Saturday, January 28, 2012

பரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமாளி செல்வா

கோமாளி செல்வா வைப்பற்றி அறிமுகம் தேவை இல்லை, இருந்தாலும் ஃபார்மாலிட்டி என ஒண்ணிருக்கே? கோபி யில் இருக்கும்  பதிவர் கம் ட்வீட்டர்.. செம மொக்கை ட்வீட்டர்.. ஆனந்த விகடன் ல பல ட்வீட்கள் வந்திருக்கு.. சவால் சிறுகதை போட்டியில் நல்ல , கவனிக்கத்தக்க கதை எழுதி இருக்கார்.. அவரிடம் ட்வீட்டர்ஸ் கேட்ட கேள்விகளும் , அவரது காமெடி பதில்களும்..

1. நீங்க சுமாரா எத்தனை மணிநேரம் இப்டியெல்லாம் ட்விட்டறதுக்கு சிந்திப்பீங்க?  (பரிசல்)


செல்வா -   ஒரு நாளைக்கு 48 மணி நேரங்களை மட்டும் இதற்காக செலவிடுகிறேன்!


சி.பி - ஓப்பனிங்க்லயே கடி.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்2. ட்விட்டர்ல செல்வாவுக்குன்னு தனியா புது அகராதி உருவாகிக்கொண்டு வருவதாக பலரும் பயப்படுகிறார்களே அது உண்மையா?


செல்வா - நான் இன்னும் அகராதியே எழுதல. அப்படி எழுதும் எண்ணமும் எனக்கு இல்லைங்கிறதால பயத்த பயமாவே விட்டுடலாம்!


சி.பி - அட , அகராதி பிடிச்ச பயலே... (டிக்ஸனரி லைக்கிங் பெர்சன்?)


3. எத்தனை பேர் திட்டினாலும் தொடர்ந்து எழுதி, இப்ப அதை ஒரு பாணியாவே மாத்தீட்டீங்க.. உங்க வெற்றியின் ரகசியம் என்ன?

செல்வா -யார் திட்டினாலும் அத கண்டுக்காம இருக்கிறதால எல்லோரும் பரிதாபப்பட்டு இந்த வழிக்கு வந்திட்டாங்கனு நினைக்கிறேன்! 

 சி.பி - அண்ணன் காட்டிய வழி???


4. தாங்கள் உருவாக்கிய வடை,இதால என்னாகும்?போன்ற சொற்றொடர்கள் இணையத்தில் இவ்வளவு பிரபலமாகும் என எதிர்பார்த்தீர்களா?  ( நாகராஜ சோழன் எம் ஏ)


  செல்வா -நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை! ஆனால் மகிழ்ச்சி :)) 


சி.பி. ஓஹோ.. பதிவுலகத்துல ஆளாளுக்கு வடை வடைங்கறாங்களே? அதுக்கு நீ தான் காரணம? அடங்கோ.. வடை வாங்கி வங்கின்னு பேரு வேறா.


5. தூங்கும் நேரம் நீங்க என்ன பண்ணுவீங்க? (( நாகராஜ சோழன் எம் ஏ)


செல்வா -தூங்கும் நேரத்தில் கனவுகாணச் சென்றுவிடுவேன். கனவு இல்லாத நாட்களில் மட்டும் தூங்குவேன்! 


சி.பி - அய்யய்யோ, குழப்ப ஆரம்பிச்சுட்டானே. ட்விட்டர்ல ட்ரீம் பாய் இவனாத்தான் இருக்கும்.. 


6. உங்க மேரேஜப்ப உங்க ட்விட்டை புக்கா போட்டு பொண்ணுகிட்ட காட்டி பயமுறுத்தப்போறதா செய்தி வருதே? எப்படி சமாளிப்பீங்க?


செல்வா -அதுக்காகத்தான் பொண்ணுப் பாக்கப்போகும்போதே ஒரு தாயத்து எடுத்துட்டுப் போலாம்னு இருக்கேன்! 


சி.பி - உலகத்துலயே பொண்ணுக்கு  தாலி கட்டறதுக்கு முன்னால தாயத்து கட்னது நீதான்னு நினைக்கறேன்..


7. உங்களை மாதிரியே ன்னு ட்விட்டறவங்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க? 


செல்வா -உண்மையில் என்னைவிட ரொம்ப நல்லா யோசிக்கிறாங்க! அவ்ளோ அருமையா என்னால சிந்திக்க முடியுமானு சந்தேகமா இருக்கு! அவர்களுக்கு நன்றிகள் 

சி.பி. இவர் மொக்கை போடுவது பத்தாமல் இருப்பவர்களையும் மொக்கை போட வைக்கிறாரே.....ஐய்ய்யோ!!


8. ரேடியோ “ஜாக்கி” ஆகறதுதான் உங்க லட்சியம் கனவு ஆசை எல்லாமே.. உங்களுக்கு ஜாக்கிங்கற உலகப் பிரபலதை தெரியுமா?


செல்வா -ஜாக்கி சான் பத்தித் தெரியும்! ஜாக்கினு ஒருத்தர் தனியா இருக்கிறாரான்னு தெரியலைணா!

சி.பி. - ஜாக்கிசேகர் அண்ணனையே கிண்டல் பண்ற அளவுக்கு அவ்வளவுபெரிய அப்பாடக்கரா நீங்க..?...


9.பிறரை கவருவதற்காக இப்படி ட்விட்டுகிறீர்களா இல்லை உங்கள் இயல்பே இப்படித்தானா?(ஜீவன்)


செல்வா -உண்மையில் எனது இயல்பே இதுதான்! அது பிறரைக் கவர்வது எனக்கு மகிழ்ச்சியே :)) 

சி.பி.- நீங்கள் கோபியில் வேலை செய்யும் அலுவலகத்தில் பல பெண்களை கவரந்தது இந்த இயல்பினால்தானா?? நடக்கட்டும்.....நடக்கட்டும்.10. உங்க பயோல எப்ப என் கனவு நிறைவேறும்னிருக்கீங்க. ஆனா நீங்க தூங்கறதே இல்லையாமே.. அப்பறம் எப்படி கனவு?


செல்வா -நான் கனவுகாண தூங்கச் செல்வது இல்லை. நான் இருக்கும் இடத்திற்கு வரச் சொல்லிப் பார்த்துக்கொள்வேன்.கண்ணை மூடிட்டா எதுவும் தெரியாதே ?

சி.பி-- பெரிய அப்துல்கலாம் பேரன்......ட்ரீமை வரச்சொல்வது ஓகே...ட்ரீம் கேர்ள்ளையும் வரச்சொல்லிடுவீங்களோ?? சொன்னா நாங்களும் வருவோமில்ல??

11. பல இயக்குனர்கள் தங்கள் படத்துல வில்லன்கள் யூஸ் பண்ண உங்க ட்விட்களை கேட்டு, நீங்க தரமாட்டேன்னு சொன்னதா சொல்றாங்களே?


செல்வா -வில்லன்கள் எனது ட்விட்டுகளைப் பேசினால் ஒருவேளை காமெடியன்களாகத் தோற்றமளிப்பார்கள் என்பதால் பொதுநலன் கருதி அவ்வாறு கூறிவிட்டேன்!

சி.பி.- வில்லனுக்கே வில்லனய்யா நீர்!!

12. யாராவது 'போய்ட்டு வா'னு உங்க பேரைச்சொல்லி கூப்பிட்டால் திரும்பிப் பார்ப்பீர்களா செல்வா ( SE, செந்தில்)


செல்வா -வீட்டுக்குப் போயிட்டு வந்து பார்ப்பேன்! ஆனா அவுங்க அங்க இருக்கமாட்டாங்க :((

சி.பி.- வீட்டுக்கு போவது ஓகே......அது உங்க வீடா ? சின்ன வீடா??9 comments:

கோவி said...

உள்ளேன் அய்யா..

நாய் நக்ஸ் said...

அங்கதான் போட்டு தள்ளுரார்ணா இங்குமா?????

Mohamed Faaique said...

கொஞ்ச நாள் பயபுள்ளைய ஃபேஸ்புக்’ல காணலையே’னு பார்த்தேன். அங்க இருக்காரா?? டுவிட்டர்’ல கணக்கு தொடங்குர ஆசைய இன்னையோட மூட்டை கட்டி வச்சிட வேண்டியதுதான்...

வால்பையன் said...

நம்ம கோமாளி செல்வா
எப்போ ஏமாளி செல்வா ஆனார்!?

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!கோமாளிக்கே ஆப்பா?பெரிய அப்பாடக்கர் தான் நீங்க!

KANA VARO said...

அண்ணன் வழியில் தான் நானும் செல்ல தீர்மானித்திருக்கேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செல்வா சின்னப்பையன்தானே அதான் சின்ன வீடு வெச்சிருக்கான்...!

மாணவன் said...

செல்வா கல்லுடைக்கிறார்.....! :-)

செல்வா said...

இவ்ளோ நாளுக்கு அப்புறம் எப்படி இது கிடைச்சது ? மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிணா :)))