Friday, January 06, 2012

விநாயகா - HITCH பட தழுவலா?-சினிமா விமர்சனம்

 http://picasamusic.com/musicimg/Vinayaka.jpg 

சில பொண்ணுங்க பார்க்க செம ஸ்டைலிஸா இருக்கும், வீட்டுக்குப்போய் பார்த்தா அதுவும் மேக்கப் இல்லாதப்ப பார்த்தா மேஜிக் ரியலிஸம், மேக்கப் பொய்யிஸத்தோட மஹிமைலதான் அவங்க அழகானாங்கன்னு உண்மை தெரியும்.. அந்த மாதிரி இது ஏதோ ஒரு தெலுங்குப்ப்படம்.. தியேட்டருக்கு கூட்டம் வரவைக்கனும்கறதுக்காக சந்தானத்தை 8 சீன்ல நடிக்க வெச்சு ஒப்பேத்தி இருக்காங்க.. போஸ்டரை பார்த்ததும் நேரடித்தமிழ்ப்படம்னு தப்பா  நினைச்சுட்டேன்..

 ஹீரோ ஒரு குண்டு பார்ட்டி கம் ஓவர் குண்டு பார்ட்டி.. அவர் முகம் பார்க்காம ஒரு ஜிகிடி கூட சேட் பண்றாரு.. நேர்ல மீட் பண்ணலாம்னு முடிவு எடுத்தப்போ அந்த ஜிகிடி ஹீரோவோட குண்டான உடம்பை பார்த்து தான் யார்னு வெளிக்காட்டிக்காமயே எஸ் ஆகிடுது.. ஹீரோவுக்கு செம கடுப்பு.. அப்புறம் அவர் புதுசா ஜாயின் பண்ற கம்பெனில ஹீரோயினை பார்க்கறாரு.. பார்த்த உடனே அந்த லவ் அவருக்கு வந்து தொலைச்சிடுது.. 

ஹீரோயினுக்கு அப்படி எந்த அபிப்ராயமும் இல்ல.. அவங்க வீட்ல ஒரு மாப்ளையை பார்க்கறாங்க .. மாப்ள என் பொண்ணு கூட பழகி பாருங்கன்னு அனுப்பி வைக்கறாங்க.. தந்தையுமானவன், மாமாவும் ஆனவன்னு அப்பாவை வாழ்த்திட்டே ஹீரோயின் அந்த மாப்ளை கிட்டே லைட்டா பழகுது.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgr74oFD5yuIBI6vfrzaTzumxCKPCzeT4ORJUT1cmwcuec4wOnXMRLRum6cqAzFFi_LESty42_lBa8j8JJqHa2ohxAKucsoaA_phzQ0ruBATHwjuDdW1x9scYKuYfeOp657Q585gJooChM/s1600/Vinayaka+Movie+10.JPG

டீக்கடைல சொல்ற மாதிரி அதென்னா லைட்டா பழகறது, ஸ்ட்ராங்கா பழகறதுன்னா - அங்கங்கே லைட்டா தொட்டுக்கிட்டே , மொக்கை ஜோக் சொன்னாக்கூட  ஹா ஹா-னு சிரிக்கறது லைட்டா பழகறது.. அதுக்கு ஆப்போசிட் ஸ்ட்ராங்கா பழகறது..

6 ரீல் பழகுன பிறகு ஒரு சப்ப ரீசனுக்காக ஹீரோயின் டபக்னு ஜெ சசியை கழட்டி விட்ட மாதிரி கழட்டி விட்ருது.. ஹீரோ கூட அதுவரை வெறுப்பா, அருந்துதலா பழகிட்டு இருந்தவர் திடீர்னு கெக்கே க்கே பிக்கெக்கேன்னு சிரிச்சுட்டே பழகுது. 

என்னமோ லவ்வர்ஸ்க்குள்ளே ஏதோ டல் அடிக்குமே என்னாது? ஆங்க் அதான்பா ஊடல்.. அது அவங்க 2 பேருக்கும் வந்துடுது.. பொதுவா லவ்வர் எவ்வளவு கேவலமா திட்டுனாலும் நாமெல்லாம் அசால்ட்டா நிப்போம் . இங்கே நாமெல்லாம்னா நான் என அர்த்தம் ஹி ஹி , ஆனா பாருங்க ஹீரோவை ஹீரோயின் சுமோ, குண்டா என திட்னாங்காட்டி  என்னமோ ஓ பி எஸ் ஜெ கிட்டே கோபிக்கற மாதிரி  2 பேரும் பிரியறாங்க.. 

அவங்க மறுபடி இரு சப்பை மேட்டருக்காக எப்படி இணையறாங்க என்பதே கதை.. 

விஜய் யை வெச்சு லவ் டுடே தந்த பாலசேகரன் தானா இந்த பாலசேகரன்? தெரில..  இவர் அநேகமா விசு அல்லது பூரணம் விஸ்வநாதன் கிட்டே அசிஸ்டெண்ட்டா ஒர்க் பண்ணி இருப்பார்னு தோணுது.. படம் பூரா நாடகத்தனமா  ஏகப்பட்ட காட்சிகள்.. ரொம்ப ஸ்லோ.. 

ஹீரோவுக்கு நடிக்க வாய்ப்பு இருக்கு. க்ளைமாக்ஸ்ல மட்டும் கொஞ்சம் நடிக்கறார்.. இவர் சந்தானம் கூட பண்ற காமெடிங்கற பேர்ல நடத்தற கூத்து கடுப்பு அடிக்குது.. 

ஹீரோயின் பியா.சாயல்ல இருக்கறாரு.பையா படத்துல கார்த்தியோட தோழிகள்ல ஒருத்தரு, பேரு சோனியா . இவருக்கு சுருண்ட அலை பாயும் கூந்தலும் இந்திய தேசிய நிறமான மாநிறமும் அழகிய பிளஸ்.. சட் சட் என சிரிக்கும் கண்கள் , லிப்ஸ்டிக் போடாமலேயே ரோஸ் கலர் உதடு இவருக்கு கூடுதல் பிளஸ்.. ஆனால் சுவிட்ச் போட்ட மாதிர் பல இடங்களீல் டக் டக் என்று சிரிப்பது லேசா செயற்கை தட்டுது ( நாங்க எல்லாம் ஜிகிடியை ரசிச்சாலும் குறைகளை கரெக்டா கண்டுபிடிச்சுடுவோமாக்கும்.. ஹி ஹி )

சந்தானம் காமெடி வலிய திணிக்கப்பட்டது, அதனாலயே படத்தில் ஒட்டவில்லை.. கஷ்டபட்டு சிரிக்கவேண்டியதாகிறது.. 



http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/vinayaka/vinayaka-09.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோயின், ஹீரோயின் தோழியாக வருபவர், சந்தானத்தின் அண்ணியாகவும், ஹீரோவின் அக்காவாகவும் வரும் நடிகை என  ஸ்க்ரீனில் எப்போதும் ஒரு அழகிய பெண் கிராஸ் பண்ணீட்டே இருக்கு.. 

2.  சென்னை என தொடங்கும் டைட்டில் சாங்க், இது காதல் வரும் சமயம், அட ரோஜாக்கூட்டமா? என தொடங்கும் மெலோடி சாங்கும் கேட்க இதம்.. பாடல்கள் வைரமுத்து என்பதால் கவிதை லைனை குறை சொல்ல தேவையே இல்லை..

3.  ஃபைட், பஞ்ச் டயலாக் என எதுவும் வைக்காமல் ஒரு ஐ டி கம்பெனியில் நடக்கும் சம்பவங்களாகவே நீட்டாக எடுத்து முடித்தது..

ஹீரோவின் அக்காவாக வரும் நடிகை இவர்தான், இவரது கர கர வித்தியாசமான வாய்ஸ் செம பிளஸ்
இயக்குநர் கவனிக்கத்தவறிய லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. ஒரு இண்ட்டர்வியூவில் பொதுவாக மேனேஜரோ அல்லது கேள்வி கேட்கும் நிலையில் உள்ள எதிராளியை எடுத்ததும் வா போ நீ என ஒருமையில் அழைக்க மாட்டார்கள், அதுவும் ஐ டி கம்ப்பெனியில் 

2. ஹீரோவின் அக்கா ரொம்ப ஒல்லி.. ஹீரோயின் மீடியம் ( குத்து மதிப்பு அவதானிப்பு) ஆனா ஹீரோயின் ஒரு டைம் மழைல நனைஞ்சுட்டு வரும் சீனில்  தன் அக்காவின் நைட்டியை ஹீரோயினுக்கு ஹீரோ தர்றார்..அவரோட “எல்லா” டிரஸ்ஸும் அவருக்கு மேட்ச் ஆவது எப்படி?

3. ஹீரோயின் ரொம்ப அட்வான்ஸ் டைப்.. பசங்க வழியறதை ஈஸியா கண்டுபிடிக்கறவ.. அவ ஹீரோவை பயங்கரமா கிண்டல் அடிச்சுட்டு 7 ரீல் வரை வெறுக்கறவ ஹீரோ ரவுடிகளை ஹீரோயின் கிட்டே இருந்து காப்பாத்துனதும் உடனே லவ் வந்துடுமா?

4. ஹீரோயின் ஹீரோவை கோபத்துல குண்டா-னு சொல்லிட்டதால ஊடல்.. இதுக்கு க்ளைமாக்ஸ்;ல ஒரு ஸாரி சொன்னா போதாதா? ஹீரோயின் மண்டி போட்டு மன்னிப்பு கேட்பது ஓவர்.. ஐ டி யில் படிக்கும் அலட்சிய அல்ட்ரா மாடர்ன் பெண் இப்படி நடப்பாளா?

5. ஹீரோயின் தோழி ஒரு டைம் அவளோட லவ்வர் செல்ஃபோன்ல கால் பண்றப்ப வீட்ல இருந்துக்கிட்டே இப்போ நான் பயங்கர டிராஃபிக்ல மாட்டி இருக்கேன்ன்னு பொய் சொல்றா.. ஏன் வேற ஏதாவது சாதா பொய் சொல்லலாமே? நான் பிசின்னு,. ஏன்னா ரூம் அமைதியா இருக்கு.. டிராஃபிக்னா பேக் கிரவுண்ட்ல  சத்தம் கேட்கனுமே?

6. ஹீரோயினின் தோழி பல ஆண்களோட கில்மாவுக்கு ரெடியா இருக்கறவ-னு எதுக்கு தேவையே இல்லாம க்ளைமாக்ஸ்ல ஒரு சீன் வருது? ( ஸீன்னா ஸீன் இல்ல ஹி ஹி )



டி வி ல போட்டா பார்க்கலாம்.. பாதி படம் தூங்கிட்டே தான் பார்த்தேன் .. 

இது தெலுங்கு டப்பிங்க் என்பதால் விகடன் விமர்சனம் இல்லை..இருந்தாலும் ஒரு ஒப்பீட்டுக்காக 

விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 35

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் பார்த்தேன்.. 

பொங்கல் வரை ஓடும் , அதாவது 7 நாட்கள்

வில்ஸ்மித் நடிச்ச ஹிட்ச் படத்தின் தழுவல் இந்தப்படம்னு சிலர் சொன்னாங்க, ஆனா அந்தப்படம் நான் பார்க்கலை ( டைட்டிலுக்கான விளக்கம்)

diSki

சந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா

22 comments:

கும்மாச்சி said...

அப்போ இது கில்மா படம் இல்லையா, போன பதிவுல ஏதோ கில்மானு எழுதியதாக நியாபகம்.

இருந்தாலும் படத்துல நிறைய ஜிகிடிங்க கிராஸ் ஆவுதுனா டவுன்லோட் பண்ணி பார்க்கலாம்.

Unknown said...

ஹீரோயின் பியாவா? பார்த்தா அப்பிடித் தெரியலியே? வேற யாரோ அட்டு பிகர் நிக்குது ஹீரோ கூட!

Unknown said...

நான் முதல் ரெண்டு ஸ்டில்ல சொன்னேன்!

KANA VARO said...

லிப்ஸ்டிக் போடமலே ரோஸ் கலர் உதடு//

எப்பிடி கண்டுபிடிச்சீங்க? இதற்கான விளக்கத்தை நீங்கள் சொல்லியே ஆவணும். ஏன்னா நாங்க ஏமாறக்கூடாது பாருங்க.

Unknown said...

ஹிட்ச்க்கும் இதுக்கும் சம்மதமே இல்லை இது ஒரு அட்டு படம்....

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!அருமையாக விமர்சிக்கிறீர்கள்!உங்களை ஒரு பத்திரிகைகளும் கண்டு கொள்ள மாட்டேன் என்கின்றனவே?????

YESRAMESH said...

ஹீரோயின் பியா இல்லை. பையா படத்துல கார்த்தி தோழியா வருவாளே ஒரு பிகர் அவதான் இவ.

ஹாலிவுட்ரசிகன் said...

நானும் போஸ்டரைப் பார்த்துவிட்டு Hitch தானோன்னு நினைச்சேன். ஒங்க விமர்சனத்தை படித்தபின் இது ஒரு மொக்க பீஸு போலத் தோணுது. ஐ ஆம் சாரி ( ஹா ஹா .... அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் )

arun guhan senthil said...

heroine is not piya..she is Sonia..she acted in paiyya as karthi's friend and in Inidhu Inidhu as senior Shravz!

Jana said...

விநாயகா!,,?333 :))

சுதா SJ said...

படம் மொக்கையா?அவ்வவ்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Anonymous said...

விநாயகா இந்த படத்தையெல்லாம் பார்த்து அதுக்கு விமர்சனம் வேற எழுதுற இந்த புன்னியவானுக்கு புளியோதரை கொடு!!!

தர்ஷன் said...

Hitch பார்த்திருக்கேன் அதே ஒரு மொக்கை படம்தான், ஆனா நீங்க சொல்ற கதைய வச்சு பார்த்தா இது ஹிட்ச் இல்லன்னு நெனக்கிறேன்

MaduraiGovindaraj said...

"படம்" சூப்பர்

ராஜி said...

ஹீரோயின், ஹீரோயின் தோழியாக வருபவர், சந்தானத்தின் அண்ணியாகவும், ஹீரோவின் அக்காவாகவும் வரும் நடிகை என ஸ்க்ரீனில் எப்போதும் ஒரு அழகிய பெண் கிராஸ் பண்ணீட்டே இருக்கு..

>>>
உங்க காட்டுல மழைதான் சிபி சார்

ராமகிருஷ்ணன் said...

எப்படி சார் எல்லா படத்தையும் பார்க்கறீங்க வேலைக்கே போகமாட்டீங்களா சார்

பால கணேஷ் said...

யப்பா, சாமி! இப்படி ஒரு படம் ரிலீஸாகியிருக்குன்னு உங்க விமர்சனம் பாத்துத்தான்யா தெரிஞ்சுக்கிட்டேன்! சென்னைல ஒரு போஸ்டர்கூடக் காணோம்... (இருந்தாலும் நான் பாத்துடப் போறதில்லங்கறது வேற விஷயம்! ஹி... ஹி...)

Mathuran said...

அவ்வ்.. படம் புட்டுக்கிச்சா.... இபிடி ஒரு படம் வந்ததே தெரியாதே

Mathuran said...

ஹீரோயின பார்த்தா பியா மாதிரி தெரியல்லயே பாஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படம் பேரு வினாயகுடு. தெலுங்கில் சூப்பர் ஹிட்

சரியில்ல....... said...

விநாயகா- ஆ!