Tuesday, January 03, 2012

டேம் 999 & விஜய்-ன் துப்பாக்கி -ஜோக்ஸ்

http://www.ajithfans.com/article-uploads/2011/01/ajith-vijay.jpg

1.பள்ளியில் படிக்கும் காலங்களில் யுவர்ஸ் ஒபீடியண்ட்லி ( தங்கள் கீழ்ப்படிந்துள்ள) என எழுதும்போதே திருமணவாழ்வுக்கு தயார் ஆகி விடுகிறார்கள் ஆண்கள்

----------------------------------------------

2. குழந்தைகள் விழித்து விடுமோ என்ற பயத்தில் விருப்பம் இல்லாமலேயே விரதத்தை தொடர்கிறார்கள் தனிக்குடித்தன தம்பதிகள்

------------------------------------

3. தலைவர் இப்போ சிவகாசில இருக்காராம்.. 

அய்யய்யோ, யாருக்கு வெடி வைக்கப்போறாரோ? 

---------------------------------------

4. படிக்கற பசங்க டெயிலி 8 மணி நேரம் தூங்கனும்.. 

ஓக்கே சார்.. என்னை மாதிரி படிக்காத மக்குப்பசங்க?

--------------------------------------

5. காலேஜ் டைம் காலை 10 டூ மாலை 5 வரை இருக்கே? ஏன்? 

சார், அப்போதான் மார்னிங்க் ஷோ, மேட்னி ஷோ பார்க்க முடியும்?

-------------------------------------

6. நேத்து என் ஒயிஃப் கூட சண்டை , கோபத்துல கோ டூ ஹெல் (GO TO HELL)னு திட்டிட்டேன்....

அப்புறம்?  

நீங்களும் துணைக்கு வாங்கன்னு கூப்பிடறா..

---------------------------------------

7. உங்களுக்கு புது நோட்டு புக் வாசம் பிடிக்குமா? 

யா, ஆனா உங்க கேள்வில இருக்கற புக்கை கட் பண்ணிடுங்க

------------------------------

8  பெண்ணின்  கேள்விகளுக்கு மட்டும் ஆம்பளைங்க ஏன் பதில் சொல்றதில்லை?

ஹலோ, வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றோம்?  தெரிஞ்சா சொல்லிட மாட்டோமா?.

-----------------------------------------

9. ஏய் மிஸ்டர்.. எதுக்காக ஓடறே?

ஹலோ.. நீங்க முதல்ல துரத்ததை நிறுத்துங்க..

----------------------------------------

10.தவறான புரிதல்கள் சில அரிதான பிரிவுகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது

---------------------------------------

http://tamiloprofile.com/Photos/Actor%20Vijay%20Family%20Photo.jpg

11. ஹீரோ கட்டை வண்டில போற மாதிரி ஓப்பனிங்க் ஷாட்

.வேணாம் சார். கட்டைல போறவனேன்னு கிண்டல் பண்ணுவாங்க

-----------------------------------------

12. மயக்கம் என்ன? படம் ஹிட் ஆகிட்டா செல்வராகவனோட அடுத்த படம் என்னவா இருக்கும்?

இது தெரியாதா? “ இந்த மவுனம் என்ன?” தான்

-----------------------------------

13. சார்.இந்தப்பாட்டுல ஆம்பளைங்களை திட்டி எழுதனும்.

சாரி சார். நான் சேம் சைடு கோல் போடமாட்டேன், என் சம்சாரம் எழுதட்டும் , பிரமாதமா ,கேவலமா திட்டுவா

--------------------------------------

14. அத்தான், ஹோட்டல்ல புரோட்டா ஆர்டர் பண்ணாம எதுக்கு உப்புமா ஆர்டர் பண்றீங்க?

வாரத்துக்கு 10 தடவை நீ அதைத்தானே செய்யறே?யாம் பெற்ற துன்பம் ..பெறுக இவ்வையகம்

---------------------------------------

15. இந்தப்படத்துல என்னோட மேக்கிங்க் ஸடைல் எப்படி இருந்துச்சு?

கேவலமா....

----------------------------------------------

http://www.kollywoodtoday.in/wp-content/uploads/2008/06/vijaybirthday-ju23-2008.jpg

16.துப்பாக்கி படத்துல விஜய்க்கு தாதா ரோல் # நல்லா விசாரிங்க, தாதாவா? தாத்தாவா?கடைசில எப்படியும் படம் சோதாவா தான் இருக்கப்போகுது

--------------------------------------


17.டேம் 999 திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை.# டேமிட் - னு கலைஞர் சொல்லி மாட்டிக்கபோறார், ஜாக்கிரதை

--------------------------------

18. டேம் 999 திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை.# மேடம், உங்க ராசி நெம்பர் 9, கூட்டுத்தொகை 9 வருது, அதை தடை பண்ணுனா ஏதாவது வில்லங்கம் வந்துட்டா என்ன பண்றது?ன்னு பயம் இல்லாம தடை பண்ணீட்டீங்க, வாழ்த்துகள்

------------------------------------


19.  . ஹீரோயின் புதுமுகம்.. திருப்பூர் நொய்யல் ஆத்துல குளிச்சு வளர்ந்த பொண்ணு ...

அதுக்காக நொய்யல்பாத்யாய-னு அவங்களுக்கு பேர் வைக்கனுமா?

ஏன்? கங்கோபாத்யாய-னு இருக்கே?

--------------------------------------------

20. டேம் 999 திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை #  நாங்க விடமாட்டோம், மேடம் -999 என டைட்டிலை மாற்றி ரிலீஸ் செய்வோமில்ல? அப்டினு யாரும் கிளம்பாம இருந்தா சரிதான். தமிழர்களின் வாழ்வாதரத்தை சிதைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட படம் அது..

----------------------------------------------

27 comments:

சரியில்ல....... said...

மேடம்999 செம.

சரியில்ல....... said...

டக்கரா கீது. அனைத்து டுவீட்டும். (பேஃஸ் ஃபுக்கில் Tag பண்ணியதுக்கு நன்றி)

சரியில்ல....... said...

அடுத்த பதிவுல சந்திப்போம்!:-)

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணா,

இப் பதிவில் உள்ள குறும்புகளில் இறுதி மூன்று குறும்புகளோடு ஒத்துப் போக முடியலை,

மக்களின் உணர்வுகளை, கேரள தமிழக மக்களின் பிரச்சினையை மறுபடியும் பூதாகரமாக்கிய டாம் அணை பற்றிய படத்தினை வைத்து நீங்கள் இங்கே மேடம் ஜெயா என ஒப்பீட்டு கலாய்த்திருப்பதை ஏற்க முடியலை!

மனிதர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் கருத்தாக இது அமைகிறது. ப்ளீஸ் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.

நிரூபன் said...

-----------------------------

18. டேம் 999 திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை.# மேடம், உங்க ராசி நெம்பர் 9, கூட்டுத்தொகை 9 வருது, அதை தடை பண்ணுனா ஏதாவது வில்லங்கம் வந்துட்டா?
//

தார்மீக ரீதியில் தடை செய்யப்பட வேண்டிய விடயம் என அனைத்துக் கட்சிகளுமே கூக்குரல் எழுப்பும் போது, மக்களின் உணர்வுகளை,
இவ் விடயத்தில் ஒருமித்த குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளின் உணர்வுகளை இந்தச் சிறிய கருத்து காயம் செய்யலாம் அல்லவா?

மாற்றுக் கருத்துக்களை பரிசீலனை செய்வீங்க என நினைக்கிறேன்.

நிரூபன் said...

மேடம், கலைஞர் விடயத்தினை டாம் விவகாரத்தினுள் காமெடி பண்ண வேண்டிய அவசியம் ஏற்படாது, காரணம் கடந்த காலத்தில் கலைஞர் இவ் விடயத்தில் கண்ணாமூச்சி விளையாட்டு நிகழ்த்தியிருந்தாலும், இக் காலத்தில் மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு கொஞ்சம் சரிந்திருக்கிறார்.

நிரூபன் said...

ஏனைய நகைச்சுவைகள் அனைத்தும் வழமை போலவே Short & Sweet.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனைத்தும் செம! (டேம் 999 தவிர)

முத்தரசு said...

அணை தவிர்த்து - டுவிட்டு அனைத்தும் சூப்பர்

Anonymous said...

sweety tweety

Anonymous said...

all vijay images super super

rajamelaiyur said...

கடைசி விஷயம் நடக்க வாய்ப்பு உண்டு

rajamelaiyur said...

இன்று ...

சிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது .

ராஜி said...

அஜீத், விஜய் ஒண்ணா இருக்காங்களே உங்க பிளாக்குல எப்படி?

கும்மாச்சி said...

படன் சோதாவா? அப்பா என்ன ஒரு கொலை வெறி.

இந்திரா said...

வொய் திஸ் கொலவெறி????

Unknown said...

விஜய் படத்தை போட்டுட்டு....16 ல் சோதா படமா இருக்க போகுதுன்னு சொல்லி இருக்கிங்க பாருங்க.....உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.....
19. நெய்யல் ஆத்துல குளிச்ச பொண்ணு ஏன் பேய்படமா? எல்லாம் சூப்பர்!

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!எல்லாமே கலக்கல்!கடேசி 4........................

K.s.s.Rajh said...

விஜயின் துப்பாக்கி பட ஜோக் சூப்பர்

ஏனையவையும் அருமை

சசிகுமார் said...

///பொண்டாட்டி திட்டுனா அருமையா இருக்குமா ///

பொண்டாட்டி திட்றதையும் ரசிக்கிற உங்க மனப்பக்குவம் பிரம்மிக்க வைக்கிறது...

MANO நாஞ்சில் மனோ said...

தலிவர் சிவகாசியில இருக்கார்ன்னா அண்ணே உனக்குத்தான் வெடி வைக்கப்போறார்னு தோணுது ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

படிக்காத மக்கு பசங்க சிபி மாதிரி கில்மா படம் பார்க்கபோங்க...

Unknown said...

4 ம் 6 ம் டாப்பு...எலேய் எனக்கே உள் குத்தா..பிச்சி புடுவேன் ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

ஏய் மிஸ்டர் எதுக்காக ஓடரே...?

சிபி : நாய் துரத்துது அதான் ஒடுறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

999 டேம் படத்துக்கு தடை விதித்தமைக்கு நன்றி அம்மா...

MANO நாஞ்சில் மனோ said...

20 : சரியாக சொன்னாய் அண்ணே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
4 ம் 6 ம் டாப்பு...எலேய் எனக்கே உள் குத்தா..பிச்சி புடுவேன் ஹிஹி!//

ஹா ஹா ஹா அதுக்குள்ளே உன் மேட்டரை வெளியே கொண்டு வந்துட்டானா அவ்வ்வ்வ்வ்....