Sunday, January 01, 2012

பிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பனை

இன்னிக்கு புத்தாண்டு. எல்லாரும் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு, சிகரெட்
புடிக்குறதை விட்டுடுறேன், தண்ணி அடிக்கமாட்டேன், அரியர்ஸை கிளியர்
பண்றேன்ன்னு  புத்தாண்டு சபதம் எடுத்துக்குவோம். அதுப்போல நம்ம பிரபல
பதிவர்கள்லாம் என்னென்ன  புத்தாண்டு சபதம் எடுக்க போறாங்கன்னு நம்ம சிபிஐ ல
இருந்து வந்த ரிப்போர்ட்...,


1. கவிதைவீதி சௌந்தர்: காலைல 9 மணீக்காட்சி பார்த்து 12 மணீக்கே விமர்சனம் போட்றனும்


2. கருண்: இந்த வருஷமாவது பேருந்து கவிதை  எழுதாமல் இருக்கனும்.

3. மனோ: இந்த வருசமாவது அருவாளுக்கு வேலை வைக்காமல் பிளாக்குல இருக்குற அத்தன பயலும் அடங்கனும், சிபியை கலாய்க்காம ஒரு பதிவாவது போடனும். சிபி கண்ணாடி போடாம இருக்கும்போது ஒரு போட்டோவாவது எடுத்துடனும்.


4. பக்கி சாரி விக்கி: மிலிட்டரில இருந்து வந்தபின் மிலிட்டரி சரக்கு கிடைக்க
மாட்டேங்குது. நிறைய சரக்கு கிடைக்கனும்.எங்க ஆபிசுல  புதுசா 4 இல்ல ஐந்து ஸ்டெனோ  சேரனும். யூடுயூப்ல நிறைய விடியோஸ் அப்லோட் பண்ணனும். அப்பதானே நான் கிச்சளிக்காஸ் போட்டு பதிவை தேத்த முடியும்.
தமிழ்வாசி : எனக்கு விடுகதை சொன்ன, எங்க ஆபீஸ் வாசலில் எலந்த பழம் விக்குற பாட்டி ஊருக்கு போயிடுச்சு. இப்போ பதிவுல  போட விடுகதை இல்லாமல் தவிக்குறேன். வேற எதாவது பார்ட்டி சீ பாட்டி எலந்த பழம் விக்க வரணும்.

5. ராஜபாட்டை: விஜய், அஜீத், சூர்யாலாம் நிறைய படங்கள் நடிக்கனும்.
(சாமியே கொஞ்சம் ஜெர்க்காகி பார்க்க..)
நீ பயப்படாத சாமி. உன்னை அவங்க படம்லாம் பார்ர்க்க கூட்டிகிட்டு போக
மாட்டேன். அவங்க படம்லாம் நிறைய ரிலீசனால் தான் அந்த போட்டோலாம் வச்சு ஃபேஸ்புக்ல கலாய்ப்பங்க. அதை வச்சு நான் பதிவை தேத்துவேன்.6. ஐ.ரா.ரமேஷ்பாபு: நான் படிச்ச, கேட்ட அத்தனை நீதிக் கதைகளயும் பதிவா போட்டாச்சு. புதுசா எவனாவது எழுதி குடுத்தால் நல்லா இருக்கும்.

7. சிரிப்புபோலீஸ்: 20வயசு பையன்கூட ஃபிகர் கூட சுத்துறான். ஆனால் அழகுலயும், அறிவுலயும்  சிறந்த!? எனக்கு ஃபிகரும் அமைய மாட்டேங்குது. வீட்டுல பார்க்குற பொண்ணும் செட்டாக மாட்டேங்குது. இந்த வருசமாவது ஃபிகர் இல்லாட்டி கல்யாணமாவது செட்டாகனும்.

8. வெங்கட்: என் பிளாக்குக்கு வரவன்ல சீன் படம் பார்க்குறவன், பான் பராக் மெல்லுறவன், தம்மு, தண்ணிஅடிக்குறவன் எவன்னு ஆராய்ச்சி பண்ணி அவன் கமெண்டை அப்ரூவல் பண்றதுக்குள்ள தாவு தீர்ந்துடுது. சோ, டீசண்டானவன் எவன், இண்டீசண்டானவன்னு எவன் ந்னு கண்டுபிடிக்குறமாதிரி சாஃப்ட்வேர் வந்தா நல்லா இருக்கும். அப்புறம், புதுசு புதுசா  எஸ்.எம்.எஸ் வந்துக்கிட்டே இருக்கனும் அப்போதானே அதை வெச்சு என்னால பதிவை தேத்த முடியும்.

9. நிரூபன்: இந்த வருசம் எல்லா பிளாக்கர்சும் நிறைய தப்பு பண்ணனும். அப்போதானே அதை வச்சு நான் பதிவு தேத்த முடியும்.

10. ராஜராஜேஸ்வரி: இருக்குற கோவில்கள் பற்றிலாம் எழுதி முடிச்சுட்டேன். புதுசா யாராவது கோவில் கட்டினா நல்லா இருக்கும். அப்புறம் போட்டோ எடுத்து எடுத்து என் கேமராவே ரிப்பேரா போயிட்டுது. அதனால என் கணவர் புது கேமரா வாங்கி தந்தால் நல்லா இருக்கும்

11. சித்ரா: அமெரிக்கா பத்தி பதிவெழுதி பதிவெழுதி எல்லாரையும் போரடிக்க வச்சுட்டேன். அதனால எனக்கு வேற ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கி குடுத்துடு. அப்போதானே அங்கே போய் அந்த நாட்டை பத்தி எழுத முடியும்.

12 . ஹேமா-   2 பிளாக்ல ஏதோ ஒண்ணுல தான் அதிகம் சைன் பண்ன முடியுது, 2012ல 2 பிளாக்லயும் ஒரே மேட்டரை மாத்தி மாத்தி போட்டுடனும்..


46 comments:

SURYAJEEVA said...

பிரபல பதிவரான எங்கள் அண்ணன் சி.பி.செந்தில் குமாரின் புத்தாண்டு சபதம் விடு பட்டு போனதால்...
வெறும் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் விடை பெற்றுக் கொள்கிறேன்

அண்ணானோட புத்தாண்டு சபதம் என்னவாக இருக்கும்?

கும்மாச்சி said...

சி.பி. நல்ல கலாய்ச்சி இருக்கீங்க.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

முன்பனிக்காலம் said...

ஹா ஹா ஹா..... ஒருவேளை சிபி யோட சபதம் : உலகம் தொடர்ந்து உருப்படாமலே இருக்கோணும், அப்ப தானே நிறைய ஜோக் போட ஏலும்....

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
முத்தரசு said...

சி.பி.செந்தில் குமாரின் புத்தாண்டு சபதம்: கில்மா படம் விமர்சனம் எழுத கூடாது - கில்மா படங்களை பிளாக்கில் போடகூடாது.

வாழ்த்துக்கள்..

ஹாலிவுட்ரசிகன் said...

சி.பி - நிறைய கில்மாஸ் ரிலீஸ் ஆகோணும். எல்லா நடிக நடிகைகளும் நிறைய அறிக்கை விடோணும். அப்பத்தான் தினமும் ஒரு பதிவு போட முடியும்.

Anonymous said...

சிபியின் சபதம்: இருக்குற குஜால் ஸ்டில்லை எல்லாம் கூகிள்ல இருந்து எடுத்து போட்டாச்சி. இனி வெள்ளிக்கிழமை போஸ்டரை கிழிச்சி எடுத்து பதிவுல போடணும். :-)

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!!

சரியில்ல....... said...

பதிவு போட்டதும் 'ஃபேஸ் புக்'கில் tag பண்ணாததற்கு கடுங்கண்டணங்கள்!

சரியில்ல....... said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிபி ஸாரே!

சரியில்ல....... said...

சிபி சபதம்: இந்த வருஷமும் கண்ணாடி மாட்டாமல் இருக்கிறப்போ எந்த கேமரா'லயும் க்ளிக் ஆகிடக்கூடாது ஆண்டவா.....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சபாஷ்யா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சிபியின் சபதங்கள்....

இந்த வருடமும் யார் எவ்வளவு அவமானம் படுத்தினாலும் அமைதியாக இருப்பது....


எத்தனை படங்கள் வந்தாலும் முதலில் கில்மா படங்களுக்கே முன்னுரிமை அளிப்பது...

தமிழ்மணத்தில் தொடர்ந்து 1 இடத்திலேதான் இருக்கிறோம் அதை விட முன்னேறி 0 இடத்திற்கு போவது... (என்னா 1 க்கு முன்னாடி 0 தானங்க இருக்கு)


ஒரு நாளைக்கு எப்படியாது 3 பதிவு போடுவது... (ஏன்ன ஒரு சில நாட்களில் இரண்டு பதிவுகள் பேர்டுகிறார் அதற்காக)


இந்த வருடமும் நாமா யாருக்கும் போன் பண்ணகூடாது.. அவர்களே போன் பண்ணி பேசட்டும்..

இந்த வருடமும் மொக்மை ஜோக்குகள் மட்டுமே போடுவது...


கிளாமர் போட்டோக்களை வெளிவந்தவுடன் யாரும் பேர்டுறதுக்கு முன்னாடி நாம போட்டுடனும்....


யாராவது உள்குத்து பதிவு போட்டா ரைட்டுன்னு சொல்றதுக்கு பதிலா தப்புன்னு சொல்றது...


இந்த வருடம் எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாத பதிவர் என்ற பட்டம் வாங்குவது...


போன்ற முடிவுகளை சிபி அவர்கள் எடுத்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்...

மேலும் நான் இதை வழி மொழிகிறேன்...

இதை படிப்பவர்களும் வழிமொழியும் படி கேட்டுக்கொள்கிறேன்...

நன்றி வணக்கம்....

மகேந்திரன் said...

உங்களோட புத்தாண்டு சபதத்த
மனோ தயார் செய்திட்டு இருக்காராம்....
ஹா ஹா

மகேந்திரன் said...

அட.. அதுக்குள்ளே நம்ம சௌந்தர்
தயாரிச்சிட்டாரே..
வழிமொழிதல் தானே
நான் தயார் அதுக்கு..
வழிமொழிகிறேன்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சிபிக்கு.....

இந்த ஆண்டின் தமிழ்மண வலைப்பதிவுகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததற்க்கு என் வாழ்த்துக்கள்...

ராஜி said...

சகோதரர் சௌந்தர் சொன்னதையெல்லாம் நானும் வழிமொழிகிறேன்

ராஜ நடராஜன் said...

தமிழ்மணத்தில் முந்தி நிற்பது 2012ல் தொடர வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் அண்ணா,
எல்லோர் சபதங்களையும் சொல்லிய நீங்க உங்க சபதங்களை நம்ம கவிதை வீதி சௌந்தர் மூலமா சொல்ல வைச்சிட்டீங்களே;-))))))))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் அண்ணா,
எல்லோர் சபதங்களையும் சொல்லிய நீங்க உங்க சபதங்களை நம்ம கவிதை வீதி சௌந்தர் மூலமா சொல்ல வைச்சிட்டீங்களே;-))))))))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

அண்ணே, உங்களுக்கும், அண்ணிக்கும், அபிராமிக் குட்டிக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
ராஜநடராஜன் அண்ணர் சொல்லியது போல தமிழ்மணத்தில் தொடர்ந்தும் ஜமாய்க்க வாழ்த்துகிறேன்.

நிரூபன் said...

9. நிரூபன்: இந்த வருசம் எல்லா பிளாக்கர்சும் நிறைய தப்பு பண்ணனும். அப்போதானே அதை வச்சு நான் பதிவு தேத்த முடியும்.
//

அண்ணே, லைட்டா கடிச்சிருக்கிறீங்க.
சும்மா நோண்டி பண்ணுறவங்களைத் தானே எழுதிக்கிட்டு இருக்கேன். ஹே...ஹே....

நிரூபன் said...

என்னது கருண் இந்த வருடமும் பேருந்து கவிதை விடமாட்டாரா?

நிரூபன் said...

அண்ணே, பதிவு சுவாரஸ்யமாகவும், சில பதிவர்களின் எண்ணங்களை நினைத்து சிரிக்கும் வண்ணமும் இருக்கிறது.

நன்றி.

நிரூபன் said...

மேலே உள்ள கமெண்டில் ஓர் சிறிய திருத்தம்.
என்னது கருண் இந்த வருடமும் பேருந்து கவிதை எழுதுவதை நிறுத்தமாட்டாரா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்

ராமகிருஷ்ணன் said...

இனிய புததாண்டு வாழ்த்துக்கள்

ராமகிருஷ்ணன் said...

இனிய புததாண்டு வாழ்த்துக்கள்

ராமகிருஷ்ணன் said...

இனிய புததாண்டு வாழ்த்துக்கள்

MaduraiGovindaraj said...

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்கு
விடுகதை பஞ்சம் கொஞ்சம் பேஜாரு (தமிழ் வாசி )

சுதா SJ said...

ஹா ஹா..... நம்ம ஹேமா அக்காச்சியையும் கடிச்சுட்டீன்களா??? அவ்வவ்

M.R said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இதில தமிழ்வாசிக்கு நம்பர் போடல. அவரு 4அ -வா?

குறையொன்றுமில்லை. said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

Unknown said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்....சௌந்தர் நல்லா லிஸ்ட் போட்டிருக்கிறார்....

நாய்நக்ஸ் அண்ணனின் வீடு தானே புயலால் சிறு சேதமடைந்ததாலும்,மின்சாரஇணைப்பு இல்லாததாலும், யாருக்கும் கருத்திடமுடியவில்லை, வாழ்த்து கூறமுடியவில்லை, என்று கூறினார்......புயலால் பாதித்த மக்கள் அதிலிருந்து மீள இறைவனை பிராத்திக்குமாறும் கேட்டுக்கொண்டார் நன்றி!

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள் சிபி.

சேகர் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

Unknown said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

பதிவு மிகவும் அருமை!

புலவர் சா இராமாநுசம்

ஹேமா said...

சிபி...உங்க உள்மனசுதானே இது.கடிச்சு வச்சிருக்கீங்க.அழுகை அழுகையா(சந்தோஷமா கவலையான்னு நீங்களே தீர்மானம் பண்ணுங்க)வருது.வருஷப் பிறப்புன்னு கண்ணீரை அடக்கிக்கிட்டு இருக்கேன் !

Mahan.Thamesh said...

கலக்கல் பாஸ்
உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .

Kiruthigan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்வாத்யாரே..!
இந்த ஆண்டு பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்.

http://tamilpp.blogspot.com/

மன்மதகுஞ்சு said...

வெங்கட் அண்ணைக்கு இத்தனை பிரச்சினைகளா, பாவம் நல்ல மனுசன்யா ..அண்ணே உங்க கில்மா ஜோக்குகள் ஜூப்பர்.. அப்பியே அதையே நீங்களும் மெயிண்டெய்ன் பண்ணூங்க.. ஆங்லிஸ் படங்களுக்கு கொஞ்சம் முன்னுரிமை கொடுத்தா உங்க புண்ணீயத்தில நாங்களும் ஒலக படம் பார்த்துக்கலாமே..

சசிகுமார் said...

கருனுக்கு ஒரே லைன்ல சொல்லி இருக்கீங்க....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் ஒருநாள் பதிவுலகம் வரலைன்னா இப்பிடியா அநியாயம் பண்ணுவே ராஸ்கல்...