Monday, January 30, 2012

AGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா விமர்சனம் .

http://survi.in/site/wp-content/uploads/2012/01/main_image-91952.jpg ரீமேக்  பண்ற ராஜாக்கள் ,கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் 1. அம்மா ,அப்பாவை கொன்னவனை பழி வாங்கற சப்ஜெக்ட், 2 . தங்கச்சியை ரேப் செஞ்சவனை கதற கதற கொல்லும் ஹீரோ  கதை இதை எல்லாம் தயவு செஞ்சு அவாய்டு  பண்ணுங்க ,உஷ் அப்பா முடியலை.

படம் போட்டு  முக்கால் மணி நேரம் கழிச்சுத்தான் ஹீரோ  வர்றார்  .அதனால படம் பூரா  வியாபிச்சு இருக்கற வில்லன் சஞ்சாய் தத் தான் ஹீரோ மாதிரி ...ஆள் பார்க்க நம்ம  ஆளவந்தான் மொட்டை கமல் மாதிரி ஜம்முனு இருக்கார் ,அவரோட எக்சசைஸ்  பாடிக்கு முன்னால ஹீரோ பாடி கம்மிதான் ..

ஊர் ல நல்லவரா இருக்கும் ஹீரோவோட அப்பா வை வில்லன் கொலை பழி சுமத்தி கொன்னுடறான் ,பல  வருஷம் கழிச்சு பெரிய ஆள் ஆகி பின் ஹீரோ அவனை பழி வாங்கி நம்மையும் பழி வாங்கறதுதான்  கதை ..

 ஹீரோ ஆள் பார்க்க ஜம்முனு இருக்கார் , ஆனா உருப்படியா எதுவும் செய்யலை .. (ஹீரோயின் கூட ஒழுங்கா டூ யட் கூட பாடலை அவ்வ்)

http://media2.intoday.in/indiatoday/images/stories/agneepath350_012712040235.jpg


எனக்கு தோன்றிய  சில சந்தேகங்கள் 

1 - ஹீரோயின் பிரியங்காசோப்ரா எதனால ரிப்பனை தாவணியா போட்டிருக்கார்?


2.தளபதி ரஜினி மாதிரி ஹீரோ படம் பூரா உம்முன்னே இருக்காரே, எதனால?


3.சின்னப் பையனா ஹீரோ வரும் ஃபிளாஸ்பேக்ல ஒருபோலீஸ் ஆபீசரையே சுடடு கொல்றாரு, அப்பவே வில்னையும் கொன்னருக்கலாமே?

4. ஹீரோயின் முதல் சீன்ல ஹீரோ தன் தாவணியை உருவுனதும் பதட்டப்பட்டாரு, அதுக்குப்பிறகு அப்படியே தேமேன்னு இருக்காரே, ஏன்?

5. ஒவ்வொரு சீன்லயும் ஹீரோயின் 18 முழம் மல்லிகைப்பூ வெச்சுட்டு வர்றாரே, அது ஏன்?


http://img.india-forums.com/wallpapers/1280x1024/174824-priyanka-in-agneepath-2012-stills.jpg

6. வில்லனும்,ஹீரோவும் இடைவேளைக்கு முன்னமே சந்திக்கறாங்க, ஆனா அவரை கொல்ல எந்த ஸ்டெப்பும் ஹீரோ எடுக்கலை, அது ஏன்?

7. வில்லன் ஹீரோவை அடிச்சு துவம்சம் பண்ணி 4 கிமீ இழுத்துட்டுபோய் அவரை கட்டிப்போட்டு கொல்ல முயற்சி பண்றாரு,ஏன்?அபபவேகொல்லலை?

8. ஒரே ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடும் கேத்ரினா கைஃப் வாங்குன அப்ளாஸ்ல பாதி கூட ஹீரோயின் வாங்கலையே, ஏன்?ஹீரோயினுக்கு ஏன் காட்சிகள் ஆழமா வைக்கலை?

9.படத்துல காமெடி காமெடின்னு சொல்வாங்களே,அது மருந்துக்கு கூட இல்லையே, அது ஏன்?

10. க்ளோசப் காடசிகளில் பிரம்மாண்டமா தெரியற வில்லன் லாங்க் ஷாட்ல ரொம்ப சாதாரணமா பாடி பில்டப் இல்லாம இருக்காரே, ஏன்?

http://img.india-forums.com/crop/265x300/174878-hulf6wqp.jpg


படு மொக்கையான இந்தப்படத்தை ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணா தியேட்டர்ல பார்த்தேன்..யாரும் போயிடாதீங்க :(((((((((

டிஸ்கி - இந்த லட்சணத்துல இந்தப்படம் மும்பைல செம ஹிட்டாம் அவ்வ்வ்வ்

18 comments:

விஸ்வநாத் said...

இந்தப் படத்தப் போய் பாத்தீங்களே, அது ஏன் ?

Pulavar Tharumi said...

முதல் நாளிலேயே 25 கோடி வசூல்ன்னு செய்தியில் போட்டிருந்தாங்க. இந்திக்காரங்களோட ரசனை இவ்வளவு தான் போல :)

Unknown said...

மூன்றாவது ஸ்டில்ல பிரியங்காவைப் பாக்க என்னவோ மாதிரி இருக்கு! நல்லால்ல... அவ்வ்வ்!

நிரூபன் said...

ஆகா..ரிப்பனை தாவணியா போட்டிருக்காங்களோ..

அப்படீன்னா ரசிகர்களுக்கு செம விருந்து கிடைச்சிருக்குமில்லே.

நிரூபன் said...

நமக்காக ஒரு மொக்கைப் படத்தை பார்த்து
எம்மை காத்த அண்ணர் வாழ்க!

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணன் காலைல போஸ்ட் போட்டவுடனையே கிளம்பிட்டாரு

K.s.s.Rajh said...

ரொம்ப மொக்கை படம் போல அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே இதுக்கு அப்பறமும் பார்ப்போமா நாங்க.

நன்றி பாஸ்

ஹேமா said...

படம் சரில்லன்னு சொல்றதும் நல்லதுதான்.விரும்பிப் பாக்கிறவங்க நேரத்தை மிச்சப்படுத்திக்கலாம்.
நன்றி சிபி !

ஹாலிவுட்ரசிகன் said...

காதரீனா காதரீனா ....

ஹாலிவுட்ரசிகன் said...

// ஹீரோயின் கூட ஒழுங்கா டூ யட் கூட பாடலை அவ்வ் //
இந்த ஒரு பாயிண்ட்டுக்காகவே இந்தப் படத்தை பார்க்கமாட்டேன்.

சரியில்ல....... said...

மொத்தத்தில் =அக்னிபாத்-சட்னிபாத்

தாமரைக்குட்டி said...

சிக்னி சம்மேலி பாட்டு செம!

தாமரைக்குட்டி said...

ஒரே கிலி கிலி உலி உலி பாட்டுப்பா, காத்ரீனா ராக்ஸ்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, சந்தேகத்துக்கு அப்புறமா இயக்குனர் கேள்விகள், சிபி கமென்ட், இன்னும் நிறைய வருமே பப்ளிஷ் பண்றப்ப ஏதும் டெலீட் ஆயிருச்சா?

Menaga Sathia said...

எதுக்கு இந்த படத்தை பார்க்க போனீங்க?? உங்களுக்கு இந்தி தெரியுமா??

ஹாலிவுட்ரசிகன் said...

// இந்த லட்சணத்துல இந்தப்படம் மும்பைல செம ஹிட்டாம் அவ்வ்வ்வ் //
காத்ரீனாவின் குத்தாட்டத்தை பார்க்க கூட்டம் போயிருக்கும்.

RAMA RAVI (RAMVI) said...

//ஹீரோ வில்லனை பழிவாங்கி, நம்மையும் பழி வாங்கறதுதான் கதை//

ஒரே வரில அழகாக கதையை சொல்லிடீங்களே!!

sarav said...

thalaivar avargalae ithu 25 varusham (avalavu correcta nyabagam illa oru kuthu mathippaga ) munnadi Amitabh bachan nadichu vantha AGNEEPATH padaathoda remake. Originala amitabh kalakki iruppar voice modulation (husky voice) ellam panni attagasam athakalam panni iruppar antha padathukku avarukku National award koduthanga ! appavukku ketta per undu panni avara saga adichittnga athanala avarado pera correct panni ooru makkal avanga thappai unaranum athukku avarukku time theva patuchu athanala than Original padathula chinnna vayasu amitabh policeinspector kolai panuvar oru petrol pump koluthuvar aaana villan suda mattar
ithula appadi than solli irukkangala ? yenna naan innum padam pakkalai