Friday, January 20, 2012

விஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்ச்சி, அம்பலம் ஆனது கடிதம் ஜாலி கலாட்டா

http://tube.tamilcloud.com/wp-content/uploads/2011/11/3.jpg

 ட்விட்டர் நண்பர் கட்டதுரை காமெடி கலக்கல் மன்னன்.. அவர் நம்ம நண்பர் மாயவரத்தான் அவர்களின் கட்டுரை.காம்ல காமெடியா நண்பன் விமர்சனத்தை எள்ளல் பாணில எழுதுனாரு.. அது செம ஹிட் ஆகி  ரெக்கார்டு பிரேக் பண்ணிடுச்சு.. அட்ரா சக்க இணய தளத்தோட  முக்கியமான , முக்காதமான கொள்கை (!!) என்னான்னா சொந்தமா ஒரு ஹிட் போஸ்ட் போட ட்ரை பண்ணனும்.. அது முடியாத பட்சத்துல ஆல்ரெடி ஹிட் ஆன போஸ்ட்டை ரீ மிக்ஸ் பண்ணி போடனும்.. ஹி ஹி ஹி

அன்புத் தலைவா விஜய். உன் அப்பாவி ரசிகன் எழுதிக் கொள்(ல்)வது.

கடுப்பைக் காட்டுறதுக்கு முன்னாடி, உனக்கு பொங்கல் வாழ்த்தை சொல்லிடுறேன்!

சி.பி - வீழ்த்துவதற்கு முன் வாழ்த்தா? அவ்வ்வ் நடக்கட்டும்.. 

முதல்ல யாரைக் கேட்டு இந்த படத்திலே நடிக்க நீ ஒத்துக்கிட்டே? நீ ரீமேக்ல மட்டும்தான் நடிப்பேன்னு உலகத்துக்கே தெரியும். ஆனா  இப்புடி செத்தவன் வாயில வெத்தலையை வெச்ச மாதிரியான ஒரு கேரக்டர்லே உன்னை பார்க்க முடியாம பாப்கார்னை வாய்ல திணிச்சுகிட்டு நான் குலுங்கிக் குலுங்கி அழுதது எனக்கு மட்டும் தான் தெரியும் தலைவா!


சி.பி - ஆமா எங்கண்ணன் கொள்கையே யார் மேக்காக இருந்தாலும் அது ரீ மேக்காக இருக்கனும்


கதை – அந்த கருமத்தை நான் என் வாய்ல வேற சொல்லணுமா?


சி.பி - சும்மா கை சிக்னல்லயே சொல்லுங்கண்ணே, 2 லைன் கதைக்கு எதுக்கு வீர உரை?

புள்ளைங்க விருப்பப் படுறதை படிக்க வைங்க – இதான் ஒன் லைனர், முழுக் கதை எல்லாமே!
தலைவா, உனக்கு படிப்பு வராம உங்க அப்பா நடிக்க வைச்சாரு. உனக்கு நடிப்பாவது வரணும்னு நாங்களும்,15 வருஷமா உன் மொக்கை படத்தை எல்லாம் ஹிட்டு படமாக்கினோம்.  இப்ப வந்து விருப்பப்பட்டதை படின்னு அட்வைஸ் பண்ணினா நாங்க எங்க போறது?  முதியோர் கல்வியிலே ஏது தலைவா விருப்பப் பாடம்?!


சி.பி - அவர் படிக்கலைன்னு யார்யா சொன்னது? வாரா வாரம் குமுதம் விகடன் எல்லாம் படிக்கறவராம்.. 

காட்டு காட்டுன்னு காட்டுவியே, இதுல ஒரு தடவை கூட பஞ்ச் டயலாக்கை நீ காட்டவே இல்லியே. நீ ஏன் தலைவா, இப்படி ஒரு படத்தை ஒத்துகிட்ட?


சி.பி - ஷங்கர் புக் பண்றப்பவே வாயை திறக்கவே கூடாதுன்னு கண்டிஷன் போட்டுட்டுதான் அட்வான்ஸே குடுத்தாராம்..

சீனுக்கு சீன், கேமரா ஆங்கிள் கூட துளிக்கூட மாத்தாம எடுக்க ஷங்கர் எதுக்கு தலைவா? டெய்லி 200 ரூவா பேட்டா வாங்குற அசோசியேட்டு டைரக்டர் கூட இதை எடுக்கலாமே!? இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் நீ எதுக்கு தலைவா ஒத்துக்கிட்ட?


சி.பி - சத்யன் மேடைல பேசி ஒரு காமெடி பண்றாரே.. அந்த ஒரு சீன் புதுசுங்கோவ்.. 

வழக்கமா ரோலிங் ஷட்டரை பொளந்துக் கிட்டு வர நீ,சைலண்டா ஒரு கோல்ஃப் விளையாடுறவன் பையை முதுகிலே சொமந்து கிட்டு வர! அதிலேயே என் மனசு நொறுங்கி போய்டுது.


தலைவா, அது மட்டும் இல்லாம, உன்னை ராகிங் பண்ணறதுக்காக,  உன் ஜீன்ஸ்குள்ளேயே ஒருத்தன் தண்ணியை ஊத்துறான்.  ஏர்லே டைவ் அடிச்சு அவன் குரல் வளையைக் கடிச்சுத் துப்பாம, ரூமுக்குள்ள போய், கரண்டு ஷாக் குடுக்குற! உன் கண் பார்வையிலேயே ஆயிரம் மெகா வாட் ரெடி பண்ணி க்ரிட்ல குடுக்கலாம். அதை விட்டுட்டு நீ என்னடான்னா குண்டு பல்பைப் புடுங்கி எதிரிக்கு ஷாக் குடுக்குறே. எதிரிக்கு மட்டுமா, எங்க எல்லாத்துக்கும் தான்! அந்த சீனிலேயும் தியேட்டரே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்குது. ஆனா உன் உண்மை ரசிகன் வயிரு எரியுது. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - உங்களுக்கென்னா ஈஸியா கேட்டுப்புட்டீங்க.. 5 ஃபெயிலியர் தொடர்ந்து குடுத்தாச்சு.. ஒரு ஹிட் அவசியம் தேவை.. வேற வழி இல்லை.. 

http://www.envazhi.com/wp-content/uploads/2011/01/shankar-new.jpg

ஹிந்தியில சூப்பர் ஹிட்டுன்னு ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கட் எடுத்தவங்க எல்லாம் பேசிக்கிறாங்க. அமிர்கான் அதுல இன்னும் சூப்பரா நடிச்சுருப்பாருன்னும் பேசிக்கிறாங்க. அதெல்லாம் 30 ரூவா டிக்கட் எடுத்து வந்து ஸ்கிரினுக்கு பக்கத்துல பாக்குற எனக்குத் தெரியாது தலைவா.


சி.பி - ஹிந்தி அளவுக்கு இது ஹிட் ஆகலைன்னாலும் இது ஒரு ஹிட் படம் தான் 

நீ ’நடிக்கற’துனால எவ்வளவு பிரச்னை பாத்தியா? பேரே தெரியாத இன்னொருத்தனைப் பாத்து உன்னை கம்பேர் பண்றாங்க. என்னைக்காச்சும் பேரரசு இப்படி ஒரு கெட்ட பேரை உனக்கு உண்டு பண்ணிருப்பாரா. யோசி தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - பேரரசா? அவர் இப்போ பரத் , அர்ஜூன் அப்டி இறங்கி ரொம்ப வருஷம் ஆகுது..ஊரரசா இருந்தவரு மனைவிக்கு அல்வா குடுத்த பாவத்துக்கு ஊசிப்போன அரசு ஆகிட்டார்..

விண்வெளியில பென்சிலிலா எழுதலாமே, எதுக்கு இவ்வளவு செலவு பண்ணி பேனா கண்டுபுடிக்கணும்னு நீ கேட்கும் போது, தியேட்டரே கைதட்டுது. ஆனா பக்கத்து சீட்டுக்காரனுங்க, ’இந்தப் படத்தை டப்பிங் பண்ணி உட்டுருக்கலாமே.. எதுக்கு இம்புட்டு செலவு பண்ணி ரீமேக் பண்ணிருக்கானுங்க’ன்னு கேட்குறாங்க. விவ(கா)ரமான பயலுங்க போல! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி -  அண்ணன் நடிக்கறது 90% ரீ மேக் தான்.. எல்லாத்தையும் டப் பண்ணி இருக்கலாம்னு  கேட்டுட்டா அப்போ பாவம் அவர் என்னதான் செய்வாரு.. சும்மா ஜுவ்வல்லரி விளம்பரமே நடிச்சுட்டு இருக்க வேண்டியதுதான்.. 


ஸ்க்ரின்ல வந்து போற எல்லா பயமக்களுக்கும் நல்லது பண்றியே.உன்னையே நம்பி இருக்குற, என்னைய மாதிரியான ‘சுறா’ ரசிகன் நிலைமையை நினைச்சுப் பாத்தியா? ஹிந்தியில கரினா கபூர் ஜீரொ சைஸ்ல இருந்தாங்கங்குறனால, பத்து நாள் டயரியால அடிபட்ட மாதிரி இருக்குற இலியானவை புடிச்சு போட்டிருக்காங்க. ஹன்சிகா மாதிரி பல்கியான ஃபிகரோட உன்னைப் பாத்துபுட்டு, இந்த மாதிரி பாக்க வயித்தெறிச்சலா இருக்கு தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?சி.பி - அண்ணன் சைக்காலஜியே தெரில.. வேட்டைக்காரன்ல அனுஷ்காவை ஹீரோயினா போட்டதுல எல்லாரும் அனுஷ்கா பற்றியே பேசுனாங்களாம்.. அதனால யாரும் தன்னை டாமினேட்டோ, டைகர் மேட்டோ , ரோஸி மேட்டோ ( டாமி, டைகர், ரோஸி - ஆல் டாக் நேம்ஸ் ) பண்ணிடக்கூடாதுன்னு அடக்கி வாசிக்கற நடிகையை ஜோடி ஆக்கிட்டாரு போல.. 

அம்பது பேரு உன்னைச் சுத்தி நின்னாலும் கரண்டு கம்பத்தைப் புடுங்கி அம்பது செகண்டுலே எல்லாரையும் சாய்ச்சுப் புடுவியே தலைவா, இதுல வரவன் போறவன்கிட்ட எல்லாம் அறை வாங்குறியே தலைவா. இந்த கண்ராவிய பார்க்கவா நான் காசு குடுத்து உன்னைப் பார்க்க வந்தேன். நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - புக் பண்றப்ப ஷங்கர் சாமார்த்தியமா உங்களுக்குன்னு தனியா 8 அறை உண்டுன்னாராம்.. அண்ணன் ரூம்னு தப்பா நினைச்சு அக்ரீமெண்ட்ல சைன் பண்ணிட்டாராம்.. 


நீ ஸ்பெல்லிங்க மாத்தி சத்யன் அதை ஸ்டேஜ்ஜிலே படிச்சு எல்லாரும் கைதட்டி சிரிக்குறாங்க. அந்த மொக்கையைப் பாக்க சகிக்காம சீட்டுக்கு கீழே படுத்துகிட்டு நான் அழுதேன் தலைவா.  நான் என்னவோ வயிறு குலுங்கி சிரிக்கிறதா எல்லா பயலும் நினைச்சுக்கிட்டு குமுறி குமுறிச் சிரிக்கிறானுங்க தலைவா. உன் உயிர் ரசிகனுக்கு இந்த அவமானம் தேவையா? நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - சத்யன் ரோல் இப்படி ஹிட் ஆகும்னு தெரிஞ்சிருந்தா அந்த ரோல்லயும் அவரே நடிச்சு காமெடி பண்ணி இருப்பாரு அடடா ஜஸ்ட் மிஸ்னு இப்போ புலம்பறாராம்.. 

http://img.bollywoodsargam.com/albumsbolly/Ileana_Hot_Saree_Fashion/Ileana_Hot_Saree_Fashion_BollywoodSargam_laughing_479522.jpg

இண்டர்வெல் ப்ளாக்ல , பஞ்சவன் பாரி வேந்தன் (உன் பேருதான் தலைவா) ஃபோட்டோ பக்கத்துல சூர்யா போட்டோவைப் பாத்து பதறிப் போய் ஜீவாவும், ஸ்ரீகாந்தும் நீ காணம போய்ட்டியோன்னு திகைச்சுப் போய் நிக்குறாங்க. அதைப் பாத்துபுட்டு இண்டர்வெல்லுக்கு அப்புறம் நீ வரமாட்டியோன்னு நினைச்சு உன் ரசிகர்கள் பாதிப் பேரு தியேட்டரை விட்டு வெளியே போய்ட்டாங்க தலைவா. இந்த மாதிரி அப்பாவி ரசிகன் வாயில மண்ணை அள்ளிப் போட்டியே. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - படத்துல தான் பன்ச் இல்ல, கேரக்டர் நேம்லயாவது பஞ்ச் இருக்கட்டும்னு தான் அப்படி வெச்சாங்களாம். ( பஞ்ச் அவன் பாரி = பஞ்சவன் பாரி)

பொதுவா கனவு சீன் ஃபாரின் பாட்டுலே எல்லாம் தனியா நீ மட்டும் போய் மலை பக்கம் ஆடிக்கிட்டு இருப்பியே தலைவா. இதுலே கும்பல் கும்பலா வந்து உன் ஆட்டத்த காலி பண்ணி புட்டாய்ங்களே தலைவா. உன் குத்தாட்டத்த பாத்து ரசிகனானவன் வாயிலேயே குத்தி பழிவாங்கிட்டியே தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - நல்ல வேளை டான்ஸ் சீன்ல கிராஃபிக்ஸ் இருக்குன்னு ஒரு பயலும் கண்டு பிடிக்கலை.. 

நீ ஸ்கிரின்ல வந்த உடனே கை தட்டின உன் உயிர் ரசிகன் நாலு பேர்ல நானும் ஒருத்தன். இது உன் படம் இல்லைன்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா, டிக்கட்டு காசுல மானங்கெட்ட மானிட்டர ஒரு குவார்ட்டர் குடிச்சுப்புட்டு, குப்புறப் படுத்து தூங்கிருப்பேனே தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - டைட்டில்லயே ஷங்கரின் நண்பன்னு தானே போஸ்டர் இருக்கு.. ? நீங்க கவனிக்கலை.. அதுக்கு அவர் எப்படி பருப்பு ஆக முடியும் ? சாரி பொறுப்பு ஆக முடியும்?


க்ளைமாக்ஸ்ல நீ குறுந்தாடி வச்சுகிட்டு வரப்பவே நீ தான் அந்த கொசகசா பஸபுகழ் விஞ்ஞானின்னு தியேட்டரில டயர்டாயி தூங்குற குழந்தைப்புள்ள கூட சொல்லிப்புடும். (இந்த விஞ்ஞானி பேரை சரியா சொல்றவனுக்கு ஏதாவது பரிசு குடு தலைவா!) சரி..படம் ஃபுல்லா அரை வாங்கியிருக்கியேங்கிற கடுப்புல உட்காந்த உன் ரசிகனை , க்ளைமாக்ஸ்லயும் மிதி வாங்கி  சின்னா பின்னமாக்கிட்டியே தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - வழக்கமா அண்ணன் படம் தான் சின்னா பின்னமாகும், இதுல ஒரு மாறுதலுக்கு அண்ணன் அப்படி ஆகி படத்தை காப்பாத்திட்டார். 
நீ விஞ்ஞானியா நடிக்குற துணிச்சல் உனக்கு இருக்கலாம் தலைவா. ஆனா 30 ரூவா குடுத்து முன்னாடி சீட்ல உட்காந்து பாக்குற என்ன மாதிரி ரசிகர்களுக்கு அந்த தைரியம் எல்லாம் இல்லை தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

சி.பி - அந்த துணிச்சல் இல்லாட்டி என்ன? இலியானாவுக்கும், குரூப் டேன்சர்களுக்கும் துணியே இல்ல, ரொம்ப கம்மிதான்.. அதை ரசிக்கறது.. எல்லாரும் முழு டவுசரைக் கழட்டிட்டு அடிக்கடி கால்ல உழுரானுங்க. நல்லவேளை, இலியானாவுக்கு அப்படி ஒரு சீன் வெக்கலை! நான் வீட்டுக்கு வந்து பேண்ட் கழட்டும் போது படம் நியாபகத்துக்கு வந்து தொலைக்குது. இது உண்மையிலேயே டைரக்டருக்கு வெற்றிதான் தலைவா. ஆனா உன் படத்துக்குப் போயிட்டு வந்தா மந்திரிச்சு உட்டா மாதிரி படம் முழுக்க வரும் உன் மூஞ்சி தானே தலைவா நாலு நாளைக்கு நியாபகத்து வந்து பயமுறுத்திட்டே இருக்கணும். நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - ஆனாலும் அண்ணன் மாஸ் தான்.. ஆனானப்பட்ட ஷங்கர் படமா இருந்தாலும் அண்ணன் கடைசி வரை அவர் பேண்ட்டை கழட்டவே இல்லை பார்த்தீங்களா?  அங்கே தான்  நிக்கறான் சந்திரன்..

குருவி படத்த பாத்து சட்டைய கிழிச்சுட்டு ஓடின பயமக்கள் எல்லா கைதட்டி படத்த ரசிக்குதுங்க. குருவி படத்தையும் ஹிட்டாக்கின என்ன மாதிரி ரசிகர்கள் மூட் அவுட்டு ஆய்டுவாங்கன்னு புரிஞ்சிக்க தவறிட்டியே தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - குருவி ஹிட்டா? 2012ல உலகம் அழிஞ்சுடும்யா//

இதே ரேஞ்சிலே இன்னொரு படம் நீ குடுத்தா நாங்க எல்லாம் ‘தல’ ரசிகரா மாறிடுவோம். அப்புறம் ‘ஆல் ஈஸ் வெல்’ அப்படீன்னு நீ சொல்ல முடியாது. புரியுதா தலைவா?!

 சி.பி - ஆல் ஈஸ் ஹெல் ( ALL IS HELL )

(ஹிந்தி படம் பார்க்காதவர்களுக்கு இந்தப் படம் ஒரு பொங்கல் விருந்து என்பதில் சந்தேகமே இல்லை. பொதுவான விஜய் ரசிகர்களின் உள்ளக்கிடங்கை தான் இங்கே எழுதியிருக்கிறேன். யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை!)

சி.பி - ஆமா, இந்த விஷயத்துல நாங்க எல்லாருமே நக்கீரன் கோபால் மாதிரி... முடிஞ்ச வரை துவைச்சு காயப்போடுவோம்.. கடைசில பிரச்சனைன்னு வந்தா மன்னிப்பு கேட்போம்.. ஏன்னா எங்க ஊர்ல 5 ரூபாவுக்கு 12  மன்னிப்பு..  

original post link -

27 comments:

Unknown said...

இதுக்கு பேர்தான் லேட்டரல் திங்கிங்கா?

Unknown said...

சார் சார்...All is Well!

கும்மாச்சி said...

முதல் வடை. அவரை நல்லாத்தான் கலாய்ச்சிருக்கீங்க. அவரு என்னதான் பண்ணுவாரு பாவம்.

karthikeyan.kg. said...

really funny . enjoyed it much better than nanban

RAMA RAVI (RAMVI) said...

பட விமர்சனத்தைவிட இந்த ரீமிக்ஸ் இன்னும் சுவாரசியமாக இருக்கு.

//டாமினேடோ,டைகர் மேட்டோ,ரோஸி மேட்டோ..//

//எங்க ஊர்ல 5 ருபய்க்கு 12 மன்னிப்பு//

இதெல்லாம்,ரசித்து சிரிக்கும் படியா இருக்கு.

ராஜ நடராஜன் said...

சி.பி!இவ்வளவு கமெண்டு வுடுறீங்களே!திரைப்படத்துறைக்கு முயற்சி செஞ்சீங்களா?

இந்திரா said...

சிபி இப்படி காச்சு காச்சுனு காச்சுறாரே..
தலைவா.. ஏன் தலைவா இதுக்கு ஒத்துக்கிட்ட???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

Comment deleted
This comment has been removed by the author.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மும்பையில் கடந்த வாரம் முழுக்க படப்பிடிப்பு கண்ட துப்பாக்கி ஷூட்டிங்கில் ஹீரோவுக்கும் டைரக்டருக்கும் முட்டிக்கிச்சாம்! இந்த முட்டல், மோதலுக்கு காரணம் இந்த காட்சியிலே அந்த நடிகர் நடித்திருந்தால் அப்படி நடிச்சிருப்பார்! இந்த நடிகர் நடிச்சிருந்தா இப்படி நடித்திருப்பார் .... என ஏதோ வாய் தவறி டைரக்டர் சொல்லப்போக, அதில் கடுப்பான ஹீரோ., ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி போனவர்.,போனவர் தானாம்!

ஒரு நாள் முழுக்க ஓட்டல் ரூமை விட்டு வெளியே வரவே இல்லையாம்!

நன்றி: வாரமலர்

சசிகுமார் said...

இதுவும் நல்லா தான் இருக்கு....

ராஜி said...

நண்பன் அமைதியான வெற்றின்னு நீங்க போஸ்ட் போட்டதா நினைவு....,

மலரின் நினைவுகள் said...

சத்யராஜும் முழு டவுசரைக் கழட்டிட்டு உன் கால்ல விழுற மாதிரி இருந்திருந்தாலாவது எங்க மனசு கொஞ்சமாவது ஆறியிருக்கும். நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
திருநீரை எடுத்து மூஞ்சில பூசிக்கிட்டு கோனையா ஒரு வணக்கம் போட்டு நீ பாடுற தத்துவ பாட்டு இதுல இல்லியே, நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
கோலிகுண்ட வாயில போட்டு உருட்டுற மாதிரி மூஞ்சை வெச்சுக்கிட்டு நீ ரொமான்ஸ் பண்ணும் அழகு மிஸ்ஸிங், நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
இலியானா உன்ன கிஸ் அடிக்கும் போது கூட அம்பயர் சிக்சருக்கு கையை தூக்குன மாதிரி உன்னை நிக்க வெச்சுட்டானுங்களே, நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?
"புளிச்" பண்ண தலைமயிரோட பாரின்ல நீ ஒரு ஆட்டம் போடுவியே, எங்க அது? நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

shahul said...

Really Enjoyed......superb

Marc said...

இதுக்கு படமே பரவாயில்ல தலைவா!!

ஹாலிவுட்ரசிகன் said...

இந்தப் கடிதத்தை சில நாட்களுக்கு முன் ஏதோ ஒரு தளத்தில் வாசித்ததாக ஞாபகம். ஆனாலும் உங்கள் நக்கல்ஸ் ரசிக்க வைக்கிறது.

Unknown said...

அனைவருக்கும்...ஹிட்ஸ்..தரும் தலைவா நீ..வாழ்க......உன்னை வச்சு நிறைய நண்பர்கள் பதிவு தேத்தறாங்க தலைவா அவிங்க பிளாக்குல சிமெண்ட்ட அள்ளி போட்டிறாத தலைவா!நீ..மேலும்...மேலும்...இந்த மாதிரி நல்ல படங்கள்ல நடிக்காத தலைவா....பாவம் நண்பர்கள் ரொம்ம சிரமப்படுவாங்க தலைவா....

உணவு உலகம் said...

ரசிக்க வைத்தது.

K.s.s.Rajh said...

ஹே.ஹே.ஹே.ஹே. என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியலை.

இப்படி எல்லோறும் சிரிக்கிறாங்களே நீ எதுக்கு தலைவா இந்த படத்தில் நடிக்க ஒத்துகிட்ட..

ஹி.ஹி.ஹி.ஹி.

அவரின் பதிவுக்கு உங்கள் கமண்ட்ஸ் சூப்பராக இருக்கு பாஸ்

Anonymous said...

நல்லா கலாய்ச்சிருக்கீங்க...தொடருங்கள்

தாமரைக்குட்டி said...

படத்தை பார்த்து பேதி புடுங்கியவர்களில் நானும் ஒருவன்! ஹிஹிஹி..... நான் படிக்க வந்த முதல் பதிவே இப்படி ஏடாகூடமா இருக்கே... அவ்வ்வ்வ்.....

தாமரைக்குட்டி said...

படத்தை பார்த்து பேதி புடுங்கியவர்களில் நானும் ஒருவன்! ஹிஹிஹி..... நான் படிக்க வந்த முதல் பதிவே இப்படி ஏடாகூடமா இருக்கே... அவ்வ்வ்வ்.....

மண்ணாங்கட்டி said...

please ...
யாரும் நண்பன் படத்த நக்கல் அடிக்காதீங்க ..
மறுபடியும் ஒரு சுறா படம் மாதிரி ஒரு படத்த பாக்கிற மன தைரியம் தமிழ் மக்களுக்கு இல்லை ....

ஹேமா said...

சிபி...இனி நீங்க விஜய் ரசிகன் இல்லையா ?

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள் சிபி.
நான் சினிமா செய்திகள் படிப்பதில்லை. இந்த விமர்சனம் தான் படித்தேன்.
சிரித்து, சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. அருமையான நகைச்சுவை நடை. Keep it up.

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!!!////தலீவா எங்க ஒன்னோட காலு???இல்லேன்னா பரவால்ல,கையையே காலா நெனைச்சுக்கிறேன்!!!!சிரிச்சு தாளல தலீவா!!!!!!!!!!!!இத்தன மேட்டர் இருக்கிறது இப்பதான் தலீவா தெரிஞ்சுது!டாங்க்ஸூ தலீவா!!!!!!!நீ எதுக்கு தலைவா இந்த படத்தில் நடிக்க ஒத்துகிட்ட............??????????

Unknown said...

ஹா... nothing is well for vijay

Anonymous said...

அன்பு ரசிக தொண்டர்களுக்கு - உங்கள் இளைய தளபதி விஜய் சொல்வது - என்னை வச்சு காமெடி வந்து ரொம்ப நாளாச்சு. அதனால்தான் இந்த படத்தில் நடிக்க (? - ஹி ஹி ஹி!!! நீங்க புகழ்வதால்) ஒத்துக்கொண்டேன்.