ஹேப்பி மாட்டுப்பொங்கல் டே!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

செம பல்பா..?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

டிவியில் போட்டாகூட பார்க்காதீங்கன்னு சொல்லியிருக்கீங்க....

தயாரிப்பாளர் ஆட்டோ எடுத்துகிட்டு ஈரோடு வர்றதா முடிவெடுத்திருக்காராம்...

Unknown said...

மைனா விதார்த்துக்கு தலை சீவினா ஜனங்க ஒத்துக்க மாட்டங்க பாஸ்!

Unknown said...

அப்புறம் மேதை பாக்கலியா?

விஸ்வநாத் said...

ஆனந்தத் தொல்லை
எப்ப release பண்ணுவீங்க ?

நிரூபன் said...

மீண்டும் வணக்கம் பாஸ்.
செமையா கலாய்ச்சு எழுதியிருக்கிறீங்க.
அது எப்படி?
நாம பல நாள் பின்னாடி போனாலே கண்டுக்காத பொண்ணுங்க சினிமாவில மட்டும்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்புறமா நடிகர்களை இடைச் சொருகலாய் கொண்டு வந்து டீ. ஆரையும் சைட்டு வாக்கில கடிச்சிருக்கிறீங்க.
ரசித்தேன்.

ஹாலிவுட்ரசிகன் said...

நல்லா கும்மியடிச்சிருக்கீங்க. இதையும் பார்த்ததற்கு தனியாக ஒரு வாழ்த்துக்கள். மேதை, ஆனந்தத்தொல்லை விமர்சனங்கள் விரைவில் எதிர்பார்க்கிறேன்.

மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

SAME PINCH but ....... படத்த விட உங்க விமர்சனம் சூப்பர் ...செம்ம காமெடி

BhaRATH's said...

ஹீரோயின் தில்லாலங்கிடி படத்துல தமன்னா ஓட தங்கச்சியா ஒரு பிகுர் வருதே அந்த பொண்ணுதானே