Saturday, May 04, 2024

அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை (1982) - தமிழ் -- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ யூ ட்யூப்

     

    1982  ஆம்  ஆண்டு  வெளியான  மெகா  ஹிட்  படமான  பயணங்கள்  முடிவதில்லை  படத்தை  இயக்கிய  ஆர்  சுந்தர்  ராஜனின்  இரண்டாவது  படம்  தான்  இது . கே  பாக்யராஜின் க்ளாஸ்  மேட்  ஆன  இவர் டச்  ஆரம்ப  கால  கே  பாக்யராஜ்  படங்களில்  காணலாம். பின்னாளில்  இருவரும்  வேறு  வேறு  திசையில்  சென்றதால்  பாணியும்   மாறியது 


1983ல்  சரணாலயம், தூங்காத  கண்ணின்று  ஒன்று  ஆகிய  சுமார்  ரகப்படங்களைக்கொடுத்தவர்  அதற்குப்பின்  நான்  பாடும்  பாடல்  (1984)  , வைதேகி  காத்திருந்தாள்  (1984) ,  சுகமான  ராகங்கள்  (1985) ,  குங்குமச்சிமிழ் (1986)  , அம்மன்  கோவில்  கிழக்காலே  (1986)  , மெல்லத்திறந்தது  கதவு (1986)      என்று  தொடர்ச்சியாக ஆறு  வெள்ளி  விழாப்படங்களைக்கொடுத்தார்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  கிராமத்தில்  வசிப்பவள் .அந்த  ஊருக்கு  ரோடு  போடும்  எஞ்சினியர்  ஆக  அந்த  ஊரைச்சேர்ந்த  நாயகன்  நீண்ட  இடைவெளிக்குப்பின்  சொந்த  ஊருக்கு  வருகிறான்.. வந்த  இடத்தில்  நாயகியுடன்  காதல். இவர்களது  காதல்  சுவராஸ்ய்மாக  முதல்  பாதி  திரைக்கதையை  ஆக்ரமிக்கிறது 


  நாயகிக்கு  மாலைக்கண்  நோய்  உண்டு ., இது  ஊரில்  யாருக்கும்  தெரியாது .நாயகனுக்கும்  தெரியாது . ஒரு  நாள்  இரவு  நாயகி  தனிமையில்  இருக்கும்போது  தன் கல்யாணத்துக்குப்பத்திரிக்கை  வைக்க  வந்த  வில்லன்  நாயகியை  பாலியல்  வன் கொடுமை  செய்து விடுகிறான்


நாயகிக்குக்கெடுத்தவன்  யார்  என்று  தெரியாது. அதற்குப்பின்  நாயகிக்கு  சிகிச்சை  அளிக்கப்பட்டு  பார்வை  சரி  ஆகிறது . வில்லன்  நாயகியைத்திருமணம்  செய்து  கொள்ள  முன்  வருகிறான் , நாயகன்  உண்மை  தெரிந்தும்  நாயகிக்கு  வாழ்க்கை  கொடுக்க ஆசைப்படுகிறான் . இதற்குப்பின்  நிகழ்ந்தது  என்ன  என்பதே  க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக  புதுமுகம்   கபில்  தேவ். ஆள்  நல்ல  உயரம், சுரெஷ்  போன்ற  முகச்சாயல். நடிப்பு  ஓக்கே  ரகம் 


நாயகி ஆக  சுலக்சனா. கச்சிதமான  நடிப்பு .காதலி  ஆக  வரும்போதும்  சரி  மன  நலம்  பாதிக்கப்பட்டவாராக  வரும்போதும்  சரி  மனம்  கவரும்  நடிப்பு 


வில்லன்  ஆக  சிவச்சந்திரன். கொடுரமான  வில்லன்  ஆக  இல்லாமல்  தப்பை  உணர்ந்து  திருந்தும்  வில்லன் . குட்  ஆக்டிங் 


  கோயில்  பூசாரி  ஆக  வில்லத்தனம்  காட்டும் கவுண்டமணி  எரிச்சல்  மூட்டுகிறார்

  எஸ்  எஸ்  சந்திரன் , செந்தில் , கல்லாப்பெட்டி  சிங்காரம்  என  காமெடி  பட்டாளம்  இருந்தும்  காமெடி  டிராக்  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 


கே  வி மகாதேவன்  இசையில் நான்கு  பாடல்கள் , அவற்றில் ஒரு  பாட்டு  மெகா  ஹிட்டு 


என் கே  விச்வநாதன்  இசை  சிறப்பு. கே  ஆர்  மகாலிங்கம்  எடிட்டிங்கில்  படம்   இரண்டே  கால்  மணி  நேரம்  ஓடுகிரது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஆர்  சுந்தர்  ராஜன் 


சபாஷ்  டைரக்டர்


1   நாயகன்  நாயகி  காதல்  கதையில்  ஆள் மாறாட்டக்காதல் , காணாமல் காதல்  ஆகிய  அம்சங்களைப்புகுத்தி  சுவராஸ்யமாக  முதல்  பாதி  திரைக்கதையை  அமைத்த  விதம் 


2   பாடல்  காட்சிகளைப் படமாக்கிய  விதம் குட் செம  ஹிட்  சாங்க்ஸ்

1  யானை  வர்றதைப்பாருங்கம்மா 


2   மணி  ஓசையும் ,   கை வளை  ஓசையும்   ஆனந்த  ராகம்  சொல்ல 


3  எதிர்பார்த்தேன் , இளங்கிளியைக்காணலையே? 

4  சுமை  தாங்கியே  இன்று  விழுகின்றது 


  ரசித்த  வசனங்கள் 


1   கடன்  வாங்கும்போது  கணக்குல  எழுதி  வெச்சுக்கனு  சொன்னீங்க , அப்புறமா எழுதுனதையே  வெச்சுக்கனு  சொல்லிட்டீங்க , என் பணம்  எப்போங்க  வரும் ? 


2 பொண்ணுன்னா  வீட்டில்விளக்கு  ஏற்ற  மட்டுமில்ல .அப்பப்ப  தேவைப்படும்போது  விளக்கை  அணைக்கவும்  செய்யனும். அவ  வீட்ல  திருவண்ணாமலை  தீபம்  மாதிரி  விடிய  விடிய  விளக்கு  எரிஞ்சுக்கிட்டே  இருந்தா  அவன்  தான்  என்ன  செய்வான்  பாவம் ? 


3  புருசனோட  இன்பத்தில்  மட்டும்  பங்கு  போடுபவள்  பொண்டாட்டி  இல்லை , துன்பத்திலும்  பங்கு  போட்டுக்கனும்


 புருசனோட  இன்ப  துன்பத்தில்  பங்கு  போட்டுக்கலாம், ஆனால்  புருசனையே  பங்கு  போடச்சொன்னால்  எப்படி ? 


6  ஊசி  தங்கமாக  இருக்கலாம், அதுக்காக  அதை  எடுத்து  கண்ல  குத்திக்க  முடியுமா?( ஆனந்த  சீனிவாசனின்  ஃபேம்ஸ்  டயலாக்  - வைர  ஊசி  என்பதற்காக  கண்ல  குத்திக்க  முடியாது )


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1நாயகன்  நாயகியை  நேரில்  பார்த்ததில்லை .ஆனால்  நாயகியின்  செருப்பு  எது  ? என்பது அவளது  அப்பா  மூலம்  தெரியும். வேறொரு  பெண்  தான்  நாயகி  ருக்கு  என  நாயகி  ருக்குவே  டிராமா  போடுகிறாள். கிராமத்தில்  பல  முறை  நாயகியை  நாயகன்  சந்திக்கிறான். அப்போதெல்லாம்  நாயகி  அந்த  ஹை  ஹீல்ஸ்  செப்பலைப்போட்டிருக்கிறாள். நாயகன்  அதை  வைத்து  அவள்  தான் ருக்கு  என்பதைக்கண்டு  பிடிக்க  முடியலையா? 


2  மலைக்கோயில்  வாசலில் நாயகி  தன்  செப்பலைக்கழட்டிக்கோயிலுக்குள் செல்கிறாள். நாயகனுக்கு  அது  நாயகியின்  செப்பல்  என்பது  தெரியும். ஆனால்  நாயகி  தான்  தான்  தேடி  வந்த  நாயகி  ருக்கு  என்பது  தெரியாது . அதை  நாயகனே  நாயகியிடம்  சொல்கிறான், இன்னைக்கு  எப்படியாவது  ருக்குவைக்கண்டுபிடிப்பேன்  என  நாயகன்  சவால் விடுகிறான். அப்போ  நாயகி  கோயிலில்  இருந்து  கிளம்பும்போது  அந்த  செப்பலை  காலில்  போட்டுக்கொண்டால் நாயகன்  ஃபாலோ  பண்ணி  அதைப்பார்த்து  தான்  தான்  ருக்கு  என்பதைக்கண்டு  பிடித்து  விடுவான்  என்பது  தெரியாதா? 


3  நாயகன்  நாயகியிடம்  இன்னைக்கு  நைட்  எட்டு  மணிக்கு  குளத்துப்பக்கம்  வந்துடு  என  சொல்லும்போது  நாயகி  எதுவும்  மறுக்கவில்லை . அப்போதே  முடியாது  என  சொல்லி  இருக்கலாம்.பின்  அவனைக்காக்க  வைத்து  ஏமாற்றி  விட்டு  அடுத்த  நாள்    சமாதானப்படுத்தும்போது “ வயசுப்பொண்ணு  நைட்  டைம்ல  வெளீல    எப்படி  வர்றது?  கோபமா?  எனக்கேட்கிறார்.அதை  அப்பவே  சொல்லி  இருக்கலாமே? 


4  நாயகிக்கு  மாலைக்கண்  வியாதி  இருப்பது  கிராமத்தில் யாருக்கும்  தெரியாது  என  அவள் அம்மா   டாக்டரிடம்  சொல்கிறாள் .  அது  எப்படி ? ஒரு  கிராமத்தில்  மாலை ஆறு  மணிக்கு மேல்  வெளியே  வராத  நபரை  யாரும்  சந்தேகப்பட  மாட்டார்களா? 


5  மாலைக்கண்  நோய் உள்ள  நாய்கியை  தனியாக  விட்டு  விட்டு  இரவு  நெரத்தில்  அவள்  அம்மா  ஏன்  பட்டணம்  போக  வேண்டும் ? 


6  மாலையில் வெளியில்  இருந்து  வீட்டு  க்கு  வரும்  நாயகி  வீட்டுக்கதவை  தாழ்  போடாமல்  பாத்ரூம் போய்  குளிப்பது  எப்படி ? 


7  நாயக்ஜியின்  வீட்டுப்பக்கம்  பல வீடுகள்  இருக்கு .வில்லன்  நாயகியை  பாலியல்  வன்கொடுமை  செய்யும்போது  கத்தி  ஆர்ப்பாட்டம்  செய்கிறாள்.கிராமத்தில்  யாருமே  அதைக்கண்டுக்க  மாட்டார்களா? 


8  மாலைக்கண்  வியாதிக்கு  நிரந்தரத்தீர்வு  இல்லை  என  கண்  டாக்டர்கள்  கூறுகின்றனர் . ஆனால்  டாக்டர்  ஒரு  ஆபரேசன்  கூட  செய்யாமல்  10  நிமிடத்தில்  உங்களுக்கு  சரி  ஆகிடுச்சு , இனி  கண்  தெரியும்  என்கிறாரே? 


9 நாயகியும் அம்மாவும்  ஊரை  விட்டுப்போய்  25  நாட்கள் கழித்து  சொந்த  ஊருக்கு  திரும்பி  வருவதாக  கோயிலில்  வில்லனிடம்  சொல்கிறார்கள் ., அவர்கள்  கையில்  பெட்டி  படுக்கை  எல்லாம்  இருக்கிறது . வெளியூர்  போய்ட்டு  ரிடர்ன்  வருபவர்கள்  நேராக  வீட்டுக்கு  வந்து  குளித்து  விட்டு  பின்  தானே  கோயிலுக்குப்போகனும் ?பெட்டியோடவே  கோயிலுக்கு  ஏன்  போனங்க ?


10  காட்டில்  இருந்து  ஊருக்குள்  வந்து  மக்களைத்தொந்தரவு  செய்யும்  ஆண்  புலியை  நாட்டாமை  ஆன   வில்லன்  துப்பாக்கியால்  சுட்டுக்கொன்று  விடுகிறான்,  அந்த  புலியின்  சம்சாரம்  ஆன  பெண்  புலி  வில்லன்  வீட்டு  வாசலில்  பழி  வாங்க  வருவதெல்லாம்  ஓவர்.  அட்லீஸ்ட்  வில்லன்  காட்டுக்குப்போகும்போது  அப்படிக்காட்டி  இருக்கலாம் 


11   பஞ்சாயத்து  தலைவரான  வில்லன்  எந்த  தீர்ப்பும்  தரவில்லை.கோயில்  பூசாரிதான்  இனிமே  ருக்கு வுக்கு  ஊர்  மக்கள்  யாரும்  தண்ணீர்  கூடத்தரக்கூடாது  என்கிறார். ஆனால்  ஒரு  சீனில்  வில்லனின்  மனைவி  வில்லனிடமே  நீங்க  தானே  ருக்குவுக்கு  யாரும்  தண்ணீர்  தரக்கூடாது  என்று தீர்ப்பு  சொன்னீர்கள்  என்கிறார். 


12  எஸ்  எஸ்  சந்திரன் , செந்தில் , கவுண்டமணி  போன்ற  காமெடி  கிங்குகள்  இருந்தும்  காமெடி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை . அதிலும்  வில்லன்  கவுண்டமணி  வில்லத்தனம்  பண்ணூவதை  ரசிக்க  முடியவில்லை 


13  நான்  தான்  உன்னைக்கெடுத்தவன்  என  வில்லன்  நாயகியிடம்  சொல்ல  முடிவு  எடுக்கிறான் . அதை  பகலில்  சொல்லலாமே? நைட்  டைமிலா  ஒரு  கிராமத்தில்  ஒரு  பெண்  தனியாக  வீட்டில்  இருக்கும்போது  போவது ? 


14  அந்த  ராத்திரி  நேரத்தில்  நாயகி  ஏன்  கோயிலுக்கு  வருகிறாள் ?


15  கோயில்  பூசாரி  நாயகியிடம்  ஊர்  மக்கள்  முன்னிலையில்  சவுக்கால்  அடித்து  அடித்து  உன்னை  கெடுத்தது  யார்? என  சொல்லு  எனக்கேட்டுக்கொடுமைப்படுத்துவது  மடத்தனமான  காட்சி 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    ஜாலியான  முதல்  பாதிப்படத்துக்காகப்பார்க்கலாம் .  ரேட்டிங்  2.5 / 5


அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை
தலைப்பு அட்டை
இயக்கம்ஆர்.சுந்தர்ராஜன்
எழுதியவர்ஆர்.சுந்தர்ராஜன்
உற்பத்திகே.ஆர்.கங்காதரன்
நடிக்கிறார்கள்கபில்தேவ்
சுலக்ஷனா
சிவச்சந்திரன்
வனிதா
ஒளிப்பதிவுஎன்.கே.விஸ்வநாதன்
திருத்தியவர்கே.ஆர்.ராமலிங்கம்
இசைகே.வி.மகாதேவன்
தயாரிப்பு
நிறுவனம்
கேஆர்ஜி ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
வெளிவரும் தேதி
  • 15 அக்டோபர் 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: