Sunday, January 08, 2012

ஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்த சு,சாமி

http://www.envazhi.com/wp-content/uploads/2011/09/P-Chidambaram.jpg 

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா ஆகியோர் சந்தித்துப் பேசி எடுத்த முடிவுகள் தொடர்பான ஆதாரங்களை, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் நேற்று சமர்ப்பித்தார்.


சி.பி - அரசியல் கோமாளி என்று சு சாமி வர்ணிக்கப்பட்டாலும் ஸ்பெக்ட்ரம் ஊழலைப்பொறுத்தவரை  இவர் தான் அச்சாணியாக செயல்பட்டு  வழக்கின் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக வருகிறார்.. பாராட்ட வேண்டிய விஷயம்.. 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில், முன்னாள் அமைச்சர் ராஜாவோடு, உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரி, கடந்த செப்டம்பரில், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஷைனி, இவ்வழக்கில் சிதம்பரத்தை சேர்ப்பதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படி, கடந்த டிசம்பர் 17ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று சுப்ரமணியசாமி தன்னிடம் உள்ள அதிகாரப்பூர்வமான ஆதாரங்களை கோர்ட்டில் ஒப்படைத்தார்.

சி.பி - இவரை விலைக்கு வாங்க முடியாது என்பதால் விபத்து மூலமாகவோ ,மிரட்டல் மூலமாகவோ தடை ஏற்படுத்த மேலிடம் முனையக்கூடும், கோர்ட் விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சு சாமிக்கு தக்க பாதுகாப்பு அளிக்கவும் ஆவன செய்யவேண்டும்.. 

சாமி ஒப்படைத்த ஆதாரங்களில் முக்கியமானது, பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா ஆகிய மூவரும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சந்தித்துப் பேசி எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான ஆறு பக்க ஆவணம். தவிர, ஸ்பெக்ட்ரம் தொடர்பாக 2008 ஜனவரி 15ம் தேதி, நிதி அமைச்சர் சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பிய கடிதம். அதைத் தொடர்ந்து, ஜனவரி 30ம் தேதி நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் சந்தித்துப் பேசி எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான ஆவணம். மேலும், 2008 ஏப்ரல் 21ம் தேதி ஸ்பெக்ட்ரம் பற்றி அமைச்சர் ராஜா, சிதம்பரத்திற்கு எழுதிய கடிதம் ஆகியவையும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.


சி.பி - இந்த வழக்கில் ப சிதம்பரம் ஆஜர் ஆவதை ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் விரும்பவில்லை, காரணம் அதற்கு அடுத்த கட்டமாக பிரதமரும், அவருக்குப்பின்னால் இருந்து இயக்கி வரும் சோனியா காந்தியும் வழக்கை எதிர் கொள்ள வேண்டி வரும் எனப்தால் இதற்கு முட்டுக்கட்டை போட முயலக்கூடும்.. இந்தியாவில் நடக்கும் மிக பெரிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு இது.. 

http://4.bp.blogspot.com/-18DL1TGS1L8/TVdeA-MTLcI/AAAAAAAACH0/flLosgmpEnE/s1600/susamay.jpg

அத்துடன், 2011 மார்ச்சில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்பின் விவரம். கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் ஆவணத்தையும் சாமி ஒப்படைத்தார். இந்த ஆவணத்தில் தான், "சிதம்பரம் வலியுறுத்தியிருந்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏலமுறையை கடைபிடித்திருக்கலாம்' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், "2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முடிவுகளை நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் இணைந்து தான் எடுக்க வேண்டும்' என்றும், 2003ம் ஆண்டு அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஆதாரத்தையும் சாமி சமர்ப்பித்தார்.


சி.பி - அசிஸ்டெண்ட் மேனேஜர் தப்பு செய்யறார்னா மேனேஜர் சரி இல்லைன்னு அர்த்தம் .. மேனேஜர் செயல்பாட்டால கம்பெனிக்கு நஷ்டம் வருதுன்னா அதுக்கு மேனேஜரை நியமித்த & மேனேஜரை கண்காணீக்க வேண்டிய  ஜி எம் பொறுப்பேத்துக்கனும்.. மேனேஜர் - சிதம்பரம், ஜி எம் - மன்மோகன்சிங்க்

சிதம்பரத்திற்கு பங்கு:அனைத்து ஆதாரத்தையும் சமர்ப்பித்த சாமி கோர்ட்டில் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜா மீது இரண்டு முக்கிய குற்றச்சாட்டு உள்ளது. ஒன்று, 2008ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரத்திற்கு, 2001ம் ஆண்டு விலையை நிர்ணயித்தது. இரண்டாவது, ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகளின் பங்குகளை வெளிநாட்டு கம்பெனிகளான எடிசாலட் மற்றும் டெலினார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்ய அனுமதித்தது. இந்த இரண்டு குற்றங்களிலும் அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு பங்கு இருக்கிறது. இங்கே சமர்ப்பித்த ஆதாரங்கள் அதை உறுதி செய்கின்றன.

எனவே, இந்த ஆதாரங்களின் அடிப்படையில், ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது போல், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிதம்பரம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எடிசாலட் மற்றும் டெலினார் கம்பெனிகள் உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டவை. இந்த விவரங்களை சிதம்பரம், ராஜாவிடம் தெரிவிக்கவில்லை. எனவே, தேசப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிதம்பரம் மீது, "நம்பிக்கை சதி மோசடி' யின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா மட்டும் அல்லாமல், அவரோடு சேர்த்து சிதம்பரத்திற்கும் பங்கு இருக்கிறது.இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.

சி.பி - போற போக்கை பார்த்தா ஆ ராசாவை விட ப சிதம்பரத்துக்குத்தான் அதிக பங்கு இருக்கும் போல தெரிதே? சிதம்பர ரகசியம் எப்போ வெளில வரப்போகுதோ? சிதம்பரம் எப்போ உள்ளே போகப்போறாரோ? வெயிட்டிங்க்அதிகாரப்பூர்வ ஆவணங்கள்:இதைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் சிலவற்றையும் சமர்ப்பிக்கும்படி கூறினார். அதை ஏற்பதாக சாமி பதிலளித்தார். அத்துடன், இந்த ஆதாரங்கள் தொடர்பான விசாரணையை ஜனவரி 21க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

சி.பி - இந்த மாதிரி பிரச்சனையான கேஸ்களை முடிஞ்ச வரை சீக்கிரமா விசாரிச்சு தீர்ப்பு சொல்லிடறது நாட்டுக்கு நல்லது.. அப்புரம் சாதிக்பாட்சா மாதிரி சாட்சி தற்கொலை செஞ்சுக்குவார், அல்லது கொலை செய்யப்படுவார்..

13 comments:

Senthil said...

so?

climax soon

tahnks

Senthil, Doha

sutha said...

Good article with appropriate pictures - always wanted to compliment you on the pictures you use in your blog

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!இதேபோல் சுவிஸ் வங்கிகளில் தூங்கும் ஊழல் பணங்களின் விபரங்களை வெளிக்கொண்டு வர யாராவது "முதுகெலும்புள்ள"ஆண் மகன் வரவேண்டும்!அப்போதுதான்,இந்தியாவினை "முன்னேற்ற" யார்,யார் காரணமாக இருக்கிறார்கள் என்பதும் வெளிச்சத்துக்கு வரும்!!!

Unknown said...

அண்ணே!
பத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு!...
ஆயிரமாவது நபர் யாரென்று சொல்வேன்!
அட்வான்ஸ் ஆயிரம் வாழ்த்துக்கள்!

ராஜி said...

ம் ம் ம் ம்

dravid said...

இந்த ஆள் மேல் உள்ள ஜெயின் வழக்கு என்ன ஆனது ?. தமிழ் நாட்டில் இருந்துகொண்டு தமிழ்நாட்டு நலனில் விரோதியாக இருக்கும் (சேது சமுத்திர திட்டம் ) இவனை எல்லாம் தமிழ் நாட்டிலிருந்தே விரட்ட வேண்டும்.

ராஜ நடராஜன் said...

சி.பி!கணினியை மடில கட்டிகிட்டே தூங்குவீங்களாக்கும்!காலையில்தான் நக்கீரனை கரிச்சுக்கொட்டுனதப் பார்த்தேன்:)

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
உங்க ப்ளாக்கை மொபைலில் பார்த்து கமெண்ட் பண்ண கூடியவாறு மொபைல் டெம்பிளேட்டிற்கு மாதலாமே?

நிரூபன் said...

சீரியஸ் மேட்டரிலும், சீரியஸ் செய்திகளின் பின்னணியில் லைட்டா காமெடி கலந்து அலசியிருக்கிறீங்க.

முத்தரசு said...

ஹிம்...

Unknown said...

arumai thala aana eppa

MANO நாஞ்சில் மனோ said...

கலவானிபயலுக ஒருத்தனும் வெளியே இருக்கப்புடாது எட்றா அந்த வீச்சருவாளை நறுக்கிருவோம்....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே, இந்த வழக்கின் மூலதாறியே இவர்தான் ஆனால் ஆரம்பத்தில் ராசா'கிட்டே ஐநூறு கோடி கேட்டு இருக்கார் இவர், ராசா தர மறுத்ததும் வழக்கை போட்டுட்டு இருக்கும் போதே ராசா தரப்பு பணத்தை கொடுக்க சம்மதிக்கவும், சாமி கேட்டது ஐந்து ஆயிரம் கோடி, அதற்குள் வழக்கும் கைமீறி போய் விட்டதாம்...!!!!