Monday, January 09, 2012

நிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நில அபகரிப்பு கேஸ்ல மாட்டிய தலைவரும்

http://s3.hubimg.com/u/1494362_f496.jpg 

1.புத்திசாலித்தனமாக முடிவெடுத்தாலும் பெண் அடிக்கடி தன் முடிவை மாற்றிக்கொள்கிறாள்,முட்டாள்தனமாக முடிவெடுத்தாலும் ஆண் தன் முடிவில் நிலையாய்!

-----------------------------------

2. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் - கருணாநிதி  # காதலில் தோல்வி ஏற்படுவது பெண்ணுக்கு சகஜம் - நயன் தாரா

--------------------------------

3. எப்படி இருந்தாலும் நான்உன் காலில் விழுந்துதான் ஆக வேண்டும் என நீயும், எங்கே சென்றாலும் என்காதலில் நீ நெகிழ்ந்துதான் ஆகவேண்டும் என நானும்

------------------------------------

4. என் அன்பில் நீ உருகிவிடக்கூடாது என வெறுப்பு முகமூடியை அணிந்து கொள்கிறாய்! என் அன்பு நேரடியாய் உன் உள்ளத்தில் வந்து இறங்கி விடுகிறது

-------------------------------------

5. மழைக்காலங்களை, மழலைக்காலங்களை மறக்க முடிவதும் இல்லை, மறைக்க விரும்புவதும் இல்லை

-----------------------------------

http://s1.hubimg.com/u/1494376_f496.jpg

6. தியானம் செய்யும்போது மனதை ஒரு முகப்படுத்தச்சொன்னார்கள், அந்த ஒரு முகம் உன் முகம் ஆனது

----------------------------

7. கல்லால் கட்டப்பட்ட கோட்டை தி.மு.க.-கருணாநிதி # பாளையங்கோட்டை ஜெயில் கூட கல்லால் கட்டப்பட்டதுதான் - ஜெ

-------------------------------

8. உன் உதட்டிலிருந்து வரும் பொய்கள் கூட அழகிய கவிதை ஆகிவிடுகிறது, நான் எழுதும் கவிதைகள் உன் பார்வையில் பொய் ஆகிவிடுகிறது

--------------------------------

9. பகலில் மழை வரும்போது நம் இணைந்த கைகள் நினைவும், இரவில் மழை வரும்போது உன் நனைந்த கூந்தலும் நினைவில் வரும்

-------------------------------

10. நேசம் வீசும் ஒரு மழை நாளில் என்னிடம் உன் வாசனைப்பூக்களை கொடுத்து விட்டு நறுமணத்துடன் நீ போய் விட்டாய்!!

--------------------------------

http://c3.yousaytoo.com/rss_temp_image/pics/77/18/11/4874177/original/remote_image20100702-14312-rq8ant-0.jpg

11. உள்ளாட்சித்தேர்தல் தேதி ஏன் அஷ்டமி,நவமி நாளா பார்த்து வெச்சாங்க?

தலைவரே, அதுக்காக கவுதமி நாளா பார்த்து வைக்க முடியும்?

-------------------------------

12. டைரக்டர் எஸ் ஜே சூர்யா அரசியல்லயே இல்லையே, எப்படி நில அபகரிப்பு கேஸ்ல மாட்னாரு?

அது  “நிலா” அபகரிப்பு கேஸ்!

-------------------------------------

13. நாடோடி மன்னன், உத்தம புத்திரன் மாதிரி டபுள் ஆக்‌ஷன் படங்களா பார்க்கறாரே, தலைவர்.ஏன்?

அரசியல்ல ரெட்டை வேஷம் போட வேண்டி இருக்காம், ட்ரெயினிங்க்  எடுத்துக்கறாராம்.------------------------------------

 14. இனி எல்லா தேர்தலிலும் தனித்து போட்டி: தங்கபாலு  # இனி எல்லா படங்களிலும் நான் குணச்சித்திரமாக நடிக்க முடிவு - மல்லிகா ஷெராவத்

---------------------------------

15. விஜயகாந்த்துக்குப் பிறகுதான் அன்னாவே குரல் கொடுத்தார்- பிரேமலதா # பேகனுக்கு முன்பே மயிலுக்கு போர்வை குடுத்தது பாரதிராஜா தான் - ஸ்ரீதேவி

----------------------------


 16. ஏய், மிஸ்டர்,நான் தான் உன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டேனே? எதுக்கு என்னையே சுத்தி சுத்தி வர்றே?

மிஸ், +2 ல பாஸ் பண்ணவே 4 அட்டெம்ப்ட் ஆச்சு, லவ்ல முதல் முயற்சிலயே ஜெயிக்க முடியுமா?

------------------------------

17. XQS மீ மிஸ்.இந்த CD பாருங்க.

யோவ்!அய்யோ, தப்பா நினைக்காதீங்க, லவ் லெட்டர் குடுக்கறது ஓல்டு ஃபேஷன், இது லவ் சி டி # வீட்டுக்குப்போய் பார்டி

------------------------------------

18. என் காதலை ஈரோட்ல இருக்கற 58,430 சொந்தக்காரங்க கிட்டேயும் சொல்லிட்டேன்..

டேய், நாயே, முதல்ல நீ லவ் பண்ற ஃபிகர்ட்ட சொல்டா.

----------------------------------

19. ஸாரி மிஸ்டர்! எனக்கு காதல்ல நம்பிக்கையே இல்லை.

. அட!! எனக்கு கூட மேரேஜ்ல நோ நம்பிக்கை. நமக்குள்ள எவ்ளவ் ஒத்துமை பார்த்தீங்களா?

-------------------------------------

20. உன் மனைவிக்கு சமையலோட அரிச்சுவடியே தெரியாதாமே?

அப்டி சொல்ல முடியாது, நல்லா பத்தவைப்பா..

------------------------------

15 comments:

Anonymous said...

first

Anonymous said...

இப்பதான் போன பதிவுல 1000 மாவது ப்திவுக்கு வாழ்த்து சொல்லிட்டு இருந்தேன் அதுக்குள்ள் அடுதத பதிவா? அப்போ இன்னும் 3 பதிவுதான், வழ்த்துகள் சார்..

Anonymous said...

3,4,6,8,9,10 அழகான கவிதை

sutha said...

ட்விட்டர்லே படிக்காத சில ட்வீட்ஸ் இங்கே படிச்சேன் - வெரி குட்

everestdurai said...

"நிலா" அபகரிப்பு கேஸ் அருமை அதனால் தான் நிலா ஸ்டில்சா

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!பாளையங்கோட்டை ஜெயில் கூட கல்லால கட்டினது தான்,ஜே.§§§§செம!!!!!!!!!!!!!!!!(ஒரு டவுட்டு,ஆத்தா தனக்குத் தானே சொல்லிக்கிறாவா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் சிடியெல்லாம் போய் டிவிடி வந்து அஞ்சு வருசத்துக்கு மேல ஆச்சு.......

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

7ம்
14ம்
லொல்

மன்மதகுஞ்சு said...

சீ.டி டிவீடி போய் பெண்ட் டிரைவில கொடுக்கிறதுதான் பாஷன், அதுசரி அண்ணன் தன்னோட காலத்திலேயெ சோசிச்சிருக்காரு போல, அந்த கெளதமி நாள் செம டைமிங் அண்ணே..கலக்கல்

ஹேமா said...

வந்தேன்...வாசித்தேன் !

Manimaran said...

எல்லாமே கலக்கல்.....2 - ல் கருணாநிதிக்கு பிறகு ஒரு # போடலாமே .........இல்ல வழக்கம் போல உள்குத்தலா?

விழித்துக்கொள் said...

a beautiful tamil birthday song
http://vidhyasagar.com/

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

முத்தரசு said...

குட்

Unknown said...

//14. இனி எல்லா தேர்தலிலும் தனித்து போட்டி: தங்கபாலு # இனி எல்லா படங்களிலும் நான் குணச்சித்திரமாக நடிக்க முடிவு - மல்லிகா ஷெராவத்//

சரியான காமடி இரண்டும் நடக்காது!