Tuesday, January 31, 2012

பாரி - வித்தியாசமான க்ளைமாக்ஸ் கலக்கல் - சினிமா விமர்சனம்

http://2.bp.blogspot.com/-C3k5gLarPiA/TwqEjPZiP_I/AAAAAAAAA3I/zl8GtwZllRo/s1600/Paari+Movie+Posters+%25282%2529.jpgஉலக சினிமாவுக்கான முயற்சின்னு போஸ்டர்ல வித்தியாசமா  போட்டிருந்தப்பவே படத்துல ஏதாவது வெரைட்டி இருக்கும்னு எனக்கு ஒரு பட்சி உள்ளுக்குள்ள சொல்லுச்சு.. ஆனா போஸ்டர் டிசைன்ல பெருசா ஒண்ணும் புதுமை இல்லை.. இருந்தாலும்  ஒரு நம்பிக்கைலை போனேன்.. ஹி ஹி ஹி 

கிட்டத்தட்ட 29 வயசு தோற்றம் உள்ள கரடு முரடான புதுமுக ஹீரோ ராகுல் பிளஸ் டூ படிக்கற பையனா காட்டறப்ப சரி நம்ம ரஜினி பேபி மீனாவை கொஞ்சிட்டு, குமாரி மீனா கூட டூயட் பாடலையா?ன்னு என்னை நானே சமாதானப்படுத்திட்டேன்..  அவரும் வழக்கம் போல  4 கைத்தடிங்க கூட ஊர் சுத்திட்டு ஹீரோயின் பீனா படிக்கற அதே ஸ்கூல்ல சேர்ந்து கஷ்டப்பட்டு கரெக்ட் பண்றாரு.. 


ஹீரோவோட அப்பா செம வசதி.. காதலை ஏத்துக்கலை.. அடியாளுங்களை அனுப்பி ஹீரோயினை டமால்.. புதைச்சுடறாங்க.. இது வரை கதை மாமூல் படங்கள் மாதிரிதான் போகுது.. க்ளைமாக்ஸ்ல டைரக்டர் நிமிர வைக்கிறார்.. 

வழக்கமா இந்த மாதிரி லவ் ஸ்டோரில கதையை எப்படி கொண்டு போவாங்க.. காதலி போன இடத்துக்கே நானும் போறேன்னு ஹீரோ தற்கொலை செய்வார்.. அல்லது காதலியை கொன்ன அப்பாவை பழி வாங்க சொந்த அப்பாவை போட்டெறிவார்..ஆனா இந்தப்படத்துல அப்படி செய்யலை.. அங்கே தான் நிக்கறான் சந்திரன்..

http://123tamilgallery.com/images/2012/01/Paari-Movie-Stills-439.jpg


இதுக்கு மேல இதய பலஹீனம் உள்ளவர்கள் ஒரு பேரா ஸ்கிப் ஆகிடுங்க .. ஏன்னா டைப் பண்ண எனக்கே கொஞ்சம் பயமா, சங்கடமா இருக்கு.. அதாவது ஹீரோ தன்னோட உயிர் நாடியை கட் பண்ணிக்கறாரு. திருநங்கையா மாறிடறாரு.. அதை பார்த்து ஹீரோ அப்பா கண் கலங்கறாரு,கதறுகிறார். அதுதான் ஹீரோ தன் அப்பாவுக்கு தரும் தண்டனை..

கிட்டத்தட்ட சொல்லாமலே க்ளை மாக்ஸ் மாதிரி.. அதுல ஹீரோ நாக்கை கட் பண்ணிக்குவாரு.. காதலை கிண்டல் பண்றவங்க கூட ஏத்துக்கற மாதிரி ரொம்ப இறுக்கமா, சீரியசா படத்துல 20 நிமிஷம் சொன்ன டைரக்டருக்கு ஒரு பூங்கொத்து.. ஆனா இந்த 20 நிமிஷ பிளஸ்ஸை வெச்சுக்கிட்டு மீதி 2 மணி நேரமும் பிளேடு போட்டதுக்கு.....

ஹீரோ ராகுல்க்கு நடிப்பு சுமாராதான் வருது... சமாளிக்கிறார்..அவர் உருவம்  மனசுல பதியலை.. அது ஒரு மைனஸ்...

ஹீரோயின் பீனா அதீத  ஒப்பனை ஏதும் இல்லாம இயல்பா வர்றார்..நளினம், வெட்கப்படும் காட்சிகள் இவருக்கு கை கொடுக்குது.. ஆனா காதல் உணர்வை வெளிப்படுத்துவதில் சுமார் தான்..

http://moviegalleri.net/wp-content/gallery/paari-tamil-movie-stills/paari_movie_stills_5903.jpg

இயக்குநர் அவர்களிடம் சில கேள்விகள்

1. படத்துல வர்ற எல்லா ஆண் கேரக்டர்களும் எப்போ பாரு சரக்கடிச்சுட்டே இருக்காங்க.. இல்லைன்னா தம் அடிக்கறாங்க.. அது ஏன்? உவ்வே... ( அநேகமா யாருக்கும் சம்பளமே இல்ல போல. சாப்பாடும் சரக்கும், தம்மும் தானோ?)

2.  ஒரு சீன்ல ஹீரோவோட அப்பா ஹீரோ கிட்டே “ நீ டிகிரி ஏதும் படிக்க வேணாம்,  டாக்டராவோ, வக்கீலாவோ ஆகிடுங்கறார்.. பி ஏ டிகிரி முடிச்சாத்தானே பி எல் படிச்சு வக்கீல் ஆக முடியும்? ( ஒரு வேளை இப்போ சிலபஸ் மாறிடுச்சா?)

3. ஹீரோ அடிக்கடி  நடந்து வர்ற ஹீரோயினை தடுத்து நிறுத்த என்னமோ டவுன் பஸ்ஸை நிறுத்த கை காட்ற மாதிரி கையை குறுக்க காட்றாரு.. நாடகம் பார்க்கற மாதிரி இருக்கு..

4. ஹீரோயின் ஹீரோவோட அம்மாவை அம்மான்னு கூப்பிடறாரே? அப்புறம் ஹீரோ தம்பி முறை ஆகிடாதா? ஒரு மரியாதைக்காக அப்படி கூப்பிடலாம் என்றாலும் அத்தை தான் பெஸ்ட்.. 2 பேரும் ஒரே ஆளை அம்மான்னு கூப்பிட்டுட்டு லவ் பண்றது , கட்டிப்பிடிக்கறது எப்படியோ இருக்கு./.

http://www.dailomo.com/wp-content/uploads/2012/01/Paari-Tamil-movie-stills-7.jpg

5. ஹீரோயின் ஒவ்வொரு சீன்லயும் யாரையோ பார்த்து ஷாட் ஓக்கே? சீன் ஓக்கே?ன்னு கேட்கற மாதிரி ஒரு பார்வை, தலை ஆட்டல் பண்றாரு.. அதை எடிட் பண்ணி இருக்கலாம்.

6.  ஹீரோயின் - ஹீரோ சந்திப்புல ஒரு சீன்ல எதேச்சையா ஹீரோயின் நாம 2 பேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணீக்கலாமா? வீட்ல பிரச்சனை அப்டிங்கறார்.. அடுத்த செகண்டே ஹீரோ கைல இருக்கற மஞ்ச பைல இருக்கற புடவையை  குடுத்து சரி ரெடி ஆகிட்டு வா-ங்கறார்.. அது எப்படி? காதலியை பார்க்கப்போறப்பவே இதை கேட்பார்னு அவருக்கு எப்படி தெரிஞ்சுது?

7. ஹீரோயின் ஒரு சீன்ல ஹீரோவுக்கு தன் டிபன் பாக்சை குடுத்து சாப்பிடுங்கறார்.. ஹீரோ ஓக்கேன்னு சொல்லிட்டு போனவர் அப்புறம் கொஞ்ச தூரம் போய் ஹீரோயின் கிட்ட சிக்னல்ல டிஃபன்;ல என்ன இருக்கு?ங்கறார்.. அவ்லவ் கேனையா? டிஃபன் பாக்ஸ்ல மீல்ஸ் தான் இருக்கும்? அதான் சாப்பிடுங்கறாரே, ஓப்பன் பண்ணுனா தெரிஞ்சுட்டு போகுது.. ( இந்த சீன்ல தான் ஹீரோயின் அப்பா கிட்டே மாட்றார்)

இந்த மாதிரி அழுத்தமான க்ளைமாக்ஸ் உள்ள காதல் படங்களுக்கு முக்கியத்தேவை காதலர்களுக்கிடையேயான அழுத்தமான காதல்.. அது இந்த படத்துல மிஸ்ஸிங்க்.. படம் பார்க்கற ஆடியன்ஸ் ஹீரோ ஹீரோயினுக்காக எதுவும் செய்ய துணிவு உள்ள நல்ல கேரக்டர்,, அப்டிங்கறதை பதிய வைக்க தவறிட்டார் டைரக்டர்..

ஹீரோ ஹீரோயினை லவ் பண்ற மாதிரி காட்சிகளே கம்மிதான்.. என்னமோ பத்தோட பதினொண்ணா கரெக்ட் பண்ணி வெச்சிருக்காருன்னு தோணுறதால க்ளைமாக்ஸ்ல எடுக்கப்படும் வீரியமான முடிவு நம் மனதில் ஒன்றவில்லை..

http://media.getcinemas.com.s3.amazonaws.com/posters/paari/still-1-full.jpg

ஈரோடு ஸ்ரீ லட்சுமில இந்தப்படம் பார்த்தேன்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கப்படும்குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - டி வில போடும்போது க்ளைமாக்ஸ் 20 நிமிஷம்  மட்டும் பார்க்கலாம்..

படத்தில் நினைவு கூறும் அளவு ஒரு வசனம் கூட இல்லை :((

20 comments:

sutha said...

disappointment

சி.பி.செந்தில்குமார் said...

யாராவது தமிழ் மணத்துல இணைச்சிடுங்க, எனக்கு இணையலை:(

கும்மாச்சி said...

சி.பி. விமர்சனத்திற்காக கடைசி அரைமணி படம் பார்க்கலாம் போலிருக்கிறது. படத்தில் கில்மா மேட்டர் இல்லையா?

கும்மாச்சி said...

சி.பி. நானும் தமிழ்மனத்தில் இணைக்க முயற்சித்தேன் முடியவில்லை.

dsfs said...

சார் இந்த லின்கை கிளிக் செய்து இணைச்சுப் பாருங்க

http://tamilmanam.net/blog_home_update.php?url=http://adrasaka.blogspot.com&posturl=http://adrasaka.blogspot.com/2012/01/blog-post_31.html

dsfs said...

சாரி நானே மறந்துட்டு கிளிக் பண்ணிட்டென். இணைஞ்சிடுச்சு.

ponsiva said...

+2 மார்க் வச்சும் இப்ப பி எல் படிக்கலாம் பாஸ்

காங்கேயம் P.நந்தகுமார் said...

படம் சரியான மொக்கை. அப்புறம் எப்படி கிளைமாக்ஸ் பார்க்கிறது?

RAMA RAVI (RAMVI) said...

வித்யாசமான படம் போல இருக்கே!விமர்சனம் நன்றாக இருக்கு.

சேகர் said...

so bad

Admin said...

பாரியை பார்க்கலாம் போலிருக்கே..

தமிழ்வாசி பிரகாஷ் said...

பாரி பார்க்கலாமா? டிவியில....

The Chennai Pages said...

ஏன் அய்யா ஒரு படத்தையும் விட மாட்டீங்களா ?

K.s.s.Rajh said...

கிளைமாக்ஸ்க்காக பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.

K.s.s.Rajh said...

தமிழ்-10,இன்ட்லியில் இணைத்துவிட்டேன் பாஸ்

Astrologer sathishkumar Erode said...

இந்த க்ளைமாக்ஸ் ரொம்ப ஓவர்... கட் பண்ணிக்கிறானாம்..என்ன கொடுமை சார்..? திருநங்கைகளுக்கு காஞ்சனா நல்ல பெயர் சம்பாதித்து கொடுத்தது.இது அதை கேவலபடுத்தும் போலிருக்கே!!

Anonymous said...

வித்யாசமான படம் போல இருக்கே...ஐயோ பாவம் விட்டிருங்க...

Unknown said...

நாங்க எல்லாம் உங்க விமர்சனம் பார்த்துட்டு படம் பார்க்க போவதைப் போல், தியேட்டருக்கு போறதுக்கு முன்னாடி,கேன்டின் காரரை விசாரித்துவிட்டு செல்வது நலம்!

நெல்லை கபே said...

இந்த கதையை எப்படி தயாரிப்பாளர்கிட்டே சொன்னாராம் டைரக்டர். ஏதாவது அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக என்னவேண்டுமானாலும் செய்வாங்க போல கோடம்பாக்கத்துக்காரர்கள். ஆக இன்னொரு தோல்விப்படம் லிஸ்டில் சேர்ந்தாச்சு. உங்களைப் பாராட்டணும் எல்லாப் படத்தையும் பார்க்கிறதுக்கு.

Unknown said...

ஏன் சிபி.. கிளைமாக்ஸ் பத்தி எழுதாம...20 நிமிஷ நல்லா இருக்குன்னு மட்டும் எழுதினா ? நல்லா இருந்திருக்கும்...
கிளைமாக்ஸ் நன்றாக இருக்கும் படங்கள் ஓரளவு ஓட வாய்ப்புள்ளது !