Tuesday, January 24, 2012

கூகுள் பிளஸ்-ம் , அதைத்தொடரும் 18 பிளஸ்-ம் ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ்)

1.பூ பறிக்கும் நோம்பியாம்.. ஒரு பூவை செடியில் இருந்து பிரிக்கறதைக்கூட ஒரு விழாவா கொண்டாட தமிழனாலதான் முடியும்

-----------------------------------

2. சினிமா டாக்டர்ஸ் எப்புடி நாடி புடிச்சே கர்ப்பமானு கண்டுபுடிக்கிறாங்க ? 

இன்னமும் கூட கிராமங்களில் நாட்டு வைத்தியர்கள் நாடிபார்த்து சொல்வதுண்டு

-----------------------------------

3. நாடாளும் மன்னனிவன் காவியத்தில் ஓர் தலைவன்.. நாட்டில் உள்ள அழகர்களில் ஆயிரத்தில் இவன் ஒருவன்#happyBdayMGR

-------------------------------

4.  monkey குல்லாவின் பெயர்க் காரணம் எதுனா இருக்கா?? 


கில்லி படத்துல அணில் அதை போட்டுக்கிட்டு கபடி கபடினு ஒரு ஃபைட் போட்டாரு, அதுல இருந்து??

----------------------------------

5. ஜெ ஒரு அபூர்வ சிந்தாமணி - இரா .செழியன் #உங்க இயற்பெயர் ஜால்ரா மணியா?

-----------------------------


6.ஜல்லிக்கட்டுக்கும்  ஜல்லிக்கல்லுக்கும் என்ன வித்தியாசம்?


ஜல்லிக்கட்டு சேலைகள் வேடிக்கை பார்க்க காளைகளின் வீர விளையாட்டு.. ஜல்லிக்கல்லு சாலைகள் ஓரம் குவித்து  வைத்து அரசு நடத்தும் பம்மாத்து

----------------------------------

7. முக நூல்ல என்ன செஞ்சுட்டு இருந்தீங்க மேடம்?


ஹி ஹி ஒரு லூசுப்பையனுக்கு நூல் விட்டுட்டு இருந்தேன்.. ஆனா அவன் முகம் கொடுத்து பேசலை


-------------------------------------

8. பெண்ணின் மனதில் இடம் பிடிக்க,  ஆண் அவன் மூளையை செயல் படுத்த வேண்டும்


.அதெப்பிடி? மூளை வேலை செஞ்சா லவ் பண்ணுவானா? லாஜிக் இடிக்குதே?

---------------------------------------

9. டாக்டர், உடம்பு கொதிக்குற மாதிரியே இருக்கு பட் பீவர் மாதிரி இல்ல,இதுக்கு என்ன பண்ணலாம்?

யோவ், இது ஹாஸ்பிடல் , மைண்ட் இட்

-------------------------------------

10. கூகுள் பிளஸ் பற்றி சொல்லு


18 + மேட்டர் ஏதாவது கேட்டா கொஞ்சம் ட்ரை பண்ணலாம், ஏன்னா எனக்கும் 19 வயசுதான் ஆகுது. ஆனா கூகுள் பிளஸ் பற்றி கேட்டா எனக்கு என்ன தெரியும் ?

-----------------------------------------

11..இரும்பு மனிதர்னு பேர் எடுத்த தலைவர் எப்படி லவ்வுல மாட்னாரு?


மகளிர் அணித்தலைவிக்கு காந்தக்கண்களாம்

-----------------------------------

12. என்னதான் புதுமுக நடிகைன்னாலும் இப்படியா பேர் வைப்பாங்க?

என்ன சார் நீங்க? அமலா பால் வைக்கலாம், விமலா ஹார்லிக்ஸ் வைக்கக்கூடாதா?

--------------------------------------


13.  தலைவர் அணு உலைக்கு ஆதரவா பேசறாராமே?

 பின்னே? அவர் சம்சாரம்  அனு சமையல் பண்றதும், உலை வைப்பதுவுமே  பெருசு, இதுல..?


------------------------------------

14. .சசிகலாவுக்கு  மட்டுமே கட்டுப்பட்டவனாக நான் இருக்கிறேன் - நடராஜன் #  ஏகப்பட்ட அடி வாங்கி கட்டு போட்டவன்னு வெளில பேசிக்கிட்டாங்களே?


--------------------------------

15. பிரபல ட்வீட்டர் -கண்ணாடிய கழட்டுங்க. ஹீரோயினுக்கு டாடி மாதிரி இரு்ககு.

மொக்கை ட்வீட்டர் - கிளாஸ் கழட்டுனா தாத்தா மாதிரி இருக்கும், OKவா?

--------------------------------


  16. ட்விட்டர்னால பெண்களுக்கு எந்த யூஸ்ம் இல்லைன்னு எவனும் இனி சொல்ல முடியாத

எப்படிசொல்றீங்க?

சாம்பார், ரசம் செய்வது எப்படி?னு ட்விட்ஸ் வருதே

------------------------------


17. சமையல் குறிப்பில் ஆண்களுக்குத்தானே யூஸ்?

நோ நோ , ஆண்கள் ஆல்ரெடி அனைத்தும் அறிந்தவர்கள். இந்தக்கால பெண்களுக்குத்தான் அதன் யூஸ் அதிகம்

-----------------------------------


18 . சசி' தரப்பு, தி.மு.க.,வுக்கு ஆதரவு ! : அடுத்து நடக்கப் போவது என்ன? # புதிய பார்வை இதழில் நடராஜன் கலைஞரை பாராட்டி ஜால்ரா அடிப்பார்


-------------------------------


19. . அர்ஜூனின் காட்டுபுலிக்கு ஏ சான்று! # டைட்டில் COTடுப்புலியா?

--------------------------


20. தாண்டவம் படத்தில் ஆக்ஷ்ன் ஹீரோயினாகிறார் எமி ஜாக்சன்! # இனி டாமி ஜாக்ஸன் வள் வள் லொள் லொள்?

20 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

15வது ஜோக் யாருக்கு யாரால் கூறப்பட்டது?

சி.பி.செந்தில்குமார் said...

@ஹாலிவுட்ரசிகன்

hi hi ட்விட்டர்ல என்னை ஒருத்தர் கேள்வி கேட்டாரு, மீ ரிப்ளை அவ்வ்வ்வ்வ்

ராஜி said...

ஹாலிவுட்ரசிகன் said...

15வது ஜோக் யாருக்கு யாரால் கூறப்பட்டது?
>>
இதெலென்ன டவுட் சகோ உங்களுக்கு? கூலிங்கிளாஸ்ன்னு வருதே. அப்போ கன்ஃபார்மா அது நம்ம சிபி சாருக்கு சொன்னதுதான்.

K.s.s.Rajh said...

பாஸ் அந்த அமலா பால் என்று பெயர்வைக்கலாம் ஏன் விமலா ஹார்லிக்ஸ் என்று பெயர்வைக்க முடியாது ஜோக் மிக பிரமாதம்

ஏனையவையும் கலக்கள்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

4.க்கு அணில் சேமியா பிரீ.....

Unknown said...

15..நல்லவேளை..!அதுக்கு மேல சென்சார்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சீதாராம் கேசரி
ஜெயராம் லட்டு
(எஸ்வி.சேகர் ஜோக்)

Marc said...

அருமையான கடிகள் வாழ்த்துகள்.

Unknown said...

hahahahahahahaha!

ad said...

தன் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்திலேறி........

கடம்பவன குயில் said...

சுவடுகளை வழிமொழிகிறேன்

கடம்பவன குயில் said...

சுவடுகளை வழிமொழிகிறேன்

கும்மாச்சி said...

வழக்கமான கலக்கல்.

கும்மாச்சி said...

புதிய முகப்பு நன்றாக உள்ளது.

உணவு உலகம் said...

15.உண்மையை ஒத்துக்கொள்ளும் உங்கள் நேர்மை எனக்கு புடிச்சிருக்கு தாத்தா. ஹே ஹே.

Mohamed Faaique said...

பால்..ஹார்லிக்ஸ்..செம....

15வதுக்கு ஒரு சல்யூட்....

ஹேமா said...

சிபி...குங்குமத்தில் உங்கள் நகைச்சுவைத் துணுக்குகள் பார்த்தேன் இன்று.வாழ்த்துகள் !

MaduraiGovindaraj said...

அத்தனையும் அருமை

MaduraiGovindaraj said...

முடியவில்லை மொழிப்போர்!