Published on Saturday, January 16, 2016 at 8:11:00 PM with 1 Comments

PAVADA (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்)

பிருத்விராஜ் மலையாளத்தில் 2015-ல் ஹாட்ரிக் ஹிட் கொடுத்துட்டார்.என்னு நிண்டே மொய்தீன் மெகா ஹிட் லவ் ஸ்டோரி( சோகம்), அமர் அக்பர் அந்தோணி ( காமெடி),அனார்கலி (காமெடி வித் லவ்)2016ல் ரிலீஸ் ஆன இந்தப்படமும் ஹிட் அடிக்கும் என யூகிக்கிறேன்


இளைய தளபதி விஜய் அழகிய தமிழ் மகன் இயக்குநர்  பரதன் க்கு அடுத்த பட வாய்ப்பு கொடுக்கும்போது எல்லோரும் நக்கல் அடிச்சாங்க. தேவர் மகன் இயக்குநர் பரதன் க்கு படம் கொடுத்தாக்கூட தேவல,ஆல்ரெடி சரியா ஹிட் ஆகாத படம் கொடுத்தவர்க்கு ஏன் ஒரு மாஸ் ஹீரோ இன்னொரு சான்ஸ் தரனும்னு. ஆனா ஸ்க்ரிப்ட் மேல ஹீரோவுக்கு நம்பிக்கை இருந்தா அது தப்பே இல்லை.

 அதே போல் தான் பாவாட பட இயக்குநர் ஜி மார்த்தாண்டன் கேசும். இவரது முந்திய இரு படங்களும் அட்டர் ஃபிளாப். தெய்வத்திண்ட ஸ்வந்தம் க்ளீட்டஸ் ,  அச்சா தின்(
Daivathinte Swantham Cleetus’ and ‘Acha Din) இரண்டுமே ஓடாத படங்கள். ஆனா அவரோ ட கதையை நம்பி பலரின் எதிர்ப்புக்கு நடுவிலும் கால்ஷீட் கொடுத்து இப்போ ஹிட் படம் கொடுத்த ஹீரோ என்ற பெயரும் பெற்று விட்டார்.


படத்தோட ட்ரெய்லர் பார்க்கும்போது எனக்கு நம்பிக்கையே இல்லை, ஏன்னா படத்தோட கதை ஒரு குடிகாரனின் கதை போல் காட்சிகளும் , வசனங்களும் இருந்துச்சு. ஆனா அதெல்லாம் இடைவேளை வரை தான் , பின் பாதி செம திரைக்கதை.


சரி, மேட்டருக்கு வருவோம்.படத்தோட டைட்டில் பார்த்துட்டு இது ஏதோ மேட்டர் படம்னு எதிர்பார்த்தா ஏமாந்தே போவான் தமிழன்ஹீரோ பொறுப்பே இல்லாத பருப்பு. இதுல தண்ணி வேற , 24  மணி நேரமும் குடிதான் . இவருக்கு நர்ஸ் கூட மேரேஜ் ஆகுது. 2 பேருக்கும் ஒத்து வர்லை . பொண்டாட்டி கோவிச்ட்டு போய்டுது. தன் குடிப்பழக்கம் தான் இதுக்கெல்லாம் காரணம்னு உணர்ந்து  ஹீரோ போதை மறுவாழ்வு இல்லத்தில் அட்மிட் ஆகறார். அங்கே அவருக்கு குடியின் கோரப்பிடியில் இருந்து விடுபட சிகிச்சை அளிக்கப்படுது

 அங்கே அவர் பண்ணும் காமெடிக்கூத்துகள் தான் இடைவேளை வரை. மெயின் கதைக்கும் இந்த  காமெடி எபிசோடுக்கும் சம்பந்தம் இல்லை.அந்த மறுவாழ்வு மையத்தில்  ரிட்டயர் ஆன புரொஃபசரை சந்திக்கறார்.அவரும் சரக்கு பார்ட்டிதான்.ஹீரோவோட அம்மாவை ஹீரோயினா போட்டு  ஒரு படம் எடுத்தவர், ஆனா அது ரிலீஸ் ஆகலை.


ஃபிளாஸ்பேக்


ஒரு டைரக்டர் . இவரும் சரக்கு பார்ட்டி. இவர்  ஒரு படம் எடுக்கார்.அதுக்கு புரொஃபசர் தான் புரொடியூசர். படம் 75% எடுத்த சூழலில் டைரக்டர் செத்துடறார்.


பல வருசம் கழிச்சு அந்தப்படம் தூசு தட்டப்பட்டு பிட்டு எல்லாம் சேர்த்து  ரிலீஸ் பண்ணலாம்னு ஒரு க்ரூப் ரெடி ஆகுது. ஆனா அந்தப்படம் ரிலீஸ் ஆனா தன் அம்மாவின் இமேஜ் பாதிக்கப்படும்னு ஹீரோ நினைக்கறார். ஏன்னா கதை ஒரு மாதிரியான கதை உள்ள படம்.பல வருசங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம் , அதில் தன் அம்மாவை சீன் பட நாயகியா இந்த உலகம் இப்போ பார்த்தா தனக்கு என்ன மாதிரியான மன உளைச்சல்கள் ஏற்படும்? அப்டினு ஹீரோ யோசிக்கறார் கோர்ட்ல கேஸ் நடக்குது.அந்தப்படத்துக்கு தடை கேட்டு  ஹீரோ வாதாடறார். அப்டி தடை  விதிக்க முடியாது, புரொடியூசர் எங்களுக்கு படத்தை வித்தாச்சுன்னு வில்லன் க்ரூப் வாதாடுது

 யார் , எப்படி ஜெயிச்சாங்க என்பதே மிச்ச மீதி திரைக்கதை  


ஹீரோவா பிருத்விராஜ். செம கலக்கலான நடிப்பு , இவருக்கு காமெடிக்கான பாடி லேங்குவேஜ் இல்லைனு பல விமர்சனங்கள் மலையாளப்பத்திரிக்கைகளில் வந்தன. அதை எல்லாம் தவிடு பொடி ஆக்கிட்டார். ஆனா சில இடங்களில் நம்ம ஊர் கார்த்தி போல்  சிரிப்பதும் நடப்பதும்  பண்றார் . தவிர்க்கலாம். பின் பாதியில்  கோர்ட்டில் இவர் வாதாடும் காட்சிகளில் அப்ளாஸ் மழை


ஹீரோயினா மியா ஜார்ஜ் . நர்சா ஒரு தினுசா , சொகுசா, ரவுசா பதவிசா வந்துட்டுப்போற கேரக்டர். நடிக்கவும் வாய்ப்பில்லை. திறமை “ காட்டவும் “ வாய்ப்பில்லை. 


ஹீரோவோட அம்மாவா ஆஷா சரத் . இவர் தான் த்ரிஷ்யம் , பாபநாசம் ல போலீஸ் கமிசனரா கலக்கியவர். இதுல கில்மாப்படத்தில் நடித்த நாயகியா சில சீன்களில் வந்தாலும் பெரும்பாலான காட்சிகள் அம்மாவா வயசான கெட்டப் என்பதால்  மன்சுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. புண் பட்ட மனதை இண்ட்டர்வல்ல பாப்கார்ன் சாப்ட்டு போக்கிட்டு பார்த்தேன் மீதிப்படத்தை


அனூப் மேனன் , மணியம்பிள்ளை ராஜு , நெடுமுடி வேணு என படத்துக்கு சப்போர்ட்டிவ் கேரக்டர்ஸ் நடிப்பு கன கச்சிதம்

 படத்தின் ஒளிப்பதிவு  முன் பாதியில்  சுமாராவும் பின் பாதியில் பக்காவாகவும் இருக்கு

பிஜிஎம்  கோபி சுந்தர்  பல தமிழ் சினிமாவிலிருந்து  உருவி இருக்கார்
மனதைக் கவர்ந்த  வசனங்கள்

நீ கள்ளனா? எதுக்கு பனை மரத்து மேல திருட்டுத்தனமா ஏறி னே?


கள் குடிக்க ஏறுனேன்.ஆனா கள்ளன் இல்ல. # பாவாட

2 நீ அசோசியேசன் மெம்பரா?


இல்ல.
தியேட்டர்ல பிளாக் டிக்கெட் விக்கனும்னா அசோசியேசன்ல மெம்பரா இருக்கனும்
அடப்பாவிகளா.இதுக்கும் சங்கமா?# பாவாட3 நர்ஸ் = நீ எந்த க்ரூப்?
சாரி மிஸ்.நான் எந்த க்ரூப்பிலும் கோஷ்டியிலும் இல்ல
யோவ்.பிளட் க்ரூப் கேட்டேன் # பாவாட

4 காதலிக்கறவன் கண்ணுக்கு காக்கையும் கருங்குயிலா தோணும் #,பாவாட ( வைரமுத்து வின் கவிதை உல்டா)


5 உன் ஆளுக்கு போன் பண்ணனும்னு சொன்னியே?லைன் கிடைச்சுதா?
அந்த லைன் கிடைக்கலை.எதேச்சையா இன்னொரு லைன் கிடைச்சுது # பாவாட


6 யாரையும் தோற்கடிக்கனும்னு ஒரு வீரனுக்கு தேவை இல்லை.ஆனா தான் தோற்காம இருப்பதே ஒரு வீரனின் இன்றியமையாத தேவை # பாவாட


7 சரக்கில் தண்ணீர் கலந்து அடிச்சா நம்ம அந்தஸ்து குறையும்.குடிகாரர்களுக்கு அந்தஸ்தே ராவா அடிப்பதே # பா

8 PHONE RINGING
ஹீரோயின் = எஸ்
ஹீரோ = நோ
நீங்க எஸ் னா நான் நோ தானே? # பா
யோவ்.யாரு?


9 சொந்தப்பணியில் ஜெயிக்காதவன்

எந்தப்பணியிலும் ஜெயிக்க மாட்டான்


10 நாம ஜெயிக்கனும்கறதுக்காக அடுத்தவங்களுக்கு கஷ்டம் கொடுப்பதும் ஒரு தோல்வியே.#,PAVADA

 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


பிருத்விராஜ் ன் பாவாட படம் 4 தியேட்டர்ல ரிலீஸ் ஆகியும் செம கூட்டம்.FAHADH FAZIL படம் 2 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி காத்து வாங்குது


2 பிருத்விராஜ் ன் பாவாட மலையாள காமெடிப்படத்தை தமிழ் ல.டப் பண்ணா சரக்கு சங்கரலிங்கம்னு டைட்டில் வைக்கலாம்.சீன் பை சீன் குடி தான்

3 ஹீரோயின் ஓப்பனிங் சீன்ல இடையில் இறக்கை முளைக்குது.ஆரம்பம் டாப்சி பன் உல்டா சீன் # பாவாடஇயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  ஃபேமிலி ஆடியன்சின் அமொக வரவேற்பைப்பெறும் அளவுக்கு மிக கண்ணியமான திரைக்கதை எழுதியமைக்கு ஒரு சபாஷ்


2  படத்தின் கதைக்குள் வரும் கதை ஒரு கில்மாக்கதையாக இருந்தாலும்  ஒரு சீன் கூட சீனாக வைக்காமல் விட்டதற்கு ஒரு பாராட்டு ( நற நற)


3 பின் பாதி பிரமாதமான திரைக்கதை , ஒரு சீன் கூட போர் அடிக்காமல் விறு விறுப்பாக போவது அருமை


இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  வீரம் பட டீசர் ல அஜித் காட்டும் பாடி லேங்குவேஜை அப்டியே ஒரு துளி கூட மாறா,ம  இண்ட்டர்வ;ல் பிளாக் ஃபைட் சீனில் யுஸ் பண்ணிக்கிட்டது ஏனோ? அதே போல் காமெடி சீன்களில் எல்லாம் சகுனி படத்தில் கார்த்தி  நடந்து வாரும் காட்சிகளை அப்டியே ஜெராக்ஸ் எடுத்தது ஏன்?


2 படத்தோட டைட்டில் ஒரு பின்னடைவு தான் . ஏன்னா லேடீஸ் ஆடியன்ஸ் வர யோசிப்பாங்க . படம் இப்போ ஹிட் ஆனதால் இனிமே ஃபேமிலி ஆடியன்ஸ் வருவாங்க என இயக்குநர் வாதாடலாம், ஆனால் ஓப்பனிங் போச்சே?இதுக்கு டீசண்ட்டா எண்ட அம்மே-ன்னு செண்ட்டிமெண்ட்டா டைட்டில் வெச்சிருக்கலாம்


3 ஹீரோ தன் அம்மா நடிச்ச பழைய கில்மாப்படத்தை ஒரு ரீல் பார்க்கறாரு.ஆஃப் பண்னச்சொல்லிடறாரு. இந்த சீனை ஹீரோவின் கோணத்தில் இருந்து பார்ப்பதால் ஆடியன்சுக்கும் அந்த சங்கடம் வருது. இதைத்தவிர்க்க ஓப்பனிங்ல அவர் தான் ஹீரோவின் அம்மா  என அறிமுகப்படுத்தாமயே புரொஃபசர் எடுத்த படம்னு 2 சீன் காட்டி இருந்தா ஆஷா சரத்தையும்  அமர்க்களமாப்பார்த்த திருப்தி ஏற்பட்டிருக்கும்4 கோர்ட் சீன்ல  ஹீரோ வாதாடி கை தட்டல் வாங்கனும்கறதுக்காக அவர் சார்பா வாதாடிய  வக்கீலை ஏன் டம்மி பண்ணனும். ஒரு பாய்ண்ட் கூடவா அவரால சொல்ல முடியாது?
சி  பி  கமெண்ட் =PAAVADA (2016)- முன் பாதி சரக்கு காமெடி பின் பாதி வித்தியாசமான திரைக்கதை.பிருத்விராஜ்க்கு ஹாட்ரிக் ஹிட் - ரேட்டிங் = 3/ 5ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 42குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= ஓக்கே
 ரேட்டிங்-3/ 5Kerala Trivandrum Aattingal ganga yamuna kauveri complex
Embedded image permalink


1 comment:

பல்பு பலவேசம் said...

மியா டார்லிங்குக்கு ஒரு உம்மா