Wednesday, January 11, 2012

பொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்

பொங்கலுக்கு முதல்ல 2 படம்தான்னு சொன்னாங்க.. இப்போ 4 தமிழ் படங்கள், 2 ஹிந்தி, ஒரு ஆங்கிலம், ஒரு தெலுங்கு மொத்தம் 8 படங்கள் ரிலீஸ் ஆகுது.. இதுல சந்தேகமே இல்லாம முதல் இடத்துல இருக்கறது நண்பன்..தான்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnJxVL_hyiR7bnazeC8ZdQ7pV_8ghJe4DDCGqzrPA5g2qAycTnRhRCGkO_3FLzx6OJAkAtsmWhmGEJ6tscXQ1KcrHYm0M9mrO_I-cC3Ax1_TdAxE_3uj1d3ErpNC1K8VXOo-Q5sLPVKaU/s1600/Nanban+movie+stills+nanban.jpg
1. நண்பன் - ஹிந்தில சூப்பர் ஹிட் ஆன 3 இடியட்ஸ் ரீமேக் ஆகுதுன்னு நியூஸ் வந்ததுமே பல கருத்துக்கள்..இதுவரை ஷங்கர்  சொந்தக்கதையைத்தான் எடுத்துட்டு வந்தார்.. ரீ மேக் அவருக்கு புதுசு.. விஜய்க்கு அது பழகுனது.. ஆனாலும் விஜய்க்கு ஷங்கர் டைரக்‌ஷன் புதுசு.. அவர் அப்பா எஸ் ஏ சந்திர சேகரிடம் அசிஸ்டெண்ட்டாக பணி புரிந்தவராக இருந்தாலும் ஜெண்டில்மேனுக்குப்பிறகு ஷங்கரின் ஸ்டார் வேல்யூ உயர்ந்தது.. அதன் பின் விஜய் ஷங்கர் டைரக்‌ஷனில் படம் பண்ணவே இல்லை.. 

த்ரீ இடியட்ஸ்’ஸில் அமீர்கானும், மாதவனும் இணைந்து நடித்திருந்தார்கள்.‘நண்பன்’னில் மாதவனுக்குப் பதிலாக ஸ்ரீகாந்த் நடிக்கிறார். இன்னொரு நண்பனாக ஜீவா. கதாநாயகியான இலியானாவின் தந்தையாக பேராசிரியர் வேடத்தில் சத்யராஜ் வருகிறார்.

 சி.பி - ஷங்கர் படத்துல ஒரே ஒரு ஹீரோயின் தானா? சார், பிரம்மாண்டம்னா எல்லாத்துலயும் இருக்க வேணாமா?

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் நண்பன். சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார்.

நண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள் :( குமுதம் மற்றும் பலகனி)

* ஒரு பாடலுக்கு HARMONY பாடகர்கள் அனைவரது வாய்களில் சரியான அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு பாட வைத்து இருக்கிறார் ஹாரிஸ்.


சி.பி - அவங்களுக்கெல்லாம்  வாய்ல தமிழ் நல்லா வருமா?ன்னு கேட்டு பாருங்க முதல்ல..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglZexZx5IRjq6fHMhQTEiivQIU92wVXkMb2dtKbW8JtfTemPQjM2Hqz_FckVfa0_BDlWqNApK5k-bdKSuvFIX1m1eC5LE4IGWRCApQr1F_ECSIRRYg2HruV3bTKj_N0YJm01miwPH0i8U/s1600/nanban-movie-stills-photos-pics-images-3.jpg


* படப்பிடிப்பு எப்போதுமே கலகலப்பாக நடந்ததற்கு காரணம் ஜீவா தான். " ஷாட் ரெடி ! " என்றவுடன் அந்த கதாபாத்திரமாகவே ஆகிவிடுவாராம் ஜீவா. கலகலப்பில் விஜய்யை கூட ஜீவா விட்டுவைக்கவில்லை என்பது தான் இதில் ஹைலைட்.

சி.பி - விஜய் ரிசர்வ் டைப்பாச்சே? ஜீவா தானே ஜோக் அடிச்சு தானே சிரிச்சுக்கிட்டாத்தான் உண்டு.. ஹி ஹி 


* படக்குழுவினர் அனைவருமே கூறுவது இயக்குனர் ஷங்கருக்குள் ஒரு அற்புதமான நடிகர் இருக்கிறார் என்பது தான். எந்த ஒரு சீனாக இருந்தாலும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என்று அப்படியே நடித்து காட்டுவது ஷங்கர் ஸ்பெஷல்.

சி.பி - ஓஹோ, அவர் படத்துல டூயட் சீன்ஸ் எல்லாம் ரொம்ப நெருக்கமா வர காரணம் அதானா? காதலன் படத்துல முக்காலா முக்காபலா பாட்டுக்கு ஷங்கர் எப்படி நடிச்சு காட்டி இருப்பார்னு நினைச்சா சிரிப்பா வருது.. ஹி ஹி  


* படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, 

சி.பி - பஞ்ச் அவன் பாரிவேலு?? ( பாரி வேலு = போரு ஆளு?? ஹி ஹி )
ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம்.

* HEART-ல BATTERY என்ற பாடலில் வரும் வித்தியாசமான இசை அனைத்துமே மக்களிடம் இருந்து RECORD செய்து பாட்டில் இணைத்து இருக்கிறார்கள்.

சி.பி - ஹி ஹி அப்போ அதுவும் சொந்த சரக்கில்லை? 

http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/04/ileana-nanban-movie-hot-stills.jpg


* " ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவர் அப்பா நீ பெரிய கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும், சச்சினிடம் அவரது அப்பா நீ பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு " என்பது போன்ற நிறைய சுளீர் வசனங்கள் இருக்கிறது நண்பன் படத்தில்.

சி.பி - உங்க ஊர்ல இதுதான் சுளீர் வசனங்களா? அவ்வ்வ்வ்வ்வ் 

 ஃபைனல் கமெண்ட் - இந்தப்படம் ஷங்கர்-ன் வழக்கமான படமாக இல்லாமல் காமெடி படமாக இருக்கும், அதிக எதிர்பார்ப்பு , பில்டப் இல்லாமல் வருவதால் ஹிட் ஆக வாய்ப்புகள் அதிகம்.. 

ஈரோடு அன்னபூரணி, ராயல், ஸ்ரீசண்டிகாம் ஸ்ரீநிவாசா  ஆகிய 4 தியேட்டர்கள் அறிவிக்கப்பட்டிருக்கு, அது போக  இன்னும் 2 தியேட்டர்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5n_C5YeasFywF-83kUq5Msn-klrwPf2wWWQifNNujZV1E2CBjf1Lzd8peNulWNc1CR37EhBXLikhcM6il7K62bGQnOGRkDJ7Iu1E-ibyf-MbifckEK2B_U98h1JmVv3o2GenxQNGuYjE/s1600/vettai.jpg

2. வேட்டை -பையா" படத்தை தொடர்ந்து டைரக்டர் லிங்குசாமி அடுத்து இயக்கும் படம் "வேட்டை". ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி ஆகியோர் நடிப்பில் ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகி வரும் இப்படத்தை ஆரம்பத்தில் க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரிப்பதாக இருந்தது. பின்னர் சிலபல பிரச்சனைகளால் அவர் விலக தயாரிப்பு பொறுப்பை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் ஏற்றது. லிங்குசாமியுடன் சுபாஷ் சந்திரபோஸ் சேர்ந்து தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

அந்த கால எம் ஜி ஆர் கால கதை .. ஒரே வீட்டில் அண்ணன் தம்பியாக இருக்கும் ஆர்யா , மாதவன் இருவரில் ஒருவர் போலீஸ் , ஆனா எங்க வீட்டு பிள்ளை எம் ஜி ஆர் போல் பயந்த சுபாவம் உள்ளவர். இன்னொருவர் வேலை இல்லாத வெட்டாஃபீஸ், அவர் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் இவர் செய்ய ஏற்படும் காமெடி குழப்பங்கள் படம்.. 

மேலே சொன்ன கதை ஒரு உதவி இயக்குநர் சொன்னது.. பார்ப்போம்..ஈரோடு அபிராமி, ஆனூர் ஆகிய இரு தியேட்டர்களில் ரிலீஸ்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGONZXpoA5e8UdNXzHTmuKctZ9g6JaJdWESXR7o8phUtdP1fP3jEqotbJClf1frdtO10GbQcn_VmjOb0EV34L3_n7_QZMNXlaEnlqXzW80FGdi5yqyMLWDD1VWSi6cZuZjdXyzUq95z26t/s1600/ramarajan_medhai_movie_wallpapers.jpg
3. மேதை - மக்கள் நாயகன், லிப்ஸ்டிக் நாயகன், டவுசர் நாயகன், பசு நேசன், நளினியின் முன்னாள் கணவர் திரு ராமராஜன் அவர்கள் நடிச்ச மேதை ரிலீஸ் ஆகுது.. யூ டியூப்ல ஒரு  ஃபைட் சீன் பார்த்டேன்.. ச்சே கொன்னுட்டார்..:))ஒரே பஞ்ச். 14 பேர் தொப் தொப்னு விழறாங்க.. இந்தப்படத்தை சத்தியமா நான் பார்க்க மாட்டேன்.. பவர் ஸ்டார், ராம்ராஜன் படங்கள்னா எனக்கு அலர்ஜி ஹி ஹி , ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKismPB-uMM836gYM6Bust5Eap3Mhfa6Zb_AKwcwMqMAwDutKZT3u8HIDsVlYhnoo8RHa_me49VvfolKIdLVIMx5CXsO01yciu9OOdUsHc0qfe2u5Gt3ewuaEaWEPxuvqAVjJ08CIofkA/s320/Kollaikaran+Songs+MP3+Free+Download++Tamil+Songs+Movie+mp3+Free+In+Single+File+Mediafire+Link+FRee+Download.jpg
4. கொள்ளைக்காரன் - மைனா விதார்த் நடித்து வெளி வர உள்ள படம் கொள்ளைக்காரன், படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே வேட்டை, நண்பன்  என்று இரண்டு படங்கள் மட்டுமே பொங்கலுக்கு ரிலிஸ் ஆகும் நிலையில் இப்போது புதிய வரவாக கொள்ளைக்காரனும் சேர்ந்துள்ளது.பிரசாத் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கும் கொள்ளைக்காரன் ‌படத்தில் தமிழ்செல்வன் இயக்கி உள்ளார். இவர் சீனு ராமசாமியிடம் அசோஷியேட் டைரக்டராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தில் விதார்த், சஞ்சிதா ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் ஏ.எல்.ஜோகன் இசையில் உருவாக்கப்பட்டுள்ளன.ஈரோட்டில் இன்னும் தியேட்டர்ஸ் புக் ஆகலை

http://kollywoodz.com/wp-content/uploads/2011/12/Kollaikaran-Audio-Release-Stills02.jpg


சிறுசிறு தவறுகள் செய்து, பின்னர் திருந்தி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் இளைஞனை பற்றிய கூறுவதே கொள்ளைக்காரனின் கதையாகும். இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை நகைச்சுவை கலந்த காதலுடன் கொள்ளைக்காரன் படம் கூறுவதாக டைரக்டர் தமிழ்ச்செல்வன் கூறி உள்ளார்.  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4Tm9gsZAlWjuhQbqtLoJApxTeX9UUWMSC7NtzcwENPlVlVRztesKEVoOn3BWhr0Eom5Ma1Lw73vP0CxhJ4xN1MOgCMt7U17o3y7AKkMSfuqREDldbhVwNqKMf5w83asSUvnKBaeALRqU/s1600/Business_Man_new_Wallpapers+%25281%2529.jpg


5. BUSINESS MAN -போக்கிரி, தூக்குடு போன்ற மெகா ஹிட் கொடுத்த மகேஷ் நடிச்ச இந்தபபடமும் கேங்க்ஸ்டார் கதைதானாம்.. ஆனாலும் திரைக்கதை செம ஸ்பீடுன்னு சொல்றாங்க.. ஜோடி காஜல் அகர்வால்.. ஆல்ரெடி அவங்க நடிச்ச மாவீரன்ல காட்டு காட்டுனு காட்டி இருந்தாங்க , நடிப்பைத்தான்.. அதே போல் இந்தப்படமும் இருக்கும்னு எதிர்பார்க்கலாம்..ஈரோட்டில் இன்னும் தியேட்டர்ஸ் புக் ஆகலை

http://www.filmics.com/telugu/images/stories/news/December/17-12-11/The_Business-Man_Movie_Preview.jpga

டிஸ்கி -1  மீதி 3 படங்கள் விபரம் 14ந்தேதிதான் தெரியும்.. 

டிஸ்கி 2 - நமீதா போட்டிருக்கற டிரஸ் டிசைன்ல கொங்கு மாவட்டகிராமத்துபெண்கள் 1985களில் பாவாடை போடுவாங்க.. அந்த டிசைனை எல்லாரும் கிண்டல் அடிப்பாங்க.. சரியான பட்டறைன்னு அந்த டிசைனுக்கு இளைஞர்கள் வட்டாரத்துல பேரு.. இப்போ இவங்க உடுத்துனாங்காட்டி ஃபேஷன் ஆகிடுச்சு போல அவ்வ்வ்

டிஸ்கி 3.

எனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார்வை

19 comments:

கோவை நேரம் said...

மாலை வணக்கம்

கோவை நேரம் said...

1001 வது பதிவா..?

கோவை நேரம் said...

உங்க ஊர்ல யாரும் நமீதா மாதிரி இருந்திருக்க மாட்டாங்க ...அதான் அதான் மவுசு தெரியல

கோவை நேரம் said...

வேட்டை படத்துல தமனா இருக்காங்களா ..?போஸ்டர்ல இருக்கு name

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆனந்தத் தொல்லையும்தானே பொங்கலுக்கு வருது? ஏன் இந்த ஓரவஞ்சனை?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாங்கள்லாம் நண்பன் படத்துக்கு எப்பவோ விமர்சனம் எழுதிட்டோம், நீங்க ஆனந்த தொல்லை, மேதை படங்களுக்காவது எழுதனும்...... (படம் பார்க்கலேன்னாலும்)

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

அப்டினு நீங்களும் பவர்ஸ்டாரும் தான் சொல்லிக்கிட்டு இருக்கிங்க:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

அப்டினு நீங்களும் பவர்ஸ்டாரும் தான் சொல்லிக்கிட்டு இருக்கிங்க:))//////

பவர்ஸ்டார் பின்னால தமிழ்நாடே இருக்கு தெரியும்ல.....?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எங்க தலைவர் ராமராஜ் படத்தை ஓரம் கட்டியதற்க்கு மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

அப்டினு நீங்களும் பவர்ஸ்டாரும் தான் சொல்லிக்கிட்டு இருக்கிங்க:))//////

பவர்ஸ்டார் பின்னால தமிழ்நாடே இருக்கு தெரியும்ல.....?/
///////

அது எல்லாமே அன்பால சேர்ந்த கூட்டம்...

இதை கூடிய சீக்கிரம் எல்லோரும் தெரிஞ்சிப்பாங்க... சிபி உள்பட

Anonymous said...

1001 க்கு வாழ்த்துக்கள்...
விமர்சனங்களை விரைவில் எதிர்பார்க்கிறோம்...

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள் 1000 வது பதிவிற்கு.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரைட்டு அப்போ எட்டு படம் விமர்சனம் சிபி சூடா போட்டிருவார்,,,,

சென்னை பித்தன் said...

பொங்கல் அன்று எத்தனை படம் பார்க்கப் பிளான்?

ராஜி said...

சென்னை பித்தன் said...

பொங்கல் அன்று எத்தனை படம் பார்க்கப் பிளான்?
>>>
இதிலென்ன டவுட்டு உங்களுக்கு? மொத்த படத்தையும் பார்ப்பதாகத்தான் பிளான்

அப்பாதுரை said...

பிரம்மாண்டமான சாதனை. without doubt. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Yoga.S. said...

இரவு வணக்கம் சி.பி சார்!அருமை! நமீதா டிரஸ் விமர்சனமும் அருமை!!!மீதிய அப்புறமா சொல்லுங்க!

ஹாலிவுட்ரசிகன் said...

எல்லாத்துக்கும் மொதல்ல மேதை படத்தை பாத்துரணும். :)

நண்பன், வேட்டை படங்களின் விமர்சனம் அறிய ஆவலாக இருக்கிறது.

RAMA RAVI (RAMVI) said...

முன்னோட்ட விமர்சனங்கள் சிறப்பாக இருக்கு.

மேதை படம் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டீங்களே? நான் சினிமாவுக்கெல்லாம் அதிகம் செல்வதில்லை.பதிவர்களின் விமர்சனங்களைப் விமர்சங்களைப் பார்த்துதான் கதையை தெரிஞ்சுக்கறேன்.